நினைவூட்டல்
பூசணிப் பூ ஒரு மாதத்தை
புழுதிமண் ஒரு பிராயத்தை
போகும் ரயில் ஒரு ஏக்கத்தை
உடைந்த பொம்மைத் தலை
ஒரு துக்கத்தை
தேஷ் ராகம் ஒரு பிரியத்தை
ஒற்றைச் சிறு துளியின்
செந்நிறப் பிசுபிசுப்பு ஒரு மரணத்தை
மினுங்கும் ஒற்றைக் கல் மூக்குத்தி
ஓர் அவமானத்தை
உருட்டுப் பிரம்பின் பூண்
ஒரு தண்டனையை
உருளும் கண்ணீர்த்துளி
ஒரு மன்னிப்பை
எண்ணெய்ப் பிசுக்கு மணக்கும் தலையணை
ஒரு சோரத்தை
மஞ்சள் கிழங்கின் பச்சை மணம்
ஒரு முத்தத்தை
ஆஸ்பத்திரியின் இரும்புக் கிராதி
ஓர் ஆரூடத்தை
சாவு ஊர்வலம் பேரண்டத்தின்
ரகசியமொன்றை
மற்றும் ஒரு சிறுசெடி
பெருவனத்தின் மர்மத்தை
எல்லையற்றுத் திறந்த
அந்தி வானத்தின் அத்துவானத்தில்
பஞ்சுப் பிசிறாய்த் தீற்றிக் கிடக்கும்
மேகத் துண்டு ஒரு த