தலையங்கம்

முஸ்லிம்களுக்குப்  பாதுகாப்பு  இல்லாத  நாடுகளில்  இலங்கையும்  ஒன்றாகிவிட்டது.  2018 பெப்ரவரி, மார்ச் மாதங்களில் அம்பாறை, கண்டி மாவட்டங்களில் முஸ்லிம்கள்மீதும் அவர்களின் உடைமைகள் மீதும் பெரும்பான்மையினச் சிங்களப் பௌத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், முஸ்லிம்களின் இ

EPW பக்கங்கள்
க.திருநாவுக்கரசு

சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களில் நடந்த தேர்தல்கள் மூன்று வித்தியாசமான கதைகளைச் சொல்கின்றன. மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களிலிருந்து மையநிலத்தைச் சேர்ந்தவர்கள் கற்பதற்கு ஒரு பாடம் இருக்கிறது; அது பொதுமைப்படுத்துதலை தவிர்க்க

EPW பக்கங்கள்
க.திருநாவுக்கரசு

இந்தியாவில் சிறுபான்மையினர் கொடுமைக்குள்ளாவது குறித்து பிரிட்டனில் நடக்கும் விவாதம் போலித்தனமானது. நரேந்திர மோடியின் இந்தியாவில் ‘‘மத நம்பிக்கை சுதந்திரம்’’ ஆபத்தில் இருப்பதாக 2018, மார்ச் 1ஆம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றம் மிகுந்த கவலை தெரிவித்தது. 2018 ஏப்ரல் மத்தியில் காம

கடிதங்கள்

தொழில்நுட்பமும் நவீன இயந்திரங்களும் தோன்றுவதற்கு முன்னரே நம் முன்னோர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர். கரிகாலன் எழுப்பிய கல்லணை ஒன்றே இதற்குச் சான்று. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. அதிகமான மழை பெய்தாலும் அதனைச் சேமித்துவைக்கத் திராணியற்ற ஆட்சிகளே மாறிமாறித் தொடர்ந்து தமிழகத்தை

களம்

குழுவில் அங்கம் வகித்தவர்கள்  உண்மை அறியும் குழுவானது, இரு பட்டியல் இனச் சமூகத்திலிருந்தும் சமமான பிரதிநிதித்துவம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற விழிப்புடன் அமைக்கப்பட்டது. மேலும், பட்டியல் இனமல்லாத இரு கல்வியாளர்களையும் கொண்டுள்ளது.  * திருமதி செம்மலர் செல்வி, உதவிப் பேராசிரியர், சமூகப்

மதிப்புரை
சி. லட்சுமணன்

என் தந்தை பாலய்யா (சுயசரிதை) ஒய்.பி. சத்தியநாராயணா  தமிழில்: ஜெனி டாலி அந்தோணி  வெளியீடு:  காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. ரோடு, நாகர்கோவில் & 629 001  பக். 287 ரூ. 325 போராட்டம், மேலும் அதிகப் போராட்டம், தியாகம் மேலும் அதிக  தியாகம் என்பதே எனது செய்தி. அதுவே அவர்

மதிப்புரை
இளவேனில்

மெர்சோ மறுவிசாரணை (நாவல்) காமெல் தாவுத் பிரெஞ்சிலிருந்து தமிழில்: வெ. ஸ்ரீராம் வெளியீடு:  க்ரியா பதிப்பகம், 2(25), 17வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர்,  சென்னை & 41  பக். 144 ரூ. 195 அந்நியனை வாசித்துவிட்டு என்னை மெர்சோவாக உருவகப்படுத்திக்கொண்டு வெயில் தகிக்கும்

பதிவு
களந்தை பீர்முகம்மது

2017ஆம் ஆண்டுக்கான நெய்தல் விருது விழா நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி சென்டரில் மார்ச் 4ஆம் தேதி காலையில் நடைபெற்றது. இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருதுக்காக கார்த்திகைப் பாண்டியனும், ராஜமார்த்தாண்டன் கவிதை விருதுக்காக ’மூக்குத்தி அணிந்த பெண் நடத்துநர்’ தொகுப்புக்காக குணா கந

