தலையங்கம்
 

  இந்திய அரசியலின் மையத்தில் மொழிகளின் பன்மைத்துவம் ஏற்கப்பட முடியாததாக இருப்பது புதிய செய்தி அல்ல. பிராந்திய, திசைகள் அடிப்படையில் இங்கு மௌனமான போர் எப்போதும் நிகழ்ந்துவருவதை மறைக்கவும் முடியாது. இப்போது செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தனிச் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவந்து அதைத் திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்துடன் ஒரு துறையாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகச் செய்தி வந்திருக்கின்றது. இது தமிழ் அறிஞர் மத்தியில் கொதிநிலையை உருவாக்கியுள்ளது. உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்றானாலும், தமிழின் செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு அரசியல் அழுத்தத்தின் காரணம் ஒப்புக்கொண்டு அதற்கென ஆய்வு நிறுவனத்தை உருவாக்கித் தந்தாலும் அது முழுமனதான ஒப்புதல் அன்று;  அதை ஏற்றுக்கொண்ட மா

தலையங்கம்
 

  இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு ஆளும் பாஜக சார்பில் முப்பாவரப்பு வெங்கய்யா நாயுடுவும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபால்கிருஷ்ண காந்தியும் முன்னிருத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த முன்னிருத்தல் குறிப்பிட்டுச் சொல்லத்தகுந்த முக்கியத்துவம் கொண்டது. இவ்விரு வேட்பாளர்களில் யார் வெற்றி பெறுவார் என்பது நாடறிந்த ரகசியம். எனினும், நமது ஜனநாயக அமைப்பின் மாண்பை இந்த முன்னிருத்தல் குறியீடாகவேனும் சுட்டக்கூடும். குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவரும் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களல்லர், அவற்றைக் கடந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற மரபு ஓரளவுக்காவது பின்பற்றப்பட்டு வந்தது. இந்த மரபையும் பாஜக அரசு தொடர்ந்து நொறுக்கி வருகிறது. வெங்கய்யா நாயுடுவைக் குடியரசுத் துணைத் தலைவராக முன்மொழி

உரை
பெருமாள்முருகன்  

  கருத்துரிமை தொடர்பான விவாதத்தை  இன்று பல கோணங்களில் அணுக வேண்டியுள்ளது. தமிழகத்தை அல்லது இந்தியாவைப் பொறுத்தவரையில் கருத்துரிமை எதிர்ப்புக்கும் சாதியப் பார்வைக்கும் உள்ள பிணைப்பு என்பது முக்கியமான கோணம். அந்நோக்கில்  பார்க்கும் சிறுமுயற்சி இது. சாதியச் சமூகத்தில் தான் x பிறர் என்னும் கட்டமைப்பு மிகப் பலமாக ஏற்கெனவே நிலைப்படுத்தப்பட்டுள்ளது. தான் என்பது தன்னையும் தன் சாதியினரையும் குறிக்கும். பிறர் என்பது மற்ற சாதியினரைக் குறிக்கும்.  தான் என்பது உயர்வு, பிறர் எப்போதும் தனக்குத் தாழ்வு என்னும் மனப்போக்கு இங்கு இயல்பானது. இந்த மனப்போக்கே தனக்கு மேலே உயர்வு என்று இன்னொரு பிரிவை ஒத்துக்கொள்ளவும் காரணமாகிறது. அன்றாட வழக்கில் இந்தப் பிரிப்பைச் சாதாரணமாக எதிர்கொள்ள நேர்கிறது

கடிதங்கள்
 

ஜூலை 2017, காலச்சுவடு தாங்கிவந்துள்ள ‘சவால்களை விஞ்சும் கல்வித்துறை’ தலையங்கம் காலங்கருதியிடத்தார் செய்த மிகச் செம்மையான கல்விப் பங்களிப்பு. சமீப காலங்களில் அரிதினும் அரிதாய் நடந்து முடிந்துள்ள ஆசிரியர் பணியிட மாற்றங்கள், புதிய ஆசிரியர் பணி நியமனங்கள் உள்ளிட்ட தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துப் பள்ளிக் கல்வித்துறைச் செயல்பாடுகளும் அரசியல் மாச்சர்யங்களை மறந்து மனமுவந்து பாராட்டப்பட வேண்டியவை. ‘மிகுந்த நேரிய பார்வையுடன் தற்போதிய பள்ளிக்கல்விச் செயலர் சுதந்திரமாக எடுக்கும் எந்த முடிவிலும் நான் குறுக்கிட விரும்பவில்லை,’ என்று தற்போதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அடிக்கடி கூறிவருவதாக அறியப்படும் செய்தி உண்மையானால் இன்னும் பல சவால்களைத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை விஞ

