தலையங்கம்
 

  'புதிய இந்தியா’வுக்காகப் பிரதமரின் குரல் ஓங்கி ஒலிக்கும் தருணங்களில் முரண்நகையாக இந்தியா மேலும் ஓர் அடி பின்னோக்கி நகர்கிறது. வளர்ச்சி குறித்த வெற்றுரையாடல்கள் குடிமைச் சமூகத்தை நோக்கி; தோட்டாக்களின் இறுதி விமர்சனங்கள் சிந்தனையாளர்களை நோக்கி. இந்தியா தன் தனித்துவத்தை மெள்ளமெள்ள இழந்துவருவதை இவ்விரு கோணங்கள் வழியாகவும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. கன்னடச் சிந்தனையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் கொல்லப்பட்டிருப்பது நாட்டின் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதின் நேரடிச் சித்திரம். ஏற்கெனவே நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி போன்ற எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் மோடியின் ஆட்சிக் காலத்தில் பகிரங்கமாகவே கொல்லப்பட்டுள்ளனர். இப்போது அந்த வரிசையை கௌரியின் கொலை

EPW பக்கங்கள்
 

கண்ணியம், சுதந்திரத்திற்கான தனிநபரின் உரிமையை அந்தரங்கத்திற்கான உரிமையின் தீர்ப்பு மறு உறுதி செய்திருக்கிறது. நீதிபதி கே.எஸ். புட்டாசாமிக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான வழக்கில் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஆகஸ்ட் 24ஆம் தேதி வழங்கிய தீர்ப்பு 21ஆம் நூற்றாண்டில் இந்தியக் குடிமக்கள் உரிமைகளுக்கான புதிய சாசனம். அந்தரங்கத்திற்கான உரிமை தொடர்பான கடந்தகால முன்னுதாரணங்களைத் தள்ளுபடி செய்து, இதற்கு முன்னர் வந்த சில அவமானகரமான தீர்ப்புகளை (கூடுதல் மாவட்ட நீதிபதி, ஜபல்பூருக்கும் எஸ்.எஸ். சுக்லாவுக்கும் இடையிலான வழக்கு, சுரேஷ் என் கவுசலுக்கும் நாஸ் பவுண்டேஷனுக்கும் இடையிலான வழக்கு) அழித்ததுடன் அரசமைப்பின் பின்னணியில் வைத்துக் குடிமை - அரசியல் உரிமைகளை முற்போக்காகவும் பொருள்ப

EPW பக்கங்கள்
 

இஸ்லாமிய வெறுப்போ மூலாதாரக் குறைவோ ரோஹிங்யா நெருக்கடியில் காட்டப்படும் செயலின்மையை நியாயப்படுத்திவிடாது. தீவிரவாத மதம் என்று இழுக்காகப் பெரும்பான்மை உலகத்தால் இஸ்லாம் சொல்லப்படுவது தேய்வழக்காகி விட்டது. ஆனால் மறுபுறத்தில் பௌத்தமோ சமாதானமான, பகுத்தறிவு, அறிவியல்பூர்வமானது, நவீன வாழ்க்கைக்கு மிகவும் ஏற்றது என்று சொல்லப்படுகிறது. மியான்மரில் பௌத்தத் தீவிரவாதிகள் ராணுவத்தின் உதவியுடன் அங்குள்ள சிறுபான்மை முஸ்லிம் சமூகமான ரோஹிங்யா மக்கள்மீது வன்முறை நிகழ்த்துவது அம்மதத்தின் தன்மை பற்றிய பொது விளக்கத்தை மறுதலிக்கின்ற சமீபத்திய உதாரணம். இந்த நெருக்கடி விஷயத்தில் இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்தும் வெளிப்பட்ட அதிகாரப்பூர்வ எதிர்வினைகள் இஸ்லாம்மீது வெறுப்பை உமிழ்வதாக இருந்தன. 2017 ஆகஸ்ட் 25, மியான

