சென்னை புத்தகக் காட்சி
 

 ஜனவரி 6 முதல் 19 வரை நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு வெளியீடுகள் சிறப்பு விற்பனை விபரம் 

சென்னை புத்தகக் காட்சி
 

ஜனவரி 6 முதல் 19 வரை நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு அரங்கில் ஆசிரியர்களை சந்தித்து நூல்களில் கையெழுத்து பெற்று கொள்ள வாய்ப்பு. ஆசிரியர்கள் பெருமாள் முருகன், சீனிவாசன் நடராஜன், அம்பை, தேவேந்திர பூபதி , மு. சுயம்புலிங்கம், மற்றும் கலாப்ரியா அவர்களை சந்திக்கலாம், நூல்களில் கையெழுத்து பெற்று கொள்ளலாம்.                                                                                            

காலச்சுவடு பதிப்பகம்
 

காலச்சுவடு பதிப்பகம் 2017 வெளியீடுகள் பட்டியல்- மெல்லக் கனவாய் பழங்கதையாய் (விசாலம்.பா ), அசோகமித்திரனின் குறுநாவல்கள்(பெருமாள் முருகன்) , அம்மா ஒரு கொலை செய்தாள்(அம்மை), நளபாகம் (ஜானகிராமன் .தி ), நீர்மாலை (சுயம்புலிங்கம் .மு), மாதொருபாகன்(பெருமாள் முருகன்), ஆலவாயன்(பெருமாள் முருகன்) , அர்த்தனாரி (பெருமாள் முருகன்), பெருமாள் முருகன் சிறுகதைகள் [1988-2015], அம்மை கதைகள் [1972-2014], மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் , வாரணாசி(தேவேந்திர பூபதி ) , கவர்னர் பெத்தா (மீரான் மைதீன் ), தீராப் பகல் [குழுத் தொகுப்பு ](யுவன் .எம் ), மாற்றாங்கே(கலப்ரியா ) , புரட்சியாளன்(அல்பொ கமுய் ), பாதுகாக்கப்பட்ட துயரம் (காலந்தை பீர்முகம்மது ), விளிப்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் தனித்துவமான போராட்டங்கள்

காலச்சுவடு பதிப்பகம்
 

பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய நூல்கள், காலச்சுவடு பதிப்பகம் 2017 வெளியீடுகள் பட்டியல்- பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை, பூக்குழி , நிழல்முற்றம், அர்த்தனாரி , ஆலவாயன் , மாதொருபாகன், கூளமாதாரி , கோழையின் பாடல்கள், கங்கணம் , மயானத்தில் நிற்கும் மரம், ஆளண்டாப் பட்சி , பதிப்புகள் மறுபதிப்புகள், பெருமாள் முருகன் சிறுகதைகள் [1988-2015], துயரமும் துயர நிமித்தமும்

தலையங்கம்
 

ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகக் கருதப்படும் மக்கள் மன்றம். நிர்வாகம், நீதி, ஊடகம் ஆகிய நான்கு அமைப்புகள் மீதும் குடிமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொய்த்துப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த அமைப்புகள் அவற்றின் ஆதாரமான குறிக்கோள்களிலிருந்து விலகியவையாகவும் செயல்பாடுகளில் முறைகேடுகள் நிரம்பப் பெற்றவையாகவும் மாறியிருப்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவற்றுள் ஒப்பீட்டளவில் மக்களின் நம்பிக்கைக்கு ஓரளவேனும் பாத்திரமாக இருப்பது நீதித் துறை. ஆனால், நீதித் துறை அண்மைக் காலங்களில் பிறப்பிக்கும் ஆணைகள் அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இந்தியக் குடிமக்களின் சமாதான சக வாழ்வு இடையூறு இல்லாமல் முன்செல்ல உதவும் வகையில் சட்டங்களை வலியுறுத்துவது நீதிமன்றத்தின் கடமை. அதன் வாயிலாக எல்லாருக்கும் பாரபட்சமற்ற நீதி