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது  

  நான் தைலாம்பாள் (வாழ்க்கை வரலாறு) கமலா ராமசாமி வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. ரோடு, நாகர்கோவில் 629 001 பக்கம்: 72 ரூ. 95 இதன் தலைப்பை மறந்துவிட்டுப் படிக்கிற ஒவ்வொரு வருக்கும் கமலா ராமசாமிதான் - அதாவது சு.ராவின் மனைவிதான் தன் வாழ்க்கையை எழுதியிருக்கிறார் எனும் எண்ணம் தோன்றும்! ஆனால், எழுதப்பட்டிருப்பது கமலாம்மாளின் தாய் வரலாறு. இந்நூல் தாயும் மகளும் ஒத்த வயதினராக இருந்து நிகழ்த்தியிருக்கிற பெரும்பணி. இப்படி யாரேனும் தன் தாயின் வரலாற்றை எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தைலாம்பாள் எந்தவிதமான அருவத்தில் வந்துநின்று இந்த வரலாற்றைத் தன் மகளின் மூலம் எழுத வைத்திருப்பார்? நம்முடைய தலைமுறை விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சியின் சங்கமக் காலமாகும். எல்லாம் நம் கண் முன்னாலேய

மதிப்புரை
கணேஷ் வெங்கட்ராமன்  

பாகீரதியின் மதியம் (நாவல்) பா. வெங்கடேசன் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. ரோடு, நாகர்கோவில் 629 001 பக்கம்: 712   ரூ. 695 இதுவரை நான் வாசித்த நாவல்களில் மிக வித்தியாச மான நாவல் ‘பாகீரதியின் மதியம்.’ இதற்கு முன்னால் இதே மாதிரி மனநிலையைத் தோற்றுவித்த இன்னொரு நாவல் ஹரூகி முரகாமியின் 1Q84.. இரண்டு நாவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் இங்கு சொல்ல வரவில்லை; இரண்டும் அடிப்படையில் காதல் கதைகள் என்பதைத் தவிர. வாசித்து முடித்த பின்னர் எழுத்தாளர் பா. வெங்கடே சனைத் தொடர்புகொண்டு நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றியது. கேள்விகளை வரிசைப்படுத்தியும் வைத்திருந்தேன். “சொல்ல வேண்டியவற்றை நாவலிலேயே சொல்லியிருக்கிறேன்; அதைமீறி நாவலைப் பற்றி ஆசிரியனே பேச என்ன இருக்க

மதிப்புரை
வேல்கண்ணன்  

  குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் (கவிதைகள்) ந. பெரியசாமி வெளியீடு: தக்கை 15, திரு.வி.க. சாலை, அம்மாப்பேட்டை சேலம்- 3 பக்கம்: 40   ரூ. 30 குழந்தைகள் புத்தகங்களைப் பையிலடுக்கும் திங்கட் கிழமைகளில் அன்று கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் அரைகுறைப் பதில்களும் அதட்டல்களுமே அவர்களுக்குக் கிடைக்கின்றன.                       -பாலசுப்ரமணியன் பொன்ராஜ். ‘திங்கட்கிழமைகள்’ குறித்த கவிதையில் வரும் வரி இது. இதை என்னால் வாசித்துவிட்டு எளிதில் கடக்க முடியவில்லை. உண்மையில் திங்கட்கிழமைகளில் மட்டுமா நாம் அரைகுறைப் பதில்களைத் தருகிறோம்? பதில்களைவிடக் கேள்விகளைக் கடப்பது மிகுந்த

