இங்கே நிறுத்தக்கூடாது
ஒருநாள் எப்படி தொடங்கி எப்படி முடிய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவர் மனைவிதான். 1983இல் கனடா வந்தபோதும் அவர் மனைவிதான் முடிவுகளை எடுத்தார். இப்போது 2010லும் அவர்தான் எடுப்பார். அன்றைய நாளை நினைத்தபோது பரமேஸ்வரனுக்குக் கொஞ்சம் நடுக்கம் எடுத்தது. அதிகாலை அவருடைய மனைவி நாளின் திட்டங்களைச் சொன்னபோது மனது படபடக்கத் தொடங்கியது. அவருடைய மனைவியிடம் நல்ல பேர் வாங்க வேண்டுமென்றால் செய்யும் காரியத்தில் ஒரு சின்னப் பிழைகூட விடக்கூடாது.
தயங்கியபடியே சொன்னார். ‘என்னுடைய கார் பாட்டரி போய்விட்டது. கார் திருத்துபவர் புது பாட்டரியோடு வந்து சில நிமிடங்களில் மாற்றிவிடுவார். இன்று மட்டும் உம்முடைய காரை எடுக்கிறேன். இப்பொழுது தொடங்கினால்தான் வேலையை முடிக்க முடியும்.’
‘அய்யோ, என்னுடைய காரா? அது புதுக்கார் அல்லவா? கவனமாக ஓட்டுங்கோ’ என்று சொன்னபடி கார் சாவியை ஒரு பொன்திறப்பைத் த