இடையில்...
ஈவெத்: நான் உன்னை விரும்புகின்றேன்.
உண்மையிலேயே நான் அவளை விரும்பவும் இல்லை, விரும்புதல் எனும் பதத்தின் அர்த்தம் எனக்கு இன்றுவரை விளங்காததாகவே உள்ளது. விரும்புதல், ஒரு சாதாரணச் சொல் போலும்.
மோ: நானும் உன்னை விரும்புகின்றேன்.
ஈவெத்: முத்தங்கள்.
மோ: மீண்டும் முத்தங்கள்.
ஈவெத்: ஆயிரம் முத்தங்கள்.
மோ: கோடி முத்தங்கள்.
ஈவெத்: நான் உன்னை விரும்புகின்றேன்.
மோ: உனது உடல் எனது முத்தங்களால் மூடப்பட்டுள்ளது.
ஈவெத்: ஆ!
மோ: நீ என்னைப் பார்க்க விரும்புகின்றாயா?
ஈவெத்: காட்டு!
ஈவெத், அவள் எனக்குச் சொன்ன தன் பெயர். அவளது yahoo பெயர் கும்பாகும்பா.
அவள் எனது முகத்தைப் பார்ப்பதற்காக
webcam ஐத் திறந்தேன்.
“உங்களது webcam இனைப் பார்ப்பதற்காக கும்பாகும்பாவுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது,” எனத் தெரிவி