மதிப்புரை
கிருஷ்ணமூர்த்தி  

  கறுப்பு வெள்ளை கடவுள் (குறுநாவல்கள்) தேவிபாரதி வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. ரோடு, நாகர்கோவில் 629 001 பக்கம்: 192 ரூ. 175 சிறுகதைகளின் வழியே இலக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் தேவிபாரதி. ஒவ்வொரு படைப்பின் வழியேயும் வாழ்வின் அபத்தத்தைக் கேள்விக் குள்ளாக்கியவர். முதல் சிறுகதை தொட்டு சமீபத்தில் வெளியாகியிருக்கும் நாவலான நட்ராஜ் மகராஜ் வரை இந்தப் பொதுத் தன்மையை வாசகரால் எளிதில் உணர்ந்து கொள்ளமுடியும். இத்தன்மையிலிருந்து சற்றும் விலகாது நிற்கின்றன தேவிபாரதியின் குறுநாவல்கள். ‘கறுப்பு வெள்ளை கடவுள்’ஐத் தொகுப்பாகக் காணும் பட்சத்தில் நான்கு குறுநாவல்களுக்கும் தொடர்பிருப்பதை எளிதில் உணர்ந்து கொள்ளமுடிகிறது. நான்கும் மாறுபட்ட கதைக்களன்கள். பலதரப்பட்ட மனிதர்கள்,

மதிப்புரை
ப்ரேமா ரேவதி  

  சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை (சிறுகதைகள்) சிவசங்கர் எஸ்.ஜே வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. ரோடு, நாகர்கோவில் 629 001 பக்கம்: 96 ரூ.90 மிகுந்த துயரமான ஒரு காலைப்பொழுதில் இக்கதைகளை வாசித்தேன். தவிக்கும் மனதைத் தொலைத்துவிடும் ஆதுரமற்றதாய் இருந்தன இக்கதைகள். முதல் வாசிப்பில் உணர்வுகளின் வாயிலாக ஆசுவாசத்தைக் கோரும் வாசக மனம் என்பது வழமையாகக் கையளிக்கப்பட்டுவரும் ஓர் எதிர்பார்ப்புதான். மரணத்தைப் பற்றிய அழகான கவிதையை எழுதிவிட முடியாதது போலவே விடுதலையைப் பற்றியும் ஆதுரமிக்க கதையை எழுதிவிட முடியாதுதான்-அந்த விடுதலையே மனித குலத்தின் மகத்தான இன்பம் என்றபோதிலும் நாம் வாழும் சமூக அடுக்கில் விடுதலை பற்றிய கதைகள் வெறும் ஆதுரத்தை மட்டுமே கொடுப்பதாக இருக்க வாய்ப்பில்லை. சிவசங்கரின் கதைக

மதிப்புரை
இரா. சுப்பிரமணி  

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை 1869-1943 (தலித் இதழ்கள்) ஜெ. பாலசுப்பிரமணியன் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. ரோடு, நாகர்கோவில் 629 001 பக்கம்: 200 ரூ. 195 தமிழ் இதழியல் வரலாறு இன்னமும் இருநூறு ஆண்டுகளைக்கூட எட்டவில்லை. ஆனால், இந்த இருநூறு ஆண்டுகாலத்திற்குமான முழுமையான வரலாறு நம்மிடம் உள்ளதா என்றால், இல்லை. மதுரை காமராசர் பல்கலைக்கழக இதழியல் துறையின் உதவிப்பேராசிரியரும் தலித்திய சிந்தனைக் களத்தின் முனைப்பான களச்செயற்பாட்டாளருமான ஜெ. பாலசுப்பிரமணியம் 1869இல் திருவேங்கிடசாமி பண்டிதர் அவர்களால் தொடங்கப்பட்ட சூரியோதயம் இதழ் முதல் 1943ஆம் ஆண்டு வடதமிழகத்தில் தோல்பதனிடும் தலித் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்த உதயசூரியன் இதழ் வரையிலான தலித்திய இதழ்களின் விரிவான தொகுப்பாக ‘சூரி

