அன்னா பெர்ன்ஸின் 'பால்காரன்'
முதலில் மான் புக்கர் பரிசு பற்றி மிகச் சுருக்கமான அறிமுகம். பிறகு இந்த ஆண்டு பரிசு பெற்ற அன்னா பெர்ன்ஸின் (Anna Burns) ‘பால்காரன்’ (Milkman) பற்றிச் சொல்கிறேன். ஆண்டுதோறும் ஆங்கில நாவல்களுக்காக ஐக்கிய இராச்சியத்தில் தரப்படும் பரிசு இது. தேர்வு செய்யும் ஆண்டில் வெளிவந்த நூல்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நோபல் பரிசு போல் எழுத்தாளரின் வாழ்நாள் படைப்புகள் பரிசீலனை செய்யப்படுவதில்லை.
இது புக்கர் பரிசு ஆரம்பித்து 50 ஆவது வருடம். 1968 இல் Booker–McConnel என்ற நிறுவனத்தின் ஆதரவுடன் இந்தப் பரிசுத்திட்டம் அரவமில்லாமல் தொடங்கப்பட்டது, பிறகு பண நெருக்கடி காரணமாக 2012இல் முதலீட்டு மேலாண்மை நிறுவனமான Man Group சேர்ந்துகொண்டது. அதன்பின் மான் என்ற பெயர் புக்கருடன் இணைந்துகொண்டது. இந்த இரண்டு நிறுவனங்களுமே சர்ச்சைக்குரியவை. இரண்டுக்கும் காலனியத் தொடர்புண்டு