தலையங்கம்
 

  'கக்கூஸ்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்த அதன் இயக்குநர் திவ்யபாரதிமீது அப்படச் சித்திரிப்பு தொடர்பில் தொலைபேசி வழியாகவும் கட்புலனாகா வகையிலும் சமூக வலைதளங்களிலும் ஆபாசமாகத் தாக்கப்பட்டுள்ளார்; கூரிய மொழியில் மிரட்டப்பட்டுள்ளார். இந்தியாவில் பரவி வரும் கருத்துச் சுதந்திரம் மீதான மற்றுமொரு அச்சுறுத்தலாகக் கருதி இதனைக் கண்டிக்க வேண்டியது கருத்துச் சுதந்திரம்மீது நம்பிக்கையுள்ளோரின் கடமையாகிறது. மலம் அள்ளுவோர், அவ்வாறு ஆக்கப்பட்டவர்கள்மீதான நம் சமூகத்தின் பாராமுகத்தைத் தான் நம்பும் அரசியல் பார்வையிலான காட்சி மொழியின்கீழ் இயக்குநர் படமாக்கியிருக்கிறார். படச் சித்திரிப்பு நோக்கம் அதன் விளைவுகள்பற்றி பல்வேறு பார்வைகள் பகிரப்பட்டிருக்கின்றன; இப்பார்வைகளில் அப்படத்தை ஏற்றும் மறுத்தும

தலையங்கம்
 

  சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, முஸ்லிம்களின் நடைமுறையில் இருக்கும் முத்தலாக் முறையைச் சட்ட அங்கீகாரமற்றது என தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இத் தீர்ப்பின் தொடர்ச்சியாக அம்முறையை நிரந்தரமாக நீக்கும் வகையில் ஆறு மாதங்களுக்குள் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அது கூறியுள்ளது. முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்வதற்கான நடைமுறையாக ‘தலாக்’ இருக்கின்றது. பெரும்பாலான நாடுகளிலும் இந்தியாவிலும் முஸ்லிம்கள் இம்முறையைத்தான் பின்பற்றுகிறார்கள். ‘தலாக்’ என்று மனைவியை நோக்கிக் கணவன் சொல்வதாக இருந்தால், அதற்கெனத் தனிக் கால அவகாசமும் நடைமுறையில் உள்ளது. இது கிட்டத்தட்ட மூன்றுமாதக் கால அளவிற்கு நீடிக்கும். இவ்வளவு நீண்டகாலம் அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதன் காரணம் க

தலையங்கம்
 

  கருத்துரிமைக்கும் படைப்புச் சுதந்திரத்துக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் விடப்பட்டு வரும் நாட்கள் இவை. மதம், சாதியின் பெயரால் படைப்பாளிகளும் சான்றோரும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். என்ன எழுதப்பட வேண்டும், பேசப்பட வேண்டும், பார்க்கப்பட வேண்டும் என்றும் எதை உண்ண வேண்டும், எதை உடுக்க வேண்டும் என்றும் அரசியல் அதிகாரத்தரப்பும் தாமாக அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொண்ட கும்பல்களும் கட்டாயப்படுத்துகின்றன. படைப்புகளும் கருத்துகளும் கொண்டிருக்கும் உண்மையைத் திரித்து விபரீத அர்த்தங்களை வழங்கித் தொடர்ந்து அடக்குமுறையைக் கையாளுகின்றன. பெருமாள் முருகன், துரை குணா, புலியூர் முருகேசன் போன்றவர்களின் படைப்புகளுக்கு விபரீதமான பொழிப்புரைகள் கொடுத்துப் படைப்புரிமையை நசுக்கப் பார்க்கின்றன.