மதிப்புரை
அ.கா. பெருமாள்  

ஊழலுக்கு ஒன்பது வாசல் (கட்டுரைகள்) ப. திருமாவேலன் வெளியீடு: விகடன் பிரசுரம் 757, அண்ணா சாலை, சென்னை & 2 பக்கம்: 328 ரூ. 205 உடம்புக்கு ஒன்பது வாசல். கண் (2) காது (2) மூக்கு (2) வாய் (1) குதம் (1) குய்யம் (1) என்பது மரபு. இந்த வாசல்களை அடக்கினால் ஞானம் கிடைக்கும். இந்த வாசல்கள் மூலம்தான் உலகபந்தம் நுழைகிறது என்பது நாட்டார் மரபு. இவற்றை அடக்கியவர்கள் சித்தர்கள் என்று கூறும் மரபும் உண்டு. இந்த வாசல்களை அடைக்க முடியாது; உடலைவிட்டு உயிர் பிரியும்போதுதான் ஒன்பது வாசல்களும் அடைபடும் என்பதற்கும் பழைய கதை உண்டு. ஊழலுக்கும் ஒன்பது வாசல். இப்போதிய நிலையில் இன்றைய அரசியல்வாதிகளின் போக்கை அறிந்தவர்களுக்குத் தெரியும், ஒன்பது வாசல்களும் அடைபடாதென்று. திருமாவேலனுக்கு இதில் ஆழ்ந்த அனுபவம்; அதனால் இப்ப

பதிவு
அவலோகிதன்  

அயோத்திதாசர் பிறந்த மே 20ஆம் நாளுக்கு முன் மே 19ஆம் தேதி சென்னை கவிக்கோ அரங்கில் காலச்சுவடு வெளியிட்ட ஐந்து நூல்களின் வெளியீட்டு விழாவை ‘தலித் செயல்பாட்டுக்கான சிந்தனையாளர் வட்டம்’ (ICDA) காலச்சுவடு பதிப்பகத்தோடு இணைந்து நடத்தியது. ஐந்து நூல்களில் எஸ்.ஜே. சிவசங்கர் எழுதிய ‘சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை’ என்ற நூல் மட்டும் சிறுகதைத் தொகுப்பாகும். இந்நூலை தொல். திருமாவளவன் வெளியிட கவிஞர் வேல்கண்ணனும் திரைச் செயற்பாட்டாளர் முத்துராஜாவும் பெற்றுக்கொண்டனர். வரலாறு என்பதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தைத் தேர்ந்த புனைவின் மொழியில் இத்தொகுப்பு வெளிப்படுத்துகிறதென்று இந்நூலை மதிப்பிட்டுப் பேசிய ப்ரேமா ரேவதி குறிப்பிட்டார். இச்சிறுகதைத் தொகுப்பைத் தவிர மற்ற நான்கும் தலித் அரசியல்

கடிதம்
கோபால்கிருஷ்ண காந்தி  

  கோபால்கிருஷ்ண காந்தி 13ஆவது குடியரசுத் துணைத் தலைவராகப் போட்டியிடும் கோபால்கிருஷ்ண காந்தி தமக்கு ஆதரவு அளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் இது. ஒரு வேட்பாளர் வாக்காளருக்கு எழுதிய கடிதம் என்பதைவிட சான்றோர் ஒருவரின் நாட்டைப் பற்றிய சமரசமற்ற அவதானிப்பு என்றே இதைச் சொல்லலாம். அந்த அக்கறையை முன்னிட்டே இக்கடிதம் இங்கே வெளியாகிறது.                                 - பொறுப்பாசிரியர் அன்பார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜெய் ஹிந்த்! இறவாப் புகழ் படைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் மேற்கண்ட மந்திர முழக்கத்தோடு எ

EPW பக்கங்கள்
 

ஆணாதிக்கப் பாரபட்சத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண் கைதிகளே. மும்பை பைகுலாவிலுள்ள மகளிர் சிறையில் ஜூன் 24இல் 38 வயதான கைதி ஒருவர் மரணமடைந்தமை இந்தியச் சிறைகளின் படுமோசமான நிலையையும் குறிப்பாகப் பாலின அடிப்படையில் பெண் விசாரணைக் கைதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் நமக்கு நினைவுறுத்துகிறது. சிறையில் பணியாட்கள் போதாமையால் மஞ்சுளா ஷெட்டி, வார்டன் வேலைக்கு நியமிக்கப்பட்டிருந்தார். தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள வார்டிலுள்ள சிறைக்கைதிகளுக்கு அளிக்கப்பட்ட உணவில் முட்டைகளும் ரொட்டித் துண்டுகளும் குறைவாக இருப்பது குறித்துச் சிறையின் பெண் அதிகாரியிடம் கேட்டபோது கடுமையாகத் தாக்கப்பட்டு இறந்துபோனார். அரசாங்கத்தால் நடத்தப்படும் ஜெஜெ மருத்துவமனையின் மருத்துவர்கள் அளித்த பிரேதப் பரிசோதனை அறி

