தலையங்கம்
 

காலவல்நிலையச் சாவுகளில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பது ஜனநாயக மாண்புகள்மேல் விழுந்திருக்கும் மிகப் பெரும் கறை. இதுபோன்ற மரணங்கள் நிகழும்போது தமிழகக் காவல்துறை கடும் கண்டனத்துக்குள்ளாகிறது; அண்மையில் நிகழ்ந்த ராம்குமாரின் சிறை மரணம், பள்ளிக்கரணை காவல்நிலைய விசாரணையில் தமிழ் அகதி ஒருவரின் மரணம், எஸ்.பி. பட்டணம் இளைஞர் சையது முகமதுவின் மரணம் போன்றவை காவல்துறையின் அத்துமீறலை வெளிப்படுத்தின. தாரா, சென்னையைச் சேர்ந்த திருநங்கை. வயது 28. அக்டோபர் ஒன்பதாம் தேதி, சென்னை பாண்டிபஜார் பகுதியில் காவற்துறையினர் தாராவின் மோட்டார் சைக்கிளையும் கைபேசியையும் கைப்பற்றி நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்; தாராவைத் தகாத கொச்சை வார்த்தைகள்கூறி காவல்துறையினர் அவமதித்துள்ளனர்; இவை கடுமையான

கட்டுரை
டி.கே. அருண்  

    உயர்மதிப்பு நோட்டுகளின் புழக்க நீக்கம், ஊழல் பேர்வழிகளுக்கும் பணக்காரர்களுக்கும் எதிரான உரத்த குரல் முழக்கம் ஆகிய தமது நடவடிக்கைகள் மூலம் நரேந்திர மோடி, இந்திரா காந்தியின் சேலைத் தலைப்பை அவரது மருமகளிடமிருந்து கைப்பற்றித் தமது தலையைச் சுற்றிப் போர்த்திக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரே இரவில் ஏழைகளின் பாதுகாவலனாகவும் நிகரற்ற வர்க்கப் போராளியாகவும் அவர் மாறிவிட்டார். இதைச் செயல்படுத்த பாகுபாடற்ற ஒரு அரசியல் மேடையையும் கண்டுபிடித்திருக்கிறார். அதன் மூலம் அழுகல் பணக்காரர்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தில் மறுதரப்பாகத் தாங்களும் பங்கேற்கிறோம் என்ற பெரும் திருப்தியை மக்களுக்கு அளித்திருக்கிறார். தன்னிச்சையாகவே வங்கிகளின் முன்னிலும் ஏடிஎம்களின் முன்னிலும் நீண்ட வரிசைகளில் ம

கடிதங்கள்
 

‘நோய் முதல் நாடி’ எனும் ஆசிரியரின் தலையங்கம் நேர்மையானது. ‘ஷாபானு முதல் ஸாயிராபானுவரை’ எனும் களந்தை பீர்முகம்மது கட்டுரை பிஜேபி நடுவண் அரசுமீது கொண்ட அளவற்ற வெறுப்பையே சித்திரிக்கிறது. நல்லது எங்கிருந்து வந்தாலென்ன, ஏன் இந்தத் துவேஷம்? மக்கள் போராளி உதயகுமாரனின் இயற்கைக் கதிர்வீச்சையும் அதன் விளைவுகளையும் சித்திரிக்கும் ‘ஆல்பா, பீட்டா, காமா’ எனும் அறிவியல் கட்டுரை சிறப்பாக இருந்தது. புறம்போக்கு எனும் சொல்லும் அதன் நிலவியலும் மீட்டெடுக்கப்பட்டு அது முன்னர் தொடர்புடையதாக இருந்த மதிப்பை மீளப்பாய்ச்ச வேண்டும் என்ற நித்யானந்த் ஜெயராமனின் (மதிப்பும் மதிப்பற்றதும்) கருத்து வரவேற்கப்பட வேண்டியதாகும். இந்திய மொழிகள் அனைத்திற்கும் தேசிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்

