மயக்கம் தெளிந்தபிறகு
பாசாலையில் காலை உடற்பயிற்சி முடிவதற்குள் பசி மயக்கத்தில் விழும் பிள்ளைகளைப் பார்த்திருக்கிறேன். அவ்வாறு நான் ஒருநாளும் விழுந்ததில்லை; அதற்கு நான் பழக்கப்பட்டுப்போயிருந்தேன். காலையில் மட்டும் சாப்பிடாமல் இருந்ததைவிடப் பல நேரம், பல நாட்கள் கூட சாப்பிடாமல் கடந்து வந்திருக்கிறேன். பசி எனக்குப் பழக்கமான நண்பன். ஏழையின் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடக்கூடியவன்.
அந்த வயதில் எத்தனையோ ஆசைகள் பொறாமைப்படுவதிலேயும் அம்மாவுடன் கோபிப்பதோடும் அப்பாவை வெறுப்ப தோடும் காணாமல்போய்விட்டிருக்கின்றன.
அவன் வடிவான சப்பாத்துப் போட்டிருக்கிறான். நான் இன்னும் இரண்டாம் ஆண்டு போட்ட சப்பாத்தை நாக்குத்தள்ளியும் கூட கால்விரல்களை மடக்கித் தைத்துத்தைத்துப் போட்டுக்கொண்டிருக்கிறேன். இதிலிருந்து எப்போது கால்விரல்களை எடுக்கலாம் என்பதற்காய்ப் பாடசாலை மணியைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன். ஜீப்பறுந்துபோன புத்தகப்ப