அஞ்சலி: பிடல் காஸ்ட்ரோ 1926 - 2016
க. திருநாவுக்கரசு  

ஒருவனின் நண்பர்கள் யார் என்பதை வைத்து மட்டுமல்ல, எதிரிகள் யார் என்பதை வைத்தும் அவன் எத்தகையவன் என்பதைச் சொல்லிவிட முடியும். பிடல் காஸ்ட்ரோ (ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) வாழ்வில் மட்டுமல்ல, சாவிலும் பெரும் சர்ச்சைக்குரிய தலைவராகவே இருந்தார். முழுமையான வாழ்வை வாழ்ந்து 90ஆவது வயதில் மறைந்த காஸ்ட்ரோவின் மரணத்திற்காக வருந்துவது சம்பிரதாயம் மட்டுமே. ஆனால், உலக அளவில் இடதுசாரிக் கட்சிகள் - இயக்கங்கள் மத்தியில் இன்று அவரைப் போன்ற அசாதாரணமான தலைவர் யாரும் இல்லாதது பெரும் வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. ரஷ்யா உட்பட மேற்கத்திய நாடுகள் எதுவும் தங்களது குடியரசுத் தலைவரையோ பிரதமரையோ காஸ்ட்ரோவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுப்பவில்லை. கனடா நாட்டின் பிரதமர் காஸ்ட்ரோவின் மரணத்தையொட்டி வெளியிட்ட அற

அஞ்சலி: இன்குலாப் 1944 - 2016]
தஞ்சாவூர்க்கவிராயர்  

வண்டலூர் வங்கி ஒன்றின் காத்திருப்போர் வரிசையில்தான் நான் இன்குலாபை முதன் முதலாகச் சந்தித்தேன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இருக்கும். நல்ல புழுக்கம். வெளியே வெயில். வந்த வேலை முடிந்தது. வங்கிக்கு வெளியே சிறு மர நிழலில் நின்றபடி பேசினோம். பின்னோக்கி வாரிய சிகை. குறுஞ்சிரிப்பு. மழிக்கப்படாத முகம். அதில் நோய்க்குறி இல்லை. மெல்லிய சோர்வு, அவ்வளவுதான். என்னைச் சந்தித்ததில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அதற்குக் காரணம் பின்னால் தெரிந்தது. “இங்கே எழுத்து, புத்தகம் பற்றியெல்லாம் பேச யாருமில்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந் தேன். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. வீட்டுக்கு வாருங்கள்.” அடிக்கடி என்றில்லாவிட்டாலும் அவர் வீட்டிற்குப் பலமுறை செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

அஞ்சலி: ஜெயலலிதா 1948 -2016
தேவிபாரதி  

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் உலகைக் குலுக்கிய பிரஞ்சுப் புரட்சியின் முதன்மையான கதாபாத்திரங்களில் ஒன்று புரட்சியாளர்களால் கில்லட்டினில் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பேரரசன் பதினாறாம் லூயியின் மனைவி பேரரசி மேரி அன்ட்டாய்னெட். பிரஞ்சு விவசாயிகள் தாங்கொணாத வறுமையில் உழன்றபோது ஆடம்பரத்தில் திளைத்த பேரரசி, ரொட்டி கேட்டு அரண்மனை முற்றத்தில் திரண்ட மக்களிடம் ‘ரொட்டி இல்லாவிட்டால் என்ன கேக் சாப்பிடலாமே’ எனக் கேட்டதாக அவரைப்பற்றிக் கதை உண்டு. பிந்தைய ஆய்வாளர்களில் சிலர் மேரி அதுபோன்ற கேள்வியைக் கேட்டதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என வாதிட்டாலும் பிரஞ்சுப் புரட்சியின் வரலாற்றில் நிரந்தரமாக இடம்பெற்றுவிட்ட வாக்கியம் அது. அவரது ஆடம்பரத்தின் நினைவாக வெர்சேல்ய்ஸ் அரண்மனையில் ஏதோ ஒரு

 

கடந்த ஐம்பது ஆண்டுகளாக ‘வண்ணதாசன்’ என்ற பெயரில் சிறுகதைகளையும் ‘கல்யாண்ஜி’ என்ற பெயரில் கவிதைகளையும் எழுதிவரும் சி. கல்யாணசுந்தரம் 2016ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் பிரிவின் சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றிருக்கிறார். ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழில் நவீன இலக்கியம் வாசிக்கத் தொடங்கும் இளம் மனங்களுக்கு உடனடி ஆதர்சமாக ஆகிவிடுபவர் வண்ணதாசன். அன்றாட வாழ்வின் மிகச் சாதாரண நிகழ்வுகள் மட்டுமே கதைகளில் இடம்பெறுகின்றன. ஆனால், எந்த நிகழ்வும் சிறியதோ சாதாரணமாகவோ அல்லவென்பதை சௌந்தர்யமும் நெகிழ்ச்சியும் கூடிய அவரது எழுத்துக்கள் தேர்ந்த வாசகர்களுக்கும் உணர்த்துகின்றன. அன்பும் கனிவும் மட்டுமே நிறைந்திருக்கும் உலகம் அவருடையது.

