சிற்பி தனபால் நூற்றாண்டு - கலைவெளிப் பயணி
சிற்பி தனபாலின் நூற்றாண்டில் அவர் குறித்த, அவருடைய சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் குறித்த மீள் பார்வை அவசியமாகிறது. இதுவரையிலும் கலை ஆளுமைகள் குறித்து என்ன நடந்திருக்கின்றன என்பது ஒருபுறம் இருந்தாலும், மீண்டும் ஒரு புள்ளியிலிருந்து தனபால் போன்ற ஆளுமைகளைப் பேச வேண்டிய அவசியமிருக்கிறது. ஏனெனில் அந்த அளவிலான பெரும் கலைப் பங்களிப்பை நிறைய பேர் செய்திருக்கிறார்கள். அதன் வழியாகச் சமூகத்தின் கலைப் போக்கையும் செழுமைப்படுத்தியிருக்கிறார்கள். சமூகத்தின் அழகியல் முகத்தை நவீனத் தன்மையில் உருவாக்கியிருக்கிறார்கள். அந்தவகையில் இவர்கள் நவீனத் தன்மையின் அடிப்படை ஆதாரங்களாக