தலையங்கம்
 
  இந்தியக் குடியரசின் அரசியல் அமைப்புச் சட்டம் நாட்டின் குடிமக்களுக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியிருக்கிறது. இந்தியக் குடிமக்களில் ஒருவர் தமக்கு விருப்பமான எந்த மதத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் அதைப் பின்பற்றவும் அளிக்கப்பட்டுள்ள உரிமை அவற்றுள் ஒன்று. ஒருவகையில் இந்த உரிமையே மதச்சார்பற்ற குடியரசு என்ற அரசியலமைப்பின் குறிக்கோளை வலுப்படுத்துகிறது. ஆனால் நடைமுறையில் இந்த அடிப்படை உரிமை குடிமக்களுக்கு மறுக்கப்படுவதும் அவரது தனி உரிமை சீர்குலைக்கப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. குடிமக்களின் உரிமையைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள நீதிமன்றமும் உரிமைப் பாதுகாப்பு அமைப்புகளுமே இதற்கு உடந்தையாக உள்ளன என்ற உண்மையை ஹாதியா என்ற அகிலாவின் வழக்கு பகிரங்கப்படுத்துகிறது. கேரள மாநிலம், கோட்டயம் மாவட
EPW பக்கங்கள்
 
ஆளும் கட்சி ‘கிராமப்புறத்தை’ப் புறக்கணிப்பதற்காக நிதி, அரசியல் ரீதியாகவும் பெரும் விலை தரவேண்டியிருக்கும். இராஜஸ்தான் விவசாயிகள் பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்திடமிருந்து 20,000 கோடி ரூபாய் அளவிற்குக் கடன் தள்ளுபடியை வெற்றிகரமாகப் பெற்றிருக்கிறார்கள். கடந்த நான்கு மாதங்களில் இவ்வாறு பெற்ற நான்காவது மாநிலம் இது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் இத்தகைய போராட்டங்கள் உருவாகும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது இது. இந்த மாநிலங்களின் நிதிச் சுமையும் அரசியல் பிரச்சனைகளும் அதிகரிக்கும் நிலையில் பாஜகவின் பெரிய சீர்திருத்தங்கள் நேரெதிர்த் திசையில் செல்லத் தொடங்கிவிட்டதை இது காட்டுகிறதா? இராஜஸ்தானின் ஷெகாவதி பகுதியில், முக்கியமாக சிகார் மாவட்டத்தில், ஜுன்ஜுனு, சூரு நகரங்களில் 2017 செப்டம்பர் 1ஆம் தே
EPW பக்கங்கள்
 
பெட்ரோலுக்குப் பதிலி இல்லாதவரை இந்தியாவின் பிரச்சனை மேலும்மேலும் மோசமடையும் கச்சா எண்ணெய் நுகர்வில் இந்தியா உலகின் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. உலகின் தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளில் தேவையின் அடிப்படையிலான வளர்ச்சி வேகம் குறைந்துவரும் நிலையில் இந்தியாவின் பெட்ரோல் தேவை அதிகரித்துவருகிறது. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதிக்கான மிக முக்கியமான இடமாக இந்தியாவைப் பார்க்கின்றது சர்வதேச பெட்ரோல் தொழிற்துறை. ஏற்கெனவே தனது கச்சா எண்ணெய்த் தேவையில் 80% இந்தியா இறக்குமதி செய்கிறது. உள்நாட்டு உற்பத்தி குறைந்துவரும் நிலையில் எதிர்காலத்தில் சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக பொருளாதாரப் பாதிப்பு அதிகரிக்கும். 2014 மத்தியிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக இறக்