கட்டுரை
தி. பரமேசுவரி  

வருடம் நினைவிலில்லை. அனேகமாக 1983 அல்லது 1984. அந்தக் காட்சி என் மனத்தில் பசிய தாவரமெனப் படர்ந்து கிளைத்திருக்கிறது. பச்சையம் அடர்ந்த என் இளம்பருவத்தின் அதிசய நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. கையாலேயே நீவிநீவி, சுருக்கங்களைப் போக்கி, நன்கு மடித்த இரண்டு புடவைகளைத் தன் தலையணையடியில் வைத்துப் பாதுகாப்பது பாட்டியின் வழக்கம். அதிலொன்றை எடுத்துக் கட்டிக்கொண்டு, தன் வழக்கமான அலங்காரத்துடன் சோஃபாவில் அமர்ந்திருந் தார் பாட்டி. சிறு பரபரப்புடன் இருந்தது வீடு. தாத்தா உள்ளறையில் வழக்கம்போல எழுதிக்கொண்டிருந்தார். எதைப்பற்றியும் லட்சியமில்லாத குழந்தைகள் குறுக்கும்நெடுக்குமாய் அலைந்ததை எப்போதும்போல பாட்டி கண்டித்தார். அந்தத் திட்டு எங்களுக்கு மட்டு மில்லாது அம்மாவுக்கும் சேர்த்தே விழும். எங்களை மாடிக்கு அழ

கட்டுரை
கீதா நாராயணன்  

அம்மு என்ற பெண் மாநிலத்தின் அம்மா வாக மாறிய சரித்திரம் அத்தனை எளிதானதல்ல. ஜெயலலிதாவின் ஆரம்ப வாழ்க்கையைப் பற்றிய ஆவணம், வாரப் பத்திரிகையில் அவர் எழுதிய ஒரு தொடர். அதில் தயக்கமின்றி உண்மைகளை எழுதுகிறார் என்ற காரணத்திற்காக அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. தொடரும் பாதியில் நிறுத்தப்பட்டது. மைசூர் மகாராஜாவின் மருத்துவரான தாத்தாவின் சொத்துக்களைக் குடித்தழித்த வக்கீல் தந்தையின் உயிரற்ற உடல்தான் தன் முதல் ஞாபகம் என்று குறிப்பிடுகிறார் ஜெயா. குடும்பத்தைக் காப்பாற்ற அலுவலகச் செயலாளராகப் பணிபுரிந்தார் தாய் வேதவல்லி. அவருடைய அழகிய தோற்றத்தைப் பார்த்து வந்த திரைப்பட வாய்ப்புகள் அவர் பெயரை சந்தியா என மாற்றிச் சென்னையை நோக்கிக் குடிபெயர வைத்தன. அந்தப் பிஞ்சு வயதில் தாய்ப் பாசத்திற்காக ஏங்கிய குழந்த

பதிவு
 

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் (2016) சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுகுமாரன், தமிழ் வார இதழ்களிலும் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து தற்போது காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறார். கவிஞர், கட்டுரையாளர், புதின எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், என பன்முகத் திறனுடன் இயங்கிக்கொண்டிருப்பவர். சுகுமாரன், இந்த விருதைப் பெறும் 18ஆவது தமிழ் ஆளுமை. இதற்கு முன்னர் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ். பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு. தியோடர் பாஸ்கரன், ஜெயமோகன், டொமினிக் ஜீவா, ஆர். மயூரநாதன் ஆகியோர் இயல் விருதைப் பெற்றுள்ளனர். சுகுமாரன் கவிதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், புதினங்கள்,

