தலையங்கம்
 

நம்மை ஆள்வதற்காக மத்தியிலும் மாநிலத்திலும் நாம் தேர்ந்தெடுத்திருக்கும் அரசுகள் குடிமக்களாகிய நம்மை நம்புவதில்லை. நமக்கு நம்பகமானவையாகவும் இல்லை. அவை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் வெளிப்படையான நிலைப்பாடுகளைக் கைக்கொள்வதில்லை. வெளிப்படையான அணுகுமுறையைப் பின்பற்றுவதில்லை. மக்களின் பிரச்சனைகளைப் பற்றிய உண்மையான தகவல்களை அவர்களிடமிருந்து மறைத்து வைக்கவே முற்படுகின்றன. உதாசீனம் ததும்பும் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டமே மக்கள் போராட்டங்களில் இறங்க முதன்மையான காரணம். ஆண்டின் தொடக்கம் முதலே தமிழகம் போராட்டக் களமாகக் காட்சியளித்து வருகிறது. ஏறுதழுவுதலுக்குத் தடை என்ற பிரச்சனையில் அரசுகள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய எந்த நிலைப்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. பிரச்சனையை மூடி மறைக்கவும் பொதுக் கவன

கண்ணோட்டம்
களந்தை பீர்முகம்மது  

உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் அம்மாநிலத்தின் முஸ்லிம் வாக்குகள் அனைத்தும் காணாமல்போயிருக்கின்றன. முஸ்லிம் வாக்குகளை எப்போதும் தாங்கி நிற்கும் தலித்துகளின், யாதவர்களின் வாக்குகளையும்கூட காணமுடியவில்லை. அதனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிதான் இன்றைய ஊடகவியலாளர்கள், ஜனநாயகச் சக்திகளின் பணியாக இருக்கின்றது. இந்தப் பணிகள் அந்தப் பக்கமாகப் போய்க்கொண்டிருக்கையில் ஒரு துறவி அம்மாநிலத்தின் முதல்வராகவும் பொறுப்பேற்று நாளும்பொழுதும் அதிரடி உத்தரவுகளோடு தன் ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்ய ஆரம்பித்துவிட்டார். மோடியின் எதிரிகளாகிய நமக்குள் இப்போது ரகசியமாகப் பரிமாறிக்கொள்ளப்படும் சந்தோஷச் செய்தி, மாபெரும் வெற்றியை ஈட்டிக்கொடுத்த மோடியை ஆர்எஸ்எஸ் புறம்தள்ளிவிட்டது என்பதாம். உள்ளே தொடங்கியிருக்கின்ற இந

கடிதங்கள்
 

‘அவலங்களின் ஆடுகளம்’ கட்டுரைகள்; ‘பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்ற வரியை இந்த ஆட்சி நியாயப்படுத்திவிட்டது. வாக்களித்துவிட்டு மக்கள் வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். வாக்கை வாங்கிக்கொண்டு மக்கள் பிரதிநிதிகளெல்லாம் நாற்காலியை இறுகப் பற்றிக்கொள்வதற்காக ஜனநாயகத்தின் இதயத்தைக் கூறுபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தைக் குற்றவாளிகள் கையில் கொடுத்துவிட்டால் இங்கே அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு என்ன மதிப்பு இருக்கிறது? கேவலங்களின் கேடயங்களைப் பாதுகாப்புக் கவசங்களாய் வைத்துக்கொண்டதால் மக்கள் எல்லாம் குறைதீர்க்கும் முகாமிற்கு எப்படி போவார்கள் - ஜனநாயகமே சித்ரவதை முகாமிற்குப் போனபின்பு? மங்கையர்செல்வன், மின்னஞ்சல் வழி. மார்ச்

