தலையங்கம்
 

கேரள மின்துறை அமைச்சர் எம்.எம். மணி அண்மையில் தெரிவித்த சில கருத்துக்கள் கடும் கண்டனத்துக்கும் தொடர்ந்து அவருக்கு எதிரான போராட்டங்களுக்கும் காரணமாக இருந்தன. மணியின் கருத்துக்கள் அவருக்கு மட்டுமல்ல, அவர் பங்கேற்றிருக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும் அவர் சார்ந்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் பொது மதிப்புக்கும் தீராக் களங்கமாக மாறியிருப்பதை மறுப்பதற்கில்லை. இடுக்கி மாவட்டத்திலுள்ள மூணாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலங்களை மீட்பதற்காக மாநில வருவாய்த்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அதையொட்டி நடந்த சர்ச்சைகளுக்குப் பின்னர் நிலமீட்பு நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத் துணை ஆட்சியர் இந்த மீட்பு நடவடிக்கையில் தன்னிச்சையாக நடந்துகொண்டார்; அர

கடிதங்கள்
 

மே 2017 இதழில் வெளியான தலையங்கம் ‘மாறும் வியூகங்கள்’ ஓ. பன்னீர்செல்வத்தின் திறமையை வானளாவப் புகழ்ந்துள்ளது. ஜெயலலிதா காலத்தில் இடைக்கால முதல்வராகும் வாய்ப்புப் பெற்றபோதெல்லாம் ஓ.பி.எஸ். முதல்வர் நாற்காலியின் நுனியில் அமர்ந்த காட்சியை நினைவுபடுத்திப் பார்த்தால், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு கட்சியையும் ஆட்சியையும் சகிகலாவின் காலடியில் அவர் சமர்ப்பிக்கத் தயாரானது வியப்புக்குரியதல்ல. நடுவண் அரசின் ஆலோசனைப்படி ஆளுநர் பொறுப்பிலுள்ள வித்யாசாகர் ராவுடன் இணைந்து நாடகம் நடத்த ஓபிஎஸ் இணங்கிய கணத்திலிருந்தே அவர் பாஜகவின் கைப்பாவையாக மாறியது தெளிவாகத் தெரிந்துவிட்டது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து மக்களிடையே ஏற்பட்ட சந்தேகங்களை அலட்சியப்படுத்திவிட்டுக் கட்சி, ஆட்சியென இரண்டையும

கட்டுரை
களந்தை பீர்முகம்மது  

சுந்தர ராமசாமி தான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட முதல் எழுத்தாளர் ரகுநாதன்தான். அவர் எழுதிய ‘இலக்கிய விமர்சனம்’ நூலை வாசித்த சு.ரா அவரைப் பார்க்கும் ஆவலால் உந்தப்பட்டார். அதேபோல, ரகுநாதன் எழுதிய ‘பிரிவுபசாரம்’ கதையை அறிந்த புதுமைப்பித்தன் பார்க்க விரும்பிய எழுத்தாளரும் ரகுநாதன்தான். முன்னைக்கும் பின்னைக்கும் நடுவில் நேசிக்கப்படும் ரகுநாதன், கம்யூனிஸ்ட் தோழர்களின் வட்டாரத்தில் ‘தொ.மு.சி’ என்று மரியாதையுடனும் அன்புடனும் அழைக்கப்பட்டவர். ரகுநாதன் கோவை எழுத்தாளர் மாநாட்டில் பேசும்போது பாரதியாரைப் போற்றிப் புகழ்கிறார் ஒருமையில்! மாநாட்டிற்கு வந்திருந்த பாவேந்தர் பாரதிதாசன் ரகுநாதனின் ஒருமைவிளி கண்டு அவரை அருகில் அழைத்து, “என்ன நீங்க, அய்யரை ஏகவசனத