அஞ்சலி- ‘சோ’ ராமசாமி 1934 -2016
ஞாநி  

மறைந்த ‘சோ’ ராமசாமி சில வட்டங்களில் பத்திரிகையாளராகவும் அரசியல் விமர்சக ராகவும் அறியப்பட்டிருந்தபோதும் அவரைப் பற்றிச் செய்திகள் வெளியிட்டபோதெல்லாம் வெகுஜன தினசரியான ‘தினத்தந்தி’ சிரிப்பு நடிகர் சோ என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறது. வெகுஜன ஊடகமான சினிமாவில் அவர் அப்படித் தான் மக்களிடம் அறிமுகமானார். 1962ல் ‘பார் மகளே பார்’ படத்தின் மூலம் தன் 28வது வயதில் அவர் சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்னர் சட்டம் படித்துவிட்டுச் சில தனியார் நிறுவனங்களுக்குச் சட்ட ஆலோசகராக இருந்தார். தான் படித்த விவேகானந்தா கல்லூரியின் சக தோழர்களுடன் உருவாக்கிய விவேகா ஃபைன் ஆர்ட்சின் சார்பில் சென்னையில் நகைச்சுவை நாடகங்களை நடத்தி வந்தார். சமூகத்தைக் கிண்டல் செய்யும் கதைகளிலிருந்து மெல

பதிவுகள்
கி.பி  

கலை, இலக்கியம், இசை, நாடகம், வரலாறு, மாற்று சினிமா உள்ளிட்ட பல துறை சார்ந்த நவீன முன்னெடுப்புக்காக, பிரக்ருதி அறக்கட்டளையை 1998ஆம் ஆண்டு ரன்வீர் ஷா தொடங்கினார். இந்தியப் பிராந்திய மொழியின் நவீன ஆளுமைகள் துவங்கி, ஆசிய ஐரோப்பிய நாடுகளின் வரை பல மொழி, பல கலாச்சார ஆளுமைகளை வரவழைத்து வாசகர்களுடன் சந்திக்கச் செய்கிறார்கள். குறிப்பாக நவீன கவிதை சார்ந்தும், நவீன நாடகம் சார்ந்தும் இவர்களது கவனம் குவிகிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் இருவாரக் கலை விழாவாக இதனை நடத்திக்கொண்டு வருகிறார்கள். கடந்த டிசம்பர் 10ஆம் தேதியன்று பெருமாள்முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஒவ்வொரு வருடமும் பெசண்ட் நகர் ஸ்பேசிஸ் அரங்கில் இக்கலை விழா ஏற்பாடாகிறது. நிகழ்வில் ‘மயானத்தில் நிற்கும் மரம்&r

கவிதைகள்
தமிழில்: என். சத்தியமூர்த்தி  

பல சொற்றொடர்களையும் பற்பல பக்கங்களையும் மனனம் செய்துள்ளேன் நான். இருப்பினும் எதுவும் சொல்வதற்கில்லை காதலைப் பற்றி. காத்திரு நீயும் நானும் ஒன்றாகக்கூடி வாழும்வரை. அப்போது நிகழும் அவ்வுரையாடலில்... பொறுமையாக இரு அதுவரை... --------------------- நேற்றிரவு அக்கூட்டத்தில் உன்னைக் கண்டேன். ஆரத்தழுவ இயலவில்லை வெளிப்படையாக என்னால். ஆனாலும், உனது கன்னத்தின் அருகே உதடுகளைப் பொருத்தினேன். எதையோ ரகசியமாய்ச் சொல்பவனைப் போல. -------------------------------- வாசலில் ஒரு டெர்விஷ்* டெர்விஷ் ஒருவர் வீடொன்றின் கதவைத் தட்டினார், ரொட்டித்துண்டை யாசித்து - வெந்ததோ வேகாததோ எதுவாயினும் பரவாயில்லை என. ‘இதுவொரு ரொட்டிக் கடை அல்ல’, என்றான் வீட்டுக்காரன். ‘அப்படியாயின

