தலையங்கம்
 

ஜன.15ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டிய நிலையில்10ஆம் தேதி முதல்வர் பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டை அனுமதிக்கக் கோரி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதுகிறார். மத்திய அரசிடமிருந்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை; ஜல்லிக்கட்டுக்கான சிந்தனை மத்திய அரசிடம் இல்லாதிருந்ததை அந்த மௌனம் காட்டியது. தமிழகத்தின் முக்கியமான கட்சிகளும் ஜல்லிக்கட்டு நெருங்கிவந்ததை அப்போதுதான் உணர்ந்துகொண்டதைப்போல அறிக்கைகள் விடவும் அரசை வற்புறுத்தவுமாக இருந்தன. ஜெயலலிதா மருத்துவமனை சென்ற நாள்முதலாக தமிழக அரசின் செயல்பாடுகள் என எதுவுமே இல்லை. திடீரென்று உருவான அமைச்சரவை, முதல்வரின் கட்டுக்குள் இல்லாமல் திணறியது. அஇஅதிமுகவின் ஆட்சித் தலைமையும் கட்சித்தலைமையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தக் கட்சிக்குள் ஊடாடிவந்த நிலைய

ஜல்லிக்கட்டு 2017
சுப. உதயகுமாரன்  

புரட்சி! தமிழகத்தில் அரசியல் தலைவர்களின், சினிமா நடிகர்களின் பெயர்களோடு மட்டும் இணைக்கப்பட்டிருந்த அர்த்தமற்ற வார்த்தை இது. ஆனால் இன்று “ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி” என பாரதி மெய்சிலிர்த்து வர்ணித்த ருசியப் பிரளயத்தை நினைவூட்டும் உண்மைச் சமராக உருமாற்றம் பெற்றிருக்கிறது. “பொதுநலம் வந்திடப் புதுவழி தந்தால் புரட்சி அதுவாகும்” என்று விவரித்தார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். தமிழகத்துக்கு ஒரு புதுவழியைத் தந்திருக்கின்றன(ர்) காளைகள். தமிழ் வசந்தம், தமிழர் புரட்சி, ரத்தமில்லா யுத்தம் என்றெல்லாம் பலவாறாக வர்ணிக்கப்படுகிற ‘சல்லிக்கட்டுப் போராட்டம்‘ தமிழகத்தை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அடித்து எழுப்பியிருக்கிறது. தலைநகர் சென்னைமுதல் காலூர் கன்னியாகுமரி வர

ஜல்லிக்கட்டு 2017
என். அசோகன்  

வாடிவாசலை முன்னிட்டு இவ்வளவு பெரிய போராட்டத்தைத் தமிழகம் சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அலங்காநல்லூரில் தொடங்கி மெரீனாவில் நிலைகொண்டு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாமிருந்து தெருவுக்கு மக்கள் வந்தது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு. இதை எழுதும் நேரத்தில்கூட போராட்டம் முடிவுக்கு வரவில்லை. அலங்காநல்லூர் நிஜமாகவே அடங்காநல்லூர் ஆகி முதல்வரையே திருப்பி அனுப்பிவிட்டது. ஆநிரைகளைச் சொத்தாகக் கொண்ட சமூகத்தில் அவற்றை ஏதோ ஒரு விதத்தில் கொண்டாடும் விளையாடும் வழக்கம் இருப்பது இயல்புதான். காளையை அடக்குவதே வீரம் என்று கன்னியர் கருதியதும் ஏறுதழுவுதல் தமிழனின் வீரத்தைக் காண்பிக்கும் நிகழ்வு என்பதும் காலங்காலமாக இம்மண்ணில் இருப்பவர்களுக்கு ஆழ்மனதில் குடியேறிய நினைவுகள். ஒரு சில இடங்களில

ஜல்லிக்கட்டு 2017
ஸ்டாலின் ராஜாங்கம்  

யாரும் எதிர்பாராத பேரெழுச்சி இது. நாளுக்குநாள் திரண்ட கூட்டமும் போராட்ட முழக்கங்களும் மாறிக்கொண்டே இருந்தன. பிள்ளைகளைப் பெற்றோர்கள் அனுப்பி வைத்தார்கள். அரசு அனுமதியும் தந்தது; போலீஸ் ஆதரவு தந்தது; முதலாளிகள் புரவலரானார்கள்; போராட்டம் என்பதற்கான முந்திய முன்னுதாரணங்களையெல்லாம் இது அடியோடு மாற்றிப் போட்டது. அலங்காநல்லூருக்கு வெளியே சென்னையிலும் மதுரையிலும் கூடிய இளைய தலைமுறையினரிடமிருந்து ஆரம்பித்த போராட்டம் நாளுக்குநாள் பரவித் தமிழகத்தைத் திகைக்க வைத்தது. குடும்பம் குடும்பமாக மக்கள் வரத் தொடங்கினார்கள். உரைகள், முழக்கங்கள், ஆட்டம், வாகன விளையாட்டு என்று போராட்டம் களைகட்டியது. நடுப் பாலத்திலேயே ரயிலை நிறுத்திவிட்ட இளைஞர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினார்கள். பாலத்தின் கீழே வரும் மக்கள்,