மதிப்புரை
 

தாழிடப்பட்ட கதவுகள் (சிறுகதைகள்) அ. கரீம் வெளியீடு:  பாரதி புத்தகாலயம் 7, இளங்கோ சாலை,  தேனாம்பேட்டை சென்னை & 600018 பக்கம்: 160   ரூ.140 அ. கரீம் எழுத்தில் ‘பாரதி புத்தகாலயம்’ வெளி யிட்டுள்ள ‘தாழிடப்பட்ட கதவுகள்’ சிறுகதைத் தொகுப்பு உண்மைகளின் புனைவாக ஆழமான குருதிபடிந்த சப்தங்களை எழுப்புகிறது. மதங்களைக் கடந்து மனிதநேயத்தை மையமாகக் கொண்டுள்ள இச்சிறுகதைகளை வாசிப்பதற்குச் சற்று இறுக்கமான நெஞ்சம் வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கசிந்துகொண்டிருந்த மதக்கலவரங்களின் கூட்டுவடிவம், 1998ஆம் ஆண்டு கோவையில் வெடித்தது. அதுவரை அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு, அச்சுறுத்தலான பூமியாக மாறிப்போனது. கோவை குண்டு வெடிப்பு என்பது தன்னிச்சையானது அல்ல. குண்டு வெடிப

EPW பக்கங்கள் - கட்டுரை
க. திருநாவுக்கரசு  

உலகப் புகழ்பெற்ற, இந்தியாவின் சிறந்த ஆராய்ச்சி இதழ் எகனாமிக் & பொலிட்டிகல் வீக்லி. 1949-லிருந்து 1965 வரை தி எகனாமிக் வீக்லி என்ற பெயரில் வெளிவந்தது. 1966இல் எகனாமிக் & பொலிட்டிகல் வீக்லி என்று பெயர் மாற்றம் பெற்றது. சமூகம், அரசியல், பொருளாதாரம் சார்ந்த துறைகளில் பல புதிய சிந்தனைகள், விவாதங்களைத் தொடர்ந்து உருவாக்கிவரும் பெருமைக்குரிய ஆராய்ச்சி இதழ் இது. இதன் தலையங்கங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு இனி காலச்சுவடில் வெளியிடப்படும்  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தலையங்கங்களில் சில அச்சுப் பதிப்பிலும் சில இணையத்திலும் வெளியிடப்படும். தமிழில்: க. திருநாவுக்கரசு பசுக்களைக் கணக்கெடுப்பது, மனிதர்களைக் கொல்வது ஆகவே, இதுதான் நமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ள‘புதிய இந்தி

EPW பக்கங்கள் - கட்டுரை
எஸ் சீனிவாசன்  

வேதிப்பொருள்களின் பொதுப் பெயர்களைக் குறிப்பிட்டு மருந்துச் சீட்டு எழுதித்தரும்படி மருத்துவர்களைக் கோருவது சரியாகத் திட்டமிடப்பட்டு செய்யப்படும் செயலல்ல எஸ் சீனிவாசன் எழுதுகிறார்: மருந்தெழுதித் தருகிறபோது மருந்துகளின் பெயர்கள் அவற்றின் பொதுப் பெயர்களால் (ஜெனிரிக் நேம்ஸ்) குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு பிரச்சனையை உருவாக்கக் கூடியது. இது நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவல்ல என்பதுடன் பொது சுகாதாரத் துறையில் நிலவும் உண்மையான நெருக்கடி, தரமான மருத்துவ வசதியின்மை, எல்லோராலும் வாங்கமுடியக் கூடிய விலையில் மருந்துகள் கிடைப்பது ஆகிய பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பக்கூடியது. 1,00,000 கோடிக்கும் அதிகமான இந்தியாவின் உள்நாட்டு மருந்துச் சந்தையில் கு