அஞ்சலி
சுப. உதயகுமாரன்  

அண்மையில் மதுரை அழகர்கோவில் பகுதியில் ஒதுக்குப்புறமான பொய்கைக்கரைப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்த அய்யா ஒய். டேவிட் அவர்களைக் காலச்சுவடு இதழுக்கான நேர்காணலுக்காகச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவரோடு ரீட்டாம்மாவும் இரண்டாவது மகள் சுஜாதாவும் வீட்டிலிருந்தார்கள். பிறவியிலேயே மனதளவில் மாற்றுத்திறனாளியாக இருந்த சுஜாவின் நிலைமை தற்போது மேலும் சிக்கலாகி இருப்பதாகவும் அவளைக் கவனித்துக்கொள்வது மிகவும் கடினமானதாக இருப்பதாகவும் அய்யா என்னிடம் சொன்னார், தூங்கப் போகமாட்டேன், என்று அடம்பிடித்தவாறே, சுஜா உரக்கக் கத்திக்கொண்டிருந்தாள். அவள் துன்புறுவதையும் வயதான பெற்றோர் இருவரும் சேர்ந்து அவளைச் சமாளிக்க முடியாமல் சிரமப்படுவதையும் பார்த்து மிகவும் மனம் வருந்தினேன். இதற்கிடையே ரீட்ட

நேர்காணல்
சுப. உதயகுமாரன்  

மதுரை, அழகர்கோவிலை அடுத்த பொய்கைக்கரைப்பட்டியிலுள்ள டேவிட் அய்யாவின் இல்லத்தில் நிகழ்ந்த நேர்காணல் இது. டேவிட் அய்யா ஓர் ஊடகத்துக்கு விரிவாகவும் இறுதியாகவும் அளித்த நேர்காணல். சுற்றுச்சூழல், சமூகநீதி, சமத்துவச் சமுதாயம் ஆகியவை குறித்து நுட்பமாகவும் தீர்க்கமாகவும் இந்த உரையாடலில் டேவிட் அய்யா தனது கருத்துகளை முன்வைக்கிறார். இது அவர் வாழ்ந்து அளித்த இறுதி நேர்காணல். ஆனால் அவர் காணவிரும்பிய சமத்துவச் சமுதாயத்தின் அழியாத வரைபடம். உங்கள் பெற்றோர், இளமைக்காலம், தொடக்ககாலக் கல்வி பற்றிச் சொல்லுங்கள்! என்னுடைய சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அடுத்துள்ள குமாரபுரம் தோப்பூர். தாயார் முத்தாபரணம். அவர்களுடைய மூதாதையர் பாளையங்கோட்டையிலிருந்து திருவிதாங்கூர் மகாராஜாவின் சிறப்பு அழைப்புப்

கட்டுரை
ஸாஹிரா  

ஒடுக்கப்பட்டுக் கிடந்த பெண்களுக்குள் ஓயாது புகைந்துகொண்டிருந்த நெருப்பு, இன்று முத்தலாக்குக்கு எதிராகப் பற்றி எரிகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலம் முதலாகப் பொது சிவில் சட்டம் குறித்த உரையாடலும் இதனோடு ஓங்கி ஒலிக்கப்படுகின்றது. தற்காலத்தில் மாறிவரும் வாழ்க்கைச் சூழல் எல்லாவகைப்பட்ட அறிவு நுகர்வுக்கும் இடமளிக்கின்றது. நாம் தற்காலப் போக்கைவிட்டு விலகி நின்றுவிட முடியாது. முத்தலாக் தடை வேண்டி உச்சநீதிமன்றக் கதவுகளைத் தட்டிய வழக்குகள் இதைத்தான் உணர்த்துகின்றன. குறிப்பிட்டதொரு பாலினம், சமயக் குழுக்கள், மதநிறுவனங்கள், ஆதிக்கவர்க்கங்கள் ஆகியவற்றின் சவுகர்ய அடிப்படையில் சமயச்சட்டம் வளைக்கப்படுகின்றது. இது, ஆண் சார்ந்த நடைமுறையாக நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெண்ணுக்க