EPW பக்கங்கள்
தமிழில் க திருநாவுக்கரசு  

இன்றைய நிலையில் வெறுப்பரசியலுக்கு எதிரான எல்லாப் போராட்டங்களும் வரவேற்கப்பட வேண்டியவை. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே 20க்கும் மேலான கொலைகளைக் கும்பல்கள் நடத்தியுள்ளன. ஆனால், ஜூன் 22ஆம் தேதி பட்டப்பகலில் டெல்லிக்கும் மதுராவிற்கும் இடையே ரயிலில் கொல்லப்பட்ட 15 வயதான ஜுனைத் கான் கொலை பிற கொலைகள் செய்யாததைச் செய்துள்ளது. அவன் சிறுவன் என்பதாலோ ஈத் பண்டிகைக்காகக் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தான் என்பதாலோ மட்டுமல்ல. எந்தத் தீங்கும் செய்யாத சிறுவன் முஸ்லிம் என்ற காரணத்தினால், அப்படி அடையாளம் காண முடிந்த காரணத்தினால் மட்டுமே கொல்லப்பட்டிருக்கிறான் என்பதால்! இதுதான் ஜூனைத் கொலையில் மிகவும் கவலைக்குரிய அம்சம். அதாவது, இந்தியாவில் எந்தவொரு முஸ்லிமும் அவர் முஸ்லிம

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

  கடந்த யூன் 22, 2017 அன்று தமிழக அரசு மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கையில் 85 விழுக்காடு இடங்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவருக்கெனவும் எஞ்சியுள்ள 15 விழுக்காடு இடங்கள் பிற பாடத் திட்டங்களில் படிப்போருக்கு எனவும் வரையறுத்து ஓர் ஆணை பிறப்பித்தது. பல பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுவான நீட் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடங்களின் அடிப்படையில் நடக்கும் என்பது குரங்குக்கும் யானைக்கும் மீனுக்கும் மரம் ஏறும் போட்டி வைத்து, வெற்றி பெற்றவரைத் தேர்வு செய்வதற்கு ஒப்பானது. எனவேதான், தமிழகம் நீட் தேர்வை எதிர்க்கிறது. இதைப் புரிந்துகொள்ளாத டார்னிஷ் குமார் என்கிற சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். அதாவது, மருத்துவக் கல்விக்கான இடங்களை ஒதுக்க

அஞ்சலி
என்னெஸ்  

  தமிழகத்தின் நவீன ஓவியர்களில் சிலர் தமது துறைக்கு வெளியேயும் கவனம் செலுத்தியவர்கள். குறிப்பாக, சமகாலத் தீவிர இலக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்களாகவும் மாற்று முயற்சிகளுக்கு ஆதரவாளர்களாகவும் பங்களிப்பாளர்களாவும் இருந்திருக்கின்றனர். மூத்த கலைஞர்களான ஆதிமூலம், பாஸ்கரன் போன்றோர் உருவாக்கிய இந்த இணைப்புப் பாலத்தில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டவர்களில் வீர சந்தானமும் ஒருவர்; ஓவியராக மட்டுமன்றி நிகழ்காலத் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் செயல்பாட்டாளராகவும் போராளியாகவும் களத்தில் நின்றவர். ஓவியர் என்பதைக் காட்டிலும் அவரது இந்தச் செயல் பங்களிப்புக்காகவே சந்தானம் அதிகமாக நினைவு கூரப்படுகிறார். சமரசமற்ற தமிழ் உணர்வாளர் என்று போற்றப்படுகிறார். அது இயல்பானதும் அவர் விரும்பி ஏற்றுக்கொண்டதுமான அடையாளம்.

அரபுக் கதை
இஹ்சான் அப்துல் குத்தூஸ்,தமிழில்: அ. ஜாகீர் ஹூசைன்  

நான் யார்? பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது. நான் யார் என்று தெரிய வேண்டும். ‘நான்’ எனும் வார்த்தைக்குரியவன் யார்? அவனைப் பார்க்க வேண்டும். அவனுடன் அறிமுகமாக வேண்டும். என் நினைவுகள் வரைகின்ற இந்த விசயங்களை அவனுடன் விவாதிக்க வேண்டும். எனது நிகழ்காலம், வருங்காலம், நடவடிக்கைகள், செய்த நன்மைகள், தீமைகள் குறித்து அவனுடன் கலந்துரையாட வேண்டும். நாம் சற்று நிதானமாகப் பேசுவோம். புதிதாக இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறேன்: நான் யார்? ‘நான் முஸ்லிம்.’ ஆனால் இந்த அடையாளம் கோடிக்கணக்கான முஸ்லிம்களிடமிருந்து என்னை வேறுபடுத்திக் காட்டாதே. நான் யார் என்பதை இது தீர்மானிக்காதே! ‘நான் அரேபியன். எகிப்தியன்.’ ஆனால், இலட்சக்கணக்கான எகிப்தியர்கள் இருக்கிறார்களே! இ

