தலையங்கம்
 

சில ஆண்டுகளாகவே ஒட்டுமொத்தக் கண்டனக் கணைகளால் படுகாயமுற்றிருந்தது தமிழக அரசு. செயல்படும் எண்ணமில்லாத அமைச்சர்கள் இருந்தது ஒரு கட்டம்; அவர்கள் செயல்படவும் ஆலோசனை கூறுவதற்குமான உரிமைகள் அற்றிருந்தது இன்னொரு கட்டம். திடீரென்று தமிழ்நாட்டின் அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் ஊடகங்களும் பரவசமெய்திய நிலையில், தமிழகக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனையும் கல்வித்துறையின் செயலாளர் உதயசந்திரனையும் பாராட்டிய வண்ணம் இருக்கிறார்கள். இந்த ஆண்டின் +2 பரீட்சை முடிவுகள் வெளிவரத் தயாராகவிருந்த சமயத்தில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஓர் அவிப்பை வெளியிட்டுப் புதிய பாதையைத் திறந்தார். தேர்வு முடிவுகளில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படாது என்றார். இது மிகவும் சாதாரணமான முடிவு; ஆனால், தமிழக அரசியலின் பின்ன

தலையங்கம்
 

சென்னை மெரினாவில் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த முயன்றதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நால்வர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுக் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதோடு, திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமென அரசை வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரம் அப்பாவி ஈழத் தமிழர்கள், போராளிகளை நினைவுகூரும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வு தமிழகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும

EPW பக்கங்கள்-கட்டுரை
தமிழில்:திருநாவுக்கரசு  

  உத்திரபிரதேசத்தில் சகாரன்பூர் மாவட்டத்தில் தாக்கூர், தலித்களுக்கு இடையிலான மோதல்களும், ஆட்சி மாறியதையடுத்து சமூக உறவுகளில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகளும் அங்கு கலாச்சார வலியுறுத்தல்களின் மோதல் உருவாகியிருப்பதைக் காட்டுகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதிக் கட்சியும் உபியின் சமூக அரசியல் வெளிகளில் ஜனநாயகமயமாக்கத்தைப் படிப்படியாகக் கொண்டுவந்தன. தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தபோதிலும் அந்த இரண்டு சமூகங்களின் குறைந்தபட்ச சமூக கண்ணியத்தை உறுதிப்படுத்த அந்த ஆட்சிகள் முயன்றன. பாரதீய ஜனதா கட்சியின் சமீபத்திய வெற்றியும் யோகி ஆதித்யநாத் முதல்வராக நியமிக்கப்பட்டதும் அந்த மாநிலத்தில் முன்னேறிய சாதியி

பதிவு
எஸ். யோகரத்தினம்  

  ராறொன்ரோவில் 2017, யூன் 18ம் தேதி அன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினேழாவது இயல் விருது விழா ஸ்காபரோ விருந்து மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது கவிஞர் சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தனது இலக்கியப் பணிகளில் சமரசம் செய்துகொள்ளாமல் கவிதை, புனைவு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என பலதுறைகளிலும் சலிக்காமல் தொடர்ந்து உழைத்துவருவதுதான் இவருடைய சாதனையாகும். இயல் விருதைத் தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன. சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட காலச்சுவடு அறக்கட்டளை ’கணிமை விருது’ த. சீனிவாசனுக்கு அளிக்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தகவல் தொழில் நுட்பத்தில் தமிழில் உருவாக்

