தலையங்கம்
 

  தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். உடலில் நீர்ச் சத்துக் குறைவும் காய்ச்சலும் காரணங்களாகச் சொல்லப்பட்டன. இந்தத் தலையங்கம் அச்சுக்குச் செல்லும் நாள்வரை அவர் மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஆயுள் ஆரோக்கியத்துடன் திரும்ப வர வேண்டும் என்ற பொது மக்களின் விருப்பத்தையும் எதிர்பார்ப்பையும் காலச்சுவடு இதழும் பிரதிபலிக்கிறது. ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு இயற்கையான ஒன்று. இயல்பாகவே மருத்துவத் துறையின் கவனத்துக்கும் நோய் தீர்ப்புச் சிகிச்சைகளுக்கும் உட்பட்டது. ஆனால் முதல்வரின் உடல்நலக் குறைவு என்பது நிகழக்கூடாத ஒன்றாகவும் வெளிப்படுத்தக் கூடாத மர்மமாகவும் தமிழகக் க

கண்ணோட்டம்
களந்தை பீர்முகம்மது  

                               ஷாபானு என்கிற பெயர் இப்போதும் முஸ்லிம் சமூகத்தின் ஆணாதிக்கத் தளத்தை நடுக்கமுறச் செய்வதை நடப்பு விவகாரங்கள் காட்டுகின்றன. பாய்ந்துவரும் வெள்ளத்தைப் பாலத்தின்மீது கடந்துசெல்லும் வாய்ப்பிருக்கையில், ஏன் பரிசலைத் தேர்ந்தெடுத்தது முஸ்லிம் சமூகம் என்று உணர முடியவில்லை. 1985இல் 62ஆம் வயதில் ஷாபானு தலாக் கொடுக்கப்பட்டபோது, வாழ்நாளுக்கான வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இறுதிவழியாக உச்சநீதிமன்றத்தை அவர் அணுகினார். தீர்ப்பு, அவருக்குச் சாதகம் செய்தது. தலாக் கொடுத்த கணவன் அடுத்து ஜீவனாம்சமும் கொடுக்கட்டும் என்றது கோர்ட். முஸ்லிம் சமூகம் கொதித்தெழுந்தது. தலாக் கொடுக்கப்பட்ட மனைவிக்கு ஜீவனாம்சம்

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

இவ்வுலகின் மாபெரும் விஷயமான மனித மனமாயினும் சரி, அந்த மனம் படைத்த விமானம், வியத்தகு கருவிகள், வெவ்வேறு சாதனைகள் - எவைவாயினும் சரி ஆக்கபூர்வமாகவும் அழிவுபூர்வமாகவும் உபயோகிக்கப்படும் தன்மையன. அணுஅணுவாய் நமது உடைமைகள், உயிர் வாழ்க்கை, உலக உருண்டை என எல்லாவற்றிலும் வியாபித்து ‘மேம்பட்ட வாழ்வா இல்லை முட்டாள்தனமான சாவா’ எனும் போராட்டத்தில் நம்மைச் சிக்கவைத்திருக்கும் அணுவும் இவ்விதிக்கு விலக்கானதல்ல. ‘அணு’ என்றதும் அணுகுண்டோ அல்லது கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்களோ அல்லது பாகிஸ்தான், சீனா பற்றிய பயமோ உங்கள் மனத்திரையில் எழலாம். ஆனால் உண்மையில் அணு என்பது என்ன? உலகின் அடிப்படைத் தத்துவத்தையே உள்ளடக்கி நிற்கிறது இந்த அணு. அனைத்துப் பொருட்களும் அளவற்ற அணுக்களாலேயே உர

