தலையங்கம்
 

  இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் எழுபதாயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள் என ஐநா அவை நியமித்த ஆணைக்குழு சொல்லியிருந்தது. ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதே பல மனித உரிமை அமைப்புகளதும் தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளதும் கருத்தாக உள்ளது. போரின் இறுதிக் கட்டங்களில் நடந்தது என்ன, எவ்வளவு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பன போன்ற கேள்விகளுக்கான நியாயமான பதில்கள் அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணை மூலம் மட்டுமே முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியும். அண்மையில் இலங்கைக்குச் சென்ற ஐநா அமைப்புப் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கொழும்பில் உரையாற்றியபோது “பொதுமக்களைப் பாதுகாப்பதற்குத் தவறிவிட்டோம். ஐநா பெருந் தவறிழைத்திருக்கிறது” என்று

கண்ணோட்டம்
களந்தை பீர்முகம்மது  

  சொல்வதற்குக் கசப்பாக இருந்தாலும், ஆன்மிகத்தின் நேர் எதிரிகள் ஆன்மிகவாதிகளே. இத்தனை நூற்றாண்டு காலத்திலும் தனக்கென ஒரு நேரிய பாதையைக் கண்டறிய முடியாமல் திணறுகிறது ஆன்மிகவாதம். அரசியல் பீடத்தின் உறுதிக்கு ஒவ்வொரு மதமும் முட்டுக்கால்களாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆன்மிகத்திலிருந்து ஆன்மிகம் சுத்தமாக வழித்தெறியப்பட்ட நிலையில், அதனுள்ளே அரசியல் கருத்துகள்தான் காலம்காலமாக ஊடுருவிவந்துள்ளன. எந்த மதமும் எந்த ஆன்மிகவாதியும் இதில் விதிவிலக்கல்ல. இவ்வகையில், வஹாபியத்தை அடித்தளமாகக் கொண்டு தவ்ஹீத் வாதம் தன்னை நிமிர்த்திக் கொள்ளப் படாதபாடு படுகிறது. ஏற்கெனவே, இஸ்லாமியக் கருத்தியலை வஹாபியம் ஓரம் கட்ட முயற்சி செய்கின்றது. இஸ்லாம், வஹாபியத்தின் ஓர் அங்கமாக இஸ்லாத்தின் பெயராலேயே வார்ப்படமாகி வருகின்றது.

கட்டுரை
கே.என். செந்தில்  

  “எவன் ஒருவன் நிறைய விஷயங்களை நசுக்கி மிதித்துப்போடுகிறானோ, தான் சொல்வதுதான் சரியானது என்று மற்றவர்களை, மற்ற விஷயங்களைத் துவம்சம் செய்து தனது கருத்துகளை நிலைநாட்டுகிறானோ அவனே இவர்களுக்கான சட்டங்களை வகுப்பவனாக இருப்பான். எவன் ஒருவன் அடாவடித்தனமாக அக்கிரமமானவனாகச் செயல்படுகிறானோ அவனே இவர்களை வழிநடத்திச் செல்பவனாக இருப்பான்.” - தஸ்தயேவ்ஸ்கி ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் ரஸ்கோல்னிகோவ் சோனியாவிடம் சொல்வது படைப்பூக்கமிக்க எழுத்தாளர்களின் நேர்காணல்களை வாசிப்பது எப்போதும் உவகை அளிக்கக்கூடிய ஒன்றே. அவர்களது ஆக்கங்களின் ஆணிவேர் மற்றும் சல்லிவேர்கள் மட்டுமல்ல அதன் விதையேகூட எங்கிருந்து வந்து விழுந்தது, அவை வளர ஒளியும் நீரும் இன்னபிறவும் எங்கிருந்து எவ்வாறு கிடைத

அஞ்சலி
 

தமிழக நுண்கலை உலகின் சாதனையாளர்களில் ஒருவரான சி. தட்சிணாமூர்த்தி 22.9.2016 அன்று மறைந்தார். ஓவியராகவும் சிற்பியாகவும் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். குறிப்பாக அவரது கற்சிற்பங்கள் கலை விமர்சகர்களின் பாராட்டுக்கும் பார்வையாளர்களின் ரசனைக்கும் உவப்பானவையாக அமைந்தவை. அன்றாட வாழ்வில் தென்படும் மனித முகங்களிலிருந்தும் சலனங்களிலிருந்துமே அவரது சிற்பங்கள் உயிர்ப்பின் சாயலை உள்வாங்கின. அவரது பெண் சிற்ப முகங்களில் எந்த ஒன்றையும் தமிழகத்தின் எந்த இடத்திலும் பார்த்துவிட முடியும்.   ஓவியர், சிற்பி என்ற நிலையில் மட்டுமல்லாது ஆசிரியராகவும் பெரும்பணியாற்றியவர். மரணம் நெருங்குவதற்குச் சற்றுமுன்வரையும் தனது கலைப்பணியில் ஈடுபட்டிருந்தவர். அவரது மறைவுக்குக் காலச்சுவடு ஆழ்ந்த வருத்தங்களைப் பதிவு செய்கிற

