தலையங்கம்
 

சில மாதங்களாகத் தொடர்ந்து அவலத்துக்குள்ளாகி வருகிறது தமிழக அரசியல் நிலவரம். அது கவலையைத் தரும் விதத்தில் இருந்தாலும், கூடவே மக்களின் பங்கேற்பும் மிகுந்துவருகிறது. பொதுச் சமூகத்தின் எதிர்வினையாற்றல் காத்திரமான நிலையை எட்டி, இந்திய அரசியல் களத்திற்குப் புதிய திசையை வகுக்கின்றது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலே அரசு நிர்வாகத்தில் தேக்கநிலை உருவானது; இது அப்படியே அரசியல் களத்திற்குள்ளும் பெரும் தாக்கத்தைச் செலுத்தியது. முதல்வர் நல்ல உடல்நிலையில் இருந்துதான் நிர்வாகத்தை நடத்திவருகிறாரா என்ற ஐயம் எல்லோரிடமும் தோன்றியது. மத்திய அரசை நோக்கிய ஜெயலலிதாவின் சில முடிவுகள் அப்படியே கைகழுவப்பட்டு அதற்கு நேர்மாறான முடிவுகள் எட்டப்பட்டன. அவர் மறைவுக்குப் பிறகு அக்கட்சிக்குள்

எதிர்வினை
ப. சரவணன்  

திருக்கோவையார் பிரகடனப் பத்திரிகை “எவனொருவன் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ள விரும்புகிறானோ அவன் உண்மையிலேயே சிறுமை உள்ளவன்” - ஆல்பிரட் ஆட்லர் உ.வே.சாமிநாதையர் மீது நெடுங்காலமாகச் சுமத்தப்பட்டுவரும் பழிப்புரை ஒன்றைப் போக்குமுகமாக பிப்ரவரி 2017 காலச்சுவடில் நான் எழுதிய “ஐயருக்கு எதிரான அபவாதம்” என்னும் கட்டுரைக்குப் ‘பரிசாக’ என்மீதே அபவாதம் வந்துசேரும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. என்மீது அபவாதம் சுமத்தியிருக்கிறார் திரு. பொ. வேல்சாமி. எந்தப் பத்திரிகையில் செய்தி வெளியானதோ அதே பத்திரிகையிலேயே தன்னுடைய எதிர்வினையை ஆற்றுவதே மரபு. அதற்கான தளம் மறுக்கப்படும்போது வேண்டுமானால் வேறிடம் தாவலாம். ஆனால் வேல்சாமியின் எதிர்வினைக்குக் காலச்சுவடு களம் அம

மதிப்புரை
அ.கா. பெருமாள்  

தமிழக வரலாறு தொடர்பாக வந்த புத்தகங்களில் பெரும்பாலானவை பேராசிரியர்களால் அல்லது கல்விசார் நிறுவனங்களால் எழுதப்பட்டவை. இவற்றில் பெரும்பாலானவை பாடத்திட்டப் போக்கில் உள்ளவை; அல்லது தீவிர ஆய்வுக்கண்ணோட்டத்தில் அமைந்தவை. மாணவர்களும் ஆய்வாளர்களும் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய வரலாற்று நூற்கள் இவை. இவற்றிலும் கடந்த நூறு ஆண்டு அரசியல் வரலாற்றை முழுதுமாக நடுநிலையுடன் கூறும் புத்தகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சாதாரண வாசகனை முன்னிறுத்திய வரலாற்று நூற்கள் தமிழில் குறைவாகவே வந்துள்ளன. இந்த வரிசையில் ‘பெரியோர்களே தாய்மார்களே’ முக்கியமான புத்தகம். ஜூனியர் விகடன் இதழில் 2015-16இல் தொடராக வந்த 88 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இன்றைய இளம்வாசகன் அறியாத தலைவர், கட்டடங்கள் என 191 ஓவியங்களும் புக