EPW பக்கங்கள்
 

இன்று நாம் சுதந்திரத்தைக் கொண்டாடுகிறோமா அல்லது இழந்துபோன வாய்ப்புகளுக்காகத் துக்கம் அனுசரிக்கிறோமா? 1947 ஆகஸ்ட் 15, நள்ளிரவில் ஏற்றப்பட்ட நம்பிக்கைத் தீபம் இன்று மங்கிவிட்டது. ‘விதியுடனான நமது அனைவரின் கூட்டான ஒப்பந்தம்’ என்று சுதந்திரத்தை முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அழைத்தார்; தனது குடிமக்களுக்கு அரசியல் சமத்துவத்தை உறுதிசெய்து ஆனால் மிக அடிப்படையான சமூக, பொருளாதார உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள ‘முரண்பாடுகளின் வாழ்வை’ப் பற்றி இளம் குடியரசை எச்சரித்தார் அரசமைப்பு வரைவுக் குழுவின் தலைவரான பி.ஆர். அம்பேத்கர். நவகாளியில் நடந்த மகாத்மா காந்தி தனக்கேயுரிய வகையில் முன்கூட்டிய அறிவுடன், கம்யூனிஸ்டுகளின் மொழியில், ‘‘இந்தச் சுதந்திரம் பொய்யானது,’’ என்ற

கடிதங்கள்
 

  நோய் நாடி நோய் முதல் நாட வேண்டும் இசை அவர்களே! பாடப்புத்தகங்களில் இடம்பெற்ற குறட்பாக்களைத் தவிர, திருக்குறள் புத்தகம் என வாங்கி வாசிக்கத் தொடங்கியபோது நான் காமத்துப் பாலிலிருந்துதான் வாசித்தேன். திருக்குறளை அறத்துப் பாலிலிருந்து வாசிக்க இயலாது போனால் காமத்துப் பாலிலிருந்து வாசிக்கத் தொடங்கு என்பது கண்ணதாசனின் கருத்து. அறத்துப் பால், பொருட்பால் போன்று காமத்துப் பால் குறட்பாக்களை அணுக வயது ஒரு தடை. குழந்தைகளுக்கு அது புரிய வேண்டிய அவசியம் இல்லை. வயதின் அடிப்படையில் இளமையில் கற்க வேண்டிய அறங்களையும் பொருளையும் கற்க,வாலிப வயது நெருங்கும்போது தானாகவே காமத்துப் பால் கற்பது நிகழும். அறம், பொருள் சார்ந்த கருத்துகளை வள்ளுவர் அனுபவ ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதியிருக்கலாம். காமம் சார்ந்த க

அஞ்சலி:ஹெச்.ஜி.ரசூல் (1959 & 2017)
பாத்திமா மாஜிதா  

ஒவ்வொரு பாதையிலும் நடந்து பார்க்கிறேன். எல்லா மரங்களின் இலைகளிலும் ஏதோவொரு அமைதி உறங்கிக்கிடக்கிறது. எனது சிந்தனைகளுக்குள் ஊடுருவியிருக்கும் கேள்விகளின் சொந்தக்காரர் இன்று இல்லையே என்று மனம் பதறுகிறது. ரசூல் எனும் ஆன்மா எழுப்பிக்கொண்டிருக்கும் கேள்விகளை எழுதி முடிப்பதற்குள் எழுத்துகள் இடறிவிழுகின்றன. மிக அண்மையில்தான் உள்ளே புழுங்கிக்கொண்டும் இலக்கியத்தையும் சமூகத்தையும் நோக்கி வெளியே உந்தித்தள்ளிக் கொண்டுமிருந்த சிந்தனையை, என் அக - புறப் போராட்டங்களை எழுத்தாக்கும் எண்ணச் சுமைகளோடு நுழைந்தேன். என் ஆர்வங்களில் ஆவலுற்ற தோழமையொன்று பரிந்துரைத்த முதல்நூல் ஹெச்.ஜி ரசூலின் ‘இஸ்லாமியப் பெண்ணியம்.’ பெண் சார்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கும் திரிபு முயற்சிகளை அம்பலப்படுத்தி ஆணதிகாரத் திற்க