திரை
ஸ்டாலின் ராஜாங்கம்  
  பாட்டிலில் அடைத்து விற்கப்படும் நீரை உறிஞ்சுவதற்காகத் தோண்டப் பட்டு, மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிடும் குழந்தையைக் காப்பாற்றுவதற்கான போராட்டமே ‘அறம்.’ இதில் கதை என்று எதுவுமில்லை. ஒரு சம்பவம் அல்லது அனுபவம்; குழந்தையை மீட்பதற்கான போராட்டத்தினூடாக அதிகாரிகளின் பொறுப்பின்மை, எளிய - அடித்தட்டு மக்களின் நோக்கில் சிந்திக்கத் தவறுகிற அரசு, ஊழல் - சுரண்டல் உள்ளிட்ட அரசு இயந்திரங்களின் உள்ளார்ந்த சட்டகங்கள் ஆகியவற்றைப் பேச முற்பட்டிருக்கிறது கதையாடல். இன்றைய தண்ணீர்ப் பஞ்சம் இயற்கையானது அல்ல, மாறாக அது செயற்கையானது என்று வாதிடுகிறது படம். அது நேரடியாக அடித்தட்டு மக்களையே பாதிக்கிறது என்றும் அதற்குப் பின்னால் பெரும் வலைப்பின்னல் இருக்கிறது என்றும் சுட்ட முனைந்திருக்கிறது
கடிதங்கள்
 
அக்டோபர் தலையங்கம் ‘அறிவால் சூழ்ந்தது மரணம்’ நம் நாட்டுநடப்பைப் பாகுபாடின்றித் தெளிவாக அலசியிருக்கிறது. இந்தியாவின் தனித்துவமாகிய வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்புடைய முகம் மாறிவருவதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.கௌரி லங்கேஷுக்கு எதிரான வன்முறையில் ஊடக வியலுக்கு எதிரான போக்கும் அதன் விளைவாக இழந்த உயிரும் நியாயம் கேட்டுப் போராடுவதும் மனத்தில் ஓலமிடுகிறது. விமர்சனத்தை ஏற்றுத் தன் நிலை உணர்ந்து மாற்றிக் கொள்வது நல்லாட்சி நிகழ ஊன்றுகோலாய் அமையும் எனும் அடிப்படையறியாத அரசியல் யுகம் இன்று நிகழ்வதைத் தலையங்கம் சுட்டிக்காட்டுகிறது. வாசகனாக நமது நாட்டின் நிகழ்வுகளை எண்ணி உலக அரங்கில் வெட்கப்படுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்? வீரப்பிரகடனங்களால் மக்களைப் போலித்துவ நவீனத்திற்கு மா
திரை
எல்.ஜே. வயலட்  
  எழுத்தாளர் எடுவர்டோ கலியானோ சிறிது காலம் சில சுரங்கத் தொழிலாளர்களிடையே வாழ்ந்து வந்தார், விடைபெறும் சமயத்தில், எப்போதும் கடலையே பார்த்திராத பார்க்கப் போகாதவர்களான அவர்கள் கடலைப் பற்றி சொல்லுமாறு அவரிடம் கேட்கிறார்கள். அவர்களிடம் கடலைக் கொண்டுவரும் கடமையே ‘ஒரு கதைசொல்லியாக தன் முதல் சோதனை, (எழுத்து) பின்தொடர ஏதோ மதிப்புள்ள தேடலே என்று ஏற்கவைத்தது’ என்று கலியானோ சொல்கிறார். கடல் இல்லை, என்றாலும் சில அலைகளை மட்டும் ஏற்படுத்திய, லக்ஷ்மி படத்தைப் பார்த்திராத ஒருவருக்கு லக்ஷ்மி படத்தைப் பற்றி என்ன சொல்வது? அல்லது லக்ஷ்மி ஏற்படுத்திய இந்தக் குறுகிய நேர சமூக ஊடகப் பதற்றத்தை எப்படி விளக்குவது? இந்தக் கட்டுரை வரும்போது லக்ஷ்மி ஏற்படுத்திய சமூக ஊடக அலைகள் மறக்கப்பட்டிருக்கும். அது
கட்டுரை
சுப. உதயகுமாரன்  