கடிதங்கள்
 

  சூன் 2017 காலச்சுவடு இதழில் வெளியிட்டிருந்த என் மடலை (பக்.33) சில நாட்களுக்கு முன்புதான் பார்க்க நேர்ந்தது. ஆனால், நான் எழுதிய வாசகத்தில் ‘ஆனந்தரங்கப்பிள்ளை’ என்றிருக்க, அதை ‘ஆனந்தரங்கம்பிள்ளை’ என்று ‘ம்’ போட்டு, மாற்றி அச்சிட்டிருப்பதின் காரணம் புரியவில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, நான் ‘ப்’ போட வேண்டிய கட்டாயத்தைத் தக்க ஆதாரங்களுடன் (கத்திச்) சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறேன். கடைசியாக, 2005ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் கூட நான் இதைச் சுட்டியிருப்பதைக் காண்க: www.badriseshadri.in/2005/04/blog-post.html, groups.google.com/forum/#!topic/mintamil/uFmazkaBMuQ. கட்டுரையாளரின் எழுத்தை மாற்றக்கூடாது என்னும் விதி ஒருபுறமிருக்க, உங்

கவிதை
தமிழில்: நஞ்சுண்டன்  

  கன்னடப் பத்திரிகை உலகில் லங்கேஷ் ஒரு மந்திரச் சொல். அவருடைய மூத்த மகள் கௌரி லங்கேஷ். தந்தை இறந்த பிறகு அவர் நடத்திவந்த பத்திரிகையை கௌரியே நிர்வகித்துவந்தார். செப்டம்பர் 5ஆம் தேதி மாலை பத்திரிகை அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிய கௌரியை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள். நாட்டையே உலுக்கிய படுகொலை அது. பெங்களூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட கௌரியின் உடலுக்கு லட்சக்கணக்கானவர்கள் மரியாதை செலுத்தினார்கள். மறுநாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்த முழு அரசு மரியாதையுடன் சடங்குகளின்றிக் கௌரியின் உடல் எரியூட்டப்பட்டது.  செப்டம்பர் 12ஆம் நாள் நாடு முழுவதிலுமிருந்து வந்து குவிந்த மக்கள் நாள் முழுக்க அ

கட்டுரை
கன்னடத்தில்- உமாபதி. டி  

இளம் தலைமுறையுடன் கருத்துரையாடல் செய்துவந்த அன்பான உள்ளம் - முப்பத்தி இரண்டு ஆண்டுகள் செய்தியாளனாகப் பணியாற்றி, அதில் இருபது வருடங்களைத் தில்லியில் கழித்ததால் கௌரி லங்கேஷின் தொடர்பு எனக்குச் சில காலம் நெருக்கமாகவும் வெகுகாலம் தொலைவாகவும் இருந்தது. பெங்களூரில் வேலை செய்துகொண்டிருந்தபோது தினமும் அசைன்மெண்ட் வேலையாக அவ்வப்போது சந்திக்கும் கௌரி லங்கேஷ் கர்வமில்லாதவராகவும் எளிமையான குணமுடையவராகவும் நட்பு பாராட்டக்கூடியவராகவும் இருந்தார். சாதாரணமாக ஆங்கிலப் பத்திரிகையாளர்கள் கன்னடப் பத்திரிகையாளர்களிடமிருந்து விலகித் தொலைவிலேயே நின்று, எழுப்பும் செயற்கையான வாதங்கள்மீது அவருக்குத் துளியும் நம்பிக்கை இருக்கவில்லை. எண்பதுகளில் அவர் தில்லியின் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மாஸ் கம்யூனிகே

கட்டுரை
நிலவுமொழி செந்தாமரை  

  ஒரு பாலினம், சமூகம் கட்டமைத்துள்ள பாலினத்திற் குரிய குணங்களைத் தனது பாலினத்திற்குரிய சமூகப்பங்காகவும் அதுவே சுய அடையாளம் எனவும் கொண்டு செயல்படுகிறது. பிறப்புறுப்பினைக் கொண்டு மட்டுமே தீர்மானிக்கப்படும் பாலினம், அந்தந்தச் சமூகச் சூழல்களுக்கு ஏற்ப குணங்களையும் வரையறைகளையும் கொண்டுள்ளது. புராதன சமூகத்தில் பெண் தனது குழுவினை வழிநடத்திச் செல்லுபவளாகவும் ஆளுமைக்குரியவளாகவும் விளங்குகிறாள். அங்கே தந்தையர்கள் இல்லை; மகன்கள் மட்டுமே. நிலவுடைமைச் சமூகத்தில் அந்த ஆளுமையை ஆண் தன்னுடையதாக்கிக் கொள்கிறான். பின் அந்த ஆளுமை, வீரம், துணிச்சல் போன்ற குணங்கள் ஆண்களுடையனவாகின்றன. பெண்களுக்கான குணங்களாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவை கட்டமைக்கப்பட்டன. ஆண், பெண் என இந்த இரண்டு பாலினங்களையும் தாண்