அஞ்சலி:அஃக் பரந்த்தாமன்
ஆர். சிவகுமார்  

  ஏன் பரந்த்தாமன் தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலின் ஒற்றைத் தியாகி? இலக்கிய லட்சியவாதத்துக்குத் தம்மைத் தின்னக்கொடுத்து, சூழல் தழைக்கச் சிற்றிதழ் ஆசிரியர்கள் பலரும் பலவிதத் தியாகங்களைச் செய்ததனால்தான் இன்றைய எழுத்தாளர்கள் ரோஜாப் பாதையில் நடக்கிறார்கள்.  கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்த அந்த ஆசிரியர்கள்,  நண்பர்கள் சிலரின் ஆதரவால் ஒரு கட்டத்தில் ஓரளவு மீண்டு வந்தவர்கள். குடும்பத்தாரால், கசப்பையும் மீறி, முட்டுக் கொடுக்கப்பட்டவர்கள். ஆனால் பரந்த்தாமனின் வாழ்க்கையை லட்சியவாதம் சின்னாபின்னமாக்கிவிட்டது. வறுமையைத் தெரிந்தே வரவேற்று அதன் கசப்புகள் குறித்துப் புலம்பினாலும், இலக்குகளைப் பெரியனவாக நிறுவிக்கொண்டு அம்புகளை எய்தவர். முதுமையில் மனைவியை இழந்து, மகனாலும் பராமரிக்கப்படாமல்,

ஆய்வு
சுரேஷ் பிள்ளை  

  என் நண்பர் சுரேஷ் பிள்ளையின் மகள் சங்கமித்ரா சென்ற மாதம் என் வீட்டிற்கு வந்து அவரது கட்டுரை சிலவற்றின் தட்டச்சுப்பிரதிகளைக் கொடுத்தார். அதில் ஒன்று பழையாறையைப் பற்றியது. இக்கட்டுரை 1990 வாக்கில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது என் அனுமானம். ஈரோட்டில் பிறந்த சுரேஷ் பி. பிள்ளை (1934  -1998), திருச்சி ஜோசப் கல்லூரியிலும் பின் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் தமிழ் இலக்கியம் பயின்று முதுகலைக் கல்விப் பட்டம் பெற்று, பூனா பல்கலைக்கழகத்தில் சோழர்காலக் கல்வெட்டுகளை ஆய்வு செய்து (Historical and cultural Geography and Ethnography of South India with Special Reference to Cola Epigraphs என்ற தலைப்பில்) முனைவர் பட்டம் பெற்றார். இந்த ஆய்வுக்கட்டுரை ரோஜா முத்தையா நூலகத்தில் பராமரிக்கப் படுகின்ற

கவிதைகள்
மா. காளிதாஸ், ஓவியம்: தன்ராஜ் பகத்  

  நீ அங்கேயேதான் இருக்கிறாய், வலிகளுடனும்   சீழ்கட்டிய ரணங்களுடனும். சூரியனுக்கு எதிர்த் திசையில்   இங்கேவரை நீண்டிருக்கிறது   உன் நிழல்... நீ அங்கேயேதான் இருக்கிறாய். நிர்வாணமாய்   கையறு நிலையில் இருக்கிறாய் புசிக்க எதுவுமின்றித் தவிக்கிறாய் மீண்டும் நகர்த்தப்படுவோம் என்பதறிந்தும், நகராமல் நீ அங்கேயே தான் இருக்கிறாய். நீ ஒரு முதன்மைப் பொருள் நீ ஒரு முதன்மைச் சொல் நீ ஒரு முதன்மை எண் உன் சூன்யத்திலிருந்துதான், இங்கே   எல்லாமே தொடங்குகிறது. நீயோ என்ன செய்வதென்றே தெரியாமல்,   அங்கேயே சுற்றித் திரிகிறாய் அங்கேயே படுத்துறங்குகிறாய் அங்கேயே மலம் கழிக்கிறாய் அங்கேயே இனம் பெருக்குகிறாய். நீ டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டாய். உன் பசி உன் தூக்கம் உன் மொழி உன் உ

