எதிர்ப்புணர்வின் வண்ணங்கள்
புதிய வெளிப்பாட்டுக்கான விழைவு களுடன் இளம் உணர்வுகள் கிளர்ந் தெழக்கூடிய காலகட்டமாக இன்றைய சூழல் உள்ளது. வர்த்தக மயமாக்கலின் சீரழிவுகள், மதிப்பீடு
களின் வீழ்ச்சி, உறவுநிலைகளின் இறுக்கம் ஆகியவை ஒரு புதிய வெடிப்பைக் கோரும் நிலையில்தான் எதிர்ப்புணர்வின் புதிய வண்ணங்களை அவர்களது உடல்கள் தரிக்கின்றன. அத்தகைய உடல் ஒத்திசைவுகளை ஒருங்கிணைத்து நாடகத்தளத்தில் அவை உரிய வெளிப்பாடுகொள்ளும் செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் சில இளம் படைப்பாளிகளைப் பற்றிய குறிப்புகள் இவை.
பகுர்தீன்
மதுரையைச் சேர்ந்த தாவரவியல் முதுகலைப் பட்டதாரியான இவர் முருகபூபதியின் மணல் மகுடி நாடகக் குழுவில் இண