கடிதங்கள்
 

பழ. அதியமானின் ‘பாம்புக்கட்டுரை’ பாம்பைப்போல வளைந்து நெளிந்து பல்வேறு கோவைத்தகவல்களைச் சட்டையாய்க் கழற்றி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறது. முஸ்லிம்களின் புனித வேதமான குர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைத் தூதர் மூசா (மோஸஸ்) கையில் இருந்த ஊன்றுகோல் அவ்வப்போது கொடுங்கோல் அரசனை மிரட்ட, பாம்பாக மாறும் என்ற செய்தியும் நினைவுக்குள் ஊர்ந்துபோனது. முஸ்லிம்கள் தங்களது அதிகப்படியான பொருள் வளத்தை முறையாகக் கணக்கிட்டு மொத்த இருப்பில் நாற்பதில் ஒன்றைத் தர்மமாக ஏழை எளியவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். இல்லையெனில் அந்தச் செல்வங்கள் மலைப்பாம்பாக மாறி அவனை அவனது மரணத்திற்குப் பின் வேதனைசெய்யும் என்ற முகம்மது நபியின் முன்னெச்சரிக்கையும் கூடவே வந்துபோனதும் மறக்க முடியாதது. தவிர, இன்றைய தமிழகச் சூழலில் இஸ

நிகழ்
அ. ராமசாமி  

2017ஜூன் 19 அன்று பெங்களூருவில் நான் பார்த்த கன்னட நாடகம் ‘வர்த்தமானதெ சரிதே.’ அந்நாடகத்திற்கு நான் அழைக்கப்பெற்ற சிறப்புப் பார்வையாளன்; நான் மட்டுமல்ல, கர்நாடகாவிலிருந்து இருவர், தெலங்கானாவிலிருந்து டெல்லியிலிருந்து தலா ஒருவர் என இன்னும் ஐந்து சிறப்பு அழைப்பாளர்கள் இருந்தனர்; பொதுப்பார்வையாளர்களும் இருந்தனர். அனைவரையும் இழுத்துவைத்துப் பார்த்து ரசிக்கச் செய்த நாடக நிகழ்வு அது. இந்தியில் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற (2011) பேரா. காசிநாத்சிங்கின் ‘கவுன் தக்வா நகரிய லூட ஹொ (Kaun thagwa Nagariya Luta ho)’ சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து நாடகமாகத் தழுவி, வடிவமைத்து இயக்கியவர் தமிழின் முக்கிய நாடக ஆளுமையான ப்ரசன்னா ராமஸ்வாமி. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சியும் பெ

EPW பக்கங்கள்-கட்டுரை
 

சீனா உலகின் இரண்டாம் பெரிய பொருளா தாரம் என்ற நிலையை அடைந்த  பிறகு, குறுகிய காலத்தில் உச்ச இடத்தை அடைய அது தீவிரமாகச் செயற்படுவதாகத் தெரிகிறது. புவியரசியலிலும் பொருளாதாரத்திலும் மேலான இடத்தை அடைவதற்கான பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக இதைச் சீனா செய்கிறது. இருபத்தெட்டு அரசுகளின்/அரசாங்கங்களின் தலைவர்கள், 100 நாடுகளின் பிரதிநிதிகள், பல சர்வதேச அமைப்புகள் மே 14-15 தேதிகளில் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ திட்டத்தின் சர்வதேச ஒத்துழைப்பிற்கான கூட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் ‘பட்டுச்சாலைப் பொருளாதார மண்டல’த்தையும் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ அல்லது ‘மண்டலம் மற்றும் பாதை முயற்சி (பிஆர்ஐ)’ என்று அழைக்கப்படும் 21ஆம் நூற்றாண்டின் கடல்சார் பட்டுச் சாலைத் திட்

 