மதிப்புரை
மா.க. பாரதி  

தமிழகத்தின் முன்னோடிச் சிந்தனையாளர்களுள் முதன்மையானவரான அயோத்திதாச பண்டிதர் இதுவரையில் தமிழகம் கண்ட ஆளுமைகளுள் மிகவும் சிடுக்கானதொரு தன்மை கொண்டவராக இருக்கிறார். அவருடைய மொழி நவீனக் கல்விப் பின்புலத்தின் கண்கொண்டு பார்க்கையில், கட்டுக்குள் அடங்காதது. நவீன அறிவியலின் எழுச்சியாலும் அதிதீவிரத் தொழில்மயமாக்கலின் வளர்ச்சியாலும் உலகு தழுவிய பார்வை கொண்ட நவீனத்துவம் அவரைப் புரிந்து கொள்ள உதவாது. ஆய்வுப்புலம் பற்றிய கருதுகோள்கள் பலவற்றுள் அயோத்திதாசர் ஆட்படமாட்டார். சட்டகத்துள் அடைபட மறுக்கும் அயோத்திதாச பண்டிதரைப் புரிந்துகொள்வதற்குத் தெளிவான பின்புலங்களை முன்வைத்து, ஒவ்வொன்றையும் அவரது சொற்களோடு பொருத்திப்பார்த்து, அந்த ஆளுமையோடு பின்னிப் பிணைந்த சிடுக்குகளைக் களைந்து, அவரோடு அணுக்கமான ஓர் உரையாட

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது  

வரலாற்றை அணுகும்போது அவசியம் இருந்தாக வேண்டிய பண்புகளிலொன்று சார்பின்மை. துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய நிலை காணப்படுவதில்லை. வரலாற்றைத் தம் அரசியல் கருத்துகளினூடாக எடுத்துச் செல்ல இனவாத, மதவாத இயக்கங்கள் தொடர்ந்து முயன்றுவரும் தருணத்தில் வரலாற்றின் பல குரல்களாக, ‘கஜினி முகம்மது: சோமநாதா படையெடுப்பு’ நூல் வெளிவந்துள்ளது. வரலாற்றறிஞரான ரொமிலா தாப்பர் எழுதிய ‘Somanatha – The Many voices of a History’ என்ற நூலை முன்வைத்து உளவியல் மருத்துவர் சஃபி, இந்த நூலை எழுதியுள்ளார். கஜினியின் வரலாற்று உருவாக்கத்தைக் கேள்விக்குட்படுத்துவதுடன், தன் தரப்பு ஆய்வுகளையும் விரிவான அளவில் முன்வைக்கின்றது இந்நூல். மன்னர்களுக்கும் படையெடுப்புகளுக்கும் தொடர்பில் லாமல் ஏதாவது வரலாறு நமக்குக்

பதிவு
நாகபிரகாஷ்  

ஏற்கெனவே பயிலரங்குக்கு தேர்வான அனைவரும் ஒரு வாட்ஸாப் குழுமத்தில் உரையாடத் தொடங்கியிருந்தோம். எவரும் எவரையும் அறிந்திலர் என்ற உற்சாகத்தில் தாக்க அணங்கின் தானை கொண்டு மற்றவர் கதைகளை தாக்கிக் கொண்டிருந்தோம். இந்த விமர்சனங்களுக்கு அஞ்சி குழுமத்திலிருந்தும் ஒரு பதிலும் அனுப்பிவிடாமல் தற்காத்துக் கொண்டிருந்தவர் சிலர். இந்த பயத்திற்கு மேலும் உறுதி சேர்க்க மூன்றாம் நாள் ஒரு சிறுகதை விவாதத்திற்கு பகிரப்பட்டது. எங்களுக்குத் திக்கென்றாகியது. வகுத்தாரை மிஞ்சிய தொகுத்தானாய் தான் நின்ற கிருஷ்ணபிரபு இல்லாது அந்த கதையை நாங்கள் விளங்கிக் கொண்டிருக்கவே இயலாது. நான், பிரார்த்திக்கத் துவங்கி இருந்தேன். இப்படியாக பெரிய அளவிலான விஷயங்களை விவாதிக்கிற இடமாக பயிலரங்கு அமைந்து விடக்கூடாது என்று. மூன்று நாட்கள் தி

