ஒரு சொல்லின் தூய்மை
ஒரு சொல்லின் தூய்மை
ஒரு தூய சொல்லின் சாயலில்
இருக்கிறது
உன் சன்னதியின் மௌனத் தனிமை
அதைக் கொண்டு
என் அசுத்தத்தை மட்டுமேவா போக்குவது
உன் மாயம்
எந்த உயிரையும் புனிதப்படுத்துமே
அதையா எனக்குப் பரிசளித்தாய்
எனக்கு மட்டுமேவா
ஆனால்
அதன் அர்த்தம் பிளந்து
என் மந்திர வெடியை
உருகிச் சொருகி உறுவி மருகி
சொல்லித் தொலைத்த சொல்
தந்த ஆனந்தத்தை
என் நாவால்
கருவறையிலேயே கழுவேற்றி
நான் செய்த
இந்தத் தன்னெதிர்ப்புக் கவிதையை
உன் அருள் பெற்ற
ஒரு சொல்லில் மலரும் தீயின் ஒளி கொண்டு
காத்து அருள வேண்டும்
நீ
ஏவிவிட்ட கவிதை
என் விரல்களை நசுக்கும்
உன் காமத்த