கவிதைகள்
குணா கந்தசாமி  

Courtesy: J. Shanaadhanan அ பிரார்த்தனையின் பழமையான நூலகத்தில் ஒரே ஒரு நூல் மட்டும் மிச்சமிருக்கிறது அதன் ஒற்றைத்தாளில் இருக்கும் ஒரேயொரு சொல்லின் இறுதி இரண்டு எழுத்துக்கள் உதிர்ந்துவிட்டன மிச்சமிருக்கும் ஒரேயொரு எழுத்தின் பலத்தில்தான் இப்பரந்த பெருவெளி தொங்கிக் கொண்டிருக்கிறது. ------------------------- மூக்குத்தி அணிந்த பெண் நடத்துநர் முந்தைய நாட்களின் பணிச்சுமையால் பெருகிய மனவழுத்தத்தோடும் உறங்கவியலாமையால் சிவந்த கண்களோடும் தனிமை கொடுத்த துயரமைதியோடும் விடுமுறைநாளில் அலுவலகம் செல்ல ஏறிய பேருந்தில் பணியிலிருந்தாள் மூக்குத்தி அணிந்த பெண் நடத்துநர் பயணச்சீட்டை நீட்டும்போது அவள் முகத்தை உற்று நோக்கினேன் ஏதோவொரு தூரநிலத்தின் சாயைகொண்ட அச்சாதாரண முகத்தில் ஒன்று

கவிதைகள்
சமன்  

சமன் ஒரு நாளைவிட மற்றொரு நாள் ஒரு வருத்தத்துக்கு மாற்றாய் வேறொரு வருத்தம் ஒரு துரோகத்திற்கு மாற்றாய் வேறொரு துரோகம் ஒரு துக்கத்திலிருந்து வெளியேற வேறொரு துக்கம் என சமன் செய்கிற வாழ்வு என்றுணர்கையில் அவமானம் பிடுங்கித் தின்கிறது ஒரு நாளின் மீது மற்றொரு நாள் புழுவைப் போல தடயங்களின்றி சத்தமின்றி ஊர்ந்து செல்கிறது காலத்தின் மீது படிந்து கிடக்கிற ஒட்டடைகளை சற்று கலைத்து விடு கடும் தும்மலுக்கு இடையில் இந்த நாள் விடியட்டும். ------------------------------- தனிமை அரவமற்ற தெருவிலிருந்து நான் அழைத்து வந்த தனிமையின் ஒரு துண்டு இருள் அலையும் எனதறையில் ஒளி கசியும் ஒரு விளக்கு வரவேற்பறை தாண்டிய முற்றத்தில் ஒரு சந்தேகப்பிராணி எனது உள்ளாடைக்குள் கிசுகிசுக்கும் காதலன் மறு

நேர்காணல்: ஸ்ரீநாத் ராகவன்
சந்திப்பு: மருதன்  

பரவலான பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்ற வரலாற்று ஆய்வாளர், ஸ்ரீநாத் ராகவன். புதுதில்லியில் உள்ள சென்டர் ஃபார் பாலிஸி ரிசர்ச் ஆய்வுக் கூடத்தில் முதுநிலை ஆய்வறிஞராக இருக்கிறார். சமூகஅறிவியல் துறை சார்ந்த வளமான பங்களிப்புக்காக இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளை விருது (2015) பெற்றிருக்கிறார். மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. நேருவின் காலகட்டத்தையும் அவருடைய அயலுறவுக் கொள்கையையும் விவரிக்கும், ‘War and Peace in Modern India (2010)’, வங்கதேசத்தின் உருவாக்கத்தை ஆராயும் 1971: ‘A Global History of the Creation of Bangladesh (2013)’ இரண்டாம் உலகப் போர் பின்னணியில் இந்தியாவின் எழுச்சியை விளக்கும் சமீபத்திய நூல், ‘India’s War: The Making of Modern South Asia (2016