கிரா 95 அன்புடையீர்! வணக்கம். கி.ரா. என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் உலகம் இதுவரை கண்டிராத ஓர் ஆபூர்வம். இந்த நதிமூலம் 1923இல் உற்பத்தியாகி, தீராநதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது. 2017, செப்டம்பர் 16 இல், தன் 95ஆவது வயதில் காலெடுத்து வைக்கிறது. இன்றும் வாசிப்பும் எழுத்துமாய்த் தமிழ், தமிழ்ச்சமூகம் என வற்றாது இயங்கிக்கொண்டிருக்கிறது. எனவே, கி.ரா.வின் 95ஐக் கொண்டாடுவோம். கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக, அவருடைய படைப்புலகம் குறித்த ஓர் ஆய்வு நூலை உருவாக்க முயல்வோம். இது கி.ராவில் தோய்ந்த ஆளுமைகளின் கட்டுரைத் தொகுப்பாக அமையும். இந்த நோக்கில் ஒருங்கிணைப்புக் குழுவினர் முன்னெடுப்பாகச் சில தலைப்புகளைத் தொகுத்துள்ளோம். தலைப்புகள் அனைத்தும் அனைவரின் பார்வைக்கும் பங்களிப்புக்கும் உரியவை என்பதால் இத்துடன் இணைத

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

இந்தியப் பெருங்கடலில் இருந்த, இன்னும் இருக்கும், அணுவாயுதங்களுடன் கூடிய அமெரிக்க, (சோவியத்) ரஷ்ய, பிரிட்டானிய, பிரெஞ்சு கப்பற்படைத் தளங்களை, கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணுமின் திட்டங்களை எல்லாம் எனது கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து எதிர்த்து வருகிறேன். கடந்த 1998ஆம் ஆண்டிலிருந்தே கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிராகக் களமாடி வருகிறேன். ஆளும் வர்க்கத்துக்கு அதீத லாபம் சம்பாதித்துக் கொடுக்கும், ஆட்சிக் கட்டிலிலும் அதனருகிலும் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குக் கோடிகோடியாகத் தரகுப்பணம் வாங்கிக் கொடுக்கும் - அதிகாரிகளுக்குத் கிம்பளமும் கிடைத்தற்கரிய சொத்து சுகங்களும் பெற்றுக் கொடுக்கும் மாபெரும் ‘வளர்ச்சித் திட்டங்கள்’ அவர்கள் அனைவருக்குமே மிகமிக முக்கியமானவை. அவர்கள் மட்டுமே &l

திராவிட இயக்க நூற்றாண்டு
க. திருநாவுக்கரசு  

திராவிடர் இயக்கம் நூறாண்டு கண்டுவிட்டது; அதிகாரத்தை அடைந்தும் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. காலச்சுவடுவில் ‘திராவிட இயக்க நூற்றாண்டு’ எனும் சிறப்புப் பகுதி மட்டுமல்லாது முன்னரும் திராவிட இயக்கம் குறித்த கட்டுரைகள் வெளியாயின. திராவிட இயக்க வரலாற்றைத் தன் பார்வைகளில் விளக்கும் மூன்று கட்டுரைகள் இச்சிறப்புப் பகுதியில் உள்ளன. திராவிட இயக்கச் சாதனைகளைவிட தோல்விகளைப் பட்டியலிடுகிறது க. திருநாவுக்கரசுவின் கட்டுரை. திராவிட இயக்க முழு வரலாற்றையும் இன்றைய நாளில் நின்று பார்க்கும் உள்வெளிகள் நிரம்பிய கட்டுரை அது. ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை, திராவிட இயக்க வரலாற்றில் அண்ணாவைக் கண்டுகொள்ளாத அறிவுஜீவிகளின் போக்கைக் கவனப்படுத்துகிறது. ஆ. திருநீலகண்டனின் கட்டுரை சுயமரியாதை இயக்கம் கண்ட களப்போர