கதை
வண்ணநிலவன்  

  திருச்செந்தூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில், மடிக்கணினி, செல்போன், டி.வி. பெட்டி எல்லாம் வந்துவிட்டாலும் அலங்காரம், பஸ் இஞ்ஜின் சத்தத்தைக் கேட்டுத்தான் நேரத்தைத் தெரிந்துகொள்கிறாள். வயது எழுபதுக்கு மேலாகிவிட்டது. காது நன்றாகக் கேட்கிறது. அவளை விடத் தங்கப்பழ நாடாருக்கு ஆறேழு வயது கூடுதலாக இருக்கும். அவருக்கு அறவே காது கேட்க மாட்டேன் என்கிறது. மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் எல்லாரும் சைகையில் பேசுகிறார்கள். இல்லை யென்றால் அவரது உள்ளங்கையை விரித்து அதில் எழுதிக் காட்டுகிறார்கள். காது கேளாதவர்களுக்கு உரிய கனத்த குரலில், தான் புரிந்துகொண்டதை, “வரமாட்டான்னு சொல்லுதீயா?...” என்றோ “ஊருக்குப் போவப்போறீயா...” என்றோ கேட்டுவிட்டு லேசாகச் சிரிப்பார். புருஷன், பொஞ்சாதி இரண்டு பேருக

கட்டுரை
கல்யாணராமன்  

  மீட்டுருவாக்கத்தில் அயோத்திதாசர், கவிதையில் பாரதியார், பதிப்பில் உ.வே.சா., விடுதலைப்போரில் வ.உ.சி., சிறுகதையில் புதுமைப்பித்தன், கலகச் செயல்பாட்டில் பெரியார், பொதுவுடைமைக்கு ஜீவா, இந்தியச் சிந்தனைக்கு ஜெயகாந்தன், நாவலில் தி. ஜானகிராமன், ஆய்வில் எஸ். வையாபுரிப்பிள்ளை, விமர்சனத்தில் கோ. கேசவன் எனப் பெரும் ஆளுமையாளர்கள் பலர் தமிழில் செயல்பட்டுள்ளனர். இப்பட்டியலில் இடம்பெறாத இன்னும் பத்திருபதுபேரை அடையாளப்படுத்தலாம். பிரச்சனை வெறும் பெயர்களைப் பற்றியதன்று. தாம் ஈடுபட்ட துறைகளுக்காகத் தம் வாழ்நாளை அர்ப்பணித்த பலர் இங்கிருந்தனர். இவர்கள் அனைவரையும், அதாவது தத்தம் துறைகளில் தனித்தடங்களைப் பதித்தவர்களையெல்லாம் ஆவணப்படுத்த வேண்டும். அவர்களின் சிந்தனைகளையும் ஆக்கங்களையும் அவை வெளிப்பட்டவாற

கவிதைகள்
அனார்  

  பொன்நிற நத்தைகளின் சிலிர்ப்பு வானம் ரகசியங்களுக்குள் பிரிந்துகிடக்கின்றது ஆகாயச் சுரங்கங்களில் சூல் நிரம்பியிருக்கின்ற மேகங்கள் காதலைப் பூரித்துக் கொண்டிருந்தாள் மந்திரத்தறி பின்னுகின்ற மழையாகிறான் தூவானம் சிதறுகிற உடலைத் துவட்டுகிறாள் பொன்நிற நத்தைகள் ஊரும் அவன் கவிதைகள்... அவளை அணைத்துக் கிடக்கின்றன ‘கவிதைகள்’ அவள் ‘உடலை’ கவிதை என்றே சொல்கின்றன பின்னர் தமக்குத் தாமே அவள் உடலில் புயலின் சீற்றமிருந்தது என்றும்... மாசற்ற நதியின் பாடலெனவும்... உருகுதலும் உறைதலுமான படிமங்களின் பித்தாகியவள் எனவும்... வர்ணிக்கத் தொடங்கியிருந்தன வியாபகமாய் அவள் காதலைப் பூரித்துக் கொண்டிருந்தாள் அவன் சுடச்சுட ஒளிரும் மழையாகிறான் அவளுடையதாகிவிட்ட பொன்நிற நத்தைகள் சிலிர்க்கின்ற