  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சூழலியல் இயக்கங்கள் தோன்றியபோது, வனாந்திரம் போற்றலும் வனவிலங்குகள் பாதுகாப்பும் முக்கியத்துவம் பெற்றன. நாளடைவில் சூழலியல் என்பது மக்களையும் மக்கள் வாழும் சமூகங்களையும் அவற்றின் பிரச்சினைகளையும் உள்ளடக்கியது என்கிற புரிந்துகொள்ளல்கள் எழுந்தன. கடந்த 1980களில் சுற்றுச்சூழலுக்காகப் போராடும் இயக்கங் களில் சூழல் நீதி குறித்த சில கேள்விகள் எழுந்தன. முதல் கேள்வி, சர்வதேச நடைமுறைகள் பற்றியது. அதாவது, சுற்றுச்சூழல் சுமைகள் வடக்கு நாடுகளில் வாழும் பணக்கார, வெள்ளையின மக்களைவிட, தெற்கு நாடுகளில் வாழும் ஏழை, நிறம்கொண்ட மக்களையே அதிகம் அழுத்துவது ஏன் எனும் கேள்வி. உலக அளவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் பாதிக்கப்படும் மக்கள் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் தென் அ
கட்டுரை
எம். கோபாலகிருஷ்ணன்  
    இன்று எழுத்தும் எழுத்தாளர்களும் எதிர் கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொள்ளும் போது எழுத்தாளர்களைவிட எழுத்தே எப்போதும் மேன்மையானது என்று உறுதியாகச் சொல்ல முடியும். எழுத்தையும்விட மேன்மையானது எல்லா தடைகளையும் கடந்து தம்மை நிலை நிறுத்திக்கொள்ளத் தொடர்ந்து போராடும் மனித குலத்தின் மதிப்பீடுகளே. - கிருஷ்ண ஷோப்தி 2017ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதைப் பெறும் கிருஷ்ண ஷோப்தி இந்தியாவில் இன்று வாழும் எழுத்தாளர்களிலேயே வயதில் மூத்தவர். அவருக்கு வயது 92. அவரது சமகாலத்தவர்கள் பலரும் ஆங்கிலத்தில் எழுதியபோது ஹிந்தியில் மட்டுமே எழுதுவது என்று தீர்மானித்தவர். ஹிந்தியில் மட்டுமல்லாது இந்திய இலக்கிய உலகில் என்றும் கொண்டாடப்படும் முதன்மையான எழுத்தாளரான கிருஷ்ண ஷோப்தி இலக்கியத்தின் உயரிய விருதாகக் கர
அஞ்சலி
சம்சாரியின் எழுத்து
களந்தை பீர்முகம்மது  
  தமிழ் இலக்கியத்தின் முற்போக்குப் பிரிவில் தவிர்க்கப்பட முடியாத பெயர்களிலொன்று மேலாண்மை பொன்னுசாமி. இந்தப் பெயர் அச்சு அசலான கிராமியத்தின் மணத்தை வெளிப்படுத்துவது; இது அவரின் வாழ்வையும் இருப்பையும் அறியத் தருகிறது. படிக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் மனக்காயமும் தான் தன்னை வாசிக்கச் செய்ததாகவும் எழுத வைத்த தாகவும் கூறுவார் மேலாண்மை. ஜனநாயக நாட்டில் தான் பெற்றிருக்க வேண்டிய பிறப்புரிமைகளைப் பெற முடியாமல் போனதற்காக அவர் முடங்கிவிடவில்லை. தனக்கு மறுக்கப்படுகிற வாய்ப்பு அவ்விதமாக இதர சிறுவர்களையும் பாதித்துவிடலாகாது என்ற ஆர்வத்தில் அவர், ஓர் இடதுசாரிப் போராளியாக மாறினார். இதைவிட வேறு வழிகள் எவையும் இல்லை என்று புரிந்துகொண்ட அவர் எழுதிய கதைகள் பல நூறு. அவருடைய கதைகளில் கிராமத்தின் வியர்வை
அஞ்சலி
நினைவில் ஒரு நடுகல்
சுகுமாரன்  