திராவிட இயக்க நூற்றாண்டு
ஆ. திருநீலகண்டன்  

  சென்னை மாகாணத்தில் வைதீக இறுக்கமும் சாதிய நிலவுடமை ஒடுக்குதல்களும் நிரம்பப் பெற்றிருந்த பகுதி (பழைய) தஞ்சை மாவட்டம் ஆகும். அந்நாளில் தடையின்றிப் பாய்ந்த காவிரி நீரால் வளம் கொழித்திருந்த நிலவுடமைச் செருக்கும் அது ஏற்படுத்தியிருந்த மிதமிஞ்சிய உபரியும் இதற்கான முக்கியப் பின்புலங்களுள் சில. இத் தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய திருவாரூர் மாவட்டம்) தஞ்சாவூர் - திருவாரூர் பெருவழியில் அமைந்துள்ள வளமிக்க ஊர்தான் நீடா மங்கலம். காவிரியின் கிளை ஆறான வெண்ணாறு இவ்வூரைத் தழுவிச் செல்கிறது. தஞ்சை, திருவாரூர், கும்பகோணம் என்ற முக்கோணங்களிடையே மன்னார்குடி தாலுகாவில் இவ்வூர் அமைந்துள்ளது. வேதப் பார்ப்பனர்களின் முற்றுரிமை உடைய பகுதி என்பதை உணர்த்தும் பெயர்ச்சொல் ‘மங்கலம்’ என்பது. நீடா மங்கலமும்

திராவிட இயக்க நூற்றாண்டு
ஸ்டாலின் ராஜாங்கம்  

இது திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த ஐம்பதாவது ஆண்டு; அவற்றின் மூல அமைப்பாகக் கூறப்படும் நீதிக்கட்சியின் பிராமணரல்லாதார் அறிக்கை வெளியிடப்பட்டு (1917) அமைப்பின் அதிகாரப்பூர்வ செயல்பாடுகள் ஆரம்பித்ததின் நூறாவது ஆண்டும்கூட. மேலும் இது திராவிட அடையாள அரசியலுக்கு வித்திட்ட ‘திராவிடமொழிக் குடும்பம்’ என்ற கருத்தாக்கம் எல்லீஸால் வெளியிடப்பட்ட இருநூறாவது (1816) நிறைவாண்டு; திமுக ஆட்சிக்கு வருவதற்கு உடனடிக் காரணமாக அமைந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து (1965 - 2015) ஐம்பதாண்டுகளும் நிறைவடைந்திருக்கின்றன. இத்தகைய திருப்ப ஆண்டுகள் அடிப்படையில் திராவிட அரசியல்பற்றிப் பல்வேறு பார்வைகளில் விமர்சனபூர்வமான ஆய்வுகளும் விவாதங்களும் நடந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறேதும் நடந்துவிடவில்லை.

கட்டுரை
ஆ. சிவசுப்பிரமணியன்  

பண்டைத் தமிழர்கள் தம் வாழ்க்கைத் தேவைக்காகக் காட்டுவிலங்குகள், பறவைகள் சிலவற்றை வீட்டில் வளர்க்கத் தொடங்கினர். இவற்றுள் பசு, காளை, எருமை ஆகிய மாட்டினங்களும் அடங்கும். வேட்டைச் சமூகம் என்று கூறத்தக்க குறிஞ்சி நிலத்திலேயே ஆநிரை வளர்ப்புத் தொடங்கி விட்டது. ‘ஆமா’ என்று காட்டுப் பசுவை அழைத்த பண்டைத் தமிழர்கள், அதைப் பழக்கி வீட்டில் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். வேட்டைச் சமூகத்தை அடுத்து உருவான மேய்ச்சல் நிலச் சமூகமே முல்லைத்திணை என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. மேய்ச்சல் நில வாழ்க்கையானது, கால்நடைகளுக்குப் புல்தேடி இடம்பெயரும் நாடோடி வாழ்க்கை, உழு தொழிலுடன் இணைந்த கால்நடை வளர்ப்பு என இரு வகைப்படும். முல்லைத்திணை வாழ்க்கையானது வேளாண்மையுடன் இணைந்த கால்நடை வளர்ப்பைக் கொண்ட