பார்வை
சல்ம  

சக மனிதர்களாலும் கடவுள்களாலும் கைவிடப்பட்டு, ரயில் நிலையங்களும் தேவாலயங்களும் வகுப்பறைகளும் வெட்டுண்ட பெண்களின் ரத்தங்களால்  நிரம்பிக் கொண்டிருக்கின்ற  நாளொன்றில்தான் காதல் என்கிற ஒரு கற்பிதம் குறித்து நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது.வகுப்பறைகளிலும் கடவுளின் ஆலயங்களிலும் நடந்திருக்கும் இத்தகைய கொலைகளின் வழியேதான் இங்கே கடவுள் மற்றும் கல்விசார்ந்து இருக்கக்கூடிய பயமும் அறமும் என்னவாகிற்று என்கிற கேள்வியை எழுப்பிக்கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. கடவுளும் கல்வியும் கைவிட்டுவிட்ட சமூக அமைப்பும் அதன் எதார்த்த நிகழ்வுகளும் எவ்வாறு இருக்க முடியும் என்பதற்கு இந்த நிகழ்வுகள் ஆபத்தான, கருணையற்ற  சாட்சியங்களாக, மிகப் பெரும் அச்சுறுத்தல்களாக இருக்கின்றன. விலக்கப்பட்ட ஆப்பி

பார்வை
கமலிபன்னீர்செல்வம்  

  சமீபத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் முன்னெப்போதையும் விட அதிகமாகவே நடந்து வருகின்றன. வினோதினி மீதான திராவக வீச்சைத் தொடர்ந்து பல பெண்களும் அதேவிதமான தாக்குதலுக்கு உள்ளானார்கள். ஊடகங்களின் வாயிலாக இச்செய்திகள் பரவி பச்சாதாப உணர்வு ஏற்பட்டதைவிட தன்னைக் காதலிக்காத அல்லது ஏமாற்றிய பெண்ணைப் பழிவாங்க, அச்சுறுத்த இப்படி ஒரு காரணம் இருக்கிறது என்ற எதிர்மறை தாக்கத்தின் விளைவுதான் தொடர் திராவக வீச்சுகள். காதலை மறுக்கும் பெண்கள் மீதான அடுத்தடுத்த படுகொலைகள் சுவாதி கொலை விவகாரத்தில் ஊடகங்கள் உருவாக்கிய தாக்கத்தின் எதிரொலியாக இருக்கச் சாத்தியக்கூறுகள் உள்ளனவோ என ஐயுறவைக்கின்றன. சினிமா, ஊடகங்கள் அனைத்தும் மறைமுகமாக ஆணின் ஆதிக்க சக்திக்குத் தீனி போடுவதாகத்தான்  செய்திகளையும் கதைகளையும் தந்த

பார்வை
சுதா ராமலிங்கம் - வையவி மணிவண்ணன்  

  பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மனுஸ்மிருதி காலந்தொட்டே நம் நாட்டில் இருந்து வருகின்றன. தொன் ரோம நாகரிகங்களிலும்  இதன் சாரத்தைக் காண முடிகிறது. இங்கு ஒரு குடும்பத் தலைவர் தன் குடும்பத்தினுள் பாலியல் ரீதியில் நிறைவாக இருந்தும்கூட திருமணமாகாத மகள் மற்றும் கூடா ஒழுக்கம்கொண்ட மனைவியைப் படுகொலை செய்யும் உரிமையைப் பெறுகிறார். இடைக்கால ஐரோப்பாவில்கூட கௌரவம் சார்ந்த குற்றங்கள் ஒழுக்கம்கெட்ட  மனைவி மற்றும் அவரது கூட்டாளியை யூதச் சட்டங்களின்படி, கல்லால் அடித்து மரணதண்டனை நிறைவேற்றும் வழக்கம் இருந்தது. வரலாற்று அறிஞர்களின் தடங்களைப் பின்பற்றினோமேயானால், கௌரவக் குற்றங்களின் மிக ஆழமான தோற்றத்தை அரேபிய நாடுகளில் காணலாம். இங்கு ஒரு பெண் போகப்பொருளாகவும் இனப்பெருக்கத்தின் தொழிற்சாலையாகவு