திருவனந்தபுரத்துக்குக் குடிமாறிய ஆரம்ப தினங்களில் இங்குள்ள இலக்கியவாதிகள் பலருடனும் தொடர்பு ஏற்பட்டது. சிலர் முன்பே அறிமுகமானவர்கள். சிலர் எழுத்தின் வாயிலாகத் தெரியவந்தவர்கள். அறிமுகமான எல்லாருடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்க வாய்க்கவில்லை. சிலருடனான தொடர்பு அற்றுப் போகவும் இல்லை. அதிக நெருக்கமில்லை என்றாலும் புனத்தில் குஞ்ஞப்துல்லாவுடனான நட்பு அவர் திருவனந்தபுரத்தை விட்டுச் செல்லும்வரை நீடித்திருந்தது. அன்றாடம் சந்தித்துப் பேசுபவர்களாக நாங்கள் இருந்ததில்லை. என்றாலும் ஒவ்வொரு சந்திப்பும் இடைவெளியில்லாத ஒன்றாகவே இருந்தன. தொலைபேசி உரையாடல்களும் அப்படியே. பெயரைச் சொன்னதும் மறு அறிமுகம் செய்துகொள்ளும் கட்டாயமில்லாமல் பழைய தோழமையுடன் பேசத் தொடங்குவார். இவ்வளவுக்கும் என் பெயர் கேரளத்தில் மூலைக்க
கவிதைகள்
வெளிப்படாத உப்புக்கோடு
அனார்  
வெளிப்படாத உப்புக்கோடு 1. செவ்வகத்தை நான் வரைகிறேன் தடுப்புகளைத் தாண்டுவதாக நீ பாவனை பண்ணு... கைகளை அகல விரித்து பாதிக் கண்மூடி உப்புக்கோட்டில் நிற்கையில் நான் அறிவேன்... ஏமாறுவதுபோல் நடிக்க வேண்டியது எந்தக் கட்டத்தில் என்று... 2. உப்புக்கோடு வித்தையிலிருந்து மறைந்து போயிற்று மின்மினியின் நியதிகளைப் பின்தொடர்ந்து விளையாட்டுக்கும் வித்தைக்கும் நடுவே காதலின் இரு முனைகளால் நீளும் கோடு கதைகளற்ற வெளியில் நிறமுமில்லாமல் ஓசையுமில்லாமல் மிதக்கிறது வெளிப்படாத உப்புக்கோடு இரு கைகளாலும் கண்களைப் பொத்தி விளையாடும் சிறுமிக்கான பகல்ப்பொழுதென்கிறாய் சிறு பிள்ளைத்தனங்களை நத்தையின் ஈரக்கசிவுக்குள் பொதிந்து ஒளித்துவைக்கிறாய் உயரத்தில் உருவாகித் தோன்றும் ஆகாய விமானத்தின் தடம் உப்புக் கோடெனும் உன் ஆழ்நீ
நேர்காணல்: பெஜவாடா வில்சன்
“இது மாறாது என்று எதுவும் இல்லை”
 
மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிக்கத் தொடர்ந்து போராடிவரும் களச் செயற்பாட்டாளர்; கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் பிறந்த பெஜவாடா வில்சன். களச் செயற்பாடு, சட்டப் போராட்டம் எனத் தொடர்ந்து 35 ஆண்டுகளாக இயங்கிவரும் அவருக்கு 2016இல் ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது. பெயரளவில் மட்டுமே அறிந்திருந்தவரை 2015 ஜனவரி மாதம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘மாதொருபாகன்’ தொடர்பான பிரச்சினையின் போது என்னைச் சந்திக்கவென்றே டெல்லியிலிருந்து நாமக்கல் வந்தார். அவர் வருகையும் பேச்சும் பெரும் ஆறுதலைக் கொடுத்தன. தொடர்ந்து சிலமுறை சந்திக்கும் வாய்ப்புகள் அமைந்தன. மின்னஞ்சல் வழியாகவும் செல்பேசி வாயிலாகவும் தொடர்பு நீடித்தது. முதல் சந்திப்பின்போதிருந்தே தம் விருந்தினராகக் குடும்பத்தோடு டெ
கதை
புலி உலவும் தடம்
மு. குலசேகரன்  