கதை
அ. முத்துலிங்கம் ஓவியங்கள்- அனந்த பத்மநாபன்  

ஒரு பேச்சுக்குத்தான் அவன் அப்படிக் கேட்டான். மிதிலாவுக்கு அது பிடிக்கவில்லை. அவள் வழக்கம்போல ஒன்றுமே பேசவில்லை. ஆனால் முகம் வேறு யாருடையவோ முகம்போல நாலு கோணத்தில் மாறிவிட்டது. மேல் கோட்டின் நாலாவது பட்டனை வலதுகையால் போட்டுக்கொண்டு, இடதுகையால் கைப்பையைத் தூக்கினாள். அவள் வெளியே போனால் இந்தச் சண்டை முடிவுக்கு வராது. இரண்டு நாள் இப்படியே இழுக்கும். அவன் ஒன்றுமே கேட்கக்கூடாது. ஆனால் அவன் பற்றிய விசயம் எல்லாம் அவளுக்குத் தெரியும். ஒரு தடவை அவளிடம் கேட்டான், ‘நீ பல்கலைக்கழகத்தில் என்ன படிக்கிறாய்?’ சாதாரண கேள்விதான். அவளுடன் கடந்த ஆறுமாத காலம் ரொறொன்ரோ நடு மையத்தில் உயர்ந்து நிற்கும் 21 மாடிக் கட்டடத்தில் ஏழாவது மாடியில் 716ஆம் எண் வீட்டில் ஓர் அறையில் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வசிக

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

‘தீப்பொறி’ ஆறுமுகத்தின் பெயரை ‘பாகீரதி’யில் உச்சரித்ததற்காகப் பெருமைப்பட்டுக் கொள்கிறேன். அதற்கு முன்பே ‘தாண்டவராய’னிலும் ட்ரிஸ்ட்ராமின் தாயார் அவருடைய பெண் பதிப்புத்தான். என் பால்யத்தின் வசந்தம். மதுரையின் அடையாளம். அவர் எப்போதும் என் புனைவுகளில் இருந்துஎன்னை ஆசீர்வதிக்கட்டும். அன்னாருக்கு என் கண்ணீர் கரைந்த அஞ்சலி. சென்று வாருங்கள் அய்யா. - பா. வெங்கடேசனின் முகநூல் குறிப்பிலிருந்து. கடந்த நவம்பர் 5ஆம் தேதி இரவு மரணமடைந்த தீப்பொறி ஆறுமுகம் என்ற பெயரையும் பேச்சையும் ஒருசேரக் கேட்ட தருணத்தில் நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. நேரம் நடுநிசியைத் தாண்டிவிட்ட போதிலும் அவர் பேச்சின் ‘கவர்ச்சி’யில் மிதந்து கொண்டிருந்தேன். ஏற்கனவ

கட்டுரை
ய. மணிகண்டன்  

ய.மணிகண்டன் ஆ   .இரா .வேங்கடாச்சலபதி கரு .ஆறுமுகத்தலைவன் ஓவியம் -அட்டை ஓவியம்:மணிவண்ணன் *பாரதியின் தாயுமானவர் வாழ்த்து  வரிகள்  ரா.அ. பத்மநாபன், சீனி. விசுவநாதன் ஆகிய பாரதியியல் முன்னோடிகள் இதுவரை கூறிவந்ததற்கு மாறாகப் பட்டினத்தார் பற்றிய பாரதியின் சொற்பொழிவு 1905 மே மாதத்திலேயே நடந்துவிட்டது எனும் உண்மையும், பாரதி தலைமை தாங்கிய திருவள்ளுவர் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி உள்ளிட்ட பல புதிய செய்திகளும் இப்போது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளன.   உடன்பாட்டு நோக்கிலும் முரண்பாட்டு நோக்கிலும் உ.வே.சாமிநாதையர், பாரதி ஆகிய பெயர்கள் தமிழ்ச் சூழலில் அவ்வப்போது இணைத்து ஒலிக்கப்படுகின்றன. அண்மையில் மௌனியைப் பற்றி எழுத வந்த சாரு நிவேதிதா, “பாரதி அவர் காலத்தில் வ