பதிவு
 

கேரள சாகித்ய அகாதெமியும் பட்டாம்பி ஸ்ரீ நீலகண்டா அரசினர் சம்ஸ்கிருத கல்லூரி மலையாளத் துறையும் இணைந்து பிப். 26, 27, 28 தேதிகளில் தென்னிந்தியக் கவிதை மொழிபெயர்ப்புப் பட்டறையை நடத்தின. பட்டாம்பியில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் ‘கவிதா கார்னிவல்’ நிகழச்சியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மொழிபெயர்ப்புப் பட்டறை ஷொர்னூர் எஸ்.என். ஹெரிடேஜ் வளாகத்தில் நடந்தது. மலையாளம் தவிர்த்த பிற தென்னிந்திய மொழிக் கவிதைகளை மலையாளத்துக்கும் மலையாளக் கவிதைகளை மற்ற மூன்று மொழிகளுக்கும் பெயர்ப்பது பட்டறையின் நோக்கம். தமிழிலிருந்து சுகிர்தராணி, இசை, நான், தெலுங்கிலிருந்து பி. மோகன், மந்தாரபு ஹைமவதி, மந்திரி கிருஷ்ண மோகன், கன்னடத்திலிருந்து அப்துல் ரஷீத், வி.எம். மஞ்சுநாதா, வி.ஆர். கார்ப்பென்டர் ஆகிய ஒ

மதிப்புரை
அர்ஜுன் - த. ராஜன்  

வரலாற்றை அறிந்துகொள்வது ஏன் அவசியமாகிறது? நம் வாழ்வை அது எவ்விதத்தில் பாதிக்கிறது? வரலாறு என்பது கடந்த காலத்தின் நடந்துமுடிந்த சம்பவங்கள் மட்டும்தானா? கடந்த காலத்தின் நினைவுகளாகவோ பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்களாகவோ மட்டும் வரலாறு இருந்திருந்தால் அது, அச்சம்பவங்களில் தொடர்புடையோருக்குப் பெருமைப்படும் விஷயமாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால், சமூகத்தின் ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்பும் பெரும் வரலாறு இருக்கிறது. இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வு நமது வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. வரலாறு ஓர் அங்கீகாரமாக மதிக்கப்படுகிறது, ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொருவருக்கும். வரலாற்றைப் புனைவுகளாக்கும் வழக்கம் அவ்வப்போது தமிழ் இலக்கியப்பரப்பில் நிகழ்வதுண்டு. இவ்வகைப் புனைவுகள் பொதுவாக வரலாற்றுச

மதிப்புரை
தாமஸ் டௌட்  

வெறுப்பாசிரியர் தொலைபேசினார். (இரண்டே தொடர்கள். அவையே மிகை. நான் பாக்கியவான் ஆனேன்.) ‘எங்கள் ஆசிரியர் குழு உறுதியாக விரும்புகிறது. நீங்கள் பேயோனின் புத்தகத்திற்கு மதிப்புரை எழுத வேண்டும்’. வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை (2016) நூலுக்குத்தானே என்றேன். ஓம் என்றார். அதைத்தான் இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். எலி ஓடும் 162ஆம் பக்கத்தில் கண்கள் மேய்கின்றன என்றேன். நூல் 243 பக்கம் என்பதால் இன்னும் 80 பக்கம்தான், சீக்கிரம் முடித்துவிடுவான் என்று ஹே ஆசிரியர் நினைத்திருக்கலாம். நான் பின்னாலிருந்து முன்னேறிக் கொண்டிருப்பது இவருக்கு எப்படித் தெரியும். எனக்கே தெரியாதபோது # லாஜிக்கின் தோல்வி. பேயோனின் முன்னூலான ஒரு லோட்டா இரத்தம் (2013) படிக்கக் கிடைக்கவில்லை என்றேன் (அவரது 13 மின்னூ

