தலையங்கம்
 

  தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஆலயங்களில் அர்ச்சகர்களாக நியமித்ததன் வாயிலாக கேரள அரசு சமூக நீதிக்கான முன்னெடுப்பு களில் ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. பிணராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக அணி அரசின் நடவடிக்கை இன்னொன்றையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு ஜனநாயக அமைப்பில் சமத்துவத்தை நிலைநிறுத்த எதை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கான பதிலைச் சொல்லியிருக்கிறது. வெற்று மரபுகள் அல்ல; மக்களுக்கு உரிமைகளை வழங்கும் அரசியல் சாசனமே முன்னிலைப் படுத்தப்பட வேண்டியது என்பதைச் செயல்பாட்டின் மூலம் நிறுவியிருக்கிறது. அனைத்துச் சாதியினரும் ஆலயங்களில் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை 1970ஆம் ஆண்டு தமிழகமே முதலில் உருவாக்கியது. ஆனால் சட்டம் போடப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் நடைமுறைப்படுத

EPW–பக்கங்கள்
 

    பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் பாலியல்  வன்முறைக்காளாகும் நிகழ்வுகள் குழந்தைப் பாதுகாப்புச் சட்டங்களிலுள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தியுள்ளன. 2017 செப்டம்பர் 8ஆம் தேதி குருகிராமிலுள்ள ரேயான் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற பணக்காரப் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த ஏழு வயதான சிறுவன் பள்ளிக் கழிவறையில் கொல்லப்பட்டிருந்தான். இதையடுத்துப் பள்ளிப் பேருந்தின் நடத்துநர் கைது செய்யப்பட்டார். பாலியல் வன்முறைக்குக் குழந்தையை ஆட்படுத்த நடத்துநர் முயன்றபோது குழந்தை எதிர்த்ததால் கொன்றதாகச் சொல்லப்படுகிறது. பள்ளிக்கூட வளாகத்தில் பல பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததும் பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ளாததும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அரசமைப்பு க

EPW–பக்கங்கள்
 

p>  உலக முதலாளித்துவ அமைப்பில் சுரண்டப்படும் ஒரு நாட்டின் முதலாளித்துவச் செயல்முறையைப் புரிந்துகொள்ள ‘மூலதனம்’ முதல் பாகமும் மார்க்ஸின் பிற எழுத்துக்களும் நமக்கு அளிப்பது என்ன? கார்ல் மார்க்ஸின் நூல் ‘மூலதனம்: முதல் பாகம்’ ஜெர்மனியிலுள்ள ஹம்பர்க் நகரில் வெளியாகி 2017 செப்டம்பருடன் 150 ஆண்டுகளாகின்றன. (முதல் பாகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1887இல்தான் முதன்முறையாக வெளியானது. வெளிநாட்டு மொழியில் முதன்முறையாக ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது 1872இல்.) உலக முதலாளித்துவ அமைப்பில் ஒரு சுரண்டும் நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சி முறையைப் புரிந்துகொள்வதற்காகப் பொருள்முதல்வாத இயங்கியல் முறை முதன்முறையாக வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக 1867இல் மூலதனம் வெளியானமை

கடிதங்கள்
 

  அக்டோபர் தலையங்கம் நாட்டுநடப்பை வெகுத் தெளிவாக அலசியிருக்கிறது பாகுபாடின்றி. அதில் இந்தியாவின் தனித்துவமாகிய வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்புடைய முகம் மாறிவருவதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. கௌரி லங்கேஷுக்கு எதிரான வன்முறையில் ஊடகவியலுக்கு எதிரான போராட்டமும் அதன் விளைவாக இழந்த உயிரும்... நிச்சயம் அந்த ரத்தம் நியாயம் கேட்டுப் போராடுவது எங்கள் மனத்தினில் ஓலமிடுகிறது. எந்த விமர்சனத்தையும் எதிர்கொண்டு தன் நிலை உணர்ந்து மாற்றிக்கொள்வது நல்லாட்சி நிகழ ஊன்று கோலாய் அமையும் என்ற அடிப்படை உண்மையறியாத அரசியல் இன்று நிகழ்வதை ‘அறிவால் சூழ்ந்தது மரணம்’ தலையங்கம் சுட்டிக்காட்டுகிறது. - ஆர் ஜவஹர் பிரேம்குமார் பெரியகுளம் ‘அறிவால் சூழ்ந்தது மரணம்’. இந்தியாவில் தொடர்ந்து மரணச்