கட்டுரை
நித்யானந்த் ஜெயராமன்  

ஆகஸ்ட்மாத நடுவில், உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு டிசம்பர் 2015 சென்னை வெள்ளம் பற்றிய மேலோட்டமான ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தது. “நூறாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பேரழிவிற்கு எந்த தயார்படுத்தலிலும் ஈடுபட முடியாது” என்ற உள்துறைச் செயலரின் கூற்றை மறுப்பதாக அது அமைந்தது. சென்னை வெள்ளத்திற்கு மிகப்பெரும் காரணங்களாகச் சட்டத்திற்குப் புறம்பான ஆக்கிரமிப்பையும் முறையில்லாத நகர திட்டமிடலையும் அக்குழு கண்டறிந்தது. இதைத் தவிர்ப்பதற்கு ‘அதி நவீன தொழில் நுட்பத்தை’ப் பயன்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது. குழுவின் அறிக்கை பெருநகர வெள்ளத்தைக் கட்டுமான மற்றும் தொழில்நுட்பப் பிரச்சனையாகப் பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டுவிட்டது. அதைச் சரி செய்வதற்குக் கட்டுமானத் தொழில் நுட்ப

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

நீங்கள் இங்கே வாசிக்கப்போவது முழுக்கமுழுக்க அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பற்றியது அல்ல. இவருக்கு முன்னர் மக்கள் உணர்ச்சிகளைக் கிளறிப் பயன்படுத்திய இன்னுமொரு அமெரிக்கர் பற்றியது. அவர் புதிய ஏற்பாட்டு மொழியில் ‘மாமிசமும் இரத்தமுமுடைய’ நிச மனிதர் அல்ல; கற்பனைக் கதாபாத்திரம். இவர் ‘It Can’t Happen Here’ எழுதிய ‘Berzelius ‘Buzz’ (Windrip) (இது இங்கே நடக்காது) என்ற நாவலில் ‘ஙிமீக்ஷீக்ஷ்மீறீவீus ‘ஙிuக்ஷ்க்ஷ்’ கீவீஸீபீக்ஷீவீஜீ என்ற பெயருடன் வருகிறார். இந்த வின்ட்ரிப் டிரம்புக்கு முன்நிழலீடு என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த நாவல் 1935இல் வெளிவந்தது. ஜெர்மனியில் மூன்றாம் ஆட்சிமுறை (Third Reich) வந்த இரண்டு ஆண்டுகளுக்

கட்டுரை
த. சுந்தரராஜ்  

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் எச்சமாக விளங்கும் ஆங்கிலம் ஒரு போதும் இந்தியாவின் அடையாளமாக முடியாது என்கிற எண்ணம் இந்தியத் தேசியவாதிகளிடம் சுதந்திரப் போராட்டக் காலத்தில் வேரூன்றியது. பயன்படுத்தும் பொருட்கள், வழங்கும் மொழி முதலியவற்றில் சுதேசியம் பேணி, விடுதலை வேட்கையை ஊக்கப்படுத்தினர். இந்தியாவின் அடையாளம் இந்திய மொழிகளில்தான் இருக்கிறது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஆனால் சுதந்திரப் போராட்டக் காலத்தில் மொழியை அடையாளமாகப் பயன்படுத்துவதைவிட, மக்களை ஒருங்கிணைக்கப் பயன்படுத்துவது முக்கியத் தேவையாக இருந்தது. இந்திய விடுதலையை நோக்கிப் போராட்டக் குழுக்களை ஒருங்கிணைப்பதே அவர்கள் முன்னிருந்த பெரும் சவால். அந்தச் சூழலில் இந்தியா முழுவதும் பரவியிருந்த போராட்டக் குழுக்களை ஒருங்கிணைக்க ஆங்கிலத

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

திருச்சி விமான நிலையத்திற்கு எதிரேயுள்ள சாலையில் சென்று அன்னை ஆசிரமம் என்று கேட்டால் எவரும் வழி சொல்லுகிறார்கள். மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, திக்கற்ற குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம், தொழிற்பயிற்சிப் பள்ளி போன்றவை அமைந்திருக்கும் வளாகத்திற்கே அன்னை ஆசிரமம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பழையதும் புதியதுமான கட்டடங்களைக் கொண்ட நாலரை ஏக்கர் வளாகம் நிதானமாக இயங்கிகொண்டிருக்கிறது. அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியாக மாறியிருக்கும் இதில் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கே முதலிடம் தரப்படுகிறது. கட்டணம் குறைவு என்பதோடு வருடத்திற்கு 98 விழுக்காடு தேர்ச்சியை எட்டும் அளவிற்குக் கற்பித்தல் முறையும் தரமாக இருக்கிறது என்பதே இதற்குக் காரணம். திக்கற்ற குழந்தைகள் இல்லத்தில் தற்போத