கடிதங்கள்
 

2017 ஜனவரியில் தமிழகம் தழுவி நடந்த இளைய சமுதாயத் தன்னெழுச்சிப் போராட்டம் சமூக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் எவ்வித ஐயமும் எழுவதற்கு வாய்ப்பில்லை. பிப்ரவரி 2017 ‘காலச்சுவடு’ தலையங்கமும் பிற மூன்று கட்டுரைகளும் வாசகர்களின் தனிக் கவனத்தை ஈர்த்துள்ளன. தலையங்கம் தவிர மற்ற மூன்று கட்டுரைகளுமே போராட்டத்தின் இறுதிக்கட்ட நிகழ்வுகளைத் தொடாமல் விட்டுவிட்டன. மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமாகப் பலநாட்கள் நடந்த மாநிலம் தழுவிய ஒருபெரும் நிகழ்வின் முடிவு, அதன் பொதுத்தாக்கம் பற்றி எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் என்ன கருதுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுவது இயல்பே. ஆனால் இதில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ‘காத்திருக்கும் சுனாமி’ என்ற தலையங்கத் தலைப்பு இக்கால அதிகார வர்க்கத்திற்குப் பூ

விவாதம்
 

காலச்சுவடு பிப்ரவரி 2017 இதழில் ப.சரவணன் எழுதிய ”ஐயருக்கு எதிரான அபவாதம்” என்ற கட்டுரையை முன்வைத்து... 1. பார்ப்பனர்களும் உயர்சாதித் தமிழர்களும் 1920 வரை ஒன்றாகவே இணைந்திருந்து தமிழ்ச்சாதிகளை ஆட்சி செய்தனர். கடந்த வரலாற்றுக் காலங்களில் அவர்களுக்குள் எவ்விதமான பகை உணர்வும் கிடையாது. தமிழகத்து உயர்சாதியினர் பார்ப்பனர்களைத் தலையில் வைத்து காலங்காலமாகப் போற்றி வந்தததைத் தான் தமிழக வரலாறு பதிவு செய்துள்ளது. 2. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பார்ப்பனர்கள் பல்வேறு உயர்பதவிகளைப் பெற்றார்கள். ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பு அவர்கள் தமிழ் உயர்சாதி மன்னர்களுக்கும் மிட்டாமிராசுக்களுக்கும் மரியாதைக்குரியவர்களாகத்தான் இருந்தனர். ஏனென்றால் தமிழ் உயர்சாதிகளுக்கு காலங்காலமாக ‘சாணக்கியர்’க

கட்டுரை
க. திருநாவுக்கரசு  

2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவால் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததற்காக அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் அண்ணி இளவரசி, சசிகலாவின் அக்காள் மகனும் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரன் ஆகியோர் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டபோது நீதிக்கே தண்டனையா, தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா என்றெல்லாம் பிதற்றினர் அதிமுகவினர்; இப்போது பிப்ரவரி 14ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தபோது அதிமுக தொண்டர்கள் பிளவுபட்டு, பெரும்பாலானோர் தீர்ப்பைக் கொண்டாடும் மனநிலையில் இருப்பர் என்று சில நாட்களுக்கு முன்னர்

கட்டுரை
ஞாநி  

சசிகலாவை ஏன் மக்கள் இவ்வளவு வெறுக்கிறார்கள்? மக்கள் மனதில் சசிகலா பெரும்பாலும் ஜெயலலிதாவின் வீட்டு வேலைக்காரி பிம்பத்திலேயே இருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் ஜெயலலிதா அவரை உடன்பிறவாச் சகோதரி என்றெல்லாம் சொல்லியிருந்தாலும் பொதுப் புத்தியில் அது ஏறவில்லை. பொது வெளிகளில் ஜெயலலிதா தோன்றியபோதெல்லாம் அவருக்கு ஓரடி பின்னால் டச்-அப் கேர்ள் போல சசிகலா நின்ற தோற்றம்தான் பொது மனங்களில் பெரிதும் பதிவாகியிருக்கிறது. தவிர சசிகலாவின் 30 வருடப் பொது மௌனம் அந்த வேலைக்காரி பிம்பத்தை வலுப்படுத்தியிருக்கிறது. (எஜமானி தான் பேசுவார். வேலைக்காரி பின்னால் மௌனமாக நிற்பார்.) தவிர இரு முறை ‘சகோதரி’ சசிகலாவை வீட்டைவிட்டு ஜெயா துரத்தியதை மக்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள்? வேலைக்காரியைத் தான் துரத்தலாம்.