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

“ஒரு தாய் தனது குழந்தைகளுக்குச் செய்யும் வேலையை நாங்கள் செய்கிறோம். ஆனால் நாங்கள் தாயாகப் பார்க்கப்படுவதில்லை, மலமாகப் பார்க்கப்படுகிறோம்.” சுரேஷ் ரிச்பால் (மனித மலத்தை அள்ளிச் சுமக்கும் சுமார் 5 லட்சம் மக்களைக் கொண்ட பால்மீகி எனும் சாதியைச் சார்ந்தவர்),   தி நியூ யார்க் டைம்ஸ், செப்டம்பர் 19, 1998 “இடஒதுக்கீட்டுக்கான தேவை, பொருளாதார அடிப்படையிலானதா... சாதி அடிப்படையிலானதா? நிச்சயம் சாதி அடிப்படையிலானதுதான். சாதி எனும் பல்லாயிரம் ஆண்டுகாலச் சமூக இழிவால், மனிதர்களுக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வை நீக்கிச் சமப்படுத்துவதற்கான ஏற்பாடுதான் இடஒதுக்கீடு. அதற்கு ஒரு கால அளவு தேவை என்பதும், இடஒதுக்கீடு மட்டுமே சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான முழுமையான கருவியாக இருக

கட்டுரை
பொன். தனசேகரன்  

எழுத்தாளர்களுக்கும் இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் ச.சீ. கண்ணனின் வீட்டில் இருந்த கார்ல் மார்க்ஸ் நூலகம் ஓர் அறிவாலயம். பார்வைத் திறனற்ற மாணவர்களுக்கு அவரது வீடு, சரணாலயம். நூலகத்திலுள்ள புத்தகங்களையும் பத்திரிகைகளையும் படிக்க வருபவர்கள் ஒரு பக்கம்; எப்போது பார்த்தாலும் வந்துபோகும் பார்வையற்ற மாணவர்கள் மற்றொரு பக்கம். அவர்களுக்குப் பாடங்களைப் படித்துக் காட்டுபவர்களும் வருவார்கள். அவரது வீடு அனைவரும் தாராளமாக வந்துபோகும் இடம். கண்ணனின் சமூகப் பணிகளுக்குத் தோள்கொடுக்கும் வகையில் அவரது மனைவி மைதிலியும் அவரது மூத்த சகோதரி பத்மா ராமசாமியும் செய்த பணிகள் அளப்பரியவை. வீட்டுக்கு வருபவர்கள் அனைவரையும் அன்பினால் கட்டி வைத்திருந்தார் கண்ணன். பணியில் இருந்தபோதும் பணியிலிர

கட்டுரை
செ. சண்முகசுந்தரம்  

“சாதியப் பிரச்னைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை!’ ரங்கநாயகம்மா தெலுங்கில் எழுத அதை பி.ஆர். பாபுஜி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழுக்குப் பெயர்த்துள்ளார் கொற்றவை. இது, அம்பேத்கரின் எழுத்துகள் குறித்த விமர்சன நூலாக வந்திருப்பது மகிழ்ச்சி. ஆனால் விமர்சினம் என்ற போர்வையில் அம்பேத்கர்மீது சேற்றை வாரி இறைக்கும் முயற்சியிலும் இந்நூல் ஈடுபட்டிருக்கிறது. வெளிவந்ததிலிருந்தே கடும் சர்ச்சையை உருவாக்கி மார்க்ஸிய - அம்பேத்கரிய தோழர்களின் மத்தியில் கடும் பிளவுகளையும்கூட ஏற்படுத்திச் சென்றிருக்கிறது இந்நூல். மார்க்ஸையும் கம்யூனிசத்தையும் தூக்கிப்பிடிப்பதாக நினைத்துநூலாசிரியர் மேற்கொண்டிருக்கிற அம்பேத்கரிய ஆராய்ச்சியின்நோ

பதிவு
 

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறையும் காலச்சுவடும் இணைந்து  17 - 04 - 2017 அன்று ‘பாரதியியல்: புதிய முயற்சிகள்’ என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகப் பவளவிழா அரங்கில் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன.  பல்கலையின் தமிழ்மொழித் துறைத் தலைவர் அ. பாலு முன்னிலையில் இதழாளர் ஞாநி தலைமை வகித்தார். பேராசிரியர் ய. மணிகண்டன் வரவேற்புரை நிகழ்த்தினார்.  நிகழ்வில்  ஆ.இரா. வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன்!’, ’பாரதி: கவிஞனும் காப்புரிமையும்’ ஆகிய நூல்கள் குறித்துக் கருத்தரங்க ஆய்வுரைகளை இதழாளர் சமஸ், கவிஞர் இசை ஆகியோர் வாசித்தனர்.