கட்டுரை
எச். பீர்முகம்மது  

  பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மாடுகளும் முன்னுக்கு வந்துவிடுகின்றன. மாடுகள் புனிதமானவை, தெய்வத்திற்கு இணையானவை என்ற தொன்மம் சார்ந்த நம்பிக்கைகளை அது புத்துயிர்ப்பு செய்கிறது. அதற்காக மாடுகள் விற்பனை தொடங்கி மாட்டிறைச்சி உண்பதைத் தடுப்பது வரையிலான நிலைக்கு அது சென்று விடுகிறது. இதன்மூலம் இந்தியாவின் பன்முகப்பட்ட சமூக அமைப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதன் முடிவானது சகிப்பின்மைக்கு இட்டுச் செல்வதுடன், இந்தியாவின் மதச்சார்பின்மைக் கோட்பாட்டையும் கேள்விக்குட்படுத்துகிறது. உண்மையில் மேற்கண்ட நிலையை அடைவதற்கான அரசியலாகவும் அது இருக்கிறது. இதற்கான தொடக்கம் 19ஆம் நூற்றாண்டாகும். இந்துசமயச் சீர்திருத்த, புத்துயிர்ப்பு இயக்கங்கள் தோன்றிய அந்தக் காலத்தில் ப

கட்டுரை
செ. சண்முகசுந்தரம்  

  ‘அரசன் தவறிழைக்கமாட்டான்’ -மத்தியகால முதுமொழி நாகசேனர் என்னும் பௌத்தத்துறவிக்கும் இந்தோ கிரேக்க அரசன் மிலிந்தருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் ஒன்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆன்மாவின் நிலை குறித்த உரையாடல் அது. ஆன்மாவின் நிலையை மிலிந்தருக்கு விளங்கவைப்பதற்காக நாகசேனர் தீவிரமான உரையாடலை நடத்திவந்தார். அப்போது நாகசேனரின் உடலைக் காட்டி மிலிந்தர் கேட்டார்: “நாகசேனர் என்பவர் அவரது நகமா, பல்லா, தோலா, சதையா அல்லது உடலா அல்லது புலன் உணர்வுகளா அல்லது புலன் அறிவா, மனநிலைகளா, பிரக்ஞையா?”. இக்கேள்விகளுக்கெல்லாம் நாகசேனர் எதிர்மறையாகவே பதில் தந்தார். மிலிந்தருக்குக் கோபம் வந்தது. “இதன் பொருள் நாகசேனர் என்பவர் கிடையாது. அது வெறும் பெயர்தான். நீ பொய் சொல்கிறாய். நீ ப

கவிதைகள்
சுகிர்தராணி  

  மீச்சிறு பெருவாழ்வு மழைக்காலத்தில் நிரம்பித் தளும்பும் பரந்த ஏரியைப்போல எனக்குப் பிரியமானவள் நீ கனிந்து விரிந்த மலரின் கனத்த வாசனையென என்னுடையவள் நீ என்னும் சொற்களை நினைவின் அடுக்குகள் சொல்லச்சொல்ல கை எழுதுகிறது நமக்கிடையே தொலைவுகள் உண்டெனினும் அவற்றைச் சிறு வளையங்களாக்கி உள்ளுக்குள் நான் விழுங்கிவிடுவதை அறிவாயா காற்று வீசுகையில் என் ஒற்றைமுடி கலைந்தாலும் நீ எதற்காகவோ வாய் திறந்தாயென நினைத்துக் கொள்கிறேன் கானகத்தில் நீ நுழைந்தாயா உன்னிடத்தில் அது வந்து சேர்ந்ததா சுழலும் அன்பின் பூமி அருகருகே சேர்க்கவில்லை என்னைப் போலவே நீயும் அங்கேயேதான் நிற்கிறாய் ஆயினும் உன் கால்களுக்குக் கீழேதான் என் வேர்கள் கிளைத்திருக்கின்றன உன் தலைமீதுதான் என் பூக்களின் இதழ்கள் உதிர்கின்றன உனதிரு கண்களில் சுரக