கட்டுரை
வே. வசந்திதேவி  

  நீட் பல வகைப்பட்ட குமுறல்களின் குவிமையமாகி இருக்கிறது. அனிதாவின் ஏற்றுக்கொள்ளவியலா மரணம் உணர்ச்சிக் கொந்தளிப்பைச் சேர்த்திருக்கிறது. தாங்கள் ஏமாற்றப்படுகிறோம், வஞ்சிக்கப்படுகிறோம் என்ற உணர்வில் ஒரு புதிய தமிழின உணர்வு பிறந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சமீபகால வரலாற்றில் தீர்க்கமான கட்டத்தில் நிற்கிறோம். ஆனால், பிரச்சனையின் பல ஆழமான பரிமாணங்களைப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்ற ஐயம் கிளம்புகிறது. நீட், மருத்துவக் கல்வி குறித்தது மட்டுமல்ல. தமிழ்நாட்டின், இந்தியாவின் கல்வி முழுவதுடனும்  தொடர்புடையது. இத்தனை காலம் மறைக்கப்பட்டிருந்த உண்மைகளை வெளிக்கொணர வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நீட் அவசியம் எதிர்க்கப்பட வேண்டும். ஆனால் புதிய அநீதியான நீட்டுடன், பழைய அநீதிகளையும் சேர்த்து எத

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

  குறளாசிரியரான திருவள்ளுவர் பறையர்குலப் பூசாரி வகுப்பைச் சேர்ந்தவர் என்ற வழக்காறு உள்ளூர் அளவில் இருந்துவந்தது. குறளை அச்சேற்றிய ஐரோப்பியர்கள் அதை அறிந்திருந்தாலும் ஏட்டில் இருந்திராத காரணத்தால் வள்ளுவர் வரலாறு இதுதானென்று அதிகாரப்பூர்வமாக வரைந்திட வில்லை. அதேவேளையில் உருப்பெற்றுவந்த அச்சுப் பண்பாட்டின் வழியாகத் தமிழின் முதன்மை அடையாளமாகக் குறள் நிலைபெறத் தொடங்கியது. இதற்கும் பிறகே சுதேச சாதியினர் ஐரோப்பியர்களோடு சேர்ந்தும் தனித்தும் குறள் பதிப்பில் ஈடுபட்டனர். இவர்தம் வருகையின் பின்னணியில்தான் அதுவரை வழங்கப்பட்டுவந்த வழக்காற்றிலிருந்து மாற்றான வள்ளுவரின் பிறப்புக் கதை ஒன்று எழுத்துப் பிரதிகளில் வளர்த்தெடுக்கப்பட்டது. அதாவது வள்ளுவர் பிராமண ஆணுக்கும் பறையர்குலப் பெண்ணுக்கும் பிறந்தவர

கட்டுரை
 

  விரிந்து பரந்த வேப்ப மரங்களால் சூழப் பட்ட மைதானத்தையுடைய அரசுப் பள்ளிக் கூடம். ஓடியாடி விளையாடும் குழந்தைகள். கட்டடங்களுக்குள்ளே வகுப்பறைகள். ஆங்காங்கே மரத்தடியில் அமர்ந்து பயிலும் மாணவர்கள். இது அரசுப் பள்ளிகளின் ஒரு பொதுச் சித்திரம். இங்கேதான் மீனாட்சி படித்தாள்; சங்கீதா படித்தாள்; ஷெரீஃபும் படித்தான்; இவர்களெல்லாம் மருத்துவம் படிக்கும் ஆர்வத்துடன் அதற்கான பிரிவைத் தேர்ந்தெடுத்துப் பயின்று, பொருளாதார வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மருத்துவம் படிக்க முடியாதவர்கள். மீனாட்சி தற்போது அரசு மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்றுகிறார். மற்றொரு மாணவர் மருந்துக்கடை வைத்திருக்கிறார்.  ஒவ்வோர் ஆண்டும் இப்படி ஏராளமான அரசுப்பள்ளி மாணவர்கள் தகுந்த மதிப்பெண்ணோடு மருத்துவப்படிப்புக்கெ