கவிதைகள்
ஸர்மிளா ஸெய்யித்  

  கீறல் பழுத்த மாம்பழங்களைக் கீறி ஒரு துண்டைச் சுவைக்கலாம் என்றபோது புதிர் தொடங்கியது விருந்துக்கு வந்திருந்த ஆண்களும் பெண்களும் பல்வகை வினாக்களால் புதிர் அவிழ்க்க முயன்றனர் கீறல் படாத மாம்பழம் ருசிக்காதா கீறும்போது மாம்பழத்திற்கு வலிக்காதா கீறினால் சாறு வடிந்து வீணாகாதா கீறும்போது சாறு வடியும் சட்டை அழுக்காகும் கீறும்போது மாம்பழத்திற்கு வலிக்கும் கீறாதுவிட்டல் கடித்து உண்பது சிரமம் கீறித் தின்பதுதான் சுகம் மாம்பழத்தின் விதி உணவாயிருப்பதே கீறுதல் குற்றமில்லை கத்திகளைக் கூர் தீட்டுங்கள்! சிவப்பு மகன் கேட்கிறான் ஆண்பிள்ளை மருதாணி வைப்பது கூடாதா அவமானமா ஹராமா எனது பதில், ஆணும் அறியா பெண்ணும் அறியா மருதாணி யார் கையிலும் சிவக்கும் சிவப்பு கூடாத நிறமுமல்ல அவமானத்தின் நிறமுமல்ல சி

கட்டுரை
இசை  

புலவர் திருவள்ளுவரன்றிப் பூமேற் சிலவர் புலவரெனச் செப்பல் -& நிலவு பிறங்கொளி மாலைக்கும் பெயர் மாலை மற்றும் கறங்கு இருள் மாலைக்கும் பெயர்.                        -மதுரை செங்குன்றூர் கிழார் திருக்குறள் அறம், பொருள், காமம் என்ற முப்பால்களைக் கொண்டிருந்தாலும் அறிஞர்கள் பெரும்பாலும் காமத்துப் பாலைக் கண்டுகொள்வதில்லை. பள்ளித்தலங்களில் அவை பாடமாக வைக்கப்படுவதில்லை. கல்லூரிகளில் அதன் மாட்சிமைக்குப் பங்கம் நேராதவகையில் லேசாகத் தொட்டுக்கொள்ளப்படுகிறது. இதுபற்றிப் பேராசிரிய நண்பர் ஒருவரிடம் விசாரிக்கையில், “எங்க பாடத்திட்டத்தில கொடுங்கோன்மை, செங்கோன்மைகளையே வைக்க முடியல... நீங்க காம

கதை
யுவன் சந்திரசேகர்  

  அடிவார மடத்தின் வாசல் எந்நேர மும் தண்ணென்று இருக்கும் - ஆதியிலிருந்தே வெயிலைப் பார்த்திராத பாவனையுடன். நாலைந்து அடுக்காகக் கிடுகுகள் அடுக்கி வேயப்பட்ட தென்னோலைப் பந்தலும் சுற்றிலும் தலை விரித்து நிற்கும் மரங்களும் மட்டுமல்ல - மடத்தின் இடதுபுறம் அவசரமாய்த் தொடங்கிவிடும் காடும் அதன் அடர்த்தியும்கூடத்தான் காரணம். தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் வனத்துக்குள் நுழைவதில்லை. இடைவெளியேயின்றி அடர்ந்து பரந்திருக்கும் முட்புதர்கள் மட்டும் காரணமல்ல - காட்டுப்பன்றியும் காட்டெருமையும் மட்டுமின்றி, கரடியும் புலியும் சிங்கமும்கூட அதற்குள் இருப்பதாக வதந்தி உண்டு. அதை மெய்ப்பிப்பது போல முரட்டு உறுமல்கள் சிலவேளை ஒலித்ததும் உண்டு. ஆனால், அவை வதந்தியினடியாய்ப் பிறந்த குறளிகள் மட்டுமே என்று மறுப்பவர்களும் உ