கட்டுரை
லஃபீஸ் ஷஹீத்  

பீடிகையில்லாமல் நேரடியாகவே விடயத்திற்கு வருகிறேன். இஸ்லாமிய ஷரீஆவில் பெண்களுக்குக் கத்னா எனப்படும் கிளிடோரிஸ் துண்டிப்புக்கு அனுமதி இருக்கிறதா? அது இஸ்லாமிய ஷரீஆவில் வலியுறுத்தப்பட்டப் பெண்கள் பர்தா அணிவதுபோன்ற - ஒரு விடயம்தானா? இதற்குப் பதில் கூறுவதற்கு முன் நாம் இஸ்லாமிய ஷரீஆ என்றால் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களும் ஏன் முஸ்லிம்களில் பலரும்கூட புரிந்துகொண்டிருப்பதைப் போன்று இஸ்லாமிய ஷரீஆ என்பது மாற்றவே முடியாத, ஒற்றைப்படைத் தன்மை கொண்ட ஒழுக்க நெறிகளின், குற்றவியல் தண்டனைகளின் தொகுப்பு அல்ல. மாறாக, இஸ்லாமிய ஷரீஆ என்பது விரிவும் நெகிழ்வும் கொண்டது. கால மாற்றத்திற்கு ஏற்ப வளர்ந்துசெல்லும் தன்மை கொண்டது. இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு

உரை
பெருமாள்முருகன்  

பேரன்புக்குரிய கேரளத்துத் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். ஏறத்தாழ கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் கேரளத்துக்கும் மலையாள மொழிக்கும் நான் மிகவும் நெருக்கமானவாகியிருக்கிறேன். இன்னொரு வகையில் சொன்னால் தீர்க்க இயலாத கடன் காரனாகவும் என்னை ஆக்கியிருக்கிறீர்கள். தமிழ் உணர்வாளர்களிடையே ஒரு பேச்சு உண்டு. குபேரனின் கடனைத் தீர்க்கத் திருப்பதி வேங்கடாசலபதி காலமெல்லாம் முயன்று கொண்டிப்பதைப் போலத் தமிழர்களுக்கும் ஆயுட்காலக் கடன் இருக்கிறது போலும், அதனால்தான் அண்டை மாநிலக் கோயில்களான திருப்பதிக்கும் சபரிமலைக்கும் நடையாய் நடந்து கடனைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள், இப்படி ஒரு சாமி தமிழ்நாட்டுக்கு வாய்க்கவில்லையே என்று ஆதங்கப்படுவதுண்டு. நானும் ஒருவேளை சபரிமலைக்கு நடந்தால் எதிர்காலத்தில் என் கடன