கதை
தைலா ராமானுஜம் ,தமிழில்- அ. முத்துலிங்கம்  

அம்மா, ஹோட்டல் தொலைபேசி எண்ணை எந்த நேரமும் ஞாபகமாக உன் கைப்பையில் வைத்திரு. உன்னை எனக்குத் தெரியும். விட்டுவிட்டு எரியும் நியோன் விளக்கு அம்புக்குறி இருந்தால்தான் உன்னால் கழிவறையைக் கண்டுபிடிக்க முடியும்.” “மகளே, இதற்கு முன்னர் நான் வெளி நாட்டுக்குப் பயணமே செய்ததில்லையா?” “அம்மா! ஆசியா, புடாபெஸ்ட் இல்லை; அங்காரா இல்லை. மன்னிக்க வேண்டும் டாக்டர் விபிக்கா அவர் களே, சியோல் விமான நிலையத்தில் சில மணிநேரம் தங்கியதை ஆசியப் பயணத்தில் சேர்க்க முடியாது.” விபிக்காவுக்குத் தன்னுடைய மகளின் அதிகாரமான குரலைத் தொலைபேசியில் கேட்கப் பிடிக்கும். எல்லாம் அறிந்தவள். வாஷிங்டன் தெருக்களில் உலக நடப்பை மெத்தத் தெரிந்துகொண்ட ஒருவரின் இளங்குரல். குழந்தையாக இருந்தபோது பட்டாணிக் களியை அ

சுரா நினைவுகள் 12
 

  1999 ஜனவரி 21 முதல் மே ஒன்று வரை நூறு நாட்களில் சுந்தர ராமசாமி எழுதிய நாட்குறிப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புகள் இவை. அறுதிப் பெரும்பான்மையும் முழுயுமையான குறிப்புகள். வரிகள் நீக்கப்பட்ட ஓரிரு இடங்களில் புள்ளி வைத்துச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். இக்குறிப்புகள் அனைத்தும் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இரண்டாவது மகள் தைலா ராமானுஜத்துடன் வசிக்கையில் எழுதியவை. இக்குறிப்புகளை கால வரிசைப்படி தொகுக்கவில்லை. -   கண்ணன் 5.2.99 வெள்ளிக்கிழமை சற்றும் எதிர்பார்க்காமல் மூர்ச்சை போட்டு கீழே விழுந்தேன். அப்போது மணி 11.30 இருக்கலாம். ஒரு சில வினாடிகள். மன அதிர்ச்சி மிக அதிகம். தலை மேஜையில் மோதிற்று. கமலா தைலாவுக்கு போன் செய்து சொன்னாள். தைலா வந்து டாக்டர் டேவிட் டொலனாஸ்கிய

சுரா நினைவுகள் 12
அ.கா. பெருமாள்  

  சுந்தர ராமசாமி தன் மூத்த மகள் சௌந்திராவின் திருமண அழைப்பிதழை முக்கியமான சிலருக்கு நேரடியாகப் பார்த்துக் கொடுக்க வேண்டும் என்றார். அவர்களில் பெரும்பாலோர் சு.ராவை விட வயதில் மூத்தவர்கள்; சு.ரா.வின் தந்தை அல்லது மாமா வெ. நாராயணனின் நண்பர்கள். ஒரு வெள்ளிக்கிழமையில் ஹாஜி நூர்முகம்மது, டி.எஸ். ராமசாமி பிள்ளை, தியாகி பி.எஸ். மணி எனச் சிலரின் வீடுகளுக்கு அழைப்பிதழைக் கொடுக்கப் போனோம். (1976) நூர்முகம்மது வீட்டிற்குத்தான் முதலில் போனோம். அவர் வழக்குரைஞர்; சுதந்திரப் போராட்டத் தியாகி, சோமாலியா நாட்டின் உச்சநீதிமன்ற  நீதிபதியாக இருந்தவர். சு.ரா அவரிடம் பேசியபோது, 40களில் நாஞ்சில் நாட்டிற்கு வந்த இலக்கிய ஆளுமைகள் பற்றிய அபூர்வமான விஷயங்கள் வெளிப்பட்டன. வால்ட் விட்மனின் கவிதைகளை ‘கொய்