EPW பக்கங்கள்
 

  இந்த அரசாங்கத்திற்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பெரும் தொந்தரவா? தனது பெரும் அரசியல், சமூக, பொருளாதாரத் திட்டங்களுக்குத் தடையாக இருக்கும் நிறுவனங்களைக் கைப்பற்றும் அல்லது வலுவிழக்கச் செய்யும் நரேந்திர மோடி அரசாங்கத்தின் வேகத்தைப் பார்க்கையில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) அடுத்த இலக்காக இருக்கக்கூடும் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. தேசியப் பசுமைத் தீர்ப்பாயச் சட்டம், 2010இன் கீழ் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு அதிகாரத்தின் கீழ் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், காடுகள் இயற்கை வளங்களைப் பேணிக்காத்தல், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்தால் தங்கள் சொத்துக்களுக்கு நஷ்டம் ஏற்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் போன்ற விஷயங்கள் வருகின்றன. குறிப்பாக சுற்றுச்சூழல் குறித்த வழக்குகள் விரைவாக மு

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

  ஆற்று மணல் கொள்ளைக்கு ஒரு கூட்டம், கடல் மணல் கொள்ளைக்கு இன்னொரு கூட்டம், கிரானைட் கொள்ளைக்கு வேறொரு கூட்டம், காடுகள் கொள்ளைக்கு மற்றொரு கூட்டம் என இந்தியாவிலேயே இலாகா பிரித்து வளத்திருட்டு நடப்பது தமிழகத்தில் மட்டும்தான் என நினைக்கிறேன். ஏறத்தாழ நாற்பது ஆறுகள் ஓடும் கேரள மாநிலத்தில் எந்த ஆற்றிலிருந்தும் ஒரு சட்டி மணலைக்கூட யாரும் அள்ளிவிட முடியாது. அவர்களுடைய கட்டுமானப் பணிகளுக்குத் தமிழக ஆறுகளிலிருந்துதான் மணல் லாரிலாரியாகக் கொண்டுசெல்லப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும்கூட தமிழக ஆற்று மணல் கணிசமான அளவு போய்க்கொண்டிருக்கிறது. தங்கத்தைவிட விலை மதிப்புடையதாக மாறியிருக்கிறது ஆற்று மணல். மூன்று யூனிட் கொள்ளளவு கொண்ட ஒரு லாரி மணல் தற்போது முப்பத்தைந்தாயிரம் ரூபாயாகவும்

அறிக்கை
 

  சூன் 30 2017 அன்று ஓஎன்ஜிசியின் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் ஒன்றில் உடைவு ஏற்பட்டது. இதனால் ஸ்ரீராம் ராமமூர்த்தி என்பவரது இயற்கை வேளாண்மை வயலில் எண்ணெய் கசிந்து மாசு ஏற்பட்டது. தொடர்ந்த நாட்களில் ஓஎன்ஜிசி, சிபிசிஎல்லின் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், நிலத்தடியிலும் மேற்பரப்பிலும் நீர் மாசுபடுவது, ஓஎன்ஜிசி இந்த பாதிப்புகளைச் சரிசெய்வதில் காட்டும் அலட்சியம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை அப்பகுதி விவசாயிகள் எழுப்பினர். இது பெருமளவு கவன ஈர்ப்பை ஏற்படுத்தியதோடு, கதிராமங்கலம் விவசாயிகளின் பெரிய போராட்டத்திற்கும் இட்டுச்சென்றது, தொடர்ந்து அவர்கள்மீது காவல்துறையினரால் வன்முறையும் நிகழ்த்தப்பட்டு அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பதினோரு பேர் சிறையில் அடைக்கப்பட்டு