பதிவு
கிருஷ்ணபிரபு  

ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளியில் 40ஆவது புத்தகக் கண்காட்சி ஏற்பாடாகியிருந்தது. 700க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஓராயிரம் பதிப்பகங்களின் புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தொடர்மழையும் பெருவெள்ளமும் 2016ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சியை முடக்கிப்போட்டன. அதன் பொருட்டு கடந்த ஜூன் மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகச் சந்தை பல்வேறு காரணங்களால் சுணங்கியது. ஒருபுறம் பள்ளிக் கட்டணம், கல்லூரிக் கட்டணம் போன்றவை ஜூன், ஜூலை மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்தின் முன்பும் மலையாக நிற்பவை. மறுபுறம் கோடை வெயிலின் கடுமை. இதற்கிடையில் புத்தகக் கண்காட்சி குறித்த அரசின் மெத்தனம். இவையெல்லாம் கடந்த புத்தகக் கண்காட்சியில் ப

கடிதங்கள்
 

காலச்சுவடுக்கு விருது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் (இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம்) வழங்கும் விருது வகைமைகளில் 2016 முதல் தமிழ்க் கலை, இலக்கியப் பண்பாட்டு இதழுக்கான ‘சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது’ம் அறிவிக்கப்பட்டது. இவ்விருது காலச்சுவடு இதழுக்குக் கிடைத்துள்ளது என்பதை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறோம். வாசகர் சி. பாலையா அனுப்பிய வாழ்த்துக் கடிதம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தமிழ்ப்பேராய விருது காலச்சுவடு இதழ் நிர்வாக ஆசிரியர் கண்ணனுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. ‘காலச்சுவடு’ இதழைத் தொடர்ந்து படித்துப் பூரிப்படைந்து வரும் வாசகன் என்ற முறையில் இத்தருணத்தில் இக்கடிதத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன

கட்டுரை
ஜே.ஆர்.வி. எட்வர்ட்  

'புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான புதிய குழு அமைக்கப்படும்’ - இது, அண்மையில் ஒரு நாளிதழில் நான் வாசித்த செய். தேசிய கல்விக் கொள்கை 2016ஐ வடிவமைப்பதற்காய் அமைக்கப்பட்ட டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் குழுவின் அறிக்கை குறித்த அரசின் முடிவு என்னவென்று சொல்லாமலே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நல்கியிருந்த அறிவிப்பு பற்றிய செய்தி அது. இந்த அறிவிப்பை ‘பல்டி’ யாக விளங்கிக் கொண்டிருந்தது அந்த நாளிதழ். இந்த அறிவிப்பை அரசின் பலவீனமாகப் புரிந்துகொண்டிருக்கும் இன்னும் பலர் இருக்கிறார்கள்; குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியினர். வரைவு தேசிய கல்விக் கொள்கை 2016க்கு நாடெங்கிலும் பரவலாக எழுந்த எதிர்ப்பைச் செரிக்க முடியாமல் அல்லது சகிக்க முடியாமல், ‘ப

கதை
சர்வோத்தமன் சடகோபன் ஓவியங்கள்- செல்வம்  

மரப்பலகையில் நீலநிற பாலிதீன் விரிப்பின் மேல் தண்ணீர் தெளிக்கப்பட்ட மல்லிப் பூக்கள், ரோஜாப் பூக்கள். சாம்பல்நிறப் பூனை மரப்பலகையின் அடியில் சுருண்டுகிடந்தது. அதன் அருகில் பிளாஸ்டிக் பக்கெட்டில் நீரும் பச்சைநிற டம்ளரும். மேகங்களற்ற வானத்தில் செந்நிறத் தீற்றல். சூரியனைக் காணோம். நான் வண்டியை நிறுத்தி அந்தக் கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்குச் சென்றேன். இரண்டு யுவதிகளும் நான்கு யுவன்களும் தண்டால் எடுத்துக்கொண்டிருந்தார்கள்; சிலர் எளிதாக எடுத்தார்கள்; சிலர் நான்கைந்து எடுப்பதற்குள் சோர்ந்துவிட்டார்கள். எல்லோரையும் எழச் சொன்னார் மாஸ்டர். அதில் ஒரு பெண் திருமணமானவள் என்று தோன்றியது. மற்றவள் கல்லூரிப் பெண்ணாக இருக்க வேண்டும். மஞ்சள்நிற டீசர்ட்டும் கறுப்பு நிற டிராக் பேண்ட்டும் அணிந்திருந்தாள். கூரா