கட்டுரை
ஆ.இரா. வேங்கடாசலபதி  

          எட்டயபுர ஜமீன்தார்,1899-1915 ('சின்னச் சங்கரன் கதை 'யில் கேலிக்குள்ளான ஜமீன்தார்) சென்ற சில மாதங்களாக ய. மணிகண்டன் காலச்சுவடில் எழுதிவரும் ‘அறியப்படாத பாரதி’ தொடரை ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன். பல்லாண்டுக் காலப் பாரதி தோய்வும் தேட்டமும் அதில் பொதிந்துள்ளன. சீனி. விசுவநாதனின் காலவரிசையிலான பாரதி படைப்புகளின் தொகுதிகள் வெளியான பின் பாரதியியலில் ஏற்பட்ட தேக்கத்தில் மணிகண்டன் ஓர் உடைவை ஏற்படுத்தியுள்ளார் என்று தயங்காமல் சொல்ல முடியும். காலச்சுவடு அக்டோபர் இதழில் ‘தென்னிந்திய ஜமீன்தார்கள்’ என்ற தலைப்பில் பாரதி 1905இலேயே ஆற்றிய சொற்பொழிவைப் புதிதாகக் கண்டெடுத்து அதைப் பற்றி எழுதியிருக்கிறார் மணிகண்டன்.

மதிப்புரை
கரு. ஆறுமுகத்தமிழன்  

கவிதை நூல்களுக்குப் பெரிய வரவேற்பில்லை. கவிதை படிக்கிற காலமாக இல்லை. கவிதை நூல்களை விதவிதமாய் வடிவமைத்துப் பதிப்பித்த வித்தகப் பதிப்பாளர்களெல்லாம், கல்லாத நூல்களை நாம் கட்டிவைத்துக் கண்டதென்ன என்று விலகுகிறார்கள். சரிதான். பொய்கை இறங்காமல் பூசிக் குளியாமல் பெண்ணிருந்து என்ன பயன்? என்றாலும் கவிஞர்களும் கவிதைகளும் அற்றுப் போய்விடவில்லை. விற்பனை நோக்கியதன்றே கற்பனை? கவிதைகளைப் பறக்கவிட வேறு வெளிகளும் கவிஞர்கள் கால்பாவ வேறு தளங்களும் கண்டுகொள்ளப்பட்டுவிட்டன. உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை ஒப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். கவிதைகளைப் படிப்பவர்கள் யார்? முக்காலே மூணு வீசம் கவிஞர்களே ஆவார்கள். முனைவர் பட்ட ஆய்வேடுகளின் மதிப்பீட்டுரைகளைப் பண்டமாற்றுச் செய்துகொள்ளும் பேராசிரியர்கள்போல, &ls

கட்டுரை
ஆ.இரா. வேங்கடாசலபதி  

பாரதியினுடைய அரசியல் வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தில் முதல் உலகப் போர் நடந்து முடிந்தது என்பதையும், அவனுடைய புகலிட வாழ்க்கையில் அதுபெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது என்பதையும் பாரதி வரலாற்றாசிரியர்கள் பலர் நினைவில் கொள்வதில்லை. செப்டம்பர் 1908 முதல் நவம்பர் 1918 வரையான அவனுடைய புதுவை அடைக்கலக் காதையில் நான்காண்டுகள் நடந்த உலகப் போர் அடங்கும். உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதி உடன்படிக்கை (Armistice) கைச்சாத்தான ஒரே வாரத்தில் பாரதி தன் புகலிட வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்டது தற்செயலானதல்ல. 1789 முதல் 1914 வரை நீண்ட ‘பத்தொன்பதாம் நூற்றாண்’டை முடிவுக்குக் கொண்டுவந்தது முதல் உலகப் போர். ஐரோப்பாவின் முதலாளிய வளர்ச்சியின் உச்ச கட்டத்தில