பார்வை
கிரீஷ்  

“நீ எவ்ளோ தப்பு பண்ணியிருந்தாலும் அத நான் மன்னிச்சுடுறேன்...  நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” “நான் தப்பான பொண்ணுதான்.. நான் இப்டியேதான் இருக்கப்போறேன்.. நீ உன் கண்ணை சரி பண்ற வழியைப் பாரு” இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘குற்றமே தண்டனை’ திரைப்படத்தில் வரும் ஒரு வசனம் இது. அந்த வசனத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணும் கொலைசெய்யப்பட்டுவிடுகிறாள். இவ்வாறான காட்சிகள் திரைப்படங்களில் வருவது இது முதல்முறை அல்ல. நூறாண்டு இந்திய சினிமாவும் எழுபத்தைந்து ஆண்டு தமிழ் சினிமாவும் பெண்களை இப்படித்தான் வரையறுத்திருக்கின்றன; பெண்களை ஒழுக்கத் தோடு, கற்போடு வாழச்சொல்கின்றன. ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களைக் காதலிக்கும் பெண்ணைத் தன் வாயாலேயே தான் தவறான பெண் எனச் சொல்லவைக்கின்

கட்டுரை
நித்யானந்த் ஜெயராமன்  

  அடுத்த உலகப் போர் தண்ணீருக்காக நடைபெறுவதாக இருக்குமா?’ என்று பத்திரிகையாளர் ஒருவர் என்னிடம் கேட்டார். காவிரி நீரை முன்னிட்டு அண்மையில் கர்நாடகத்திலும் தமிழகத்திலும் எழுந்த வன்முறைச் சம்பவங்களால் தூண்டப்பட்டது அந்தக் கேள்வி. தண்ணீரை மையமாக வைத்து எழும் சிக்கல்கள் அதிகரித்திருக்கின்றன என்பதிலும் தீவிரமடைந்திருக்கின்றன என்பதிலும் ஐயமில்லை. ஆனால் மாநில எல்லைகளுக்கு இருபுறமும் சூறையாடலிலும் தீவைப்பிலும் ஈடுபடும் குண்டர்களை உலகப் போரின் வீரர்கள் என்று குறிப்பிடுவது தவறானதாகும். வன்முறை மீதும்   கண்ணாடிகள் நொறுங்கும் ஓசை மீதும் விருப்பம் கொண்டவர்கள் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு திட்டம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். இதைக் குறிப்பிடுவதன் பொருள் காவிரி நீர் தொடர்பான பக

கட்டுரை
என்.ஏ.எம். இஸ்மாயில்  

  காவிரி சர்ச்சை என்னும் போர்வையில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் ஊடக நெறியுடன் தொடர்புடைய பழைய கேள்வியையே மீண்டுமொருமுறை கேட்கத் தூண்டுகின்றன. ஊடகங்கள் உண்மையைச் சார்ந்திருக்க வேண்டும் என்னும் கருத்தில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால், அந்த உண்மை எது? எந்தக் கருத்தை எடுத்துக் கொண்டாலும், அக்கருத்துடன் தொடர்புடைய இரு வகையான உண்மைகள் இருக்கின்றன. ‘மக்களுக்குப் பிடிக்கும் உண்மை’ என்பது ஒன்று. தற்சமயத்தில் பிடிக்காததுபோலத் தோன்றும் எதார்த்தம் என்பது இன்னொன்று. மக்களுக்குப் பிடிக்கும் உண்மையை உருப்பெருக்கிக் காட்டுவது ஊடகங்களுக்கு எளிதான செயல். ஆனால் இதன் விளைவுகளோ மக்களுக்கு எதிரானவையாக இருக்கும். மக்களுக்குப் பிடிக்கும் உண்மையோடு ஊடகங்கள் செயல்படத் தொடங்கினால் அது பொதுமக்கள

கட்டுரை
ப்ரீத்தி நாகராஜ்  

  செப்டம்பர் 12, திங்கள்கிழமை, 12,000 கனஅடி காவிரி நீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினைத் தொடர்ந்து கர்நாடக - தமிழக வீதிகளில் கலவரங்கள் வெடித்தன. காவிரிநீரைப் பங்கிடுவது தொடர்பாக பல்லாண்டு காலமாய் நீதிமன்றங்களில் நீடித்து விவாதிக்கப்பட்டுவரும் விவாதம் இறுதியில் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. செப்டம்பர் ஐந்து உச்சநீதிமன்ற ஆணையின்படி கர்நாடகா ஒவ்வொரு நாளும் 15,000 கனஅடி காவிரி நீரைப் பத்து நாட்கள் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும். இதற்குக் கர்நாடகாவில் எதிர்ப்பு வலுக்கவே நீரின் அளவைக் குறைக்க உச்சநீதிமன்றம் சம்மதித்தது. எந்நேரமும் வெடிக்க இருக்கும் கடுஞ்சினம் அப்போது அங்கே நிலவிற்று. இச்சூழலைத் தணிக்க ஊடகங்கள் செய்த உதவி மிகக் குறைவு. பிரச்சனைய