மதிப்புரை
ஆ. சிவசுப்பிரமணியன்  

இந்நூலாசிரியர் தியடோர் பாஸ்கரன் தமிழ்நாட்டின் திரைப்படத்துறை, கலை, வரலாறு, தொல்லியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வருபவர். ஆழமான நூல்களைத் தேடிப்பிடித்து வாசிக்கும் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். வரலாறு சார்ந்த இருபத்தியொரு கட்டுரைகளின் தொகுப்பாக இவரது இந்நூல் வெளிவந்துள்ளது. மலைப் பாறைகளில், இயற்கையாக உருவாகியுள்ள மலைக்குகைகளைக் குறித்தது இந்நூலின் முதல் கட்டுரை. குகைகளின் அமைப்பு, இங்கு வாழ்ந்த துறவியர், தொல்லியல் எச்சங்கள், பிராமிக் கல்வெட்டுகள் குறித்த செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. ‘விருந்தோம்பல்’ அதிகாரத்தில் விருந்து என்று வள்ளுவர் குறிப்பிடுவது துறவிகளின் வருகையைத்தான் என்ற ஜீவபந்து யூபோல் கூறிய கருத்தில் இவர

பதிவு
 

திருக்குறளுக்குத் தேவை ப்ரெய்லி பதிப்பு நீதிபதி இல.சொ. சத்தியமூர்த்தி வேண்டுகோள் மயிலாடுதுறை திருக்குறள் பேரவையில் அண்மையில் நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில், ‘குறள் கூறும் சட்ட நெறிகள்’ என்ற தலைப்பில் நீதிபதி இல.சொ. சத்தியமூர்த்தி உரையாற்றினார்.  அந்த உரையில் அவர் தமிழ்ச் சமூகத்தின் கவனத்திற்குரிய தன் ஆர்வத்தை முன்வைத்தார். “பனை ஓலைச் சுவடிகளிலிருந்த திருக்குறள் அச்சுப் பதிப்பிலிருந்து முன்னேறி கணினித் திரையின் மெய்யுருப் பதிப்புவரை வந்துவிட்டது.  ஐந்து ரூபாய் கையடக்கப்பதிப்பும் உண்டு; ஆயிரம் ரூபாய் நவீனப் பதிப்பும் உண்டு.  நூற்றைம்பது ஆண்டுகளில் முப்பத்தேழுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.  ஆனால்,  தமிழகத்தில

பதிவு
 

கவிஞர் ஆத்மாநாமின் நினைவைப் போற்றும் வகையில் ‘மெய்ப்பொருள் பதிப்பக’த்தால் உருவாக்கப்பட்டுள்ள ‘கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’ கடந்த மூன்று ஆண்டுகளாகக் கவிதைக்கும் கவிதையியலுக்கும் தனது பங்களிப்பைத் தொடர்ந்து செய்துவருகிறது. தமிழில் வெளியாகும் சிறந்த கவிதை நூலுக்கு ஆத்மாநாமின் பெயரால் ஆண்டுதோறும் விருது வழங்கிச் சிறப்பு செய்கிறது. 2015ஆம் ஆண்டில் கவிஞர் இசையும் 2016ஆம் ஆண்டில் கவிஞர் க. மோகனரங்கனும் விருது பெற்றார்கள். கன்னடக் கவிஞரும் நாடகாசிரியருமான ஹெச். எஸ். சிவப்ரகாஷ், மலையாளக் கவிஞர் அனிதா தம்பி ஆகியோர் விருது வழங்கிச் சிறப்புரையாற்றினார்கள். தமிழில் வெளியாகும் தொகுப்புக்கு மட்டுமல்லாமல், பிற மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதைத் தொகுப்புக்க