பதிவு
உத்ரா  

  மதுரைப் புத்தகக் காட்சியையொட்டி காலச்சுவடு பதிப்பகம் ஐந்து நூல்களை வெளியிட்டது. அந்த நூல்களில் ரீனா ஷாலினி மொழிபெயர்த்த எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘மஞ்சு’ நாவலைத் தவிர மற்ற நான்கு நூல்களும் அபுனைவு நூல்கள். தலித் சிந்தனையாளர் சித்தலிங்கையாவின் தன் வரலாற்று நூலான ‘வாழ்வின் தடங்கள்’ இரு ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு பதிப்பாக வெளிவந்த ‘ஊரும் சேரியும்’ என்ற தன் வரலாற்று நூலின் தொடர்ச்சி ஆகும். தமிழ்ப் பதிப்புத் துறை முன்னோடிகளுள் ஒருவரான சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்புரைகள், ‘தாமோதரம்’ என்னும் பெயரில் ப. சரவணனால் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது. பா. வெங்கடேசன் இசை ஆகியோரின் கட்டுரைத் தொகுப்புகளும் வெளியிடப்பட்டன. விழாவின் தொடக்கமா

மதிப்புரை
இளங்கோ கிருஷ்ணன்  

விதானத்துச் சித்திரம் (கவிதைகள்) ரவிசுப்பிரமணியன் வெளியீடு: போதிவனம் பதிப்பகம், அகமது வணிக வளாகம், தரைத்தளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை இராயப்பேட்டை & 600 014 போன்: 99400 45557 ரூ.100 உணர்வின் சொல் வடிவம்தான் கவிதை என்றால், அந்த உணர்வில் கரைவதுவே கவிதை வாசிப்பு. ‘கரைவதும் அனுபவமாவதும் தவிர வேறென்ன இருக்கிறது கவிதையில்’ என்ற லா.ச.ரா வின் வரிகளில் உண்மை இல்லாமல் இல்லை. உணர்வுதான் கவிதை என்றால் பிரவாகித்தல், தணிதல் என்ற இரு பண்புகள் கவிதைக்கு எப்போதும் உள்ளன. மேற்கின் மரபு அதைக் கிளாசிஸம் என்றும் ரொமாண்டிசம் என்றும் பகுக்கிறது. நம் மரபிலும் இந்த இரண்டு பண்புகளும் இருக்கின்றன. சங்க இலக்கியங்கள் கட்டுப்படுத்தப்பட்ட உணர்வுகளால் ஆன செவ்வியல் என்றால் பக்தி இலக்கியம் கட்டுக்கடங்காத உண

எதிர்வினை
கிரீஷ்  

தமிழ்நாட்டில் 1986இல் முதன்முதலாக எச்ஐவி / பாலியல் நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது; தொடர்ந்து 1993இல் எயிட்ஸ்க்கு எதிரான திட்டங்களும் தொடங்கப்பட்டன. அரசுத் திட்டத்தின்கீழ் அப்போது எச்ஐவியால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர் களாக லாரி ஓட்டுநர்களும் பாலியல் தொழிலாளர்களும் ஆண்களுடன் உறவுகொள்ளும் ஆண்களும் (MSM- Men who have sex with men) அடையாளப்படுத்தப்பட்டார்கள். அரசின் அந்த எச்ஐவி / எயிட்ஸ்க்கு எதிரான திட்டத்தைச் செயல்படுத்த ஏற்கெனவே இருந்த என்ஜிஓக்களும் இந்தத் திட்டத்திற்காகவே உருவாக்கப்பட்ட என்ஜிஓக்களுமே வேலை செய்யத் தொடங்கினார்கள். அவர்களுக்குப் பாலியல் தொழிலாளர்களையும் லாரி டிரைவர்களையும் அணுகுவது ஒப்பீட்டளவில் எளிதானதாகவும் பொதுச் சமூகத்திடம் தங்கள் அடையாளத்தை மறைத்து வாழும் மக்களான ஆண