சுரா கடிதங்கள்
சுந்தர ராமசாமி நாகர்கோவில், படம்- ஆர்.ஆர். சீனிவாசன்  

  சுந்தர ராமசாமி                     நாகர்கோவில்                         24.9.1981 அன்புள்ள முகமது அலி, உங்கள் 16.9.1981 கடிதம் கிடைக்கப் பெற்று மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் இங்கு வந்ததும், நாம் பேசிக்கொண்டிருந்ததும், பின்னர் நாமிருவருமாக பஸ் நிலையத்திற்குச் சென்றதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நீங்கள் முன்னரே எனக்கு கடிதம் எழுதியிருக்கலாம். அது எனக்கு சந்தோஷத்தைத் தந்திருக்கும். ஏப்ரல் மாதம் வாக்கில் நான் குடும்பத்தினருடன் பெங்களூர் வந்திருந்தேன். அப்போது

சுரா நினைவுகள்
அம்பை  

  சுராவுடன் பல ஆண்டுகள் நல்ல நட்பு இருந்தாலும் அதுகுறித்து நான் பேசவில்லை; எழுதவும் இல்லை. ஏனென்றால் ஓர் ஆளுமை மறைந்தவுடனேயே அவருடன் பூண்ட நட்பு பற்றியும், அவர் அந்தக் குறிப்பிட்ட நபர் பற்றி எவ்வளவு உயர்வாக எண்ணினார் என்பது பற்றியும் பேச முன்வருபவர்கள் பற்றி எனக்குச் சில விமர்சனங்கள் இருந்தன. தி. ஜானகிராமன் மறைந்த சமயத்தில் நான் சென்னையில் இருந்தேன். அப்போது நடந்த இரங்கல் கூட்டத்துக்கு நான் போயிருந்தேன். அன்று பேசிய அத்தனை எழுத்தாளர்களையும் தி. ஜானகிராமன் சிலாகித்துப் பேசியிருந்தார். ‘உன் எழுத்து பிரமாதம்’ என்றிருந்தார். அப்படித்தான் அவர்கள் கூறினார்கள். தி. ஜாவின் அன்பும் பண்பும் குறித்து நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டாலும், பேசிய எழுத்தாளர்களையும் அவர்கள் எழுத்தையும் அறிந்த

மொழிப்பெயர்ப்பு
அமர்த்யா சென்  

  பொதுவாக இந்திய வரலாறு, இந்துத்துவப் பார்வைக்குக் கடினமான சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கலாம். இருந்தபோதிலும், இந்தியாவின்மீது படையெடுத்துப் பெருமளவு ஆக்கிரமித்த முஸ்லிம் வெற்றியாளர்கள் வரலாற்றுக் ‘குற்றம்’ இழைத்ததாகப் பறைசாற்றி, கிளர்ச்சியாலும் பரப்புரையாலும் அதனை அஸ்திவாரமாகக் கட்டி எழுப்பியதில் இந்துத்துவா இயக்கம் தனித்தன்மை வாய்ந்த வெற்றியைப் பெருமளவு ஈட்டியுள்ளது. இந்திய மதச்சார்பின்மையை வலுவிழக்கச் செய்யும் அரசியல் செயல்பாடுகள் சமூக, பண்பாடு அல்லது அறிவார்ந்த வரலாற்றின் பரந்த சிந்தனையை விவாதிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. மாறாக, முஸ்லிம்களால் இந்துக்களுக்கு நேர்ந்த பெரிய அல்லது சிறிய கொடுமையான சம்பவங்களை முதன்மைப்படுத்திக் காட்டுவதிலேயே அவற்றின் முழுக்கவனமும் குவிந்திர

கவிதைகள்
நாரணோ ஜெயராமன்  

பார்வை   கவி மனதிற்கோ நீள்வானின் நீலப் பரப்பில் பொதிந்த அவை மின்னும் ஒளிப் பொட்டுகள்! விஞ்ஞானியின் கருவிக் கண்களுக்கு அவை நீரிலா, காற்றிலா, உயிரிலா வறட்டுப் பிரதேசம்!   போலி   இரட்சிக்க வந்தவனின் சாம்ராஜ்யத்தில், முதல்முறை வென்றதோடல்லாமல் இரண்டாம் முறையும் மூர்க்கமாய் வென்றவன், இவன் தருகிற குடைச்சலில் கிறுக்கனாகிப் பிதற்றுகிறான்! ஒத்துப்போன இன்னொருவன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, இன்னும் கஜானா காலியாகவே இருப்பதால் எகிறிப் பார்க்கிறான்! சிக்கலிலிருந்து மீள வழி கிடைக்குமோவென ஒத்து ஊதியும், கொக்கரித்துப் பார்த்தும் பலனிலா நிலையில், பொருமிக் கொண்டிருக்கிறாள் மாது ஒருத்தி! எதிரி என்றே பிரகடனப்படுத்தித் தன் குறுநிலத்தில் வென்றவன் உரசிஉரசிப் பார்த்த