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

மனிதன், குறிப்பாக வெள்ளையின மனிதன், அதிலும் குறிப்பாக காலனி ஆதிக்க மனோபாவம் கொண்ட ஆணாதிக்கர்கள் தாங்கள் இந்த உலகின் ஏகபோக அதிபதிகள் என்றும், இந்த உலகில் உள்ள அனைவரும், அனைத்தும் தமக்காகவே படைக்கப்பட்டிருப்பதாகவும் உறுதியாக நம்பினர், இன்றும் நம்புகின்றனர். காலனியாதிக்கம், நவீன அரசமைப்பின் பரவலாக்கம், ஆதிக்க அறிவியல் வளர்ச்சி, சித்தாந்தம், உலகமயமாதல் போன்றவற்றால் இந்த மனிதாதிக்கச் சிந்தனை வெள்ளையினத்தவர் போலவே வேற்று இனத்த வரையும் பிடித்தாட்டத் தொடங்கியது. இயற்கையைப் போற்றி வணங்கி, மிருகங்களையும் தங்கள் கடவுளர்களோடு இணைத்து வழிபட்ட தெற்காசியர்களும்கூட மனிதாதிக்கச் சிந்தனைக்கு விதிவிலக்காக விளங்க முடியவில்லை. உண்மையில் மனுவாதம், சாதிவெறி, தூய்மை, ஆச்சாரம், தீண்டாமை, பெண் தீட்டு என்றெல்லாம்

உரை
கல்யாணராமன்  

‘கடற்கரையில் சில மரங்கள்’ - சில பிரதிபலிப்புகள் ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி ஒரு சில வார்த்தைகள். அவரது முதல் தொகுப்பான ‘அன்று வேறு கிழமை’ இரண்டாம்பதிப்பின் முன்னுரையில் திரு. பதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள், ‘நம்மோடு வாழும் ஞானக்கூத்தனின் கவிதைகள் தமிழ் மனம் ஒன்றின் இன்றைய வெளிப்பாடுகள்’ என்று. இது எல்லாத்தரப்பினரிடமிருந்தும் கவிதை வாசிப்பவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன். அவரது மொழி ஆளுமைக்கு மொழி வெளிப்பாட்டிற்கு இன்றைக்கு(க்) குறைந்தது பத்து(த்)தொகுதிகள் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் வெளியாகியிருப்பது மூன்று தொகுதிகள். இது சொல்லப்பட்ட அதே தமிழ் மனத்தின் சுருக்கத்தைக் காண்பிக்கிறது. இன்றைக்கு அக்கறையுடன் எழுதப்படும் கவிதைகள் சில ஆய

பெருமாள்முருகன்  

இளங்கலை மாணவனாக நான் இருந்தபோது (1983), ஆத்மாநாம் எனக்கு அறிமுகமானார். அன்னம் விடு தூது இதழ் மூலமாக அந்த அறிமுகம் என்று நினைவு. அதே சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு பாடநூலில் புதுக்கவிதை பற்றிய பகுதியில் ‘இருண்மைக் கவிதை’ என்னும் தலைப்பிடப்பட்டுப் ‘பொருள் தெளிவாகாத கவிதைகள் இவை’ என்னும் விளக்கத்தோடு சான்றாக ஆத்மாநாமின் ‘நிஜம்’ கவிதை கொடுக்கப்பட்டிருந்தது. அந்தக் கவிதையை வாய்விட்டு வகுப்பில் வாசித்தார் ஆசிரியர். ‘நிஜம் நிஜத்தை நிஜமாக, நிஜமாக நிஜம் நிஜத்தை, நிஜத்தை நிஜமாக நிஜம், நிஜமே நிஜமோ நிஜம், நிஜமும் நிஜமும் நிஜமாக, நிஜமோ நிஜமே நிஜம், நிஜம் நிஜம் நிஜம்’ என்று அவர் வாசிக்க வாசிக்க நாங்கள் அனைவரும் விழுந்துவிழுந்து சிரித்தோம். பின்னர் ஆத்மாநாமை ம

கட்டுரை
சச்சிதானந்தன் சச்சிதானந்தன்  

சுனில் கில்நானி   சில ஆண்டுகளாக காலச்சுவடு ஜனவரி இதழ்களில் மறைந்த வருடங்களில் படித்த ஆங்கில நாவல்கள் பற்றி எழுதி வந்தேன். இந்தத் தடவை மாறுதலுக்காக மூன்று அபுனைவு நூல்கள் பற்றி எழுதுகிறேன். இவற்றினிடையே ஓர் உள்ளார்ந்த இணைப்புண்டு. தொடர்ந்து படிக்கும்போது அறிந்துகொள்வீர்கள். முதலில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த Sunil Khilnani Þ¡ ‘Incarnations: India in 50 Lives (Allan Lane, 2016)’ இந்தியாவின் 2500 ஆண்டு வரலாறு 50 தனி ஆளுமைகளின் அருஞ்செயல்களினூடாக விவரிக்கப்படுகிறது. இந்த நூலில் முதல் அவதாரம் பௌதிகப் பிரதி அல்ல. பிபிசி வானொலி 4இல் 15 நிமிடக் கூறுகளாக கில்னானி முதலில் ஒலிபரப்பியிருந்ததை ஒரு மதிய நேரத்தில் கேட்டிருந்தேன். பொது யூகம் 500க்குமுன் சொ