கட்டுரை
கீதா சுகுமாரன்  

இவை வெற்றுக்கதைகள்தாம். மயங்கிவிழும்வரை நீ சொல்வாய்; சொல்லிக்கொண்டே இருப்பாய். பசந்த் கௌர் (‘மௌனத்தின் மறுபுறம்’)* பல சமயங்களில் அவை தொடர்ந்து சொல்லப்படு கின்றன, பல சமயங்களில் மிக அழுத்தமாக அவை மறைக்கப்படுகின்றன. வேறு சந்தர்ப்பங்களில் அடர்ந்த மௌனங்களினூடாக, கண்அசை வினூடாக, கைகளின் சிறு நடுக்கத்தினூடாக அவை சொல்லாமல் உணர்த்தப்படுகின்றன. போர்க் காலத்தின் கதையாடல்கள் ஈழம், ருவாண்டா, கம்போடியா என உலகின் எந்த மூலையிலிருந்து எழுந்தாலும் தம்மை முழுமையாக வெளிப்படுத்த இயலாது மீண்டும்மீண்டும் கண்ணீரில் கரைந்து கொண்டே இருக்கின்றன. வங்காளதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் அப்படி வெளிப்பட்டும் வெளிப்படாமலும் கனத்த மௌனங்களுக்கிடையே கசிந்துகொண்டிருக்கும் உண்மைகளில் ஒன்று பிரங்கோனாக்களின்

கவிதை
கீதா சுகுமாரன்  

எத்தனை ஒலிகளை விழுங்கியிருக்கிறேன் செவ்வி எடுப்பவர் குறிப்பு பருவமழையின் ஈர ஓலத்தின் தாளகதியைக் குறிப்பேட்டில் கேட்டபடி நீ எழுதுகிறாய், நல்ல பெண் தீய பெண் சிற்றழகி. வங்காளத்தில் அனைத்து வகையான பெண்களுக்கும் சொற்கள் உண்டு வன்புணர்வு செய்யப்பட்டவளைத் தவிர. அங்கு வேறு பெண்களும் இருந்தனரா? நீ அவர்களோடு ஒத்துப் போனாயா? எங்களுக்கிடையில் இருண்ட உலோக வாளி கைகள் பட்டுக்கொள்கின்றன.சகோதரரும் கணவரும் தந்தையுமற்ற அந்தப்புகைநீர் மண்டிய உலகினுள் வருமுன்பு நாங்கள் அமர்ந்திருந்த அந்தக் கலங்கிய நதியிலிருந்து நீர் இறைத்தோம்.அல்லாவிடம் மன்னிப்பு கேட்கிறேன்: அவளது தலைமயிரின் நடுவகிற்றுக் குங்குமத்தில்பற்றுகொள்வேன் என நான் அறிந்திருக்கவில்லை. அவர்கள் வரும்வரை எனதுடலின் பெறுமதியை நான் அறிந்திருக்கவில்ல

கவிதை
யசீதா கிருஷ்ணகுலசிங்கம  

தமிழ் கனேடிய இரண்டாம் தலைமுறையினரின் ஆங்கிலப் படைப்புகள் உடற்கூறியல் தமிழை எழுதாமல் தமிழை எழுதுவதைப் பற்றி நாம் பேசினோம்.  எமது நாக்குகளை நெரிக்கும் ஒரு மொழியினூடாக  வடிகட்டப்பட்ட நினைவுகள் நாங்கள் பற்களால் கடித்து உடைக்கும் சொற்கள் சிதறல்கள்.  எத்தனை ஒலிகளை நான் விழுங்கியிருக்கிறேன்? பேசாச்சொற்கள் உணவாகி எனக்கு ஊட்டமளித்திருக்கின்றன. அவள் மிக அன்பான ஒரு சூரியனைப் பற்றி எழுதினாள் எங்கள் துவாய்களை வெய்யிலில் வைத்துக்கொண்டு கரையில் காத்துக்கொண்டிருக்கும் அம்மாவை நான் நினைத்துக்கொண்டேன் நாங்கள் அவளிடம் ஓடிய அந்த நொடியில் அதன் கதகதப்பில் எம்மை ஒளிப்பாள் புரிந்துகொண்டோம்  கடவுள் நட்சத்திரங்களை மிளிர வைத்தது எங்கள் அம்மாவின் விழிகளின் ஒளியை எடுத்துத்தான் என்று நாங்கள் வலி