கட்டுரை
செ. சண்முகசுந்தரம்  

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 22 நாட்களாக நடந்த நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இத்திட்டத்தை எதிர்த்து வடகாட்டிலும் நல்லாண்டார்கொல்லையிலும் தொடர்ச்சியான மக்கள் திரள் போராட்டங்கள் நடந்துவருகின்றன. மாணவர்களின், இளைஞர்களின் தமிழகம் தழுவிய தை எழுச்சி, ஜல்லிக்கட்டுப் போராட்டங்களுக்குப் பிறகான மக்கள் எழுச்சிப் போராட்டமாக நெடுவாசல் போராட்டம் அமைந்துள்ளது. ஜல்லிக்கட்டுப் போராட்டங்களின் மையம் தமிழகத்தின் பண்பாட்டுச் சூழலைத் தழுவியதாக அமைந்தது. நெடுவாசல் போராட்டம் வளமான காவிரி டெல்டாவைப் பாதுகாக்கும் மக்களின் வாழ்வாதாரப் போராட்டமாக மாறியுள்ளது. அரசு கொண்டுவரும் திட்டங்கள் யாருக்கானவை, எந்த வர்க்கத்திற்குரியவை என்ற கேள்விகளைப் பொத

கட்டுரை
இரா. திருநாவுக்கரசு  

”நம்ம முத்துகிருஷ்ணன் இறந்துட்டதா கேள்விப்பட்டேன்” என்ற குறுஞ்செய்தி கடந்த மார்ச் 13ஆம் தேதி இரவு வந்தபோது, ஏதாவது விபத்தாக இருக்குமோ என்றுதான் முதலில் ஐயப்பட்டேன்; தற்கொலையாக இருக்கும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. உடனடியாக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இருக்கும் நண்பர்களைத் தொடர்புகொண்டேன். தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினார்கள். என்ன காரணம் என்று யாருக்கும் தெரியவில்லை என்று நண்பரொருவர் சொன்னார். இங்கு ஐதராபாத் பல்கலைக் கழகத்திலுள்ள சக நண்பர்களைத் தொடர்புகொண்டேன். தற்கொலைதான், காரணம் தெரியவில்லை என்று சொன்னார்கள். மீண்டும் ஒரு தற்கொலை. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரோஹித் தற்கொலையால் ஏற்பட்ட பதற்றம் முழுமையாக அடங்குவதற்குள் முத்துகிருஷ்ணனின் அகால மரணம்

கட்டுரை
த. சுந்தரராஜ்  

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யு) ஆற்றியிருக்கும் சமூகப்பங்களிப்பு வியப்பளிப்பது. நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் பல இந்தியக் கல்விநிறுவனங்கள் செய்ய மறந்த சமூகப்பணிகளைச் செய்திருக்கிறது. இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் உருவாக்கியதில் அதன் பங்கு மகத்தானது. அந்த அறிஞர்களும் சிந்தனையாளர்களும் தத்தம் துறைகளில் பாய்ச்சிய புது ரத்தம் இந்திய சமூகத்திற்குப் புத்துயிர் ஊட்டியிருக்கிறது. நாட்டின் எந்தவொரு மூலையில் அநீதி நடந்தாலும் அதற்கெதிரான போராட்டம் முதலில் இங்கேதான் எழும். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சமீபகாலமாக எதிர்கொண்டுவரும் பிரச்சனைகள் அதன் அடிப்படை நோக்கங்களை நீர்த்துப்போகச் செய்தி

கட்டுரை
தேவிபாரதி  

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கடந்த ஐம்பதாண்டுகால அனுபவங்களின் பின்னணியில் புரிந்துகொள்ள விரும்பும் ஒருவர் பீதியில் உறைந்துபோகலாம்; மற்றொருவருக்கு அவை கேலிக்கிடமானதாகத் தென்படலாம். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கைகளைப் பிடிவாதமாகத் தக்கவைத்துக்க விரும்புபவர்களில் யாராவது அவற்றை வரவேற்கக்கக்கூட முன்வரலாம். மாற்றங்கள் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாகத் தென்பட்ட அஇஅதிமுக துண்டுகளாகச் சிதறத் தொடங்கியிருக்கிறது. எட்டுக்கோடி தமிழர்களின் தன்னிகரற்ற தலைவராகக் கருதப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக அரசியலிலிருந்து ஏறத்தாழ விலகியிருக்கிறார். அரசியல் வெற்றிடம் பற்றிய ஓயாத பேச்சுக்களாலும் அரசியல்