கதை
ஜே.பி. சாணக்யா  

பர்கூர் மலைக்கிராமம். ஈரோடு - அந்தியூரிலிருந்து முப்பத்தியொரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அங்கு சிறுத்தைகளும் யானைகளும் வீட்டு மிருகங்களைப்போல் உல வும் காட்டின் அடிவாரத்தில் இருக்கிறது இயற்பியல் பேராசிரியர் பாஸ்கரனின் வீடு. தெற்கு திசை நோக்கி மேற்குத் தொடர்ச்சி மலைக் கூட்டங்களைப் பார்த்திருந்த வீட்டின் வடக்குத் திசையில் மதில் சுவரை ஒட்டி யானை அகழி வெட்டப்பட்டி ருந்தது. இதைத் தவிர்த்து விலங்குகளின் எதிர்பாரா வருகையை ஒட்டி 10,000 வோல்ட் DC மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிகள் ஒரு சாண் இடைவெளியில் பன்னிரண்டு அடி உயரத்திற்கு வீட்டைச் சுற்றிலும் பின்னப்பட்டிருந்தன. வீட்டின் பின்னால் குலை தள்ளிய வாழைமரங்களும் ரோஜாத் தோட்டங்களும் இருந்தன. பர்கூருக்குள் நுழைந்தபோது மலைக்க வைக்கும் அளவில் உயர்ந்

பதிவு
 

காலச்சுவடு வெளியீடான கல்யாணராமனின் ‘கனல் வட்டம் - ஆத்மாநாமைப் புரிதலும் பகிர்தலும்’ என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு ஆத்மாநாம் படித்த ஞி.நி. வைஷ்ணவா கல்லூரியில் பாரதியின் பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் தேதி காலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்பபடுத்தி வைஷ்ணவா கல்லூரி பேராசிரியர் பிரேமா விழாவைத் தொடங்கி வைத்தார். முதல் பிரதியைக் கவிஞர் ஆனந்த் வெளியிட, பெருமாள்முருகன் பெற்றுக்கொண்டார். ஆத்மாநாமுடன் சென்னையில் பல்வேறு இடங்களில் ஒன்றாகச் சுற்றியதையும் இலக்கியம் குறித்து உரையாடியதையும் சொந்த வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட இன்னல்களையும் விரிவாகவே ஆனந்த் பகிர்ந்துகொண்டார். இந்நூல் உருவாக்கத்தில் கல்யாணராமன் செலுத்திய உழைப்பு மற்றும் ஆர்வம் குறித்து சுருக்கமாகப் பெருமாள்முருகன்

கருணை
ய. மணிகண்டன்  

  ஓவியம்- மணிவண்ணன் ‘கருணை’ - சொற்பொழிவுக் கட்டுரை சுதேசமித்திரனில் 29.04.1905, 01.05.1905, 02.05.1905 ஆகிய மூன்று நாள்கள் தொடர்ந்து வெளிவந்தது. முதலிரு நாள்கள் இடம்பெற்றவற்றைப் பெ.சு. மணியும், மூன்று நாள்களும் இடம்பெற்றவற்றைச் சீனி. விசுவநாதனும் கண்டறிந்து வெளியிட்டனர். எனினும் 01.05.1905இல் வெளிவந்ததன் சரிபாதிப் பகுதி இதுவரை விடுபட்டிருப்பது இப்போது கண்டறியப்பட்டு, முழுவடிவில் முதன்முறையாகக் ‘கருணை’ வெளியிடப்படுகிறது. பாரதி ஆற்றிய முதல் சொற்பொழிவு எனவும், சுதேசமித்திரனில் வெளிவந்த பாரதியின் முதல் படைப்பு எனவும் குறிப்பிடப்படுவது ‘கருணை’ என்னும் தலைப்பில் அமைந்த எழுத்தோவியமாகும். சென்னை வாழ்வின் தொடக்க காலத்தில் உ.வே.சாமிநாதையர் ஆசிரியராக இருந