கவிதை
மணிவிழி கனகசபாபத  

முழுமை மண்ணிறக் கண்கள் என் பார்வையைக் கைப்பற்றுகின்றன  அடியற்று ஆழ்ந்த இக்கோளங்களின் உறைவிடமான முகத்தின்பால் ஈர்க்கப்பட்டு  கொஞ்சம் முன்சாய்கிறேன் ஒரு சிறிய, அகன்ற மூக்கு இளைப்பால் விரிகிறது, நிறைந்த உதடுகள் காற்றிற்காய்த் தவிக்கின்றன, நான் உன்னை அருகே இழுக்கிறேன்,  இந்தக் கண்களில் கணங்கள் கடந்துபோவதைப் பார்க்கிறேன் உன் அம்மாவின் அக்கறை, உன் அப்பாவின் கவலை, ஒரு காதல் பார்வை, ஒருகணத் தொடுகை, நினைவுகள் அங்கே எழுதி இருக்கின்றன உனது உடல் எப்பொழுதுமே இப்படியே நேர்த்தியாய் இருக்கும்போலும் ஒவ்வொரு தசையும் நாரும் பதற்றம் கொண்டிருக்கின்றது  மெருகான உனதுரு சுருண்டு காத்திருக்கிறது, தயாராய்,  எனக்கேயென! நான் நடுங்குகிறேன், ஆழமாய்த் தள்ளுகிறேன், தடையற்றுப் பாயும் குருதியைப்

கவிதை
கயல்விழி  

உனது அப்பாவின் கோபம் உனது வீடல்ல சூடான பாலும் குங்குமப்பூவும் மணத்த போதும்  யன்னல்கள் இழப்பினைச் சுமந்திருந்த போதும்  அவரது சோகம் தூதான போதும் அவரது வாய் உன்னிடமிருக்கிறது அது கதைகளின் கருச்சிதைவு, ஆனால் மறவாதே உனது தாய்மொழி, அது  உயிர்பிழைப்பதைப் பற்றி மட்டுமே பேசும் நான் சொல்வதைத் திரும்பச் சொல், எனது அப்பாவின் கோபம் எனது வீடல்ல. கயல்விழி http://instagram.com/kayal.vizhii  

கவிதை
குரு செல்வராஜா  

தேநீரில் இஞ்சித் துண்டுகள் இந்தவீட்டின் மணம்  அழுத்தும் குணப்படுத்தல் போன்றது தோல்வியைப் போன்றதல்ல. எனது முதலாவது அழுகை ஒலித்த தேசத்தில் நான் காலடி பதித்து  பலகாலமாகிவிட்டது. இரவுகளில் எனது தோலை எனக்குத்தந்த  அதே சூரியனின் நிழலை என்னால் உணரமுடிகிறது. சிலவேளைகளில்  அது என்னை  இப்படிச் சுட்டெரிக்காமல் இருந்திருக்கலாம் என்று  நான் விரும்பியதுண்டு- ஆனால் இரண்டு மொழிகளுக்கும் ஒரு நாவுக்குமிடையே- இரு குரல்களுக்கும் ஒரு இருதயத்துக்குமிடையே எனது தோல் மட்டும்தான் எனது ஒரே உண்மை- அது என்னை இறுகப்பற்றியிருப்பது போலவே நானும் அதனை இறுகப்பற்றியிருப்பேன். குரு செல்வராஜா http://instagram.com/mrngsqrl தமிழில் – அரசி விக்னேஸ்வரன்