கடிதங்கள்
மு. தமிழ்ச்செல்வன்  

மு. குலசேகரனின் ‘ஆதியில் காட்டாறு ஓடியது’ கதை (அக்டோபர் - 2016) எழுதிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. கதையின் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது. அதே நேரத்தில் தெருவுக்குள் தண்ணீர் ஓடுவதுபோல படம் அமைந்துள்ளதே என்ற குழப்பத்தோடு கதையை வாசிக்கத் தொடங்கினேன்.ஒரு சராசரி மனிதனைப்போல சுந்தரமூர்த்தி என்கிற கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது என்றுதான் முதலில் நினைத்தேன். அது பெரும் தவறு என்று முழுமையாக வாசித்து முடித்த பின்பு உணர்ந்தேன். தன் வீட்டு முன்னால் சாக்கடைக் கழிவு நீரோ, வேறு ஏதேனும் துர்நாற்றம் வீசக்கூடிய பொருளோ கிடந்தால் மூக்கைப் பொத்திக்கொண்டு, மனதிற்குள் முனங்கியவாறே அதைக் கடந்து செல்லும் மனநிலைதான் பலருக்கும் உள்ளது. தன் வீட்டின் முன்னால் கிடப்பதைத்தான் தானே சுத்தம் செய்ய வேண

கவிதைகள்
சிபிச்செல்வன்  

Potato Eaters By Vincent Van Gogh உருளைக் கிழங்கு உருளைக் கிழங்கு எனக் கேட்கிறாள் பணிப்பெண் அது என்ன? அது என்ன என நான் கேட்கிறேன் பெட்டாட்டோ பொட்டாட்டோ எனக் கேட்கிறான் தற்போது எனக்கு உருளைக் கிழங்கும் தெரியாது பொட்டாட்டோவும் தெரியாது எனச் சொன்னால் கேலியாகச் சிரிக்கிறாள் இது உருளைக்கிழங்கிற்கும் பொட்டாட்டோவிற்கும் தெரியுமா எனக் கேட்டு அதிர்ந்து நிற்கிறது உருண்டு திரண்டு நிற்கிற அந்த காபிநிற உருண்ட வடிவில் நிற்கிற காய் ஆமாம் நீங்கள் அறிவீர்களா? உருளைக்கிழங்காவது அல்லது பொட்டாட்டோவையாவது அறிந்தவர்கள் சொல்லுங்கள் பணிப்பெண்ணிடம் உருளைக்கிழங்கின் குணங்களை அதன் நிறங்களை அதன் அதிசயங்களை அதன் பூர்விகத்தை அதன் வரலாற்றை குறைந்தபட்சம் அதன் வாசனையைச் சொல்லுங்கள் நான் ரஸித்

கட்டுரை
சீனிவாசன் நடராஜன்  

மற்றவர்களின் எழுத்து / கருத்து / அறிவு எனும் சிந்தனைச் செல்வங்களைத் தமது கருத்துகள்போலக் காட்டிப் படைப்புகளை நூல்களை உருவாக்குவது தமிழ் ஆய்வுலகில் பெருகிவருகிறது. பிறருடைய ஆய்வு நூல்கள், கட்டுரைகளிலிருந்து கருத்துகளை வரிகளாகவோ பத்திகளாகவோ கணிசமான பக்கங்களாகவோ சில சமயம் முழுவதுமாகவோ பெயர்த்தெடுத்து மேற்கோள்காட்டாமல், அடிக்குறிப்பிடாமல் தம்முடைய கருத்துகளாக அச்சிட்டு வெளியிடும் வழக்கத்தைச் சிலர் மேற்கொண்டு வருகின்றனர். சிலர் குறிப்பிட்ட தலைப்பில் அது தொடர்பாக வெளிவந்துள்ள நூல்கள், கட்டுரைகளிலுள்ள தகவல்கள் அனைத்தையும் திரட்டித் தொகுப்பு என்ற பெயரிலும் நூலாகவும் வெளியிடுகின்றனர். இன்னும் சிலர் இணையதளங்களிலிருந்து பிறரின் கருத்துகளை எடுத்து வெட்டியும்ஒட்டியும் தம் கருத்துகளாக வெளியிடுகின்றனர். ஆ

