பயணம்
பயணம்
இந்தப் பாதையை நீங்கள்
கடந்து என்னிடம் வருவதெனில்
காற்றில் ஏறவேண்டும்
காற்றில் ஏறுவதற்கு
உங்களுக்கு இரண்டு தெரிவுகள் உண்டு
ஒன்று ஏணி தரப்படும்
மற்றொன்று சிறகுகள் தரப்படும்
பயணத்தைத் தொடரலாம்
வழங்கப்பட்ட நிமிடங்களுக்குள்
பாதையைக் கடக்க வேண்டும்
சரியான தெரிவு முறை அவசியம்
இல்லையெனில்
ஏணியும் சிறகுகளும் மறைந்துவிடும்
சிறிதளவு யோசிக்க
இலவச நேரம் தரப்படுகிறது
எல்லோரும்
மிக எளிதாகவே
பாதை கடந்து வருகிறார்கள்
எனக்கு ஒரே ஆச்சரியக் குறி
இது எப்படி சாத்தியமாச்சி
ஒருவனைப் பிடித்துக் கேட்டேன்
அவன் சிரித்துவிட்டுச் சொன்னான்
நீங்கள் ஏறிய கற்பனையில்தான்
நாங்களும் ஏறி
பாதையைக் கடந்து வந்தோம்.
<img class="img-responsive" class="img