எதிர்வினை
 

‘ஷாபானு முதல் ஸாயிராபானு வரை’, ‘ஒட்டகக் குர்பானி: பண்பாட்டு வலை’ மற்றும் முடவன்குட்டி மொழிபெயர்த்த அமர்யா சென்னின், ‘வரலாற்றில் இந்துக்களும் முஸ்லிம்களும்’ கட்டுரைக்களுக்கானவை. ‘ஷாபானு முதல் ஸாயிரா பானுவரை’ கட்டுரை வாசித்தேன். கட்டுரையாளர், எதையெதையோ கற்பனை செய்துகொண்டு, பூதாகரமாக முஸ்லிம் சமூகத்தின் மீதும் அகில இந்திய முஸ்லிம் தனியார்ச் சட்ட வாரியத்தின் மீதும் அச்சம் தெரிவிக்கிறார்; எச்சரிக்கையும் விடுக்கிறார். மணவிலக்கு, இஸ்லாமியச் சமுதாயத்தில் மட்டுமல்ல, நுகர்வுக் கலாச்சாரத்திற்குக் கிடைத்த வெற்றியின் விளைவால் எல்லாச் சமுதாயங்களையும் ஆட்டுவித்து வருகிறது. விழுக்காடு அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம் சமுதாயத்தில் மணமுறிவு குறைவே. ஆனாலும் அந

கதை
தொ. பத்தினாதன் ஓவியங்கள்- றஸ்மி  

கோடை வெயிலுக்குப் பயந்த முகாம்வாசிகள் சீக்கிரமாகவே எழுந்து காலைக் கடன்களில் சுறுசுறுப்பானார்கள். அகதி முகாமில் எழுதப்படாத விதியும் மீறப்படாத ஒழுங்கும் இதுவாகத்தானிருக்கும். வெளிக்கு முள்ளுக்காட்டுப் பக்கம் ஆண்கள் போகும் திசையில் பெண்கள் போக மாட்டார்கள். பெண்கள் கக்கூஸ் இருக்கும் பக்கமாக ஆண்கள் செல்லமாட்டார்கள். ஆண்கள் சற்றுத்தொலைவிலும் பெண்கள் முகாமிற்குச் சற்றே அருகிலும் செல்வார்கள். வழக்கம்போல அன்றும் அகதி மக்கள் வெளிக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். அம்பேத்கர் படமும் பபிள்கம் ஸ்டிக்கர் பொம்மைப் படங்களும் ஒட்டப்பட்ட தகரக் கதவை மெதுவாகத் திறந்துகொண்டு கணேஷ் வெளியே வந்தான். கோடைவெயில் சூரியன் கிளம்பும்போதே உக்கிரமாக இருந்தது. அதுவே கண்ணைக் கூசச் செய்தது. சோம்பல் முறித்துக்கொண்ட கணேஷ் ஓலைக்

கவிதைகள்
கல்யாணராமன்  

காலச்சுவடு வெளியீடான ‘ஆத்மாநாம் படைப்புகள்’ முழுத்தொகுப்பில் இடம்பெறாத ஆத்மாநாம் கட்டுரை. சலனங்களற்று அமைதி அடைந்த மனத்திலிருந்து வீர்யமிக்க கலைப் படைப்புக்கள் வெளியாக(ச்) சாத்தியமா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. அது சிந்தனை(த்)தெளிவு அடைந்து ஒரு தத்துவப்பார்வையைக் கைக்கொள்ளும். இன்றைய கவிதை அல்லது புனைகதை எதுவாயினும் ஏதோ ஒரு உள் அல்லது வெளிப்போராட்டத்தை விவரிக்கிறது. உக்கிரத்தின் தீவிரம் அல்லது கலைஞனின் வாக்கு அதன் கலை ஆற்றலுக்கு வித்தாக இருக்கிறது. உள்ளடக்கம் உண்மையாக இருப்பின் கலை இயற்கையாய் அமைகிறது. கவிதை வாசகனுக்கு ஒரு அந்நியமான வஸ்து. அதைப் படிக்கும் ஒருவன் முதலில் கவிஞனின் குரலைக் கேட்கவேண்டும். அதன் உருவம், வெளிப்பாடு, உள்ளடக்கம், செய் நேர்த்தி முதலியன கவிஞனுக்குக

