ஆங்கில அகராதிகள்: மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட பெண்பங்களிப்புகள்
இந்தப் பத்தி ஒரு பின்னிணைப்பு. ஏற்கெனவே ஆங்கில அகராதியின் ஆக்கம் பற்றி முன்பு ஜனவரி 2019 இதழில் எழுதியிருந்தேன். அதில் விடுபட்டுப்போனதும் எனக்குத் தெரிந்திராததுமான தகவல்களின் தொடர்ச்சி இது.
அகராதிகள் பற்றி ஒரு தோற்றுரு உண்டு. நரைத்த மயிருடைய, தடித்த மூக்குக் கண்ணாடிஅணிந்து, கையில் புகைக்கும் குழாயைப் பிடித்துக்கொண்டு பல தொக்கையான புத்தகங்களின் நடுவில் தனித்த ஓர் ஆள் உன்னிப்பாகப் படித்த வீரசூர முயற்சியின் விளைவுதான் இந்த அகராதிகள். இந்த மாமேதை பெரும்பாலும் ஆணாகத்தான் இருப்பார். நம் விரல்கள் பட்டு அழுக்கடைந்த ஆங்கில அகராதிகளின் பெயர்களைப் பாருங்கள், நான் சொல்வது விளங்கும். Johnson’s Dictionary, Murray’s Dictionay, Webester’s Dictionary, Collin’s Dictionary, Longman’s Dictionary. ஆங்கில அகராதிகள் ஆண்களின் பெயர்களில்தான் அலங்காரம் பெறுகின்றன, ஆராதிக்கப்படுகின்