மழை பெய்தலின் அறிகுறி
மழை பெய்தலின் அறிகுறி
பெரிதாக எதையும்
வெளிக்காட்ட விரும்பாத
ஒரு கருமுகிலிடம்
மழை பற்றிய குறிப்பொன்றைக்
கையளித்தேன்.
பன்னிரண்டு தடவைகள்
இரவைச் சரிபார்த்துவிட்டு
இறங்கி வந்து
என் அறையில் அமர்ந்திருக்கிறது
கவிதை எழுதவும் முடியாமல்
பாடல் கேட்கவும் முடியாமல்
கட்டிலில் விழுந்துகிடக்கிறேன்.
எல்லாம் நடைபெறுவதாக
எண்ணிக்கொண்டிருப்பதே
மழை பெய்வதற்கான அறிகுறியாகும்.
நீல நிறக் கடல்
என்னால் ஒரு மேகத்தை வரைய முடியும் என்றேன்
நீல நிறத்தை நீதான் தேர்வு செய்தாய்
நேற்று நடந்த கதை ஒன்றைச் சொல்கிறேன் கேள்
நீ நீலமானாய்
நானும்
நம் கண்கள் நீலத்தை மட்டுமே பார்க்க நினைத்தன
நீலங்கள் கடந்துகொண்டிருந்தன
ஒருமுறை நம் வானம் நீல நிறத்தில் ஒரு மழை பெய்தது
நனைந