திரை
வெற்றி  

  ‘குற்றமே தண்டனை’யின் மையமாக பூஜா தேவர்யாவின் பாத்திரத்தைச் சொல்லலாம். அப்பாத்திரத்தின் குற்றம் ரவிச்சந்திரன் பாத்திரத்தை ‘விதார்த்’ காதலிப்பதாகவும் தண்டனையாக அவனையே திருமணம் செய்துகொள்வதுமாக இருக்கிறது. இளம்பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை என ஃபேஸ்புக்கில் அவ்வப்போது பகிரப்படும் மீம்களில் கொஞ்சம் குற்றவுணர்ச்சியைச் சேர்த்து எடுக்கப்பட்டதுபோல் இருக்கிறது ‘குற்றமே தண்டனை’ திரைப்படம். ஒவ்வொரு முறையும் ஊடகங்களில் பெரிதாகப் பேசப் படுமளவு, பெண்கள் திராவகத் தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் ஆளாகும்போது இத்தகைய மனோபாவங்களை வளர்ப்பதில் தமிழ் சினிமாவின் பங்கு குறித்தும் லேசாகவோ பெரிதாகவோ விவாதிக்கப்படுகின்றது. பெரும்பாலும் செல்வராகவன் உள்ளிட்டோரின் படங்கள். இம்மு

கதை
மு. குலசேகரன், ஓவியம்- மு. குலசேகரன்  

  இரவு வீட்டுக்குத் திரும்பியபோது சுந்தரமூர்த்தி துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்ததை உணர்ந்தார். ஊசிப்போன உணவு, அழுகிய மாமிசம், நாட்பட்ட மலம் போன்றவற்றின் கலவை; அது வீட்டை ஒட்டியிருக்கும் சாக்கடைக் கால்வாயிலிருந்து எழுந்துகொண்டிருக்கலாமென்று நினைத்தார்; அல்லது, செடிகொடிகள் மண்டிய முட்கம்பி வேலியிட்ட எதிரிலுள்ள காலிமனையிலிருந்தும் இருக்கலாம். அங்கு நீண்டகாலத்துக்கு முன்னால் ஒரு நாயின் உயிரில்லாத உடல் வீசப்பட்டிருந்தது. அது யாராலும் அகற்றப்படாமல் பல நாட்களாக அப்படியே கிடந்து நாற்றமடித்து மட்கி மண்ணானது. இப்போது அவருடைய இருசக்கர வாகன முகப்பு விளக்கு வெளிச்சத்தில் வீட்டுக்கு எதிரில் வட்டமாக நீர் தேங்கியிருந்தது தெரிந்தது. அவர் தன் வாகனத்தைச் சற்றுத் தொலைவிலேயே நிறுத்திவிட்டு இறங்கினார். நெருங

கட்டுரை
செ. சண்முகசுந்தரம்  

திராவிடம், தமிழ்த் தேசியம் குறித்து  நிலவிவரும் வாதப்பிரதிவாதங்களைக் கூர்ந்து நோக்குவோருக்கு ஒன்று நிச்சயமாகத் தெரியும் - தமிழ்ச் சமூகத்தைக் கிஞ்சிற்றும் சரியான திசையில் செலுத்த வக்கற்ற விவாதங்கள் இவை. இன்றைய தமிழ்ச் சமூகம் கடுமையான அடையாளச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. சாதியால் தமிழ் மக்கள் பல கூறுகளாகப்  பிளவுண்டு கிடக்கின்றனர். ஆணவப்படுகொலைகள் நடக்கின்றன. சாதி வெறியர்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர். பொருளியல் சூழலில் தமிழ் மக்கள் யாசக மனநிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பாரம்பரியச் சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. வளமான விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்களாக மாறிவருகின்றன. இவை எதற்கும் இந்த மாதிரியான விவாதங்கள் பதில் தரப்போவதில்லை. உடுமலைப்பேட்டையில் ஆணவப்படுகொலை செ

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

சுற்றுச்சூழலுக்காக, சுற்றியுள்ளோருக்காகப் போராடும் ஓர் ஆளுமை எப்படி இருக்க வேண்டும், எங்ஙனம் இயங்க வேண்டும்? இயல்பானவராக, இனிமையானவராக, எதிர்காலம் கருதுபவராக, எதற்கும் துணிந்தவராக இருத்தல் வேண்டும். மனதுக்குள் சுவர்களைக் கட்டியெழுப்பாமல், மனிதர்களை அடக்கியாளாமல், மாந்தநேயத்தோடு இயங்க வேண்டும். நான் நெருங்கிப் பழகிய, மதித்துப் போற்றிய, அப்பா என்றழைத்த ஜார்ஜ் கோம்ஸ் (ஆகஸ்ட் 24, 1926 - ஆகஸ்ட் 27, 2016) அவர்கள் ஓர் உதாரணச் சூழல் ஆளுமை.  தமிழகத்தில் பெரும்பாலான வயோதிகர்கள் தங்கள் அந்திமக் காலத்தில் ஏமாற்றம், விரக்தி, சுய இரக்கம் போன்ற எதிர்மறை உணர்வுகளோடு விதி, தனிமை, உயிரச்சம் என உழன்று சங்கடப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால் ஒரு பண்பட்ட முதிர்ச்சியான சூழல் ஆளுமை உலகமும் வாழ்க்கையும் தனக்கு