மொழிபெயர்ப்பு
கல்யாணராமன்  

(மறைந்த ஆத்மாநாம் கொண்டிருந்த அரசியல் கருத்துக்களை விளக்கும் சில மொழிபெயர்ப்புகளை முதன்முறையாக அவர் பெங்களூரில் படிகள் குழுவினரை(ச்) சந்தித்தபோது கொடுத்தார். அம்மொழிபெயர்ப்புகளில் ஒன்று புரட்சிகர(ப்) பாதிரி கேமிலோ டாரஸ் எழுதிய ‘மக்கள் இயக்கக் கூட்டணிக்கான மேடை’ என்ற கட்டுரை. இக்கட்டுரை எத்திசை நோக்கிய சமூகமாற்றத்தை ஆத்மாநாம் ஆதரித்திருந்தார் என்பதை விளக்கும். இம்மொழிபெயர்ப்பு மூலம் கேமிலோ டாரஸ் கருத்தை வெளிப்படுத்த நினைத்த ஆத்மாநாம் தன் அரசியல், சமூகமாற்றம் போன்ற கருத்துக்களையும் தெளிவாக்குகிறார் என்றெடுத்துக் கொள்வதில் தப்பில்லை. கேமிலோ டாரஸ் பற்றிய குறிப்பையும் இக்கட்டுரையுடன் சேர்த்தவர் ஆத்மாநாம்தான். இன்னொரு கட்டுரை அடுத்த படிகளில் வரும்). (படிகள் ஆசிரியர் குழுவின் குறிப்ப

திரை
தியடோர் பாஸ்கரன்  

தென்னிந்தியாவின் முதல் திரைப்படமான ‘கீசகவதம்’ (1916) தொடங்கி ஏறக்குறைய பதினாறு ஆண்டுகாலம் நீடித்த மௌனப்படக் காலத்தில் (1916 - 1931) சென்னையில் மட்டும் 120க்கும் மேற்பட்ட முழுநீளப் படங்கள் தயாரிக்கப்பட்டன. இவை தவிர மைசூர், நாகர்கோவில், வேலூர் போன்ற இடங்களிலிருந்தும் சில படங்கள் வெளிவந்தன. ஆனால் எஞ்சியிருப்பது ஒரே ஒரு படம்தான். நிலைப்படங்கள்கூட இல்லை. அந்தச் சலனப்படங்களைப் பற்றி அச்சில் வந்த, செய்திகள், விமர்சனம் போன்றவையும் அரிதாயிருக்கின்றன. சலனப்படத் தயாரிப்பில் பங்கெடுத்த சிலரையும் நடிகர்களில் சிலரையும் 1970களில் என்னால் சந்திக்க முடிந்தது. எனினும் இந்தப் பொருள்பற்றி நம்மிடம் இருக்கும் முக்கிய ஆவணம் ‘ICC Report’ என்று வரலாற்றாசியர்களால் குறிப்பிடப்படும் ‘Repor

கதை
எம். கோபாலகிருஷ்ணன்  

தாடையை லேசாக அசைத்தபோதே மண்டைக்குள் வலி தெறித்தது. காதோரத்தில் எரிச்சல் காந்தியது. அவன் ஏன் என்னை அப்படி அறைந்தான் என்று எனக்குப் புரியவில்லை. சுதாரித்து விலகுவதற்குள் கன்னத்தில் அவன் கை இறங்கிவிட்டது. அந்த நொடிக்கு முன்னால்வரை அவன் அவ்வாறு அடிப்பான் என்று நினைக்கவில்லை. ஆனால் அடித்த கணத்தில் என் உடல் மொத்தமும் கிடுகிடுத்தது. அடுத்தடுத்து இனி இப்படித்தான் நடக்கும் என்று உதறலெடுத்தது. ஒரே அறைதான். அதன்பின் அவன் அங்கே நிற்கவில்லை. உதட்டோரத்தில் ரத்தம் கொப்புளித்திருந்ததை உணர்ந்தேன். வலியுடன் எரிந்தது. நாக்கால் தொட்டபோது புளிப்புச் சுவை. கடகடவென்று கண்ணீர் உருண்டு முன்னங்கையில் சிதறியது. போலிஸ் அடி. சில மணி நேரங்களுக்கு முன்பு வரையிலும் போலிஸ் அடி வாங்கும் யோகம் எனக்கு இருக்கிறது என்று யாராவத

