ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்துவந்த சாலைகள்
நம் வெறுப்புகள் சிறிய கூழாங்கற்களைச் சிரிக்கவைக்க முயல்கின்றன
ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழித்திருந்த அவற்றிற்கு
ஒருபோதும் சிரிப்பதற்குத் தெரிந்திருக்கவில்லை
சிறிதும் நம் வெறுப்புகள் பற்றியும்.
*
மிகப்புதிதான ஓரிலை தன் மொழியை ரகசியமாகக் கடத்துகிறது
அதன் வேர்கள் படர்ந்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாவோ
ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழித்தும் அம்மொழியை அறிவதில்லை
அந்த இலையையும்.
*
பிரார்த்தனைகள் முடிந்திருந்த தினத்தில் நாம் நம்பிக்கொண்டிருந்த ஒரு பாடல்
வெகுதூரம் வந்துவிட்ட நம்மை இழுத்துப் பற்றி விழுங்குகிறது
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு சதுக்கங்களுக்கு முன்
ஒவ்வொரு நாளும் போர்க்கவசங்களுடன் அப்பாடலைப் பாட
மிகவும் எளிதாகயிருக்கிறது,
மிகவும் விருப்பமாகவுமிருக்கிறது.
*</p