கவிதைகள்
செந்தி , ஓவியம்: சஜித  

கைக்குட்டையைத் துணையாகக் கொண்டவன்   சதா தனிமையில் இருப்பவனாக இருக்கும் அவன் பயணத்தின் போதெல்லாம் கைக்குட்டையே துணையாகவிருக்கிறது. உடன் ஒருவர் துணைக்கிருப்பது போலவும், கைகளை இறுகப் பற்றிக்கொள்பவனாகவும் அந்தக் கைக்குட்டையே இருக்கிறது. அலுவலகம் செல்லும் பதற்றமான அந்தக் காலைகளிலெல்லாம் அது அவனை ஆற்றுப்படுத்துகிறது. பேருந்தின் இருக்கைப் பிடிகளுக்குப் பதில் அதனையே இறுகப் பற்றிக்கொள்கிறான். துயரம் நிறைந்த அவனது பொழுதுகளில் முகம் துடைத்து மீள்கிறது. எப்போதும் அவனது கைகளை இறுகப்பற்றிக் கொள்வதாகவும் அது இருக்கிறது. ஒரு புதிய கைக்குட்டையின் வாசம் அன்றைய அவனது நாளையே அழகாக்கிவிடுகிறது. மேலும் மனதைக் கிளர்த்திப் பரவசம் தருகிறது. கைக்குட்டை கைக்குட்டையாக மட்டுமிருப்பதில

கவிதைகள்
ரா. ஸ்ரீனிவாசன், ஓவியம் – மு. நடேஷ்  

கோலத் தேர்   நான் பார்த்த தரையில் ஒரு கோலம்   வளைவு நெளிவுகள் கோள வட்டங்கள் முக்கோண மூலைகள் சதுரச் செவ்வகங்கள் இலைப் பிரிவுகள் மலர் நீட்டங்கள் கிளைப் பரப்புகள் புள்ளிப் படைகள்   பார்த்த கணத்தில் விழித்தெழுந்த கோலத்தின் ஜாலத்தில் சிக்கினேன்   சுற்றிச் சுழன்றன கோள வட்டங்கள் சூழ்ந்து மறித்தன புள்ளிப் படைகள் எட்டிப் பிடித்தன கிளைப் பரப்புகள் தீண்டிச் சிலிர்த்தன மலர் நீட்டங்கள் மூலைக்கு விரட்டின வட்டச் சதுர முக்கோண வடிவங்கள்   இடைவெளிகளில் சிக்கிய என்னை எடுத்து விழுங்கிய எண்திசைக் கோலம் சக்கரமாய்ச் சுழலத் துவங்க பொறி பறக்க ஒளியுமிழும் புள்ளிகளுக்கிடை புகுந்து நுண்ணிய வெளிகளில் எரிபொருளெனக் கசிந்து கரியாகிக் காணாது போனேன்   விண்ணெ

கடிதங்கள்
 

சல்மாவின் ‘மனாமியங்கள்’ நாவல் பற்றிய செ.மு. நஸீமா பர்வீனின் மதிப்புரை ஆழமான கருத்தியல் தாக்கங்களைப் பதிவு செய்துள்ளது. ‘எங்கள் சாதி, எங்கள் மதம்’ என்ற குறுகிய குதர்க்கமான பார்வையால் பல்வேறு சமூகச் சிக்கல்களுக்கு வித்திடும் இக்காலத்தில் மிகச்சாதுர்யமான துணிவுடன் நேர்மையான உள்ளுணர்வுகளை இந்த நாவல் மூலம் மக்கள் பார்வைக்குக் கொண்டுவந்துள்ளார் சல்மா. இந்நூல்பற்றி பல்வேறு கோணங்களில் சிந்திக்க வேண்டிய அவசியத்தை மதிப்புரை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. மதம் சார்ந்த மாற்றக்கூடாத மரபுகள் என்ற கட்டமைப்புக்குள் மனிதர்களைத் திக்கு முக்காடவைக்கும் வாழ்வின் இறுக்கங்களை நவீனகாலச் சமூக வீதிக்கு நெஞ்சுரத் துடன் எடுத்துவந்துள்ள இப்படைப்பு, சமூகத்தில் புதிய சிந்தனை அதிர்வலைகளை உருவாக்கும்