கட்டுரை
லபீஸ் ஷஹீத்

இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியின் தலைநக‌ரும் உலகின் மிக முக்கியமான பௌத்த கேந்திரமுமான கண்டி நகரின் திகன, அக்குறணை போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் மீதான பௌத்தப் பேரினவாதிகளின் தாக்குதல்களில் இதுவரையில் ஒருவர் பலியாகி இருக்கிறார்; முஸ்லிம்களின் பொருளாதார மையங்கள், வீடுகள் மீதான தாக்குதல்களின

கதை
கோகுலக்கண்ணன்

அவன் கடற்கரைக்குச் செல்லவேண்டுமென்று அன்று திட்டமிட்டிருக்கவில்லை. எதிர்பாராதவிதமாகவே அவன் அந்தக் கடற்கரைக்குச் சென்றான். இரவு அவனைத் தூங்கவிடாமல், காற்று அலைக்கழிக்கும் வறண்ட இலையைப்போலப் படுக்கையில் சுழற்றியடித்தது. அவனுடைய இதயம் எந்தக் காரணமும் இல்லாமல் வெகுவேகமாகத் துடித்தது. பல்லாயிரக்கணக்கான

கட்டுரை
நலங்கிள்ளி

ஸ்டீஃபன் ஆக்கிங் யார்? அதை காரல் சாகன் சொல்லித் தெரிந்து கொள்வது நல்லது. ஆக்கிங்கின் அன்பு நண்பர் அவர். இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்றவர். ஆக்கிங்கின் புகழ்வாய்ந்த ‘எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ நூலுக்கு எழுதிய அணிந்துரையில் காரல் சாகன் எழுதுகிறார்:  1974 இளவேனிற்காலத்தில்

கதை
இசை

எல்லா ஆட்டமும் 40 வயது வரைதான். நாற்பதில் நரைத்தூதை அனுப்பிக் காலன் நம்மைக் கவர்ந்துகொள்வான் என்கிறது வளையாபதி. ஆனால் நாற்பதில்தான் நாய்க்குணம் தொடங்குவதாகச் சொல்கிறது நம் நாட்டுப்புற மரபு. இந்த நாய்க் குணத்தை வாழ்வில் எரிச்சல் மிகுந்து குரைக்கத் துவங்கும் பருவம் என்று சொல்வதுண்டு. உடலிச்சை தணியா

கவிதை
ஓ.பி. சுரேஷ்

சூனியத்தில் மோதி இறக்கிய தீப்பிடித்த விமானம் நீ பற்றி எரியும் அனுபவங்கள் மீட்பை அசாத்தியமாக்கின எரிந்து தீராத நினைவுகள் கவிதையின் கவசமணிந்து சுற்றிலும் படர்ந்தன ஆகாயத்தில்  உன் அரசு வந்திருக்கிறது. வானவில்  அதன் பதாகையாக உயர்கிறது. 2 உறக்கம் சட்டை உரித்தெறிந்த  குளிர்ந்த கனவுபோல

கதை
நாகரத்தினம் கிருஷ்ணா

”தொரம்மா! தொரம்மா!” என்று தனபாக்கியத்தை வாசலில் நின்றுகொண்டு அழைக்கும் குரல் கன்னியம்மாவுடையது. இரவு அவன் இச்சைக்கு ஈடுகொடுத்ததில், விடிந்ததுகூடத் தெரியாமல் உறங்கிக் கிடந்தவள் திடீரென்று கண்விழித்தாள்; விழித்த வேகத்தில் அனிச்சையாகத் துடுப்புப் போடுவதுபோலக் கையால் பக்கத்தில் துழாவினாள்.