பதிவு
அம்பை  

ஸ்ரீராம் குழுமத்தின் ஆர். தியாகராஜன் ‘ஸ்பாரோ’வில் நிறுவியுள்ள இலக்கிய விருதை வழங்கும் விழா டிசம்பர் மாதம் 10ம் தேதி மாலை எஸ்.என்.டி.டி. பல்கலைக்கழக ஜுஹு வளாகத்தில் நடைபெற்றது. ஸ்பாரோ இலக்கிய விருது 2016 இந்த ஆண்டு மொழிபெயர்ப்பு வகைமைக்குத் தர வேண்டும் என்று நடுவர் குழு (கண்ணன் சுந்தரம், சுகுமாரன், அம்பை) தீர்மானித்தது. இந்திய மொழிகளிலிருந்து இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்த இரு எழுத்தாளர்களுக்கும் (பெண் எழுத்தாளர் ஒருவர், ஆண் எழுத்தாளர் ஒருவர்) அயல்நாட்டு மொழி இலக்கியத்தைத் தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு மூலம் கொண்டுவந்த எழுத்தாளர் ஒருவருக்கும் விருது வழங்குவது என்று ஜூன் 21 மற்றும் 23இல் நடந்த நடுவர்கள் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது. வேறு பல மொழிகளிலிருந்து மொழியாக்கம்

மதிப்புரை
ஜான் சுந்தர்  

பாடகன் ஆகிவிட வேண்டுமென்பது என் லட்சியக் கனவாக இருந்தது. அப்துல்கலாம் அறிவுறுத்தியதற்கும் முன்பிருந்தே அதைத்தான் கனவு கண்டுகொண்டிருந்தேன். பின்னாட்களில் எனக்கு எந்தக் குரலும் பொருந்தவில்லை என்றாலும் எஸ்.பி.பி குரல் எனக்குப் பொருந்தவில்லை என முன்பே அறிந்துகொண்டேன். முன்பு இளையராஜா என்றும், பின்பு சங்கர்மகாதேவன் என்றும் எனக்கு நினைப்பு. நான் பாடினால் எனக்கு மட்டுமே இளையராஜா போன்று கேட்டது. காதுக்குள் விதவிதமான கருவிகளைச் செருகி எடுத்தபோதும் இந்த நோயை குணமாக்கக் கூடவில்லை. எனினும் இந்நோய் உடலுக்குப் பெரிதாக ஊறு செய்யவில்லை. மேலும், மனதிற்கு நேரும் இன்னல்களை விரட்டவும் இதுவே உதவியது. கொஞ்சம் முயன்றிருந்தால், கொஞ்சம் துணிந்திருந்தால் நானும் ஒரு நகலிசைக் கலைஞன்தான் என்பதை இன்றும் விடாது நம்புவதால

பதிவு
 

‘நெய்தல்’ வழங்கும் சுரா இலக்கிய விருதுக்கு இது பத்தாவது ஆண்டு. தமிழின் இளம் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் இவ்விருது தமிழகத்தின் கவனத்திற்குரியதாக இருந்துவருகிறது. 2015ஆம் ஆண்டின் சுரா விருதுக்கு சமஸ் தேர்வாகியிருந்தார்; 2016ஆம் ஆண்டு விருதுக்குரியவர் கே.என்.செந்தில். ராஜமார்த்தாண்டன் பெயரில் முதல் கவிதைத் தொகுப்புக்கு வழங்கப்படும் 2016ஆம் ஆண்டு விருதினை ‘நீர்ச்சாரி’ தொகுப்புக்காக பத்மபாரதி பெற்றார். டிசம்பர் 3ஆம் தேதி இவ்விருதுகள் சென்னை உமாபதி அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன. 2015ஆம் ஆண்டுக்கான விருதை இவ்விழாவில் சமஸ்-க்கு வழங்கி உரை ஆற்றினார் ஆ.இரா. வேங்கடாசலபதி. தன் கருத்துகளை வெளியுலகுக்கு அறியத் தருவதில் சமஸ் சமரசமற்ற எழுத்துப்போராளியாகத் திகழ்வதை

உள்ளடக்கம்