அறியப்பட்டாத பாரதி-2
ய. மணிகண்டன்  

  கைலாசபதியின் ஐய வினாவாலும், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்பு எழுப்பிய ஐயப்பாட்டாலும், சீனி விசுவநாதனின் ஏற்காநிலையாலும், பாரதி அன்பர் உலகின் முழுக்கவனத்திற்கும் சென்று சேராத இந்த அருமையான பாடல் பாரதி எழுதியதுதான் என்னும் உண்மையும், பாடலுக்குப் பாரதி அளித்த தலைப்பும், வெளிவந்த இதழ், காலம் ஆகியனவும், பாடலின் திருத்தமான மூல வடிவமும் இப்பொழுது முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.   ‘இந்தத் தெய்வம் நமக்கனுகூலம்’ என்று தொடங்கும் பாடல் பாரதி அன்பர்களுக்கு நினைவிருக்கும். பாரதி புதுச்சேரியில் வசித்தபோது அவரோடு சிறுமியாக இருந்து பழகிய யதுகிரி அம்மாள் இந்தப் பாடலைப் பிற்காலத்தில் தாம் எழுதிய ‘பாரதி நினைவுகள்’ நூலில் நினைவுகூர்ந்து அளித்திருந்தார். ‘சிறுமிய

கட்டுரை
சீனிவாசன் நடராஜன்  

  கடை முழுக்கு எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். சல்லடை, சாரணி, தோசைத்திருப்பி, அரிவாள்மணை, முறம், பூட்டு, பூட்டாங்கயிறு, தேங்காய்த்துருவி, அரிவாள், நாய்ச்சங்கிலி, செருப்பு, செம்படம், தவளை, சொம்பு, காய்கறி, சைக்கிள், யானை, உலக்கை மற்றும் இந்த உலகில் என்னவெல்லாம் கிடைக்குமோ அத்தனையும் அதற்கு மேலும் லாகடத்தில், பட்டமங்கலம் தெருவில், சின்னக்கடை வீதியில், மணிக்கூண்டில், அண்ணா சிலையில், மாயவரத்தில் கிடைக்கும் என்பதால் மட்டும் குதூகலம் இல்லை. உலகில் எங்குமே கிடைக்காத காருகாயும் பாதிரிப்பழமும் கிடைக்கும் என்பதால் மட்டுமல்ல; அழகான பெண்கள் நடந்துபோனால் மணிக்கூண்டும் லாகடமும் துலாக்கட்டமும் முழுக்குத்துறையும் காந்தி வந்து தங்கிச் சென்ற வீடும் காசித்துண்டும் நாகலிங்கப் பூ மரமும் கண்ணி

கட்டுரை
அ.கா. பெருமாள்  

  மகாத்மாவைச் சுட்டுக்கொன்ற நாதுராம்கோட் சேயைத் தூக்கில் போட்ட 1949 நவம்பர் 15 அன்று மாலையில் மதுரை மாவட்டக் கிராமம் ஒன்றில் கோட்சேவுக்குக் கொடும் பாவி கொளுத்தினார்கள். அப்போது கொடும் பாவி ஊர்வலத்தில் பாடுவதற்கென்றே சிந்துப் பாடல்கள் இயற்றப்பட்டன.  இந்தப் பாடல் களை ஆண்களும் பெண்களும் பாடிக் கொண்டே சென்றிருக்கிறார்கள். கொடும்பாவி கோட்சே “வெண்ணெய் திரண்டு உருண்டு வந்தப்போ பானை உடைஞ்சதுபோல் ஆயிற்றே அய்யாவே எறும்புக்கும் தீங்கு செய்யா எங்களய்யாவை கொடும்பாவி கோட்சேயும் கொன்றுவிட்டானே துப்பாக்கிக் குண்டாலே கொன்றுவிட்டானே.” “அய்யா மழைதான் பெய்யாது மாரிதான் பொய்த்துவிடும் மழைக்கஞ்சி ஊத்தி மாரியைக் கையெடுத்தா பூமி செழித்திடுமே பூதேவி சிரிப்பாளே குண்டாலே அய்யாவை

பதிவு
எஸ்.ஆர்., என்னெஸ், படங்கள்: பிரபு காளிதாஸ், அய்யப்ப மாதவன், செல்வம் ராமசாமி  