தொலைக்காட்சியின் ஓர் அலைவரிசையில் கைகளை ஆட்டி வேறொரு மொழியில் பேசிக்கொண்டிருந்தார் நாடாள்பவர். மற்றொன்றில் நாலைந்துபேர் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்ததில், பலமுறை காண்பிக்கப்பட்ட தங்க நகை விளம்பரம். இன்னொன்றில் வரிசையாக கொலை, கொள்ளைகள். வேறொன்றில், பசுமையான காட்டை அளப்பதைப் போல் புலி நிதானமாக நடந்துகொண்டிருந்தது. அதன் தன்னம்பிக்கை ததும்பும் பாவனையும் அழுத்தமான நடையும் தூக்கிய வாலும் கவர்ச்சியாயிருந்தன. அந்தப் புலி ஒரு மானைக் கண்டதும் அப்படியே புற்களில் பதுங்கியது. கொஞ்ச நேரம் தியானம் செய்வதைப் போல் அமைதியாயிருந்துவிட்டு திடீரெனப் பாய்ந்து மானின் கழுத்தைக் கவ்வியது. காட்சி மாறிச் சம்பந்தமில்லாத வாசனைத் திரவிய விளம்பரம். பாயில் படுத்தபடி சிவபாலன் தொடர்ந்து ரிமோட்டை அழுத்திக்
கட்டுரை
உயிர்ப்பித்தலின் கலை வரலாற்றுப் புதினத்தின் சவால்கள்
சுனில் கிருஷ்ணன்  
நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன், சுவாரசியமான பொய்களை நெய்வதற்காக நீங்கள் நாவலாசிரியர் ஆக முடியாது; நீங்கள் உண்மை கூற வேண்டும் என்பதற்காகவே நாவலாசிரியராக இயலும். - ஹிலாரி மாண்டெல் பிபிசி வானொலியில் ஏற்பாடு செய்யப்படும் ‘ரெய்த் உரைகள்’ முக்கியமான சிந்தனைப் போக்குகளை அறிமுகம் செய்பவை. 1948ஆம் ஆண்டு பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் தொடங்கிவைத்த இந்த உரைகள் இன்றும் புதிய விவாதக் கோணங்களை முன்வைப்பவை. இவ்வாண்டு எழுத்தாளர் ஹிலாரி மான்டெல் வரலாற்று நாவல்களின் சவாலும் முக்கியத்துவமும் பற்றி ஐந்து தொடர் உரைகள் ஆற்றியுள்ளார்.1 இக்கட்டுரை அவருடைய உரையின் பேசுபொருளைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தவும் விவாதங்களை எழுப்பவும் முயல்கிறது. ஹிலாரி மான்டெல் இருமுறை புக்கர் விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் எனும்
கட்டுரை
நூல்கள், நூலகங்கள், நூலகர்கள்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  
கைலாசபதியும் சிவத்தம்பியும் யூ.ஆர். அனந்தமூர்த்தியும் இன்று பர்மீங்ஹாம் பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்தால் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது. அவர்களின் முனைவர் பட்டப் படிப்பு நாட்களில் பயன்படுத்திய, வளாகத்தை ஆக்கிரமித்திருந்த செங்கல் நிறமான அந்த வாசிகசாலை இன்று இல்லை. அது தரைமட்டமாக்கப்பட்டு அதற்குப் பதிலாக, அதன் அருகில் பிரகாசமான, ஆனால் ஆன்மாவற்ற, எல்லாமே எண்மின்னாக்கப்பட்ட நெட்டைக் கட்டடம் வந்திருக்கிறது. இடிக்கப்பட்ட வாசிகசாலை கட்டச் செலவழித்த தொகை ரூ. 500,000. இன்றைய காசில் பணவீக்கத்தையும் சேர்த்தால் ரூ.13,217,758.00. பல்கலைக் கழகம் ஆரம்பித்த நாட்களிலிருந்தே இந்த வாசிகசாலை இருக்கிறது என்று எண்ணியிருந்தேன். வைர விழா கொண்டாட இன்னும் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கிட்டடியி
புத்தகப் பகுதி – வாழ்க்கை வரலாறு