கவிதைகள்
ஜெபா  

courtesy:amanda putnam தொலைந்துபோன தருணங்களை திரும்பிப் பார்க்கிறேன் விசும்பல்களின் ஒலிகூட இல்லாமல் என் மவுனங்களில் நாட்கள் நீளுகின்றன என் இதயத்தின் கீறல்களை நாட்காட்டியில் விரைவாக கிழிபடும் தாள்களால் ஒட்டவைத்துக்கொள்கிறேன் இப்போது என் தொலைந்துபோன தருணங்கள் என் முன்னால் தெளிவாய்... என் விசும்பல்களின் ஒலி பேரிரைச்சலாயும் என் கண்களின் ஈரம் பெரு வெள்ளமாயும் உருவெடுத்தது என் மவுனம் உடைந்து தெறித்தது இப்போதெல்லாம் என் நாட்காட்டியின் தாள்கள் மெதுவாகவே கிழிபடுகின்றன. ************************************************  இரவும் பகலும் உருண்டோடும் பயணநேரங்கள் இருளில் கால்களும் பகலில் கண்களும் துழாவிக்கொள்கின்றன நாட்களின் வீச்சில் வாழ்வின் மிச்சங்கள் ஓராயிரம் கால்களுடன

அஞ்சலி
சீனிவாசன் நடராஜன்  

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த போகலூர் மலைப்பகுதியில் சமீபத்தில் கிடைக்கப்பெற்ற, வரலாற்றுக்கு முந்திய கற்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் பாறை அடுக்குகளாக (கல்திட்டைகள்) சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இவ்வடையாளங்களிலிருந்து நாம் கற்கால மனிதர்களின் வாழ்விடத்தைத் தெரிந்துகொள்கிறோம். இப்படி இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலும் கற்கால அல்லது பெருங்கற்கால மனிதர்களின் வாழ்வியல் முறை மற்றும் வாழ்ந்ததற்கான அடையாள ஆதாரங்களாக கற்கருவிகள், கலைச் சாதனங்கள் ஆகியன தெரியவருகின்றன. மனித நாகரிகத்தில் இன்றைய நிலையைத் தொன்மையான மனித வாழ்வியலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நமக்குக் கிடைத்திருக்கும் பல்வேறு ஆதாரங்களில் முக்கியமானவையாகப் பாறை ஓவியங்களையும் பாறை அடுக்குகளால் உருவாக்கப்பட்ட அமைப்புகள

பதிவு
கிருஷ்ணபிரபு  

         பதிவு நான்காம் ஆசிரமம் எழுத்தாளர் சூடாமணியின் நினைவுதினத்தை ஒட்டி அவர் நினைவைப் போற்றும்வகையில் ஆண்டுதோறும் கலை, இலக்கிய விழாக்கள் ஆர். சூடாமணி அறக்கட்டளையின் சார்பாக ஏற்பாடு செய்யப்படுகிறது. சிறுகதைப் பயிலரங்கம், மொழியாக்கம் என அறக்கட்டளை தனது முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடம் சென்னை, மயிலாப்பூர் இராமகிருஷ்ணா மடம் எதிரிலுள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2016 செப்டம்பர் 13 அன்று விழா நடைபெற்றது. சூடாமணியின் ‘நான்காம் ஆசிரமம்’ சிறுகதையை மூன்றாம் அரங்கு நாடகக் குழுவினர் ஓரங்க நாடகமாக மேடையேற்றினார்கள். தானாய், தனியாய், தன்னிச்சையாய் வாழ நினைக்கும் சங்கரியின் மரணத்தை மையமிட்டுக் கதை ந