புத்தகக் கண்காட்சியின் பருவகாலம் மாறிவிட்டதுபோல. ஆண்டுக்கு ஒருமுறை என்றிருந்த வாசிப்புப் பருவம் வருடம் முழுவதுமாக நீடிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் - ஆகஸ்ட், செப்டம்பர் - நடைபெற்ற நூல்வெளியீட்டு விழாக்கள் இந்த எண்ணத்தை வலுப்படுத்துகின்றன. ஈரோடு புத்தகக் காட்சியையொட்டி ஆகஸ்ட் மாதம் காலச்சுவடு பதிப்பகத்தின் இருநூல்கள் வெளியிடப்பட்டன. ஈரோடு, ஹோட்டல் லீ ஜார்ட்இன்னில் தேவிபாரதி குறுநாவல்கள் தொகுப்பு ‘கறுப்புவெள்ளைக் கடவுள்’, இசை’யின் புதிய கவிதைத் தொகுப்பு ‘ஆட்டுதி அமுதே’ ஆகிய இருநூல்கள் வெளியிடப்பட்டன. தேவிபாரதியின் நூலை ஜி. குப்புசாமி வெளியிட கி. சிதம்பரம் பெற்றுக்கொண்டார். தேவிபாரதியின் கதைகள் குறித

பதிவு
டி.எம். கிருஷ்ணா  

  மதுரை புத்தக வெளியீட்டு நிகழ்வில், மகசேசே விருது பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா சிறப்புரையாற்றினார். உரையின் ஒரு பகுதி இது. “இந்த நிகழ்ச்சியில் உனக்கென்ன வேலை என்று சிலர் கேட்கலாம். நான் வளர்ந்தது எல்லாம் சென்னை மயிலாப்பூர் பகுதியில். கர்நாடக இசை உயர்ந்தது என்றும் அதைத் தெரிந்திருந்த என்னைப் பெரிய கலைஞன் என்றும் கருதிக்கொண்டிருந்தேன். ஒருமுறை கட்டைக்கால் கூத்து பார்க்கச் சென்றபோது, எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் என்னைச் சுற்றியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதை ரசித்தார்கள். கலை வழியாக நான் மக்களைப் பார்த்தேன். நான் கர்நாடக இசையைக் குப்பத்து மக்களுக்குச் சொல்லிக்கொடுப்பது, அவர்களை மேம்படுத்துவதற்காக அல்ல. அவர்கள் ஏற்கெனவே வேறு சில கலைகளில் மேம்பட்டவர்கள்தான். கர

காலச்சுவடும்நானும்
தேவிபாரதி  

1988இல் சுந்தர ராமசாமியால் நிறுவப்பட்ட ஓர் இலக்கிய இயக்கத்தின் தொடர்ந்த இடையறாத செயல்பாடுகளின் முக்கியமானதொரு கட்டம் என இந்த இருநூறாவது இதழைச் சொல்ல முடியும். தமிழின் நவீன இலக்கியச் செயல்பாடுகள் தீவிரம்கொண்டிருந்த காலகட்டத்தில் தொடங்கப்பட்ட காலச்சுவடு கடந்த முப்பதாண்டுகளில் தமிழ்ச் சூழலில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், உருவாக்கியுள்ள விவாதங்கள், இலக்கியப் போக்குகள், அறிமுகப்படுத்தியுள்ள படைப்பாளிகளின் எண்ணிக்கை மிக அதிகம். சுந்தர ராமசாமியின் காலச்சுவடுக்குப் பின்னர் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 1994இல் தனது இரண்டாம்கட்டப் பயணத்தைத் தொடங்கியபோது அதனோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்த பலரில் நானும் ஒருவன். 1994 செப்டம்பரில் வந்த முதல் இதழிலேயே எனது சிறுகதையொன்று இடம்பெற்றிருந்தது.

கவிதைகள்
கல்யாணராமன்  

  ‘ஆத்மாநாம் படைப்புகள்’ (காலச்சுவடு, 2002) நூலில் இடம்பெறாத ஐந்து மொழிபெயர்ப்புக் கவிதைகள்   1. கிழக்கில் மதம் அங்கே ரங்கூனில் நான் உணர்ந்தேன் கடவுளர் எதிரிகளென்று, கடவுளைப் போலவே அப்பரிதாப மனிதப் பிறவிகளின்   (கடவுளர்) வழவழப்பாய்(ப்) பரந்து வெண் திமிங்கிலங்கள் என கடவுளர் பொன் முலாமிட்ட நெற்கதிர்களென பிறந்த குற்றத்திற்காகவே பாம்புக் கடவுள்கள் முறுக்கிப்பின்னி, நிர்வாண மற்றும் நேர்த்தியான புத்தர்கள் வெற்று வெளிகள் பற்றிய போலிகளின் கூட்டத்தைக் கண்டு நகைத்தபடி கிறிஸ்துவின் பயங்கர(ச்) சிலுவையைப் போல அனைவருமே எவற்றையும் செய்யவல்லவர் அவர்களின் சொர்க்கத்தை நம்மீது திணிக்க அனைத்துமே சித்திரவதை அல்லது துப்பாக்கியுடன் கடவுட்பற்றை வாங்க அல்லது நம் ர

உள்ளடக்கம்