கதை
குமாரநந்தன்  

சாயந்திரம் ஐந்து மணிக்குள் முப்பது கிலோ ரொட்டி வீசியிருந்தான். அதில்லாமல் இருபதுகிலோ மாவில் தோசை ஐட்டங்கள். ஒரு நிமிடம்கூட நிற்க நேரம் இல்லை. வானத்தில் சின்னத் துண்டு மேகம்கூட இல்லை. வெய்யில் உக்கிரமாய் இருந்தது. உடல் வியர்த்து ஊற்றிக்கொண்டே இருக்கிறது. இந்த ஊரில் இன்று திருவிழா. ஜம்புக்கு வேலை செய்யும் மனநிலையே இல்லை. தொடர்ந்து நாலுநாள் வேலைசெய்துவிட்டான்; நாலு நாளும் டவுன் கடைகள். இதேபோல பரபரப்புதான். இன்று ஏற்காடு போகலாம் என்றிருந்தான். காலையில் இந்த முதலாளி ஸ்டாண்டுக்கு வந்து நின்றான். முகூர்த்த நாள் என்பதால் மாஸ்டர்கள் எல்லாம் கல்யாண வேலைக்குப் போய்விட்டார்கள். ஒருத்தரும் இல்லை. இவன் அதை யோசிக்கவில்லை. தெரிந்திருந்தால் அங்கே படுத்திருக்க மாட்டான். லோகு அவனைத் தட்டி எழுப்பினார். &ldq

அஞ்சலி: அப்துல் ரஹ்மான் (1937-2017)
ஹெச்,ஜி, ரசூல்  

  வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே... வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வாய்..? கவிக்கோ அப்துல் ரஹ்மான் தோட்டத்தில் கவிதைகள் இப்படித்தான் பூக்கத் தொடங்கின. அரை நூற்றாண்டு ஆனபிறகும் இவை வாடிப்போகவில்லை. இன்னும் மணம் வீசும் இக்கவிதைகள் முதன்முதலாக ‘பால்வீதி’ தொகுப்பாக 1970களில் வெளிவந்தது. நவீன கவிதை மரபு அகம்சார்ந்த, மனம்சார் குரலாக ‘எழுத்து’ இயக்கமாகவும் புறம்சார்ந்த உரத்தகுரல் ‘வானம்பாடி’ இயக்கமாகவும் இரு வழிப்பாதைகளில் பயணித்தது. மூன்றாவது பாதையாக மார்க்ஸியப் பின்புலம் சார்ந்த கவிதை இயக்கமும் ஊடாடியது. பால்வீதியில் ஒரு பறவையின் தடம் நவீனத்துவக் கவிதை மரபைத் தொடக்க காலத்தில் முக்கியத்துவப்படுத்தி எழுதிய க

அஞ்சலி: நா. காமராசன் (1942 - 2017)
பா. செயப்பிரகாசம்  

மதுரைத் தியாகராசர் கல்லூரி விடுதியில் 1965 சனவரி 25 இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி, உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரதிநிதிகளின்ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மதுரைநகரின் நடுவில் அமைந்த திடலுக்கு அவரவர் இடத்திலிருந்து பேரணியாய் வருவது, இந்தியை ஆட்சிமொழியாய் அறிவிக்கும் அரசியல் சட்டப் பிரிவை நீக்குக, ஆங்கிலமே ஆட்சிமொழியாக நீடிக்க வகை செய்க - என்னும் இரு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றுவது என முடிவு செய்தோம். இந்தியே ஆட்சிமொழி என்று அறிவிக்கும் சட்டப்பிரிவைத் தியாகராசர் கல்லூரி மாணவ நண்பர்களான நா. காமராசனும் கா. காளிமுத்துவும் எரிப்பதென முன்வந்தனர். நா. காமராசன், பா. செயப்பிரகாசம், கா. காளிமுத்து, கவிஞர் இன்குலாப் ஆகியோர் முன்பின்னான ஆண்டுகளில் ஒருசாலை மாணாக்கர்கள். சனவரி 25, காலை பத்து