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் உச்சத்தை எட்டி அதில் கலந்து கொள்ளும் பெண்கள் ஆண்களால் மதிப் போடு நடத்தப்படுகிறார்கள் என்பதான தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்ட நாள் ஒன்றில்தான் நந்தினி என்ற தலித் பெண்ணின் கொலைக்காக நீதி கேட்கும் குரல் சன்னமாக ஒலிக்கத் தொடங்கியது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறகடம்பூரைச்சேர்ந்த 16 வயது சிறுமி நந்தினி. தந்தையை இழந்த குடும்பத்தில் ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டுக் கூலிவேலைக்குச் சென்று வந்தார். அப்போது கீழமாளிகை கிராமத்திலிருந்து மேஸ்திரியாக வேலை செய்து வந்த மணிகண்டன் என்ற வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவரோடு அவருக்குக் காதலுறவு ஏற்பட்டுள்ளது. அதில் நந்தினி கர்ப்பமானதாகவும் அதனால் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி மணிகண்டனிடம் வலியுறுத்தியதாகவும் தெரிகிறத

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

மனிதர் இயங்கத் தேவையானது கார்போஹைட்ரேட்; இயந்திரங்கள் இயங்கத் தேவையானது ஹைட்ரோகார்பன். முன்னது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் மூன்றும் கலந்த ஒரு வேதியல் கலவை; பிந்தையது, கார்பன் ஹைட்ரஜனை மட்டும் உள்ளடக்கியது. நாம் உட்கொள்ளும் உணவின் பெரும்பகுதி மாவுச்சத்து, என்சைம்களின் உதவியோடு குளுக்கோஸ் ஆக மாற்றப்பட்டு நமக்குச் சக்தி அளிக்கிறது. இந்தச் செரிமானம் நடக்கும்போது நாம் உள்ளிழுக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜன் இதற்கு உதவுகிறது. பின்னர் கார்பன்-டை-ஆக்சைட் நாம் வெளிவிடும் மூச்சோடு கலந்து வெளியே வருகிறது. நமது உடம்பின் தட்பவெப்ப நிலையைச் சீராக வைத்திருக்கவும் நம் உடலில் நடக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்குச் சக்தி அளிக்கவும் இந்த கார்போஹைட்ரேட் உதவுகிறது. அதேபோல, ஹைட்ரோகார்பன்கள் என்பவை ஆக்சிஜனின் உதவியோட

கட்டுரை
பி.ஏ. கிருஷ்ணன்  

நண்பர் கல்யாண் அவர்களை நான் முதன்முதலாகச் சந்தித்தது சுராவின் ஆவணப்படம் சென்னையில் திரையிடப்பட்டபோது என்று நினைக்கிறேன். ‘நீங்கள் நான் நினைத்ததுபோல குண்டாக இல்லை’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சந்தித்த உடனேயே இருவருக்கும் ஒத்துப்போய் விட்டது. மார்க்சியத்தின் மீது ஈடுபாடு, ஆங்கில இலக்கியத்தின் மீது காதல், தமிழ்மீது கொண்டிருக்கும் தணியாத அன்பு, அறிவியல் கருத்துகளைப் பரவலாக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்ற எண்ணம், தமிழ் இந்தித் திரைப்படப் பாடல்கள், திராவிடப் போலித்தனத்தைத் தமிழர்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்ற தாகம் என்று பல புள்ளிகளில் இருவரும் சேர்ந்தோம். பின்னால் நான் பெங்களூரில் தங்கியிருந்தபோதும் சந்தித்துக் கொண்டோம். இருவரையும் இன்னும் நெருங்க வைத்த