கட்டுரை
வி.எஸ். முஹம்மத் அமீன்

விழுதிறக்கிய பெருமரங்களுக்கு மத்தியில் ஒரு சிறு செடியின் இருப்பிற்கான போராட்டம்தான் இஸ்லாமியத் தமிழ் இதழ்களின் வரலாறு. விழுதுகளின் விலாசத்தைப் பேசுவதற்குப் பதிலாக வேர்களிலிருந்து விசாரணையைத் தொடங்க வேண்டியிருக்கிறது. ஊடகத்துறையில் தனக்கான இருப்பிடத்தைத் தகவமைத்துக் கொள்ளாத சமுதாயத்தில் இதழ்களி

கட்டுரை
களந்தை பீர்முகம்மது

இந்தச் சமூகம் மேம்பாடு அடைய வேண்டும் என்ற எண்ணம் அரசியல், பொருளாதாரம், கலை - இலக்கியப் பகுதியினருக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆன்மிகவாதிகளுக்கும் இது இருக்க வேண்டும். அவர்கள் சமூகத்தின் அமைதியையும் ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் முன்னெடுத்துச் செல்வதை மனித குலம் எதிர்பார்க்கிறது. இறைபக்தி

கவிதை
கீதாசுகுமாரன்

திரிசங்கு   நீரிலூறிய பாக்குமட்டைக்குள் புளிச்சோறும் கிழங்குப் பொரியலோடும் செங்கொம்பு மாட்டுவண்டியில் மணிகள் அலைந்து அசைய புழுதிப்பாதை திரும்புகையில் மிதிலை நெல்வயலில் பிறந்து சிவதனுசு முறிந்து அயோத்தி எய்திய அவளது கதையைப் பாட்டி சொல்ல மலையருவிப் பயணத்தினிடையில் மறுநாள் வாழ்வு வேறொ

கவிதை
அகச்சேரன்

சாந்தி   சாதாரணமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றதற்காக முதலில் தொலைந்த என் இரண்டு ரூபாயை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டேன்   கூடவே தொலைந்து வரும் இரண்டு ரூபாய்களை எங்ஙனம் புரிந்துகொள்வேன்   நவீன அரசாங்கம் கல்விக்கூடங்கள் மருத்துவமனைகள் பெரிய பெரிய மால்கள் ஒரு பக்க விளம்ப

நேர்காணல்
பாலா சுவாமிநாதன் / அ. முத்துலிங்கம்

மதுரையைச் சேர்ந்த பாலா சுவாமிநாதன் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணினித்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். நியூயோர்க் நெடுந்தீவில் பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். கடந்த மாதம்  பல்லாயிரம் டொலர்கள் வைப்புக் கொடை அமைப்பதன் மூலம் நியூயோர்க் ஸ்டோனி புரூக் பல்கல

கதை
மலர்மன்னன் அன்பழகன்

மரண வீட்டின் அடையாளங்கள் முற்றிலும் அங்கு குடியேறியிருந்தன. பெரும் ஆட்டக்காரனின் மரணம் சுற்று வட்டாரம் முழுவதும் செய்தியாக மாறியிருந்தது. இரவின் வெளிச்சமும் யார் கண்ணுக்கும் தெரியாமல் இறங்கிக்கொண்டிருந்தது. ஆட்கள் நடமாட்டம் கூடுவதும் குறைவதுமாக இருந்த தெருவின் காற்றில் சாராய வாசம் கலந்து வீசியது

கவிதை
ரிஷான் ஷெரீப்

அரூபமானவை பூனையின் கண்கள்  எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும் ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும் அப்பாவித்தனமும் திருட்டுக் குணமும் ஒருசேர ஆதிகால வனத்தை நினைவுபடுத்தும் மேனி வரிகளோடு  அச்சுறுத்தும் சிலவேளை அதன் அசட்டுச் சிப்பிக் கண்கள் இரைக்காகக் காத்திருக்கும்வேளையில் அக் கண்களினூடு ததும்பும

உள்ளடக்கம்