கட்டுரை
ஜே.ஆர்.வி. எட்வர்ட்  

  மருத்துவக் கல்லூரி அனுமதிக்கான தேசிய நுழைவுத் தேர்வு  (NEET)  கொண்டுவரப்பட்டதின் பின்னணியையும் அதற்காகக் கற்பிக்கப்படும் நியாயத்தையும் ஆய்ந்து பார்ப்பது அவசியம். மருத்துவக் கல்விக்கான மாணவர் அனுமதியில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகள், தில்லுமுல்லுகள் போன்றவற்றைக் களைவது தான் தேசிய நுழைவுத் தேர்வின் நோக்கம்; அது சரியானதே. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் அனுமதி எங்ஙனம் நடத்தப்படுகிறது, எவ்வளவு பணம் பெறப்படுகிறது என்பதை நடைமுறை எதார்த்தங்களின் அடிப்படையில் ஆராய்ந்தால் வெளிவரும் உண்மைகள் பயங்கரமானவை. ஆனால் அவை எவருக்கும் அதிர்ச்சி தரப்போவதில்லை. சில ‘நாணயமான’ கல்லூரிகள் ஐம்பது, அறுபது லட்சங்களுக்கு மருத்துவ இடங்களை விற்பது ரகசியம் அல்ல. பல மருத்துவக் கல்லூரிகள

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தரஜா  

  கம்போடியத் தலைநகரின் 113வது தெருவிலிருக்கும் நான்கு கட்டடங்களைக் கொண்ட பள்ளிக்கூடத்தை வெளியிலிருந்து பார்த்தால் நம் அயலில் தினமும் காணும் பள்ளி போல் தெரியும். ஆனால் இது சாதாரணப் பள்ளிக்கூடமல்ல; சித்திரவதைக் கூடம்; வகுப்பு அறைகள் வதைத் தளமாக மாற்றியமைக்கப்பட்ட கட்டடம். மட்டுமீறிய, பயங்கரமான, நடுக்கத்தை உண்டாக்கிய சிவப்புக் கமீயர்கள் (Khmer Rouge) கம்போடியாவை ஆட்சிசெய்த நாட்களில் (1975-79) 150 மேம்பட்ட விசாரணை நிலையங்களில் இந்தப் பள்ளிக்கூடம்தான் அவர்களின் எதிரிகளை விசாரணை செய்யும் பிரதான சித்திரவதைக்கூடமாக இருந்தது. சிவப்புக் கமீயர் தலைபீடத்தில் இந்தக் கட்டடம் S-21 என்று அறியப்பட்டிருந்தது. இன்று இனஅழிவு அருங்காட்சியகமாக (Genocide Museum) மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர்வாசிகளைக்

கட்டுரை
மா.க.பாரதி  

  தமிழக வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பிராமணரல்லாதோர் அறிக்கை 1917 டிசம்பரில் வெளிவந்து நூறு ஆண்டுகள் நிறைவுபெறும் தருணத்தில் உள்ளது. அவ்வறிக்கைக்குப் பின்னான தமிழகத்தின் சொல்லாடல்கள் பிராமணர் x பிராமணரல்லாதார் என்ற எதிர்வுகளில்தான் பயணிக்கின்றன.வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டத்தில் எழுந்த சிந்தனை அல்லது கோட்பாடு தன் காலத்தைத் தாண்டி அதன் பொருத்தத்தை இழந்த பின்னும் நீடித்துவருவது ஆராயத்தக்கது. சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கும் புரிந்துகொண்டவற்றைப் பரப்புரை செய்வதற்கும் இருமைகளைக் கட்டமைக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால் அதைத் தாண்டிய முரண்பாடுகளே இல்லை என்ற தோற்றம் ஏற்படும்போதுதான் பல சிக்கல்கள் எழுகின்றன. பிராமணர் x பிராமணரல்லாதார் இருமையைக் கையாண்டோர் ஒருவகை உலகப் பார்வையாகக்