தலித் வரலாறு
கே. சத்திய நாராயணா  

பொஜ்ஜ தாரகம் அவர்களின் வீடு கந்திகுப்பா எனும் தலித்துகள் வாழும் சிறிய கிராமத் தில் அமைந்துள்ளது. இந்தக் கிராமம் கோதாவரி நதி கடலோடு சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது இந்தக் கிராமத்திற்கும் கடலுக்கும் இடையே மீனவர்கள் வாழும் குடிசைகள் நிறைந்த குப்பத்தைத் தவிர வேறு எந்தக் குடியிருப்புகளையும் காண இயலாது. பொஜ்ஜ தாரகத்தின் தந்தை பொஜ்ஜ அப்பலசுவாமி ஒரு தலைசிறந்த ஆசிரியராக மட்டுமில்லாமல் மாபெரும் அரசியல் தலைவராகவும் விளங்கியவர். 1942இல் தலித்துகளுக்கான அம்பேத்கர் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி நடத்திய பெருமை இவரையே சேரும். இரண்டாவது அல்லது மூன்றாவது வகுப்புவரை மட்டுமே படித்த ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவித்த அந்த நாட்களில் பத்தாம் வகுப்பு எனப்படும் (SSLC) வரை படித்து மாணவர்களுக்குப் பயிற்று

கட்டுரை
பெருமாள்முருகன்  

அப்போது எழுத்துக்கும் எனக்கும் இருந்த தொடர்பு அறுந்துபோய்க் கிட்டத்தட்ட பத்து மாதம் ஆகியிருந்தது. சென்னை, மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தேன். ஆசிரியனாக மட்டும் என்னை இருத்திக்கொள்ள முயன்ற காலம் அது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இருந்து மின்னஞ்சல் வழியாக ஓர் அழைப்பு. ஆராய்ச்சி மாணவர்கள் ‘RAWCON’ என்னும் அமைப்பாக இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் மூன்றுநாள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வேண்டும் என அழைப்பு. பங்கேற்பதில் பெரிதாக எனக்கு ஆர்வம் வரவில்லை. அப்பல்கலைக்கழகத்தில் பயின்ற தமிழ் மாணவர்கள் சிலர் வழியாகவும் என்னிடம் பேசினார்கள். பொதுநிகழ்வுகள் எதிலும் பங்கேற்க மட்டுமல்லாமல் பார்வையாளனாகச் செல்லவும்கூட ஆர்வமின்றிக் கல்லூரி, வகுப்பறை, வீடு என

நேர்காணல்
நேர்காணல்- ராதிகா வெமுலா சந்திப்பு- தினு கே  

ரோஹித் வெமுலா, ஹைதராபாத் பல்கலைக்கழக விடுதி அறையில் தற்கொலை செய்து ஓராண்டு முடிந்துவிட்டது. வெமுலாவின் மறைவுக்குப் பிறகு சாதிக்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் எழுந்தன. கல்வி வளாகங்கள் விழிப்புணர்வு பெற்றன. ஆனால் அரசமைப்பும் கொள்கைகளும் அதிகாரிகளும் மாறவில்லை. சாதியும் பொருளாதார பலமும் கல்வி வியாபாரமும் பிள்ளைகள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள காரணங்கள் ஆகின்றபோது ஒரு தாய் எல்லாப் பிள்ளைகளிடமும் ‘அம்மாக்களை மறந்துவிடாதீர்கள்’ என்று நினைவுறுத்துகிறார். போராட்டங்களைத் தொடர்வதற்கு உயிரோடு இருப்பது அவசியம் என்று வேதனையுடன் சொல்கிறார். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஃபரோக் கல்லூரியில் பாலின சமத்துவத்துக்காக வாதாடினார் என்பதால் இடைநீக்கம் செய்யப்பட்ட