கவிதை
இந்திரன் அமிர்தநாயகம  

எங்கே இருக்கிறது உனது ஊர்? எரிந்துகொண்டிருக்கிறது எங்கே இருக்கிறது உனது ஊர்? கண்ணிவெடிகளின் வயலில் எங்கே இருக்கிறது உனது ஊர்? துப்பாக்கிச் சூட்டில் வெடித்துச் சிதறி காட்டு மரங்களின் கீழ் காயப்பட்டுக் கிடக்கிறது. எங்கே இருக்கிறது உனது ஊர்? முதுகில் சுடப்பட்டு சதுப்பு நிலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது எங்கே இருக்கிறது உனது ஊர்? வெண்கொடிகள் அசைக்கும் உடல் சோதனையிடப்பட்டு பதிவு செய்யப்பட்டு முகாம்களில் கண்காணிக்கப்படுகிறது. எங்கே இருக்கிறது உனது ஊர்? சோதனையிடும் ராணுவத்தையும் இன்னும் பிற ஊர்களையும் வெடித்துச் சிதறடித்துக்கொண்டிருக்கிறது எங்கே இருக்கிறது உனது ஊர்? டொரண்டோ, பெர்லின், தமிழ்நாடு. மடகாஸ்கரைப் பற்றி இன்னும் கலந்தாலோசிக்கப்படவில்லை போய் வாருங்கள் சிறப்புத் தூதுவரே. எங்கே இருக்கிறது உனது ஊ

கதை
அ. முத்துலிங்கம்,ஓவியங்கள் - றஷ்மி  

ஓவியங்கள் - றஷ்மி உன்னைக் கண்டதும் கடைக்காரன் மேல் உதட்டை மடித்து நாய்போல பற்களைக் காட்டினான். உறுமுவதுபோல என்ன  வேண்டுமென்று கேட்டான். ‘ஐந்து சதத்துக்கு உப்பு’ என்று நீ சொன்னாய். உன் கையில் காசு இல்லை என்பது அவனுக்குத் தெரியும்.  ‘உன் அம்மாவிடம்  12 ரூபாய் 30 சதம் அவ தர வேண்டும் என்று சொல்’ என்றான். நீ மேலும் கொஞ்ச நேரம் நின்றாய். அவன் உன்னை ‘ஓடு ஓடு’ என்று விரட்டினான். நீ திரும்பியபோது உன் அம்மா உடுத்துத் தயாராக இருந்தார். கல்யாண வீடுகளுக்குப் போகும்போது அணியும் சிவப்பு மஞ்சள் சேலை. கீழே கரை கொஞ்சம் தேய்ந்துபோய்க் கிடந்தது. கண்களில் கறுப்புக்கோடு வரைந்திருந்தார். ஒரு கைப்பைகூட காணப்பட்டது. தலை வாரி இழுத்து முடிந்து சினிமாக்களில் வருவது

 

மறைந்த முன்னோடி எழுத்தாளர் அசோகமித்திரன் பெயரில் சிறுகதைக்கான வருடாந்திர விருது வழங்க ‘கோலம் அறக்கட்டளை’ முடிவு செய்துள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதையை எழுதிய எழுத்தாளருக்கு பாராட்டிதழுடன் ரூ.10 ஆயிரம் சன்மானமாக வழங்கப்படும். ஆண்டு தோறும் அசோகமித்திரனின் பிறந்த நாளான செப்டம்பர் 22 அன்று விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். 2016-17க்கான விருதுக்கு ஜூலை 31 வரை வெளியான சிறுகதைகளை அனுப்பலாம். எதிலும் இதுவரை வெளிவராத கையெழுத்துப் பிரதிகளையும் அனுப்பலாம். எவரும் எவருடைய சிறுகதையையும் பரிந்துரைக்கலாம். எழுத்துப் பூர்வமாகவே பரிந்துரை அனுப்பப்பட வேண்டும். சிறுகதையின் பிரதியுடன் எழுத்தாளர் பற்றிய குறிப்பும் முகவரியும் அவசியம். அனுப்பவேண்டிய முகவரி: ‘கோலம் அறக்கட்டளை’,