திரை
வண்ணநிலவன்  

  சினிமா எல்லா தரப்பு மக்களாலும் ரசிக்கப்படுகிறது என்பது புதிய தகவலல்ல. ஆனால் சாதாரண சினிமா ரசிகர்களும் சரி, ‘எலைட்’ அல்லது அறிவுஜீவிகள் போன்ற ரசிகர்களும் சரி, சினிமாவை நாவல், சிறுகதைகள் போல் அதன் கதையம்சத்திற்காகத்தான் பெரும்பாலும் ரசிக்கின்றனர். 99 சதவிகித ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து உட்கார்ந்திருப்பது ஒரு சினிமா சொல்லும் கதையம்சம்தான். எல்லா ரசிகர்களுமே சினிமாவைக் கதையாகத்தான் பார்க்கிறார்கள். இந்திய வெகுஜன சினிமாவில் பாடல்கள், கதைக்கு அடுத்த இடத்தைப் பிடிக்கின்றன. திரைப்படத்தின் கதையைப்போல் பாடல்களையும் ரசிகர்கள் நீண்டநாட்களுக்கு நினைவில் வைத்திருக்கின்றனர். கதை, பாடலுக்கு அடுத்த இடத்தை நடிப்பும் ஒளிப்பதிவும் பிடிக்கின்றன. பத்திரிகை, தொலைக்காட்சிகளில் இடம் பெறும

நேர்காணல்
பா.வெங்கடேசன்,தூயன்,ரியாஸ்  

எண்பதுகளின் இறுதியில் கவிதைகளோடு தொடங்கி இன்று ‘பாகீரதியின் மதியம்’ புதினம்வரை முப்பது வருடங்களாக இலக்கியச் சூழலில் இயங்கிக்கொண்டிருக்கும் பா. வெங்கடேசனின் முதல் விரிவான நேர்காணல். மே 13, 2017 அன்று தஞ்சை எழுத்தாளி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பாகீரதியின் மதியம்’ மீதான விமர்சனக் கூட்டம் முடிந்த அன்று வாசகர்களுடன்  (துரைக்குமரன், ராஜன், மதி, அதீதன் சுரேன், கிருஷ்ணப்ரியா, தூயன், ரியாஸ்) இரவு முழுதும் நடந்த இலக்கியம், கலை, அறிவியல், அரசியல், வாசிப்பு, எழுத்து ஆகியன மீதான விவாதங்களின் தொடர்ச்சியாக, அது பதிவுபெறுவது பயனுள்ளதாக இருக்கும் என்கிற ஆவலுடன் அவை குறித்த கேள்விகளை மின்னஞ்சல் வழியாகவும் தொலைபேசியிலும் அனுப்பிப் பெற்ற பதில்கள் இவை. நேர்காணலை நாங்கள் இருவரும்

கவிதைகள்
ஞானக்கூத்தன்  

  பாண்டி ஆடிய பூச்சி மாசு படாத மஞ்சள் சிறகைப் படபடத்துத் தோட்டத்தில் பறந்தது பூச்சி செடிகளைக் கட்டங்களாகக் கொண்டு பாண்டி ஆட்டம் ஆடிப் பறந்தது பூச்சி. எந்தக் கருவிக்குள்ளும் பதிவு படாத சிறிய புயலைத் தான் செல்லும் வழியில் எழுப்பிப் பறந்தது பூச்சி. பார்வையால் பின்தொடர்ந்த போதே மறைந்துவிட்டது பூச்சி. கனவில் மூழ்கிக் கரைந்த ஒரு நிகழ்வு போல. நண்டுகளின் காலை குடாக் கடலின் ஈர மணற்கரையை முகர்ந்து பார்த்து ஓடுகின்றன குப்பத்து நாய்கள். கரையேறி மணலடைந்த நுங்குபோல் உடம்புச் சிறுகால் நண்டுகள் வியந்து பார்க்கின்றன கரை மணலில் இத்தனை குழிகளை நாள்தோறும் செய்வது யாரென்று. காற்றின் துணை புயல் வீசும் திசையில் தென்னையின் கீற்றுகள் நீள்வது போலக் கடற்கரை மரங்களின் கிளைகள் மேற்கு நோக்கியே வளர்ந்தன காற்