சுரா நினைவுகள் 12
சுந்தர ராமசாமி  

  தற்கொலை செய்துகொண்டுவிடும் உத்தேசத்தில் பலதடவை நான் கன்னியா குமரி சென்றிருக்கிறேன். போகிறபொழுதே அவ்வாறு செய்துவிடத் துணிந்துவிட மாட்டேன் என்பது என் அடிமனசுக்குக் கொஞ்சம் தெரிந்திருக்கும். இந்தப் பிரக்ஞை உள்ளூர இருந்தபடியால்தான் புறப்பட்டுச் செல்வதே சாத்தியமாக இருந்தது என்றும் சொல்லலாம். இருந்தாலும் மெய்யாக தற்கொலை செய்துகொள்ளுகிறவன் போகிற தோரணைக்குப் பழுதில்லாமல் போவேன். கால் ஜோடுகள் கிடையாது. தலைப் பரட்டையாக இருக்கும். கைக் கடிகாரம் கட்டிக்கொள்வதில்லை. தாங்கமுடியாத துக்கம் இரண்டு மூன்று நாட்கள் பிடுங்கித் தின்கின்றபொழுது, காரணம் தெரியாத கவலைக்கு நிவர்த்தி மார்க்கமும் இல்லாத நிலையில் தான் கடலின் நினைவு வரும். அந்நாட்களில் சவரம் செய்துகொள்ள அக்கறைப் பட்டிருக்கமாட்டேன். ஆதலால் கரியைப்

சுரா நினைவுகள் 12
யுவன் சந்திரசேகர்  

  ‘பசுவய்யா’ என்ற பெயரில் சுந்தர ராமசாமி எழுதிய முதல் கவிதை ‘உன் கை நகம்’ மார்ச் 1959இல் எழுத்து பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. ஐம்பத்திரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. எழுதப்பட்ட நாட்களில் இருந்த அதே புதுக் கருக்குடன், கவித்துவக் கனத்துடன், ரகசியத்துடன் இன்றும் இருக்கிறது. சுந்தர ராமசாமியின் மிகப் பல கவிதைகள், முதல்முறை வாசித்தபோது இருந்த அதே புத்துணர்ச்சியை இன்றும் தருவனவாக உள்ளன. அரை நூற்றாண்டு கடந்தும் செலாவணித் தன்மை கொண்டவை என்று சொல்லத்தக்க முன்னோடிக் கவிதைகள் தமிழில் மிகவும் குறைவு. தமிழ் நவீன கவிதையின் ஆரம்பகாலச் செயல்பாட்டாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி, கிட்டத் தட்ட நாலு தலைமுறைக் கவிஞர்களுடன் இணைந்து, அவர்களுக்கு நிகராகப் பயணம் செய்திருக்கிறார். அவரு

சுரா நினைவுகள் 12
சுந்தர ராமசாமி  

  சி. மணி, எழுத்து பத்திரிகையில் தோன்றித் தெரிய வந்தவர். எழுத்து பெருமைப்பட்டுக் கொள்ளும் கவிஞர். இவருடைய ‘நகரம்’  எனும் நீண்ட கவிதை வெளியானபோது எழுத்து ‘புதுக்கவிதையில் ஒரு மைல் கல்’ என்று தலையங்கம் எழுதிற்று. சி. மணியைக் கருத்துலகக் கவிஞர் என்று சொல்லலாம். வாழ்க்கை, அதன் எளிமையை இழந்து சிக்கலாகிவிட்டது இவரைச் சங்கடப்படுத்துகிறது. சங்ககாலக் கவிதைகளைப் படிக்கிறபோது அன்றைய வாழ்க்கை எத்தனை எளிமையாக இருந்திருக்கும் என்று நம்முள் ஒரு கற்பனை எழும். அதுபோன்ற ஓர் வாழ்க்கை முறை - சிக்கலற்ற வாழ்க்கை முறை மணிக்கு உவப்பாக இருந்திருக்குமோ என்று அவர் கவிதைகளைப் படிக்கும்போது எனக்குத் தோன்றும். மற்றப்படி இளம் பெண்களின் அழகும் பகட்டும் இன்றுபோல் அன்றும் அவரை வருத்தக்கூடு