கட்டுரை
ய. மணிகண்டன்  

பாரதி பங்கேற்ற மணலி நிகழ்ச்சியின் முழுமைப் பதிவு இந்தியாவின் முற்காலப் பெருமையும் தற்கால நிலைமையும் - பாரதி சொற்பொழிவு பாரதியின் வாழ்க்கைப் பயணம் மிகக் குறுகியது. அந்தக் குறுகிய வாழ்க்கைப் பயணத்திற்குள் அவர் சில ஊர்ப்பயணங்களை மேற்கொண்டிருந்திருக்கின்றார். பாரதி தமிழ்நாடு பற்றிப் பாடியிருந்தபோதிலும் அன்று தமிழ்நாடு ஒரு மாநிலமாக உதயமாகவில்லை. தென்னகம் சென்னை மாகாணமாக இருந்தது. தென்னகத்தில் சில கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் அவர் பயணம் செய்திருக்கிறார். வடபுலத்திலே காசி வாசம் அவர் வாழ்வில் முக்கிய கட்டமாகும். தன் வாழ்வின் பெரும் பகுதியைப் புதுவையில் அடைக்கல வாசம் புரிந்திருக்கிறார்.  புதுவையில் அடைந்துகிடந்தபோது ஒரு சமயம் யாருக்கும் தெரியாமல் நாகை (நாகப்பட்டினம் அன்று) என்னும் மேல ந

கதை
அனோஜன் பாலகிருஷ்ணன்,ஓவியங்கள் - ஞானப்பிரகாசம்  

ஓவியங்கள் – ஞானப்பிரகாசம் ரத்னசிங்க உணவுப் பொதிகளை எண்ணினான். எல்லாம் சரியாக இருந்தன. பேப்பரால் சுற்றப்பட்டுக் கட்டப்பட்ட உணவுப் பொதிகளை அகண்ட வாளிக்குள் வைத்து டிரக்டரில் ஏற்றினான். முகாமிலுள்ளவர்கள் இனிமேல்தான் சாப்பிடுவார்கள். வீதியில் காவல் பணியில் நிற்கும் சிப்பாய்களுக்கு உணவுப் பொதியை ஒவ்வொன்றாகக் கொடுத்துவிட்டு வர வேண்டும். வெயில் சுள்ளிட்டது. துவக்கை முதுகுப்பக்கம் தொங்கவிட்டவாறு டிரக்டரில் பாய்ந்து ஏறினான். தலையில் கொழுவியிருந்த இரும்புத் தொப்பி இடறியது. சரிப்படுத்திக்கொண்டு டிரக்டர் பெட்டிக் கரையில் அமர்ந்தான். இன்னும் நான்கு சிப்பாய்களும் அவனுடன் ஏறினார்கள். வரும் வழியில் தென்னம் குற்றிகளை ஏற்ற வேண்டும். குலுங்கிக்கொண்டு டிரக்டர் போனது. வீதிக்கரையில் கல்வீடுகள் கடந்துகொண்

கட்டுரை
பழ. அதியமான்  

பாம்பு கடிப்பதும் பாம்பைப் பிடிப்பதும் பாம்பை உண்பதும், பாம்பை வளர்ப்பதும் பாம்புவித்தை காட்டுவதும் எனப் பாம்புகளோடு மனிதனுக்கு உள்ள தொடர்பு விரிவானது. உண்பதைத் தவிர மேற்குறிப்பிட்ட எல்லா வகைகளிலும் பாம்போடு நெருங்கிய உறவு தமிழர்க்கு இருக்கிறது. மலைவாழ் தமிழர் சிலர் உண்ணவும் கூடும், எவர் கண்டார்? பாம்புடன் மனிதனுக்குள்ள தொடர்புகளைப் பற்றிய பண்பாட்டுத் தளத்தில், வாசிப்பு அனுபவத்திலிருந்து உருப்பெறுகிறது. சிங்கம், புலி, கரடி போன்ற உருவில் பெரிய காட்டு உயிரிகளைக் காட்டிலும் உலகினர் அதிகம் அஞ்சும் விலங்கு உருச்சிறிய பாம்பாகவே இருக்கிறது. அஞ்சுவதை வணங்கிச் சமாளிப்பது மனித சாமர்த்தியம். கிராம வழிபாட்டில் கற்சிலைகளில் அதனால்தான் பாம்பு படம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இரு அரவங்கள் பிணைந்தும் பிரி

உள்ளடக்கம்