பதிவு
கே. பிரபு  

  ஆத்மாநாம் அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விருது விழா செப்டம்பர் 30ஆம் தேதி மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நிகழ்ந்தது. ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் ‘நாடா கொன்றோ காடா கொன்றோ’, பாரதியின் ‘தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்’ ஆகிய பாடல்களைப் பாடித் தமிழிசையுடன் ரவிசுப்ரமணியன் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ‘ஆத்மாநாம் அறக்கட்டளை’யின் தமிழ்க் கவிதை விருதுக்கான தேர்வுக்குழு அறிக்கையை க. மோகனரங்கனும் மொழிபெயர்ப்புக் கவிதை விருதுக்கான ஆர். சிவகுமாரின் தேர்வுக்குழு அறிக்கையைக் கிருஷ்ண பிரபுவும் வாசித்தனர். எழுத்தாளர் பெருமாள்முருகன் தனது தலைமை உரையில் ‘ஆத்மாநாம் அறக்கட்டளையின் முன்னெடுப்பு தமிழ்ச் சூழலில் ஒரு கலாச்சார அடையாளமாக மாறிக்க

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

  1950களில் அம்பேத்கரிய லட்சியவேகத் தோடு செயற்படவந்த தலித் செயற் பாட்டாளர் ஒருவரின் கடைசிக்கால எண்ணங்களை அண்மையில் களஆய்வொன் றின்போது தெரிந்துகொள்ள வாய்ப்பேற்பட்டது. அதுவரையிலும் தான் ஏற்றிருந்த நம்பிக்கைகளுக்குச் சமூகமும் குடும்பமும் நெருக்கடி தருவதாக மாறியபோது அவற்றோடு சமரசம் காணவேண்டி வந்ததை எண்ணி அவர் பலகாலம் புழுங்கினார். படித்துப் பெரிய ஆளாக வருவதும் சமூக மேம்பாடுதான் என்று கருதிவந்த அவரின் மகன் முழுநேரக் குடிகாரராய் மாறிப்போனதைப் பார்த்து அவனுக்குப் படிக்கக் கிடைத்த மருத்துவ சீட், அதே ஒதுக்கீட்டில் வேறொரு தலித் மாணவனுக்குக் கிடைத்திருந்தால் அந்த வேறொருவரின் குடும்பத்திற்காவது வழி பிறந்திருக்குமே என்று சொல்லிச்சொல்லிக் கடைசிவரை வருத்தப்பட்டிருக்கிறார். லட்சியவாத முனைப்போடு செயல்ப

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

  கடவுளின் பாதக மலம் என்று மெய் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்; சாமியார்களுக்குப் பாதபூஜை செய்து வணங்குகிறார்கள்; அவர்களின் பாதங்களில் விழுந்து ஆசி பெறுகிறார்கள்; ஆனால் பிரம்மாவின் பாதத்தில் பிறந்தவர்கள் என சொல்லப்படுபவர்களை மட்டும் பாதகர்களாகப் பார்ப்பது ஏன் என்று புரியவில்லை. நாட்டையும் வீட்டையும் சுத்தமாக்கி, சுகாதாரமானதாக்கி, அருஞ்சேவை செய்பவர்களைப் பாதக மலமாகப் பார்ப்பது, நடத்துவது எவ்வளவு பெரிய கொடுமை? உலகிலேயே உன்னதமான பண்பாடு, கலாச்சாரம் நம்முடையது என்று வாய்கிழியப் பேசுகிறார்கள் சிலர். இந்தியா தத்துவங்களின் தாயகம், தர்க்கங்களின் வாழ்விடம், மதங்களின் பிறப்பிடம், மறுமையின் நுழைவாயில், எங்களிடம் இல்லாதது எதுவுமில்லை என்றெல்லாம் மார்தட்டிக்கொள்கிறார்கள். வேதங்களும் உபநிடதங்களும் இதி

கட்டுரை
பி.ஏ. கிருஷ்ணன்  

    ஜவகர்லால் நேரு சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் தி போர்மெண்ட் என்ற பத்திரிகையாளரிடம் பேட்டி கொடுக்கும்போது சொன்னார்: “எங்களுக்கு (புரட்சி நடந்த காலகட்டத்தில்) அக்டோபர் புரட்சிபற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் மார்க்சிய சோஷலிசத்தின் தாக்கத்தால் அது எழுந்தது என்றும் லெனினின் தலைமையில் அது நடந்தது என்றும் தெரியும். மார்க்சிசம் என்றால் என்னவென்று தெரியாது; ஆனால் எங்கள் ஆதரவு லெனினுக்கும் (அவரோடு போராடிய) மற்றவர்களுக்கும்தான்.” ரஷ்யப் புரட்சி யுகப் புரட்சிதான் என்பதில் ஏகாதிபத்தியவாதிகளுக்கே அந்தச் சமயத்தில் ஐயம் இல்லை. அவர்களை அதன் எளிதான வெற்றி குலை நடுங்கவைத்தது. உலகையே அது மாற்றிப் போட்டுவிடக்கூடும் என்று அஞ்ச வைத்தது. 1918இல் வந்த மாண்டேகு செம்ஸ்போர்ட் அறிக்க