சுரா நினைவுகள் 12
நாகரத்தினம் கிருஷ்ணா  

  நவீன தமிழ் இலக்கியம் என்கிறபோது கவிதைக்கு பாரதியும் சிறுகதைக்கு புதுமைப்பித்தனும் எப்படியோ, அப்படி நாவலுக்கு சுந்தர ராமசாமி. தமிழ்ப் படைப்பிலக்கிய மும்மூர்த்திகள் என்று இவர்களைஅடையாளப்படுத்த முடியும். மூவரும் அவரவர்துறையில் ‘ணீஸ்ணீஸீt-ரீணீக்ஷீபீவீstமீ’s. கவிதை, கட்டுரை, சிறுகதை வடிவத்தையும் மிக நேர்த்தியாகவே சுரா கையாண்டவர். பகுத்துணரக்கூடிய, சீர்தூக்கிப் பார்க்கவல்ல வாசகர்களையும் அதற்கிணையான பாராட்டுதல்களையும் குவித்துக்கொண்டதைப் போலவே, நேர்மையற்ற விமர்சகர்களின் தாக்குதலுக்கு ஆளானதிலும் அவருக்கு நிகர் அவர்தான். இக்கட்டுரை, திறனாய்வு அல்ல. ஒரு சராசரி வாசகனுக்குச் சற்றுக் கூடுதல் வாசிப்பு அனுபவ அடிப்படையில் சுரா என்ற இலக்கியத் தச்சனை உள்வாங்கிக்கொண்டதன் சுருக்கம். தீவிர இ

சுரா கடிதங்கள்
 

  நாகர்கோவில் 24.9.1981 அன்புள்ள முகமது அலி, உங்கள் 16.9.81 கடிதம் கிடைக்கப்பெற்று மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் இங்கு வந்ததும் நாம் பேசிக்கொண்டிருந்ததும் பின்னர் நாமிருவருமாக பஸ் நிலையத்திற்குச் சென்றதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நீங்கள் முன்னரே எனக்குக் கடிதம் எழுதியிருக்கலாம். அது எனக்கு சந்தோஷத்தைத் தந்திருக்கும். ஏப்ரல் மாதம் வாக்கில் நான் குடும்பத்தினருடன் பெங்களூர் வந்திருந்தேன். அப்போது குழந்தைகளுக்கு விடுமுறை நாட்கள். மைசூர், சிரவணபெலகோலா, ஹபிட் போன்ற இடங்களைப் போய்ப் பார்த்தோம். அப்போது நான் நிம்மதியாக இருக்கவில்லை. சிறு விஷயங்கள்கூட அதிக பதற்றத்தை என்னிடம் ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அப்போது நான் உங்களைச் சந்திக்காததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். விமர்சனத்

அஞ்சலி
ஸ்டாலின் ராஜாங்கம்  

  கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்திய குடியரசுக் கட்சியின் தமிழக முன்னோடிகளில் ஒருவரான டாக்டர். அ. சேப்பன் தன்னுடைய எண்பதாவது வயதில் சென்னையில் மரணம் அடைந்தார். இங்கு பலருக்கு இந்திய குடியரசுக் கட்சி என்பதே தெரியாதிருக்கும் நிலையில் சேப்பனோ அவர் மரணமோ தெரியாமல் போய்விட்டதில் எந்த வியப்பும் இல்லை. இருபதாண்டுக் காலம் அகில இந்தியக் கட்சி ஒன்றின் தமிழகச் செயலாளராக இருந்த சேப்பன் மரணம் பற்றிச் செய்தித்தாள்கள் உள்ளிட்ட ஊடகங்களில் சிறு செய்தியும் பதிவாகவில்லை. தலித் அரசியல் வரலாறு என்றால் 20ஆம் நூற்றாண்டின் முதல் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளிலேயே மட்டும் நிறுத்திக்கொள்ளும் தலித் வரலாற்றியலும் சேப்பன் போன்றோர் குறித்து எந்த ஓர்மையும் கொண்டிராமல் போனதுதான் சோகம். அம்பேத்கரின் திட்டப்படி அவர் மரண

உள்ளடக்கம்