கன்னடக் கதை
விவேக் ஷான்பாக்,தமிழில்-கே.நல்லதம்பி  

  எங்காவது அவன் கிடைத்திருக்கலாம்: தில்லியிலோ மும்பையிலோ ஹைதரா பாதிலோ இல்லை இந்த பெரிய கம்பெனிகள் ட்ரைனிங் நடத்தும் ரெசார்ட்கள் இருக்கின்றனவே, அங்கெங்கோ கிடைத்திருக்கலாம்; அல்லது ஏதாவது மேனேஜ்மெண்ட் செமினாரில். ஆனால் அங்கே எல்லாம் இல் லாமல் ஜகார்த்தாவின் ஒரு ஹோட்டல் லாபியில் கிடைத்தானே என்று நினைக்கின்றபோது, வேறு எங்கு கிடைத்திருந்தாலும் நாங் கள் பேசியிருக்க மாட்டோம், ஒருவரை யொருவர் பார்க்காமல் போயிருப்போம் என்றும் தோன்றியது. அன்று மாலை, அந்தப் பசியும் எல்லாவற்றையும் விட அந்த வெளிநாடு - இவையெல்லாம் இல்லாதிருந்தால் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தே இருக்காது, கூடிவரும் போது எல்லாம் அப்படித்தான். ஒரே தருணத்தில் எல்லாம் நடந்துவிடும். அப்போதே மாலை ஏழு மணி ஆகியிருந்தது. ஜகார்த்தாவில் இது என்னுடைய

கதை
பெருமாள்முருகன்  

  குமரேசன் பகுதிநேரமாக அந்த வேலையை ஏற்றுக்கொண்ட ஐந்தாம் நாள் நிகழ்வு இது. குகைவாய் திறந்து புறவழிச் சாலையையே பார்த்திருந்த காட்டுக்குடிசையில் வேலை. சின்னக் குண்டுபல்பு வெளிச்சத்தைச் சுற்றிலும் இருள் பம்மிச் சூழ்ந்திருக்கும். அங்கே இரவு முழுவதும் தனியாகத் தங்கியிருக்க வேண்டும். அகாலத்தில் ‘பார்ட்டி’ வந்தால் மெக்கானிக் வளவனுக்கு உடனடியாகச் செல்பேசியில் தகவல் சொல்ல வேண்டும். சேதிசொல்லி வேலை. முந்திய வாரம் ஒரு நள்ளிரவு நேரம். வாசல் விளக்கு வெளிச்சத்தில் நாவல் ஒன்றுக்குள் மூழ்கியிருந்தவனுக்கு நேரம் தெரியவில்லை, தூக்கமும் வரவில்லை. பெருஞ்சத்தத்தோடு தெருவதிரப் போன வளவன் சட்டென்று வண்டியை நிறுத்தினான். வண்டிச் சத்தத்தை மீறி, ‘என்னடா மாப்ள... இவ்வளவு நேரம் படிப்பா?’ என்

அறியப்படாத பாரதி-13
ய. மணிகண்டன்  

  பாரதி என்றதும் தலைப்பாகை, முறுக்கிய மீசை, காந்தமாய் ஈர்க்கும் கண்கள் ஆகியன நம் நெஞ்சில் தோன்றும். இந்தச் சித்திரம் தாடியோடும் தாடி இல்லாததாகவும் காட்சி தருவதுண்டு. நேரடியாகவும் படத்தின் வாயிலாகவும் கண்டவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் எத்தனை எத்தனையோ விதத்தில் இவற்றை வருணித்திருக்கின்றார்கள். ஆடவர்கள் மீசை வளர்த்தல் இயல்பெனினும் தமிழ்நாட்டுப் பார்ப்பன வகுப்பில் பிறந்த பாரதி மீசை வைத்ததும் அது மேல்நோக்கி முறுக்கி விடப்பட்டதாக மிளிர்ந்ததுமே தனிக்கவனம் பெறக் காரணமாயின. இளமையில் வடநாட்டு வாசத்தின்போது மீசை வைக்காதிருந்த பாரதி, அப்போது எதிர்கொண்ட ஒரு நிகழ்வைப் பின்வருமாறு நினைவுகூர்ந்திருக்கிறார்: “பல வருஷங்களின் முன்பு நான் ஸ்ரீ காசியில் ஜயநாராயண கலாசாலை என்ற இங்கிலிஷ் பள்ளிக்கூ

உள்ளடக்கம்