அறியப்படாத பாரதி-6
ய. மணிகண்டன்  

பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவோர் வாயில் துதியறிவாய்! அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்! இறப்பின்றித் துலங்கு வாயே! என உ.வே. சாமிநாதையரைப் பாராட்டிய பாரதியின் பாடல் உ.வே.சா.வின் வரலாற்றிலும் பாரதியியலிலும் தனிப்புகழ் கொண்டதாகும். 1906ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய அரசாங்கம் புத்தாண்டை ஒட்டி அறிவித்த விருதுகளுள் ஒன்று உ.வே. சாமிநாதையருக்கு Ôமஹாமஹோபாத்தியாயÕ பட்டமாகும். விருது அறிவிக்கப்பட்டவுடன் தமிழ்நாடெங்கிலிருந்தும் வரவேற்பும் பாராட்டு களும் உ.வே.சா.வை நோக்கிக் குவிந்தன. இத்தகைய தருணத்தில்தான் பாரதி இந்தப் பாடலைப் படைத்திருந்தார். இந்தப் பாடல் எழுந்த சூழல்பற்றிப் பாரதியின் இளமைத் தோழரும் தமிழறிஞருமான சோமசுந்தர பாரதியார்தான் எடுத்துரைத்திருந்தார்.

கட்டுரை
ப. சரவணன்  

தமிழின் அடையாள மீட்பு இயக்கங்கள் பல தோன்றுவதற்கும் தமிழின் பழம் பெருமையை விதந்தோதுவதற்கும் உரிய காலச் சூழல் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தான் இயல்வதாயிற்று. குறிப்பாக, ராபர்ட் கால்டுவெல் (1814-1891) எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (1856) என்னும் நூல் வெளியான பின்பே ஆங்கிலம் கற்ற தமிழறிஞர்களிடையே மொழி குறித்த வேறொரு சிந்தனை மேற்கிளம்பியது. இந்நூலுக்கு அடிப்படையான கருத்துக்கள் எல்லீஸிடமிருந்து (1777-1819) முகிழ்ந்தவை என்பது கவனிக்கத்தக்கது. வில்லியம் ஜோன்ஸ் (1746-1794) போன்றவர்கள் அதுவரை உருவாக்கிவைத்திருந்த கருத்தாக்கங்கள் உடைபடத் தொடங்கின. அதாவது, பிற இந்திய மொழிகள் அனைத்திற்கும் சமஸ்கிருதமே தாய்மொழி என்னும் ஊகம் பொய்த்தது. தமிழ்மொழி திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்

கதை
சல்மா ஓவியங்கள்- ரோஹிணி மணி  

அன்புள்ள அம்மாவுக்கு! ஒரு வார்த்தைகூட எழுதப்படிக்கத் தெரியாத உனக்குக் கடிதம் எழுத வேண்டும் என்கிற இந்த எனது எண்ணம் என் விருப்பத்தின்பால் மட்டுமல்ல, எனக்கு உன்மீது உருவாகியுள்ள கட்டுக்கடங்காத கோபத்திற்கு வடிகாலாகவும்தான் இக்கடிதத்தை எழுத ஆரம்பிக்கிறேன். நிச்சயமாக இது உன் கைகளை வந்து சேரப்போவதில்லை. நான் அனுப்பப்போவதும் இல்லை. ஏனென்றால் வாசிக்கத் தெரியாத உனக்கு வேறு யாராவது வாசித்துக் காட்ட முயன்றால் உனக்கு அது மாபெரும் மனக் கஷ்டத்தை, அவமானத்தை இக்கடிதம் தரக்கூடும். அதன் பிறகு நீ தீராத மனவேதனைக்கு உள்ளாவாய். ஏற்கெனவே இதய நோயாலும் இன்னும் பிற நோய்களாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உனக்கு இக்கடிதம் மேலும் கொஞ்சம் அழுத்தங்களைத் தந்து உன்னைக் கொன்றுவிடக் கூடும். நிச்சயமாக நான் அந்தத் தவற்றைத

திரை
டி.எம். ராமச்சந்திரன்  

திரௌபதி விஸ்திராபரணம் (1917) நடராஜ முதலியார் தென்னிந்தியாவின் முதல் திரைப்படத் தயாரிப்பைத் தொடங்கிய நடராஜ முதலியாரைப் பேட்டி கண்டு டி.எம். ராமச்சந்திரன் என்பவர் எழுதி தி இந்து ஆங்கில நாளிதழில் 1964, ஜனவரி 26 அன்று வந்த கட்டுரை. தென்னிந்தியா தற்போது அதிகப்படியான திரைப் படங்களைத் தயாரிக்கும் மையமாக மாறியுள்ளது. அந்த முயற்சியின் பெருமை முழுவதும் நடராஜ முதலியாரையே சாரும். சென்னையைச் சேர்ந்த இவர் தற்போது 80 வயதான நிலையிலும் உறுதியான தொழில்முனைவோராக உள்ளார். இவர்தான் தென்னிந்தியாவின் முதல் மௌனப்படத்தை 1917இல் தயாரித்தவர். அதன் பெயர் ‘கீசகவதம்.’ மிகவும் முன்னோடியான சாதனையாகக் கருதப்படும் இந்த முயற்சியின் மூலம்தான் தென்னிந்திய சினிமாவிற்கான அடித்தளம் உறுதியாக இடப்பட்டது. நட