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது  

மொழி, இலக்கியம், அரசியல், சமூகம் உள்ளிட்டுப் பல துறைகளிலும் தனித்தியங்கும் பண்புகள் தமிழ்நாட்டுக்குரிய சிறப்பம்சம். தமிழ்மரபில் நம் சமூகம் கொண்டிருந்த அற எழுச்சியும் அசாதாரணமானது. இதற்கான ஈராயிரம் ஆண்டு வரலாற்றில் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டிருக்கக் கூடும். ஆனாலும் சமூகம் சீரான போக்கிலேயே இயங்கியிருக்கிறது. அதன் உள்நகர்வுகள் எப்படியிருந்தன என்று முற்றுமுழுதாக அறிய முடியாத நிலை இன்னும் நீடிக்கிறது. கிடைத்த இலக்கியம், கல்வெட்டு ஆதாரங்களின் மூலம் மூதாதையர்கள் நம்மைக் கைப்பிடித்து இன்று இவ்விடத்தில் விட்டுவிட்டுச் சென்றிருப்பதைப் பெருமையாகக் கருதுகிறோம். போலித் தனமான தலைமைப் பண்புகளைக் கொண்டிருப்போரை அடிதொழும் சமூகம் எழாது. தெரிந்தே திரையுலகின் நிழல்களைத் திடவஸ்துகளாக மாற்

மதிப்புரை
கிருஷ்ணமூர்த்தி  

'பொம்மை அறை’ நாவல் கட்டலன் மொழியிலும் ஸ்பானிய மொழியிலும் வெளியானது. Jaume Pomarலோரன்ஸ் வில்லலோங்கா பற்றி எழுதியிருக்கும் நீண்ட கட்டுரையில் இந்நாவல் சார்ந்த சில தகவல்கள் கிடைக்கின்றன. 1952க்கும் 1954க்கும் இடையே இந்நாவலை இயற்றியுள்ளார். அவர் முன் எழுதிய ‘Mort de dama’ என்னும் நூலின் வழியே மல்லோர்க்கா எனும் இடத்தில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பகடி செய்திருக்கிறார். அதை வெளியிடும்போது அதன் பதிப்பாளர் எழுத்துநடையில் சில மாறுதல்களைச் செய்திருக்கிறார். இதை அறிந்ததனால் மொத்த நாவலையும் அவரே மொழிபெயர்த்து ஸ்பானிய மொழியில் 1956இல் வெளியிடுகிறார், குறும்பதிப்பாக; அது அதிகமாகப் பேசப்படாமல் போகிறது. பின் 1961இல் கட்டலன் மொழியில் வெளியாகிறது. அப்போது பரவலாகப் பேசப்படுகிறது.

மதிப்புரை
நாகரத்தினம் கிருஷ்ணா  

'யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ என்ற குரலுக்குப் பூமி தலை அசைத்து வெகுநாளாயிற்று. இன்றைய சந்தை உலகில், பொருட்களுக்கிடையே மட்டுமின்றிக் கலை இலக்கியத்திலும் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. இனம், மதம், மரபு, பண்பாடு என மனிதகுலத்தைப் பிரித்திருக்கும் இயற்கைச் சுவர்களுக்குச் சன்னல்கள் மொழியெனில், மொழிபெயர்ப்புகள் கதவுகள். உலகில் ஓரிடத்தில் வசிக்கின்ற ஒருவர் பிறிதோர் இடத்தில் வசிக்கின்ற மற்றொருவருடன் சார்ந்து வாழவேண்டிய இன்றைய சூழலில் மொழியும் மொழிபெயர்ப்பும் இன்றியமையாதவை. நமது தாய்மொழி அல்லாத பிறமொழிகளைக் கற்பது, மரபு - பண்பாடு இரண்டிலும் நம்மிடமிருந்து வேறுபட்டுள்ள மனிதர்களைக் கற்பதாகும். அவர்களின் கலை இலக்கியங்களைத் தெரிந்துகொள்வது அம்மக்களின் மரபுகளையும் பண்பாடுகளையும் உணர்வுகளையும் புரிந்த