கட்டுரை
தி. பரமேசுவரி  

“என்னை நீங்கள் கடலில் தூக்கி எறிந்தால் கட்டுமரமாக மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம். என்னை நீங்கள் நெருப்பிலே தூக்கி எறிந்தால், நான் விறகாக மாறி அடுப்பெரிக்கப் பயன்படுவேன்; நீங்கள் சமையல் செய்து சாப்பிடலாம். என்னை நீங்கள் பாறையிலே மோதினால், வெறும் கல்லைப்போல் பொடியாகிவிடமாட்டேன்; தேங்காய்போலச் சிதறி உங்களுக்குத் தின்பண்டமாக மாறுவேன். ஆகவே தமிழர்களே! என்னை நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்; உங்களுக்காகவே பயன்படுவேன்” - இது மு.கருணாநிதியின் பொன்மொழியாகப் போற்றப்படும் வசனம். இந்திய விடுதலைக்குப் பிறகு, தமிழகத்தில் மொழிவாரி மாநிலப் பிரிவினை காரணமாக ஏற்பட்ட சிக்கல்கள், காங்கிரசல்லாத பிற கட்சிகளின் எழுச்சி போன்ற பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் குறிப்பிடத்தகுந்த

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் திருமணமாகாத 22 வயது இளைஞர் பிரிட்ஜோ நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவரோடு இன்னும் சிலர் கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றனர். சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே இன்னொரு படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பிரிட்ஜோவின் தந்தையார் தன் மகன்மீது நடந்த தாக்குதல் பற்றிக் கண்ணீருடன் விவரிக்கும்போது, எந்தத் தந்தைக்கும் இப்படிப்பட்ட ஓர் அனுபவம் நேரக்கூடாது எனத் தோன்றியது. இந்தச் சம்பவத்தில் இலங்கைக் கடற்படை ஈடுபடவில்லை என்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசரம் அவசரமாக அறிவித்தது. இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் அமரவீர இப்படுகொலை பற்றி விசாரிக்கும்படி அவர்களின் கடற்படையிடம் கேட்டுக்கொண்டார். அவர்களோ தாங்கள் யாரையும் சுடுவதில்லை என்றும், வெறும

கவிதைகள்
ஆனந்த் ஓவியம்- ஆனந்த்  

புதிய உலகம் சுற்றிச் சூழ்ந்த பெருங்கடல் சுருண்டு தனக்குள் குவிந்து நுழைந்தது   அழகின் உருவாய் அந்தர வெளியில் அசைந்து வந்தாள் இளவரசி   சூழ்ந்த வானம் மையம் வந்து குவிந்த அந்த வேளையில் அளவு இலாப் புள்ளியில் அகிலம் வந்தான் இளவரசன்   சுற்றிலும் பார்த்து அதிசயம் கொண்டு ‘நான் யார்’ என்று அவன் கேட்டான் ‘நீதான்’ என்று அவனிடம் சொல்லி நிமிர்ந்து சிரித்தாள் இளவரசி   ‘இதெல்லாம் என்ன’ என்று தன்னையே கண்கள் அகல அவன் கேட்க ‘இதெல்லாம்கூட நீதான்’ என்று மறுபடி சொன்னாள் இளவரசி   ‘நானும் இவையெல்லாமும் இருக்கும் இடம் இது எது’ வென அவன் வினவ ‘இந்த இடமும் நீதான்’ என்று மீண்டும் சொன்னாள்

