விளம்பர நீளத்தில் ஒரு மரணம்
சுற்றியிருக்கும் கட்டமைப்புக்கு ஏற்றபடிதான் யோசிக்க முடியும்
இப்போது என் கார் கண்ணாடியின் இடதுபக்கமாகப் பாதி வழிசலில் உறைந்துபோன நீர்த்திவலையைப் போன்ற ஒரு விரிசல் ஏற்பட்டிருக்கிறது. காரோட்டும்போது முன்னாலிருந்து பறந்து வந்த சிறிய கூழாங்கல்லோ, வேறு ஏதேனும் கடினமான பொருளோதான் விரிசலை ஏற்படுத்தி யிருக்க வேண்டும். அதாவது இது தெய்வாதீனமான சம்பவம். முன்னாலிருந்து பறந்து வந்து தாக்கும் எல்லா விஷயங்களும் சந்தேகமில்லாமல் தெய்வத்தின் விருப்பம்தான். இதை சுசீலாவுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பலாமா என்று கொஞ்ச நேரம் யோசித்தேன். ஆனால் விவாகரத்துக் கோரிக்கைக்குப் பிறகு நான் அவளைத் தொடர்புகொள்ளவே கூடாது என்றும் அவள் நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கியிருந்தாள். முன்னாலிருந்து வந்து தாக்கும் எல்லா விஷயங்களும் தெய்வாதீனமானவை.
இந்திரனோடு சல்லாபித்துக்கொண்டிருந்து விட்டுப் பதறி எழுந்த அகலிகையும் புருஷன