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

நான் இங்கிலாந்துக்கு 1980இல் வந்தபோது இந்திய சாப்பாட்டுக் கடைகளில் வடஇந்திய உணவுகள்தான் கிடைக்கும். இந்தச் சமையல்காரர்களுக்கு விந்திய மலைக்குத் தெற்கே இருக்கும் பிரதேசம் விண்வெளி விஞ்ஞானிகளால் இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஒரு வனாந்திரக் காடு. இந்த உணவகங்களை வங்காள தேசத்தினர், முக்கியமாக Sylhet பள்ளத்தாக்கிலிருந்து வந்தவர்கள் நடத்தினார்கள். செட்டிநாடு போல் Sylhet உணவுத் தயாரிப்பில் பெயர்போன இடமில்லை. இவர்கள் பயிற்சிபெற்ற சமையல்காரர்களும் அல்ல. காலையில் தொழில் பார்த்துவிட்டு மாலையில் அதிசயமாகச் சமையல்காரராக மாறிவிடுவார்கள். இந்த உணவகங்களின் சுவர்களை அலங்கரிக்க ஒட்டிய வர்ணத்தாள் சிவாஜி கணேசனின் வசந்தமாளிகையை நினைவூட்டும். நல்லி விளம்பரங்களில் காணப்படும் பட்டுச்சீலை போல் கண் கூசும்படியான பளபளப்

கட்டுரை
பாத்திமா மாஜிதா  

இலங்கை அரசின் சிறுபான்மையினர் உரிமை தொடர்பான விவாத அரங்கில் முஸ்லிம் பெண்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதன் ஆரம்பக்கட்டமாக முஸ்லிம் தனியார்ச் சட்டத்தில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எப்போதும் இல்லாதவாறு இம்முறை மிகவேகமாக சமூகத்தின் அனைத்து மட்டங்களிலிருந்தும் மேலெழுந் துள்ளன. இஸ்லாத்தின் ஆரம்பகாலப்பகுதியில் பெண்கள் உரிமைகளை வலியுறுத்தி அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதற்கான முன்னெடுப்பு முயற்சிகள் இருந்திருப்பதை வரலாறுகள் கூறுகின்றன. அல் குர்ஆன் - ஸூன்னாவின் ஒளியில் இறைத்தூதர் காலப்பெண்களின் செயற்பாடுகள் இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் சான்று பகர்கின்றன. அரபுப் பழங்குடி அம

அஞ்சலி- டி.என்.ஏ. பெருமாள் (1932-2017)
எம். கோபாலகிருஷ்ணன்  

காடுகள் காணாமல்போய்விட்டன. வசிப் பிடங்களை இழக்கும் வன விலங்குகள் பலவும் புகலிடம் தேடி அலைந்து மின்சார வேலிகளிலும் ரயில்களிலும் அடிபட்டுச் சாகின்றன. அடர்ந்த காடுகளும் அவற்றை அண்டியிருந்த சிறிதும் பெரிதுமான பல்வேறு உயிர்களும் பூமியின் சமன்நிலைக்கு ஆதாரமாக அமைந்திருப்பதைப் பற்றி இன்று விவாதிக்கிறோம். புவி வெப்பமயமாதல் குறித்தும் அவற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதன் அவசியத்தைப் பற்றியும் உலகநாடுகள் மாநாடுகளைக் கூட்டிக் குளிர்ப்பதன அரங்குகளுக்குள் கவலையுடன் தீர்மானங்கள் நிறைவேற்றுகின்றன. அழியும் கானுயிர்களைக் குறித்துக் கவலைப்படவோ அரியவகை உயிரினங்களைக் காப்பாற்றிப் பேணுகிற காருண்யத்தைப் பற்றி யோசிக்கவோ நேரமில்லாத அளவுக்கு இந்தியாவில் நமக்கு வேறு பல கவலைகளும் காரியங்களும் உள்ளன. இன்றைய தகவல் தொழ

