காகித மிருகக்காட்சிச்சாலை
என்னுடைய குழந்தைப்பருவ நினைவு ஒன்று நான் தேம்பியழுவதுடன் தொடங்கும். அப்பாவும் அம்மாவும் எவ்வளவு முயன்றும் நான் அழுவதை நிறுத்தவில்லை.
முயற்சியைக் கைவிட்டு அப்பா படுக்கையறை யிலிருந்து வெளியேறினார். சமையலறைக்கு அழைத்துச்சென்ற அம்மா காலையுணவு மேசையில் என்னை அமர வைத்தாள்.
“கன், கன்”, என்றபடி குளிர்பதனப்பெட்டியின் மேலிருந்து பொதிக்காகிதங்களை உருவினாள். வருடங்களாகக் கிறிஸ்துமஸ் பரிசுப் பொதி களைச் சுற்றிய காகிதங்களைக் கவனமாக வெட்டியெடுத்து அவற்றைக் குளிர்பதனப் பெட்டிமேல் கனமான அடுக்காகச் சேகரித்து வந்தாள் அவள்.
அதன் வெற்றுப்பக்கம் மேலேயிருக்க பொதி காகிதத்தைப் பரப்பிவைத்தாள்; பிறகு அதை மடிக்கத் தொடங்கினாள். நான் அழுவதை நிறுத்தி ஆர்வமுடன் கவனித்தேன்.
அம்மா காகிதத்தைத் திருப்பிவைத்து மீண்டும் மடித்தாள். குவிந்த அவள் கைகளுக்கிடையே அந்தக் காகி