பத்தி
யுவன் சந்திரசேகர்  

கவிதை என்ற அகவடிவத்துடன் கவிகளின் பேராவல் நின்று விடுவதில்லை. நவநவமான உருவங்களில் கவிதை எழுதிப் பரிசோதிப்பதில் எந்த மொழியும் இன்னொரு மொழிக்குச் சளைத்ததாய் இருக்காது. தமிழ்ச் சூழலில் நாகபந்தம், ரதபந்தம் போன்ற சித்திரக் கவிதைகள் ஏராளம் காணக் கிடைக்கின்றன. சுருண்டு கிடக்கும் பாம்பின் உடல்போலவும் தேர்போலவும் வரையப்பட்ட ஓவியக் கட்டங்களில் சொற்களை நிரப்பிச் செய்யுள் யாக்கும் திறன் அது. பாரதி போன்ற சீரிய கவிஞர்கள் - அதாவது, கவிதைக்கு அதன் உட்பொருளே பிரதானம் என்று வலியுறுத்துகிறவர்கள் - சித்திர கவிதைகளைக் கேலிசெய்து எழுதியிருப்பதையும் காணலாம். (‘சின்னச்சங்கரன் கதை’யில் இடம்பெறும் ‘பசுமூத்ர பந்தம்’ என்ற சொற்றொடர் நினைவுக்கு வருகிறது!) பொதுக்களத்தில் ‘இறங்கினான்’

மதிப்புரை
கவிதா முரளிதரன்  

தொகுப்பின் முன்னுரையில் இப்படி சொல்கிறார் ஆனந்த்: “எனக்குள்ளும் எனக்குள் இருக்கும் எனக்குள்ளும் உறைந்திருக்கும் பெண்மையின் சான்னித்தியம்தான் இளவரசி. உங்களுக்குள்ளும்தான். உங்களுக்குள் இருக்கும் உங்களுக்குள்ளும்கூடத்தான்.” இந்த வரியை வாசிக்கும்போது எனக்கு இதுவரை எந்தக் கவிதையை வாசிக்கும்போதும் தோன்றாத ஒரு கேள்வி தோன்றியது. இவை எனக்கான கவிதைகளா? ஆனந்துக்கு நெருக்கமான மனோதத்துவ நிபுணர் சொன்னதுபோல இளவரசி என்பவள் ஆனந்தின் Anima - ஆண்மன பெண் பிம்பம் என்றால் அந்தப் பெண் பிம்பத்தோடு எனக்கு என்னவிதமான உரையாடல்கள் சாத்தியப்படும்? உரையாடல் சாத்தியப்படுமா? ஒரு தோழியுடன் பேசுவதுபோல ஒரு ஆண் மனதின் பெண்பிம்பத்துடன் பேசுவது இயல்பாக இருக்குமா? பிறகு, ஆனந்த் சொல்வதுபோல எனக்குள் அல்லது எனக்குள்

மதிப்புரை
த. சுந்தரராஜ்  

1992இல் பிம்பத்தில் வெளியான ‘The Image Trap: M G Ramachandran in Film and Politics’ நூல் சமூகவியல் ஆய்வின் புதிய களங்களை அறிமுகம் செய்து ஆங்கில அறிவுலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தின் அரசியல் அடையாளங்களில் பிரபலமான எம்ஜிஆர் என்னும் மருதூர் கோபாலமேன ராமச்சந்திரன் புகழ்பெற்ற தன் பிம்பத்தைத் திரைப்படங்கள், அரசியல் மேடை, சுயவரலாறு போன்றவற்றின் மூலம் விளிம்புநிலை / அடித்தட்டு மக்களின் பொதுப்புத்தியில் எப்படிக் கட்டமைத்தார் என்பதை, மார்க்சிய அறிஞரான கிராம்சியின் பொதுப்புத்திக் கோட்பாட்டின் வழி ஆராய்கிறது இந்நூல். ஒருவரின் மரணத்திற்குக் கூடும் கூட்டம் அவருடைய செல்வாக்கின் அடையாளமாகத் திகழும். நம் மரபில் பாரதி, காமராஜர், என்.எஸ். கிருஷ்ணன், அண்ணாதுரை, எம்ஜிஆர் எனப் பல ஆளுமைக

உள்ளடக்கம்