மலையாளக் கவிதைகள்
 

வி.எம். கிரிஜா   மீன் என்னால் முடியாது மீனாக நீந்தி நீந்தித் திரியவும் குளிர்நீர்ப் பரப்பின்மேல் நீலத்தாமரைபோல உயரவும் வேரைப்போல நீந்தவும் மூழ்கவும்.   நான் போக வேண்டும் மண்ணின் மணத்தை அள்ளிப் பருக வேண்டும் பிரதிபலிக்கும் வானத்தில் மின்னும் விண்மீனாக வேண்டும்   பச்சை மாமரம் நீரில் சொரிகிறது பூவெண்மைகளை அதன் கிளையில் மொட்டாக நிலாவொளியில் ஒளிர வேண்டும்   புல்நுனிப் பனித்துளி நோக்கிப் போக வேண்டும் அதில் எதிரொளிக்கும் சூரியனின் வெளிச்சத்தில் மின்ன வேண்டும்.   என்னால் முடியாது மீனாக நீரை மட்டுமே ருசிக்க மூச்சு விடுகையில் எழும் நீர்க்குமிழியில் அடங்கும் உயிராக இருக்க.   மண்ணே, மண்துகளே, வந்து மறையும் தினங்களே நான் பார்க்க வேண்ட

அறியப்படாத பாரதி-8
ய. மணிகண்டன்  

பாரதி கவிதைகள், கட்டுரைகள், இதழ்கள் முதலியவற்றின் வாயிலாகக் கருத்துகளை வெளியிட்டு வந்ததைப் போலவே சொற்பொழிவுகளின் வாயிலாகவும் தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கின்றார். தொடக்க காலச் சென்னை வாழ்விலும் இறுதிக்காலச் சென்னை வாழ்விலும் பல கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றியிருக்கின்றார். மணலி, ஈரோடு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் முதலிய ஊர்களுக்கும் சென்று சொற்பொழிவாற்றியிருக்கின்றார். எட்டயபுர மன்னருடனான உறவு கசந்து மதுரைக்கு வந்த பாரதி ஏறத்தாழ மூன்று மாதங்கள் சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1.8.1904 முதல் 10.11.1904 வரை பணிபுரிந்த பாரதி 1904 நவம்பர் மாதம் சென்னை வந்து சுதேசமித்திரன் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கினார். 1905 ஏப்ரல் மாதம் சென்னை மாநிலக் கல்லூரியில் கலந்துகொண்

கதை
யுவன் சந்திரசேகர் ஓவியங்கள்- மணிவண்ணன்  

முந்தாநாள் இரவு சுமார் ஏழரை மணி இருக்கலாம். புத்தக அலமாரியருகில் நின்றிருந்தேன். வழக்கமாகச் செய்வதுதான். அடுக்கிய முதுகுகளில் தெரியும் தலைப்புகளை வரிசை கலையாமல் பார்த்தவுடன், திகட்டல் அதிகமாகியோ, அனைத்தையும் வாசித்து முடித்ததுபோன்ற திருப்தியுடனோ விலகிச் செல்வது. சில சமயம் என்னையும் மீறி ஏதாவது புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பிப்பதும் நடக்கும். வாசலில் ஏதோ சத்தம். வெளியே போனேன். சுற்றுச்சுவருக்கு அருகில் எப்போதும் நின்று சிகரெட் பிடிக்கும் இடத்துக்கு நேர் வெளியே தகராறு. நின்றிருக்கும் ஆட்டோவுக்கு அருகில் இருந்து, ஓர் ஆணும் பெண்ணும் சண்டை போடுகிறார்கள். ஏர்றி வண்டீலே. என்று இரைந்தான் அவன். அவளைவிடக் கொஞ்சம் குள்ளமாய் இருந்தான். அவள் அசையாமல் நின்றாள். ஏறிக் குந்துறியா இல்லயாடீ? மாட்டன்