கட்டுரை
க. திருநாவுக்கரசு  

  கார்ல் மார்க்ஸும் பிரடெரிக் எங்கெல்ஸும் சேர்ந்து எழுதிய கம்யூனிச அறிக்கை வெளியாகி 170 ஆண்டுகள் நிறைவடைய ஒரு சில மாதங்களே இருக்கின்றன. மார்க்ஸின் மூலதனம் நூல் வெளியாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. உலக வரலாற்றுப் போக்கின் மீது பெரும் செல்வாக்குச் செலுத்திய 10 நூல்களின் பட்டியலை யார் தயாரித்தாலும் அதில் இந்த இரண்டு நூல்களுமே இடம்பெறும். மார்க்ஸின் சிந்தனையால் உந்தப்பட்ட லெனின் தலைமையில் நடந்த ரஷியப் புரட்சி நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. இந்த  நூறாண்டு காலத்தில் பொதுவுடைமைத் தத்துவத்திற்கு, குறிப்பாக மார்க்சீயத்திற்கு பல்லாயிரம் முறைகள் மரணக்குறிப்புகள் எழுதப்பட்டுவிட்டன. இந்த விஷயத்தில் முதலாளித்துவ அறிவுஜீவிகளும் ஊடகங்களும் சலித்ததேயில்லை. லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி அரசி

நேர்காணல்
 

  தக்கலை ஹலீமா எனும் புனைபெயர் கொண்ட ஹைதர் அலி, தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா அசோசியேஷன் அமைப்பின் தலைவர். ஹெச்.ஜி. ரசூலின் பால்யகாலத் தோழர். ஹெச்.ஜி. ரசூலுக்கும் தக்கலை ஜமாஅத்திற்கும் இடையில் நேர்ந்த பிரச்சினைகள் குறித்தும் அவை தீர்வானவிதம் குறித்தும் 17 ஆகஸ்ட் 2017 அன்று தக்கலை ஹலீமாவின் வீட்டில் பதிவுசெய்யப்பட்ட நேர்காணல். கவிஞர் ரசூலுடனான நட்பு குறித்துக் கூறுங்களேன்? எனக்கும் ரசூலுக்கும் ஐந்து வயது வித்தி யாசம். ரசூல் நான்கு வயது குழந்தையாக இருக்கும்போதே தெரியும். ரசூலின் வீட்டிற்கு எதிர் வீட்டில்தான் என் மாமா குடியிருந்தார். மாமாவிற்குக் குழந்தைகள் இல்லாததால் என் பால்யம் அவ்வீட்டில் கழிந்தது. ரசூலின் வீடு விசாலமான முற்றத்தைக் கொண்ட அமைப்புடையது. ரசூல், அவரது அக்கா, நான் மூவர

கட்டுரை
எம். அண்ணாதுரை  

  “சண்டையிடாமல் ஒதுங்கியிருப்பதைவிட, சில நேரங்களில் சண்டையிட்டு அடிவாங்கிக்கொள்வதில் அதிக பலன் உண்டு.” - ஜார்ஜ் ஆர்வெல் ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு எல்லையில், பிரான்ஸ் நாட்டைஅக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் வாக்கெடுப்பு வழியாக ஆதரவைத் திரட்டிக் காட்டி, அமைதியான முறையில் தனிநாடு அமைக்க முயன்ற காட்டலோனியா மக்களின் எழுச்சி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் இலக்கை எட்டினாலும் எட்டா விட்டாலும் காட்டலோனிய மக்களின் எழுச்சி, மொழியாலும் பண்பாட்டு அடையாளங்களாலும் வேறுபட்ட மக்களைக் கொண்ட மற்ற கூட்டாட்சி நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமையக்கூடும்.யொட்டி அமைந்துள்ள முக்கோண வடிவப் பகுதி காட்டலோனியா. அது ஸ்பெயின் நாட்டின் பதினேழு தன்னாட்சிகளில் ஒன்று. ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்க்கு