உரையாடல் – டி.என்.ஏ. பெருமாள் – எம். கோபாலகிருஷ்ணன்
எம். கிருஷ்ணனின்  

வேட்டைத் துப்பாக்கியைப் போட்டுவிட்டுக் கையில் கேமராவை எடுக்கவைத்த ஓ.சீ. எட்வர்ட்ஸ் என்னுடைய குருநாதர். அதேபோல எம். கிருஷ்ணனும் என்னுடைய இன்னொரு குருநாதர். அவரிடமிருந்து கானுயிர் புகைப்படக்கலை குறித்தும் கானுயிர்களின், குறிப்பாக யானைகளின் போக்குகள் குறித்தும் நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். எம். கிருஷ்ணன் இயற்கை வளங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். களத்தில் இறங்கிக் கடும் பணியாற்றிய அசுர உழைப்பாளி. யானைகளைப் பற்றிய விஷயத்தில் அவர் ஒரு நிபுணர். யானைகள் என்ன நினைக்கின்றன என்றே அவரால் சொல்ல முடியும். ஒருமுறை நாகர்ஹொலேவுக்கு அவருடன் சென்றிருந்தோம். எனது நண்பர் கோட்பொடே, அவருடைய மகன் அஜய் கோட்பொடே ஆகியோரும் உண்டு. யானையில் நாங்கள் சவாரி செய்து கொண்டிர

அஞ்சலி- க.சீ. சிவகுமார் (1971-2017)
பாஸ்கர் சக்தி  

க.சீ. சிவகுமாருக்கு ஒருமுறை வித்தியாச மானதோர் ஆசை தோன்றியது. அவன் பாடல்களின் ரசிகன். குரல்களின் காதலன். வாணி ஜெயராமும் எல்.ஆர். ஈஸ்வரியும் சித்ராவும் அவனுக்கு மிகவும் பிடித்த பாடகிகள். தனது நூல் ஒன்றை எல்.ஆர். ஈஸ்வரி வெளியிட வேண்டும் என்று ஏனோ அவனுக்குத் தோன்றி விட்டது. எப்படியோ நம்பர் வாங்கி அவருக்கு ஃபோன் செய்தான். மறுமுனையில் அவன் நேசிக்கும் அந்தக் குரல் கேட்டதும் ஒரே புளகாங்கிதம். “யாருங்க? என்ன வேணும்,” என்று அவர் கேட்க, ``நான் ஒரு எழுத்தாளன், உங்க ரசிகன், என்னோட புத்தகம் ஒண்ணை நீங்க வெளியிடோணும். என் ஊர்ல,” என்று இவன் சொல்ல மறுமுனையில் அவர் பதற்றமாகிவிட்டார். ஒரு ஆள் ஃபோன் செய்து இப்படி ஒரு வேண்டுகோளை வைத்ததில் ஏதோ சூது இருக்கிறது என்று அவர் நினைத்திருக்கலாம்; குழம

கட்டுரை
ஆ. இரா. வேங்கடாசலபதி  

மீசை வைத்து வள்ளுவர் அறியப்படாத பாரதி புதுமைப்பித்தன் சென்ற காலச்சுவடு (பிப்ரவரி) இதழில் ‘ஐயருக்கு எதிரான அபவாதம்’ என்றொரு கட்டுரையைப் ப. சரவணன் எழுதியிருக்கிறார். அக்கட்டுரை விவாதத் திற்குள்ளாகியுள்ளது. நான் வேறொரு காரணத்திற்காக இங்கே சரவணனின் கட்டுரையைச் சுட்டுகிறேன். பிரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ் படம் என ஒன்று அக்கட்டுரையுடன் வெளியாகியுள்ளது. கொஞ்ச காலமாகவே இப்படம் ஊடக உலகில் உலவி வருகிறது. இதன் ஊற்றுக்கண் எதுவெனத் தெரியவில்லை. உண்மையிலேயே இது திராவிடச் சான்றைக் கால்டுவெல்லுக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உரைத்த எல்லிஸ் படம்தானா? எல்லிஸ் மறைந்தது 1819இல். புகைப்படத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது அதற்கு இருபது ஆண்டுகளுக்குப் பின். எல்லிஸ் காலத்தில் பிரமுகர்களி

