மனைவி
John Stuart Mill 1800களின் சிறந்த சிந்தனைவாதி. இவர் பொருளாதார, சமூக, அரசியல் சிந்தனையாளர்; பெண்ணிலைவாதியுமாவார். இவரது மனைவி Harriet Taylor Mill. ஹரியட்டின் முன்னாள் கணவன் இறந்து இரண்டு வருடங்களின் பின்னர் ஜோனும் ஹரியட்டும் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் நீண்ட காலமாகவே இணைப்பில் இருந்தனர். ஹரியட், பெண்கள் சமத்துவத்தை முன்னிலைப்படுத்திய சமூகப் போராளி.
ஹரியட் இறந்து பல வருடங்களின் பின்னர் The Enfranchisement of Women என்ற கட்டுரை நூல் ஜோனின் பெயரில் முதலில் வெளிவந்தது; இரண்டாவது பதிப்பின்போது ஹரியட்டின் பெயரில் இந் நூல் வெளிவந்தது. ஜோன் பின்னர் தனது சயசரிதையில், கட்டுரைகளைத் தானும் ஹரியட்டும் இணைந்தே எழுதினோம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் ஜோனின் ஆக்கங்கள் பலவற்றின் பிரதான எழுத்தாளர் ஹரியட் எனவே கருதப்படுகின்றது. சோசலிசம், பெண்கள் சமத்துவம், தனி மனிதச் சுதந்திரம் போன்ற விடய