என் தந்தை பாலய்யா
ஒய்.பி. சத்தியநாராயணா ,ஜெனி டாலி அந்தோணி  
சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி காலச்சுவடு வெளியீடாக வரவிரக்கும் ஒய்.பி. சத்தியநாராயணாவின் ‘என் தந்தை பாலய்யா’ தன்வரலாறு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே இடம்பெறுகின்றன. சிலீரென்று வீசிய மாலைக் காற்றில் இறந்த மனைவியின் உடலை முதுகோடு சேர்த்துக் கட்டிக் கொண்டு, தனது மகனை ஒரு கையில் பிடித்தபடி, ஊருக்கு வெளியே மேற்கிலிருந்து கிழக்கே பாயும் ஓடையை நோக்கி உயரமான மனிதர் ஒருவர் கனத்த இதயத்தோடு வேகமாக நடந்துகொண்டிருந்தார். சிறிய கிராமம் ஒன்றிலிருந்து, நாதியற்றவராக வெளியேறிக்கொண்டிருந்த அவருடைய மூன்று வயது மகன் வாய்விட்டு அழுதபடியே நடந்து கொண்டிருந்தான். அந்தக் கனத்த மாலையின் மீது கவியத் தொடங்கியிருந்த இருளில் அவர்கள் இருவரும் மெல்லக் கரைந்துகொண்டிருந்தனர். தெலுங்கானாவின்
புத்தகப் பகுதி
குடியேற்றம்
தோப்பில் முகம்மது மீரான்  
  தோப்பில் முகம்மது மீரானின் ‘குடியேற்றம்’ நாவலிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதி இங்கே வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் காலச்சுவடு வெளியீடாக சென்னை புத்தகச் சந்தையையொட்டி வெளிவரவுள்ளது. ஓடைக்கரைத் தெரு பீமா யோசித்து யோசித்து அவளுக்கு ஒரு வழியும் காணவில்லை. நம்மாள் பையனானால் ரொக்கம், நகைனு நிறைய கேப்பாங்கோ. பெண்ணுக்கு வயசு 27 ஆச்சு. இன்னும் ஊட்டுல வச்சிட்டு இருக்க முடியாது. குமரு மூச்செறிந்தால் குடும்பத்தில வௌக்கம் இருக்காது. ஒவ்வொருத்தியும் காட்டுக்குப் போய் புள்ள உண்டாயி பெத்தும் புள்ளையை அழிச்சிட்டும் இருக்காளுவோ. புள்ள அழிக்கிறதுக்குனே காட்டோரத்தில் ஒரு சின்ன குடிசையில் சைரா பெத்தான்னு ஒருத்தி இருக்கா. பாதுகாப்பாகக் கருவை கலைச்சுப் போடுவதில் கெட்டிக்காரி. நூர்ஜஹானுக்குப் பள்ள
அறிமுகம்
மணமும் மரணமும்
சேரன்  
  இலக்கியத்துக்காக வழங்கப்படும் டிஎஸ்சி  (DSC) பரிசை வென்ற நாவல் பற்றிய அறிமுகம் மருத்துவமனைக்கு வடக்குப்புறமாக இருந்த வெளியில் புதைகுழிகளை வெட்டிக்கொண்டிருந்தபோது சோமசுந்தரம் தினேஷை நோக்கி வருகிறார். அவருடைய மனைவியும் மகனும் எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுவிட்டார்கள். அந்த அவலத்தின் வேதனைக் கோடுகளை அவர் முகத்தில் பார்க்க முடியாது. தொடர்ச்சியாக வரும் ஏவுகணைகளிலிருந்தும் எறிகணைகளிலிருந்தும் தான் உயிர் தப்ப முடியாது எனவும் அவருக்குத் தெரியும். அவருக்கு எஞ்சியிருக்கிற ஒரே மகள் கங்கா. அவளைப் பத்திரமாக ஒரு ஆணிடம் ஒப்படைத்துவிட்டால் தான் நிம்மதியாகச் சாகலாம் என்பது சோமசுந்தரத்தின் எண்ணம். பதின்ம வயதான தினேஷ், புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் அகப்படாமலும் இலங்கைப் படையினரின் எறிகண
உள்ளடக்கம்