அறியப்படாத பாரதி – 7
ய. மணிகண்டன்  

"இன்று புதிதாய்ப் பிறந்தோம்" ஆற்றலையும் உத்வேகத்தையும் அளிக்கும் இந்தத் தொடர் பாரதியின் சொந்தச் சிந்தனையில் தோன்றி நமக்கு வாய்த்ததா அல்லது எதனுடைய, எவருடைய தாக்கத்திலேனும் பாரதியிடத் திலே அரும்பி நம்மை வந்தடைந்ததா? இந்தக் கேள்விக்கு ஒருவருடைய சந்திப்பும் சிந்திப்பும் சொற்களுமே பாரதியின் நெஞ்சிற்குள்ளும் எழுத்திற்குள்ளும் இத் தொடரை ஒளிரச் செய்தன என்னும் உண்மை விடையாகின்றது. அந்த ஒருவராகக் குள்ளச்சாமியை நம்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது பாரதியின் வாழ்க்கையும் வரலாறும்.1 பொது வாழ்வின் தொடக்கத்தில் திலகரையும் இறுதியில் காந்தியையும் சந்தித்தவர் பாரதி. "வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா"வைக் கவிதையிலும் கருத்துப் படத்திலும் கட்டுரைகளிலும் போற்றியிருந்தாலும், தாம் தீவிரமாகச

கதை
சத்யானந்தன்,ஓவியங்கள்- மணிவண்ணன்  

அப்ஸரஸ் தேவமாலாவின் உடலெங்கும் வேர்த்திருந்தது. சதங்கைகளின் தேய்ந்த பிசிறொலி அவளது தளர் நடையைச் சொன்னது. மயிலும் நாகமுமாக மாறிமாறி ஆடியவளைத் தேவேந்திரனும் சபையும் வெகுவாக வியந்தனர். மின்னலைப் போல அவள் சபையின் மைய மேடையில் ஆடிய வேகமும் பாவமும் அதுவரை சபை கண்டிராதது. அதற்கு முன் சபைக்கு வந்தேயிராத ஓர் இளைஞர் அங்கே வந்து சேரும் வரை அவளது நாட்டியத்தில் பிரச்சனை ஏதும் வரவில்லை. மதியம் நான்கு மணி ஆன பின்னும் வெய்யிலின் உக்கிரம் தணியவில்லை. ‘மினி பஸ்’ஸில் இருந்து ‘பிளாஸ்டிக் ஒயர்’ பையுடன் இறங்கிய முத்தம்மாள் தலையில் நரையின் தாக்கம் அதிகமில்லை. அரக்கு நிறப்புடவை, தலையில் மல்லிகைப்பூவுடன் அவளைப் பார்ப்பவர் யாருக்குமே இளவயதில் இன்னும் கட்டான உடலும் அழகான முகமுமாக இருந்திருப

கட்டுரை
ஜெ. பாலசுப்பிரமணியன்  

கடந்த சில வருடங்களாகத் தமிழகத்தில் மதுவிலக்கு கோரிப் பல கட்சிகள், இயக்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மட்டுமல்லாமல் தன்னெழுச்சியாக மாணவர்களும் பொது மக்களும் போராட்டங்களைக் கையிலெடுத்தனர். இளைஞர்களால் ஆங்காங்கே மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலில் மதுவிலக்கு கோரிக்கை பிரதான பங்கு வகித்து, தற்போது சற்று ஓய்வெடுத்திருக்கிறது. இப்போராட்டங்கள் தீவிரநிலை வந்தடைந்ததற்கு மதுவின் தீமைகள் குறித்து மக்களிடையே ஊடகங்கள் ஏற்படுத்திய தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரம் முக்கியமானதாகும். குறிப்பாக, தமிழ்ப் பத்திரிகைகள் கடந்த சில வருடங்களாக மதுவால் ஏற்படும் சீரழிவுகள் குறித்தும் தமிழகத்தில் மதுவிலக்குக்கான தேவை குறித்தும் பெரும் விவாத