ஆவண சாட்சியம்
சேரன்  

ஈழத்தில் இந்தியப்படை, இந்திய சமாதானம் காக்கும் படை (Indian Peace Keeping Force-IPKF) என்ற பெயரில் வந்திறங்கியதும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற ஆவணத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கையெழுத்திட்டதும் முப்பதாண்டுகளுக்கு முன்பு. 1987 ஜூலையிலிருந்து 1990 மார்ச் வரை ஒரு லட்சம் இந்தியப் படையினர் ஈழத்தின் வடகிழக்கில் தமிழ்மக்களும் முஸ்லிம்மக்களும் வாழ்கிற பகுதிகளில் முகாமிட்டிருந்தார்கள். அந்தக் காலப் பகுதியில் நடந்த அவலங்கள், படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், வதைகள் பற்றிய வாய்மொழிக் கதைகளும் வாக்குமூலங்களும் இருந்தாலும் எழுத்துப் பதிவுகளும் ஆவணங்களும் மிக அதிகமாக இல்லை. தகவல்கள், செய்தி அறிக்கைகள், இலக்கியப் பதிவுகள் பல உள்ளன. எனினும் இவை

ஆவண சாட்சியம்
சேரன்  

    *அவர்களின் அகத்தில் நிலம் இருந்தது. அகழ்ந்தனர்.  -போல்  செலான். 1987ஜூலை மாதத்தின் இறுதி நாட்கள். இந்தியப் படை யினர் பெருங்கவச வாகனங்களில் பல்லாயிரக்கணக்காக வடக்கு நோக்கி வந்துகொண்டிருந்தபோது யாழ்ப் பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நான் சென்றேன். என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றவர்கள் Saturday Review வார இதழின் ஆசிரியர் காமினி நவரத்னவும் இன்னொரு நெருங்கிய நண்பரும் (அவருடைய பெயரை இப்போதைக்குத் தவிர்த்துவிடுகிறேன்.) காமினி நவரத்ன இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர்; 1983 ஜூலைப் படுகொலைகளின்போது தடைசெய்யப்பட்டிருந்த சற்றர்டே றிவியூ இதழ் மறுபடியும் ஒழுங்காக வெளிவரக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர். பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை ஏற்கப் பலரும் தயங்கிய வேளை துணிவுட

ஆவணச் சாட்சியம்
 

  வல்வை ந. அனந்தராஜ், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இப்போது வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சில் பணிப்பாளராக இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் கல்லூரி அதிபராகப் பல பள்ளிக்கூடங்களிலும், கல்வி அதிகாரியாகவும் பணியாற்றியவர். கல்வித்துறைச் செயற்பாட்டாளர். ‘வல்வைப் படுகொலை / India’s Mai Lai: Massacre at Valvettithurai’ நூலை எழுதியவர், அதற்கு முன்பாகவே இலங்கைப் படையினர் வல்வையில் நடத்திய ஊறணிப் படுகொலைகள் பற்றியும் ஆவணப்படுத்தியவர். இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்திலிருந்தபோது வல்வெட்டித்துறைப் பிரஜைகள் குழு என்னும் சிவில் சமூக நிறுவனத்தை உருவாக்கித் தமிழ் மக்களுக்கும் இந்தியப் படைகளுக்கும் முரண்பாடுகள் எழுகிறபோதெல்லாம் சமாதானத்தை உருவாக்கப் பாடுபட்டவர். இந்தியப் பட

கவிதைகள்
 

  நிகழ் ஒவ்வொரு நாளும் இரவு கவிகையில் ‘அவர்கள்’ வருவர். ஒழுங்கை முகப்பில் நாய்கள்குரைக்கையில் ‘அவர்கள்’ வரவைத் தெரிந்து கொள்வோம் விளக்கை அணைத்து வாசலைப் பார்த்து மௌனமாயிருப்போம் வேலியோரத்தில் நிற்பதும் நடப்பதுமாய் அவர்களின் பவனி தொடரும் புரியாத மொழியில் பேசிய போதும் அவர்கள் கேட்பது நமக்குப் புரியும்: பெண் நகை புலி. ஒலியடங்கிய சற்று நேரத்தில் எங்காவது வீரிட்ட அழுகையோ வேட்டொலியோ கேட்டபடி தூங்கிப் போவோம் விடியும் வரையும் நிம்மதி மறந்து உறங்குவதே போல் வாழவும் தெரிந்துவைத்திருக்கிறோம். - எஸ்.கே. விக்னேஸ்வரன்   1987 - ‘அமைதி’ பின்னரும் நான் வந்தேன் நீ வந்திருக்கவில்லை காத்திருந்தேன் அன்றைக்கு நீ வரவேயில்லை, அப்புறம் சுவாலை விட்டெரிகிற தீயொடு

