முரண்பாடுகளின் நினைவு அரிச்சுவடி
மொழிகளும் அவற்றிலிருந்து பிறக்கும் கதையாடல்களும் எப்போதும் மோதிக்கொண்டே இருக்கின்றன. சொல்பவர், கேட்பவர், அவை ஒலிக்கும் வெளிகள் அனைத்தும் முரண்களும் போராட்டங்களும் நிறைந்தவை. ஈழப்போர் முடிவுற்றுப் பத்து ஆண்டுகள் முடிந்தபின்னும் மோதலின் சாட்சியங்களை உடல்களும் மனங்களும் சுமந்தலைகின்றன. அவை அலையும் வெளிகளின் ஒலியும் நிறங்களும் சொற்களும் பின்னிப் பிணைந்த தளம் எப்படியிருக்கும்?
விரைவில் வெளியாகவிருக்கும் ‘A to Z of the Conflict’ எனும் மும்மொழி நூல் இதற்கு விடை தருகிறது. போர் / மோதல் /முரண்பாடு போன்றவற்றோடு தொடர்புபட்ட நூற்றுக்கணக்கான சொற்களின் பல பரிமாணங்களைக் காண்பியக்கலை வெளிப்பாடுகளின் மூலம் இந்நூல் பிரதிபலிக்கின்றது.
நூலைப் பற்றி விவரிக்குமுன் முரண்பாடு எனும் பதத்தின் பன்மைத்துவத்தை விளங்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. கார்ல் மார்க்ஸின் நோக்கில் சமூக முரண்பாடு என்பத