கதை
அனார்  

Courtesy:Karl Addison “நினைவு கொள்வதுதான் மீட்சியின் ரகசியம்” பஹத் கூறியபோது... “யார் சொன்னாங்க அப்படி’’ என்று மின்னா கேட்டாள். “அது யாரோ சொன்னதுதான். யூதப் பழமொழி. எங்கோ வாசித்த ஞாபகம்” என்றவன் மின்னாவின் கையிலிருந்த புத்தகப் பைகளை வாங்கிக்கொண்டான். “ஏதாவது சாப்பிடுறியா, இல்ல இன்னும் கொஞ்ச தூரம் நடந்திட்டே இருப்போமா” மின்னாவின் கண்களைக் கூர்ந்து பார்த்துக் கேட்டான். “நடக்கத்தானே வந்தோம். நடப்போம்” என்றவளிடம் “சரி, உனக்கு போதுமென்ற வரைக்கும்” என்றான். சிரித்துக்கொண்டே கடைகள் நிறைந்த தார்வீதியில் இறங்கி ஓரமாக நடந்தார்கள். பின்னிரவு என்பதால், பூட்டப்பட்ட ஒரு சில கடைகளின் கண்ணாடி வழியாகத் தெரிகின்ற அந்தப் ப

கதை
ஜயந்த் காய்கிணி ஓவியங்கள்- கார்த்திகேயன்  

ஓவியங்கள்- கார்த்திகேயன்   “இன்னும் இருபது நிமிடங்களில் நாம் மும்பை விமான நிலையத்தில் தரை இறங்க உள்ளோம். உங்கள் சீட் பெல்ட்டுக்களைக் கட்டிக்கொள்ளவும்.” அறிவிப்பு வரும்போதே விமானம் வழக்கமாக இருப்பதைவிட அதிகமாக ஊசலாடுவதுபோல தோன்றியது. சந்திரகாசன் மூக்கின்மீது சிறிய வெள்ளெழுத்துக் கண்ணாடி இருந்ததால், தலையைக் குனிந்து, புருவத்தை உயர்த்தி, சன்னலுக்கு வெளியே பார்த்தான். இந்த உயரத்தில் மெலிதான மேகங்களின் நைலான் திரையின் அசைவிற்கு கண்டாலா, மாதேரான், கார்லா, லோககடா போன்ற சக்யாத்ரி குன்றுகளின் கூட்டம் தெரிய வேண்டும். முன்பு எப்போதோ அந்தக் குன்றுகளின் தெளிவற்ற திருப்பங்களில் பிக்னிக், சுற்றல், பயணம் அல்லது பயிற்சி முகாம் போயிருந்த நாட்களை எண்ணி மனம் மென்மையாக வேண்டும். பருவக

பத்தி: நிலவைச் சுட்டும் விரல்
யுவன் சந்திரசேகர் ஓவியம்: மருது  

சில ஆண்டுகளுக்கு முன், வெளியூர்ப் பயணம் ஒன்று. பிற்பகல் வேளையின் வெறுமையும் ஓடும் பேருந்தினுள் பாய்ந்த காற்றின் வேகமும் இப்போதுபோல நினைவிருக்கின்றன. பயணிகளில் அநேகர் தூங்குவதைப் பொருட்படுத்தாது, குறுந் தகடு உரத்து அலறிக்கொண்டிருந்தது. பெரும்பாலும் கவனத்தை ஈர்க்காத, வெற்றோசையாக மீந்து துன்புறுத்திய மெட்டுகள். வாத்தியங்கள் வலுத்த ஒலியுடன் ஒத்தாசை செய்தன. ‘தோற்செவி உள்ள தேசங்களில் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் - தமிழனுக்கு இரும்புக் காது’ என்கிற பாரதியின் வரிகள் எனக்குள் ஓடின. எவ்வளவு நேரம்தான் போராட முடியும்? ஏதோ ஒரு தருணத்தில் அனிச்சையாகப் பாட்டுகளைக் கவனிக்க ஆரம்பித்திருப்பேன் போல. போகிறபோக்கில் காதில் பட்டுத் தங்கிய ஒரு வரி பெரும் மண்சரிவைக் கிளர்த்திவிட்டது: நீ நனை

உள்ளடக்கம்