அறியப்படாத பாரதி-12
ய. மணிகண்டன்  

  “வாழ்க நீ எம்மான்”என்று தாம் பாடிய காந்தியடிகளை முதலும் கடைசியுமாகப் பாரதி 1919இல் சென்னையில் நேரடியாகக் கண்டார். எனினும் பாரதி வாழ்ந்த காலத்தில் அவரை இந்நிகழ்வின் வாயிலாக அல்லாமல் காந்தி அறிந்திருந்தாரா, பாரதி பற்றி ஏதும் குறிப்பிட்டிருக்கிறாரா என்ற கேள்விகள் எழுகின்றன. “1921 செப்டம்பரில் பாரதியார் காலமான சில மாதங்களுக்குள் சென்னை வந்த காந்தியடிகளிடம் பாரதியார் மறைவு குறித்து இராஜாஜி உட்பட எவரும் ஏதும் கூறியதற்கான சான்று இல்லை... 1921இல் காந்தியடிகள் தமது தமிழகச் சுற்றுப் பயணத்தில் எங்கும் பாரதியார் பெயரைக் குறிப்பிடவில்லை,” எனப் பெ.சு. மணி (பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் - இரண்டாகம் பாகம், பக். 256, 257) குறிப்பிடுவார். பொதுவாகப் பாரதி - காந்தி சந்திப்பு

நேர்காணல்
கவிஞர் தர்மசிறி பெனடிக் , சந்திப்பு : எம் ரிஷான் ஷெரீப்  

  நேர்காணல்: கவிஞர் தர்மசிறி பெனடிக் , சந்திப்பு : எம் ரிஷான் ஷெரீப் நீங்கள் வாழ்க்கையை உணரவும் உணர்த்தவும் கவிதையைத் தேர்ந்தெடுத்தது எதனால்? எனது வாழ்க்கையே ஒரு குறுக்கெழுத்துப் புதிர் போலத்தான். அதனை எப்படித்தான் நிரப்பிக்கொண்டு போனாலும் இறுதியில் நிரப்பவே முடியாதவாறு விடைகளேதுமற்ற கட்டங்கள் சில மீதமாகும். வாழ்க்கையில் அநேகமானவற்றை நான் நிரப்பியது அதாவது விடைகளைத் தேடிக் கொண்டது கவிதைகளினாலோ சிறுகதைகளினாலோதான். எனது தோழர் புரட்சிக் கவி சந்திரகுமார விக்ரமரத்ன. அவரதும் எனதும் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவ்வளவு வித்தியாசங்கள் இருக்காது. வித்தியாசமாக இருப்பது அவர் புரட்சிகரக் குணங்களால் நிரம்பியவர் என்பதே. அப்படிப் பார்க்கும்போது அவருக்கு மிகவும் கீழ்மட்டத்தில்தான் நாங்கள் இருக்கிறோம

கவிதைகள்
நாகொல்லாகொட தர்மசிறி பெனடிக்,தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்  

கட்டுரை
 

  காலச்சுவடு தலையங்கங்கள் தொடர்ந்து பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. பாராட்டுகளை எதிர்பாராமல் நேர்மைத் திறத்தோடு பக்கச்சார்புகள் இன்றி எழுதிவருவதைத் தொடர்ந்து பேணி வருகிறோம். இதன் விளைவாகக் காலச்சுவடு எதிர்கொண்ட கண்டனங்களே மிகுதி. காலச்சுவடு தனது நூறாவது இதழை வெளியிடும் தருணம் நெருங்கியபோது நாங்கள் மிகுந்த பெருமித உணர்வுடன் அதன் பணிகளைச் செய்து கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில்தான் “காலச்சுவடு இதழை இனிமேல் நூலகங்களுக்கு வாங்கக்கூடாது” என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்குக் காரணமாக அமைந்தது காலச்சுவடு இதழ் 99இன் தலையங்கம். காலப்பொருத்தம் கருதி தலையங்கத்தின் தேர்ந்தெடுத்த பகுதிகள் இங்கு வெளியிடப்படுகின்றன. - பொறுப்பாசிரியர் மைசூர், இந்திய மொழிகளின் நடுவ

உள்ளடக்கம்