மதிப்புரை
சி. அமரநாதன்  

தமிழ்ச்சூழலில் நல்ல நாவல்கள் வருவது அரிதாகி வருகிறது. பெரும்பாலான புத்தகங்கள் வெறும் பரபரப்பினாலேயே புகழ்பெற்றுவிடுகின்றன. இந்தச் சூழலில் யுவனின் நாவல் சந்தோஷம் தரக்கூடியது. அவரின் சுவாரஸ்யம் குன்றாத கதை கூறல் இந்நாவலிலும் தொடர்கிறது. சீதாபதி கதை நாயகன். அவனது கதையைக் கேட்டுப் பதிவுசெய்பவன் உதவி இயக்குநர் கமலக்கண்ணன். சீதாபதியின் தந்தை பரம்பரைக் கிராம கர்ணம். பையனைக் கலெக்டர் ஆக்க வேண்டும் என்பது அவரது ஆசை; வடக்கே பணிநியமனம் கிடைத்தால் உதவியாக இருக்குமென்று அவனுக்கு இந்தி கற்பிக்கிறார்; சீதாபதியின் ஆசை அவனது கிராமத்திலேயே இருந்து, லாடங்குளம் பஞ்சாயத்து ஆபிஸில் குமாஸ்தா ஆவதுதான். ஆனால் சீதாபதி வடக்கே செல்ல நேருகிறது, கலெக்டராக அல்ல - தேசாந்திரியாக; காரணம், அவன் அம்மா தற்கொலை செய்துகொள்கிறார

அறியப்படாத பாரதி
ய. மணிகண்டன்  

பாரதியின் வாழ்க்கையில், அவரது மனவுலகத்தில், எழுத்துலகத்தில் அவரை ஈன்றெடுத்து ஐந்து பிராயத்தில் ஏங்கவிட்டு மறைந்த தாய்க்கு இடமுண்டு; Ôநாசக் காசில் ஆசை வைத்த நல்லன்Õ தந்தை சின்னசாமி ஐயருக்கு இடமுண்டு; Ôதங்கச் சிலைÕ போல நின்ற மனைவி செல்லம்மாவுக்கு இடமுண்டு; கனவாகிப்போன Ôதேனகத்த மணிமொழியாளுக்குÕ இடமுண்டு; சகுந்தலா பாப்பாவுக்கும் தங்கம்மாளுக்கும் இடமுண்டு; தம்பி விசுவநாதனுக்கும் இலக்கியத் தம்பி நெல்லையப்பருக்கும் இடமுண்டு; ஜி. சுப்பிரமணிய ஐயர், வ.உ.சி., வ.வெ.சு. ஐயர், சுரேந்திரநாத் ஆர்யா, குவளைக்கண்ணன், கனகலிங்கம், சுப்புரத்தின முதலியார் (பாரதிதாசன்), சிறுமி யதுகிரி, பிரிட்டீஷ் சி.ஐ.டிக்கள் எனப் பல பேருக்கும் இடமுண்டு. வாழ்வின் தொடக்கம் முதல் இறுதிவரை இவர்கள

ஆவணப்படம்
யுகபாரதி  

கவிதையை மனனம் செய்து ஒலியழகோடு ஒப்பிக்கும் பழக்கம் ஒருகாலம்வரை நம்மிடம் இருந்ததற்கான சாட்சியாக வாழ்ந்தவர் திருலோக சீதாராம். தன்னுடைய கவிதைகளைவிட பிறர் கவிதைகள்மேல் அவர் கொண்டிருந்த அன்பும் பற்றும் அலாதியானது. இன்னும் சொல்லப்போனால் பாரதி, பாரதிதாசன் என்ற இருபெரும் ஆகிருதிகளின் அடிநாதமாகத் தன்னை வரித்துக்கொண்டவர்களில் முதன்மையானவர் திருலோகம். என்னுடைய பதின்பருவத்தில் திருலோகசீதாராமின் கவிதைகள் குறித்த பிரமிப்பில் தோய்ந்திருக்கிறேன். சின்னச்சின்ன சந்தங்களில் அவர் கட்டியெழுப்பிய மகா கவிமாளிகையில் வாழவும் வசிக்கவும் விரும்பியிருக்கிறேன். கணையாழியில் பணிபுரிந்தபோது விமர்சகர் வெங்கட்சாமிநாதனும் கவிஞர் க. மோகனரங்கனும் திருலோகத்தைப் பற்றி அவ்வப்போது சொல்லக்கேட்டுச் சிலிர்த் திருக்கிறேன். ஓரளவு எனக

உள்ளடக்கம்