கவிதைகள்
அனார்  

உடல் கணுக்குகளுக்குள்ளே எறும்புப் புற்றுகள் தொலைதலும் மீளுதலுமான பெருநீர்ப்பரப்பின் இரு கரைகளில் புற்றுகளை எழுப்புகின்றன உரையாடல்கள் நடுவே இறுகிக் கெட்டியாகி விடுகின்ற நிசப்தங்கள் முதல் கனி சுவைத்துளிகளில் மொய்த்திருந்த எறும்புகள் புற்றுகளின் வெளியே காலத்தை மறந்து திரிகின்றன ரகசியம் மண்டிய இடங்களில் காற்றின் சுழலோ மௌனத்தின் புற்றை அசைப்பதில்லை எதிரொலிகள் மோதும் செம்மண் வெளிகளில் அந்திச் சூரியனின் சிவப்பை அரிக்கின்றன செவ்வெறும்புகள் நாணல் குருத்துகளில் மூடு தாவரங்களின் தண்டுகளில் இலைமடிப்புகளுக்குள் சில எறும்புகள் தங்கிவிடுகின்றன உடல் இணையாத உறவுக் கணுக்குகளுக்குள் எறும்பு புற்றுகளை வைப்பதும் இரைகளை இழுத்துவருகையில் அந்தக் கனவுகளின் உக்கிரம் எதிர்பாரா ஒரு நசுக்குதலில் செ

பத்தி- நிலவைச் சுட்டும் விரல்
யுவன் சந்திரசேகர்  

எண்பதுகளின் இறுதியில் யாழ்ப்பாணமும் மதுரையும் இரட்டை நகரங்கள் என்கிற அளவு நெருக்கமும் ஒன்றுணர்வும் தமிழ்நாட்டில் நிலவியது. அது சிறுகச் சிறுகத் தேய்ந்து, நிம்மதியற்ற சூழல் நிலவும் அண்டை நாட்டில் இருப்பது எனும் அளவு வீரியம் குறைந்திருக்கிறது. மாறிமாறி வரும் அரசியல் தலைமைகள், உலகளாவிய வாணிப தேசங்கள் - குறிப்பாக போர்த்தளவாட வியாபாரிகள் - எனப் பல்வேறு நேரடிக் காரணங்கள், மறைமுகக் காரணங்கள் தற்போதைய நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டிருக்கின்றன. பத்திரிகைகள் மூலம் மட்டுமே ஈழநிலையை அறிந்துவைத்திருக்கும் பொதுமனத்துக்குக் குழப்பமும் இனம்புரியாத துக்கமும் மட்டுமே மிச்சம். அந்த நாட்களில் நான் கோவில்பட்டியில் வசித்தேன். ராமசாமிதாஸ் பூங்காவில் கோணங்கியுடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது, அண்மையில் போரில்

கவிதைகள்
ரிஷான் ஷெரீப்  

தென்னைகளில் கள்ளெடுப்பவள் பக்கவாதப் புருஷனுக்கென முதலில் வீட்டுத் தென்னையில் கள்ளெடுத்தவளின் தோப்பு மரங்கள் அத் தடவை காய்த்துக் குலுங்கியது கண்டு தொடக்கத்தில் ஊர் முழுவதும் வியப்பாகக் கிசுகிசுத்துக் கொண்டார்கள் பெண்ணேறும் தென்னைகள் அதிகமாகக் காய்க்கிறதென விடியலிலும் இரவிலும் எக் காலத்திலும் மரமேறுபவள் எல்லாத் தென்னைகளினதும் உச்சிகளைத் தொடுத்து நீண்ட கயிற்றினால் முடிச்சிட்டுக் கட்டுவாள் ஓரோர் மரத்துக்கும் கயிற்றின் வழியே நடந்து சென்று மண்பானைகளைப் பொருத்தியும் எடுத்தும் வரும் கள்ளெடுக்கும் செம்பருத்தி தென்னை ஓலைகளினூடே தொலைவில் கடல் மின்னுவதை எப்போதும் பார்த்திருப்பாள் தென்னந் தோட்டங்களை வைத்திருப்பவர்கள் அவளைக் காணவரும் பின் மதியங்களில் தம் தோப்புகளைச் செழிக்கச் செய்ய

உள்ளடக்கம்