சிங்களமொழிக் கதை
இஸுரு சாமர சோமவீர,தமிழில்:எம்.ரிஷான் ஷெரீப்  

விதுரன் போய்விட்டான். நான் கதவை மூடியதன் பிறகும் நான்கைந்து நிமிடங்கள் கழித்தே அவனது காரை இயக்கும் சத்தம் கேட்டது. இயங்க ஆரம்பித்த பிறகும் மேலும் ஓரிரு நிமிடங்கள் கழித்தே அது நகர்ந்தது. எனக்குக் கேட்ட விதத்தில் அவன் வாயிற்கதவை மூடவில்லை. நான் கோப்பி ஒன்றைத் தயாரித்துக் குடித்துவிட்டு விறாந்தையில் கொஞ்சம் நடந்தேன். சாப்பாட்டு மேசையைத் துப்புரவாக்கிவிட்டுப் பீங்கான் தட்டுகளைக் கழுவினேன். இப்போது நேரம் விடிகாலை ஒன்று இருபது. எனக்கு தூக்க மயக்கம் இல்லை. புதிதாக வாங்கிய நீலப் பூச் சட்டை கட்டில்மீது சுருண்டு கிடக்கிறது. இதோ நான் எழுதுகிறேன். நீண்ட காலத்திற்குப் பிறகு எழுதுகிறேன். எழுதுமளவிற்கான தேவையையும் விடுதலையையும் இப்போது உணர்கிறேன். நான் அந்தச் சட்டையை வாங்குவதற்கென்றே நேற்று அரை நாள் விட

கவிதைகள்
கல்யாணராமன்  

  நியூயார்க்கில் எருமைக்காம்புகள் முப்பதாண்டுகளுக்கும் முன்நடந்தது ஏதோ நேற்று நடந்தது போலிருக்கிறது இன்று எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை சொறிநாயைப் பிடிப்பதுபோல் அவளை அடித்திழுத்துக்கொண்டு போய்விட்டார்கள் அது ஒரு செவ்வாய்க்கிழமை மதியம் கணிதப்புலி மனிதப்புலியான கதையது வெள்ளிக்கிழமை இரவில் என் தங்கைக்கும் அதேதான் நிகழ்ந்தது தேடிப்போன புலியண்ணனும் உட்குலைந்த என் அப்பாவும் எங்கிருக்கிறார்களோ யாரறிவார் பல்கலைக்கழகம் அப்போது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய அணு உலையாயிருந்தது படித்தால்தான் இங்கிருந்து தப்பிக்கலாம் இங்கிலாந்தோ கனடாவோ ஃபிரான்ஸோ போய்விடு குடிநிலத்திலேயே மரிப்பதும் நீடிப்பதும் எல்லாருக்கும் முடியாது புலம்பெயர்வதும் வீரம்தான் என்றார்கள் புத்திசாலிகள் நான் அமெரிக்காபோய் ஜெர்

கதை
லாவண்யா சுந்தரராஜன்  

இரவு உறக்கம் பிடிக்காமல் நீண்ட நேரம் புரண்டுபுரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். சீரான கால இடைவெளிகளில் ஒலித்த “ச்ச்ச்ச்ச்ச்” என்ற பல்லி சொல்லும் சத்தம் அவளுக்குச் சிறு முத்தங்களின் ஓசையை நினைவூட்டியது. தொலைவில் “க்கொல்ல்ல்ல்” என்ற நாய்களின் கூட்டுக் குரைப்பு. அடிவயிற்றில் பயம் படர்ந்தது. பக்கத்தில், இரவின் மாறாத பின்னணியாகக் கணவனின் மெல்லிய குறட்டை யொலி. அவளுக்கு அது உவக்கவில்லை. இன்னும் பழகாத புது இடம். மனிதர்கள், இடங்கள், பாஷை, பழக்கவழக்கங்கள் என எல்லாமே புதியன. என்ன நடக்கிறது என்று யோசிக்கயோசிக்க தன்னையறியாமல் கண்ணீர் பொங்கிக் கன்னங்களில் வழிந்தது. எப்போது உறங்கினாள் என்று தெரியாது, கதவைத் தட்டும் சத்தம் கேட்டு விழித்தாள். வேலைக்காரம்மா வந்திருந்தாள். இரவின் தூக்கமி

உள்ளடக்கம்