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

பிரித்தானியத் தேர்தல் விசித்திரமான முடிவைத் தந்திருக்கிறது. வென்றவர், தோற்றவர் போல் தெரிகிறார். தோற்றவர், வென்றவர் போல் கொண்டாடப்படுகிறார். தேர்தலில் தெரேசா மேயின் பழைமைவாதக் கட்சி அதிக இடங்களைப் பெற்றிருந்தது. ஆனால் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களை இழந்த சிறுபான்மை அரசை மிகப் பழைமை பேணும் இன்னுமொரு கட்சியான வட அயர்லாந்து ஜனநாயக ஒன்றியக் கட்சி (Democratic Unionist Party) கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க முயற்சிகள் நடத்திக்கொண்டிருக்கிறது. ஜெரமி கொர்பினின் தொழிலாளர் கட்சிக்குக் கூடுதலாக 30 இடங்கள் கிடைத்துள்ளன. ஆனால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஆறாவது தொங்கு நாடாளுமன்றம். இந்த இடைத் தேர்தல் தேவை இல்லாத ஒன்று. தெரேசா மே 2020 வரை ஆட்சியைத் தொடர்ந்

அறியப்படாத பாரதி-11
ய. மணிகண்டன்  

பாரதியால் சமகாலத்திலும், அம்பேத் கரால் பிற்காலத்திலும் சிறப்பித்துப் பேசப்பட்டவர் பேராசிரியர் லட்சுமி நரசு. லட்சுமி நரசுவைப் பற்றிய எண்ணம் எழுகையில் ஆராய்ச்சியாளர்கள் சிலருக்குப் பாரதியின் பதிவும், சிலருக்கு அம்பேத்கரின் பதிவும் சட்டென ஞாபகத்திற்கு வரும். அலாய்சியஸ் உள்ளிட்ட ஆய்வாளர்கள் லட்சுமி நரசுவைப் பற்றிப் பேச நேர்ந்த தருணங்களில் அம்பேத்கரின் பௌத்தச் சிந்தனைகளுக்கு முன்னோடியாக அவர் முகங்காட்டுவதைப் பதிவு செய் திருக்கின்றனர். லட்சுமி நரசுவின் பௌத்தம் குறித்த ஆங்கில நூலை அம்பேத்கர் முன்னுரை வரைந்து அறிமுகம் செய்திருக்கின்றார் என்பது நரசுவின் ஒப்பற்ற பேரிடத்தைக் காட்டும். ‘The  Essence of Buddhism’ நூலின் மூன்றாம் பதிப்பு 1948இல் வெளிவந்தபோது அதற்கு அம்பேத்கர் எழுதிய அர

கட்டுரை
கருணாகரன்  

ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து அதிமுக வினுள் ஏற்பட்ட அதிகாரப் போட்டிகள் தமிழக சட்டசபையையும் தமிழ்நாட்டையும் பதற்றத்துக்கும் குழப்பங்களுக்கும் எப்படி உள்ளாக்கினவோ அதே மாதிரியான ஒரு நிலை, இலங்கையில் வடக்கு மாகாணசபை அமைச்சர்களின் ஊழல், அதிகார துஷ்பிரயோகங்களால் ஏற்பட்டுள்ளது. “வடமாகாண  விவசாயம், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ. ஐங்கரநேசன் கல்வி, பண்பாடு, இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சர் த. குருகுலராஜா ஆகிய இருவரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான விசாரணைக் கமிசனின் பரிந்துரைகளின்படி பதவி விலக வேண்டும்,” என முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் 14.06.2017 அன்று சபையில் அறிவித்தார். கூடவே, “சுகாதாரத்துறை அமைச்சர் ப. சத்தியலிங்கம், போக்குவரத்துத்துறை அ

உள்ளடக்கம்