மதிப்புரை
கீரனூர் ஜாகிர்ராஜா  

அரவிந்தன் சமீபமாக நிறைய எழுதிக்கொண்டிருக் கிறார். 2011 முதல் சீரான இடைவெளிகளில் அவருடைய சில நூல்கள் பிரசுரம் கண்டுள்ளதைக் கொண்டு இதைக் கணிக்கிறேன். கடந்த ஆண்டுகளில் அவருடைய ‘பயணம்’, ‘பொன்னகரம்’ ஆகிய இரண்டு நாவல்கள் அடுத்தடுத்து வெளியாகின. முன்னதாக இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் மொழிபெயர்ப்புக் கதைக்கொத்தும் வந்திருக்கின்றன. அதற்கும் முன்னர் 2006இல் அவர் படைப்புத் துறையில் சற்றுத் தீவிர கவனம் செலுத்தியிருக்கிறார். பத்திரிகையாளராக வேலை செய்துகொண்டு இந்த அளவுக்கு இயங்க முடிந்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான். ‘குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது’ அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு; பிறகு, சுமார் பத்தாண்டு இடைவெளியில் அவரிடமிருந்து அடுத்த

மதிப்புரை
வெளி ரங்கராஜன்  

தமிழ்நாட்டுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் இடையே பூகோள ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பல நூற்றாண்டுகளாக ஆழ்ந்த தொடர்புகள் நிலவியபோதும் நவீன கலை, இலக்கியம் சார்ந்து கடந்த 50 வருடங்களில் ஏற்பட்டுள்ள பரிமாற்றங்கள் அரசியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஒரு செறிவான புரிதலையும் பிணைப்பையும் ஏற்படுத்தியுள்ளதைப் பார்க்க முடியும். தீவிர தளத்தில் இயங்கிவரும் சிறுபத்திரிகை சார்ந்த தமிழ் ஆக்கங்களை அடையாளம் கண்டு அவை ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளிடம் எடுத்துச் செல்லப்படவும் அவற்றுக்கு இணையான ஈழப் படைப்புகள் தமிழ்நாட்டுப் படைப்பாளிகளிடையே அறிமுகம் பெறவுமான இருவழிப்பாதை அண்மைக்காலங்களில் சாத்தியப்பட்டிருக்கிறது. அதற்கு வித்திட்டவர் என்று தற்போது லண்டனில் வாழ்ந்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பத்மநாப ஐய

மதிப்புரை
அனிருத்தன் வாசுதேவன்  

தெளிவான கதை ஒன்று சீனிவாசன் நடராஜனின் ‘விடம்பனம்’ நாவலில் இல்லை. ஆனால், முற்றுப் பெறாத கதைகள் பல இதற்குள் இருப்பதாகவே தோன்றுகின்றன. கதை சொல்லல் என்பதே இந்த நாவலின் குறிக்கோள் அல்ல என்றோ கதை சொல்லல் என்ற கட்டமைப்பை நிராகரிக்கிறது என்றோ இந்த நூலைப் பற்றிக் கூறிவிடத் தயங்கு கிறேன். ஏனெனில், கதைகள் தவிர்க்கப்பட்டிருப்பதை விட கதைகள் தாமே புணர்ந்து குட்டியிட்டுப் பால்கொடுத்து முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துப் பெருகிக்கிடக்கும் உணர்வையே நூல் தருகிறது. கீழத் தஞ்சை கிராமத்துப் பெண்கள் இருவர், ஒரு மைனர் ஆகியோரை மனக்கண்ணில் பார்க்க முடிவதைவிட அவர்களை முகர்ந்து பார்க்க முடிகிறது. புலன்களின் முக்கியத்துவங்கள் புரட்டிப் போடப்படுகின்றன. இந்தக் கதாபாத்திரத்தை மனக் கண்ணில் கற்பனைசெய்துகொள்ள முடி

உள்ளடக்கம்