தலையங்கம்

தலையங்கம்   எல்லாரும் கல்வியறிவு பெற்றிட வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கிய நாம் ஆரம்பக் கல்வியைப் பற்றியே அதிகம் பேசி வந்திருக்கிறோம். அவற்றோடு ஒப்பிடுகையில் உயர்கல்வி பற்றி அதிகம் விவாதிப்பதில்லை. ஆனால் ஆரம்பக்கல்வியை வலியுறுத்துவதன் நோக்கம், அது உயர்கல்வியை நோக்கிச் செல்கிறது என்

விருது

‘ஸ்பாரோ’ இலக்கிய விருது 2019   ‘ஸ்பாரோ-ஆர். தியாகராஜன் இலக்கிய விருது’ தேர்வுக் குழு (அரவிந்தன், அம்பை, டாக்டர். சரஞ்சித் கௌர்) இந்த ஆண்டு கவிதை வகைமையைக் எடுத்துக்கொண்டது. தமிழுக்கு இரு விருதுகளும் பிற மொழிக்கு ஒரு விருதும் வழக்கமாக வழங்கப்படுகின்றன. தமிழ் இலக்கிய

EPW பக்கங்கள்
க.திருநாவுக்கரசு

EPW பக்கங்கள் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை தேர்தல் பின்னடைவை எதிர்கொள்ளும்போது நிலைமை மேலும் மோசமாகாதிருப்பதை எதிர்க்கட்சிகள் தவிர்ப்பது எப்படி?   பாரதீய ஜனதா கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ள தேர்தல் வெற்றியானது அளவிலும் வாக்கு வித்தியாசத்திலும் பிரம்மாண்டமானது. இதற்கு யாரு

கடிதங்கள்

கடிதங்கள் உயிர்த்த ஞாயிறு வன்முறைக்குப் பிறகு இலங்கை முஸ்லிம் சமுதாயத்தின் மீது ஏவப்படும் வன்மமும் அத்துமீறல்களும் பதற வைக்கின்றன. அனைத்து மதத்திலும் எல்லா வகையான மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பிட்ட சில மனிதர்கள் செய்த இப் பாதகச் செயல்களுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் புறக்

கண்ணோட்டம்
ஸ்டாலின் ராஜாங்கம்

கண்ணோட்டம் கருத்துரிமை: சில புதிய அம்சங்கள் ராஜராஜசோழனும் பா. ரஞ்சித்தும் ஸ்டாலின் ராஜாங்கம் ராஜாராஜசோழன் பற்றி பா. ரஞ்சித் தெரிவித்த கருத்திற்காக சமூகவெளி அரசியல் வெளி இரண்டிலும் அவர் கடும் கண்டனத்திற்கு ஆளாக்கப்பட்டார். சாதி, சமய, இனவாத அமைப்புகளின் எதிர்கொள்ளல் ஒருபுறம்; காவல்நிலை

கட்டுரை
கண்ணன்

கட்டுரை இந்தி: திணிப்பும் எதிர்ப்பும் கண்ணன் யுனெஸ்கோவும் பென் இன்டர்நேஷனல் அமைப்பும் இணைந்து சிறுபான்மை மொழிகள்பற்றி ஓர் ஆய்வை மேற்கொண்டன. (Culture’s oxygen: The PEN report) சிறுபான்மை மொழிகள் அழியும் அபாயத்தில் இருப்பவை. ஆனால் இவ்வறிக்கை சிறுபான்மை என்பதை மொழிகள் பேசுவோரின் எண்ண

கவிதைகள்
பாதசாரி

கவிதைகள் பாதசாரி Courtesy: ‘Amavasya’ India Foundation for Arts   மரம் நான் தனியென உணராத் தனிமரமும் தோப்பாகும்..     வழி இடமெல்லாம் எனக்கு கால்களால் தெரிந்தவை மட்டுமே..   கண்ணும் காதும் அறியாதவை என்னிடம் வழி கேட்டால

அஞ்சலி: கிரீஷ் கார்னாட் (1938-2019)
பாவண்ணன்

அஞ்சலி: கிரீஷ் கார்னாட் (1938 - 2019) அர்ப்பணிப்பால்தான் கலை வாழும் பாவண்ணன் 10.06.2019 அன்று காலை எட்டரை மணியளவில் தேசிய அளவில் அனைத்து மொழி நாடக ஆர்வலர்களும் பார்வையாளர்களும் நெருக்கமாக அறிந்த கிரீஷ் கார்னாட் இயற்கையெய்தினார். ஏறத்தாழ மூன்று நான்கு ஆண்டுகளாக உயிர்க்காற்றை நிரப்பியிருக

அஞ்சலி: கிரீஷ் கார்னாட் (1938-2019)
விவேக் ஷான்பாக்,தமிழில்-கே.நல்லதம்பி

அஞ்சலி: கிரீஷ் கார்னாட் (1938 - 2019) சாலச் சிறந்தவரும் நேர்மையாளரும் விவேக் ஷான்பாக் கிரீஷ் கார்னாடுடன் என் முதல் சந்திப்பு எப்போது, எப்படி நடந்தது என்பது நினைவிலில்லை. மனத்தால் பலமுறை சந்தித்தவரின் முதல் சந்திப்பை நினைவில் வைத்துக்கொள்வது சிரமம். நேரடியாகச் சந்திப்பதற்கு முன்பே கார்னா

சிறப்புப் பகுதி

சிறப்புப் பகுதி தமிழகத்தில் உயர்கல்வி ஓவியம்: சென்னை பல்கலைக்கழகம், மனோகர் தேவதாஸ்   காலச்சுவடு இதழ் எண். 226 (அக்டோபர் 2018) கல்விச் சிறப்பிதழாக வெளியானது. தமிழகத்தில் தொடக்க, உயர்நிலைப் பள்ளிக் கல்வி குறித்துக் கல்வியாளர்கள் விரிவான விவாதங்களை முன்வைத்தனர். அவற்றுக்கு வாசகரிடை

சிறப்புக் கட்டுரை
கா.அ. மணிக்குமார்

சிறப்புப் பகுதி கல்வியின் நிலை இன்று கா.அ. மணிக்குமார்     கல்வி கொடுப்பது பெற்றோரின் கடமை என்ற நிலை இருந்தபோது கல்வி அனைவருக்கும் போய்ச் சேரவில்லை; எனவே சுதந்திர இந்தியாவில் கல்வி கொடுப்பது அரசின் கடமையாக இருக்க வேண்டும் என முடிவு செய்தது இந்திய தேசிய காங்கிரஸ். அதன்படி

சிறப்புக் கட்டுரை
கே. நிலாமுதீன்

சிறப்புப் பகுதி கல்வியின் பரிணாமங்கள் கே. நிலாமுதீன்   சமூகம் இத்தனை பரிமாணங்களைக் கடந்து வந்ததும் அதனைக் கடத்திச் சென்றதும் கல்வி என்ற வலுவான ஆயுதத்தாலாகும். மற்ற உயிர்களிலிருந்து மனிதன் மாறுபட காரணம் மனிதனின் பகுத்தறிவு. அந்தப் பகுத்தறிவை அவன் பெறவும் பெற்றதை அடுத்தவருக்கும் அ

சிறப்புக் கட்டுரை
அ.கா. பெருமாள்

சிறப்புப் பகுதி வல்லுநர் பஞ்சம் அ.கா. பெருமாள்   முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் உயர்கல்வியின் சரிவு பற்றிய தன் கருத்தைக் கூறும்போது, “எதிர்காலத்தில் பரபரப்பான இயந்திரமயமான சூழலில் பெற்றோரின் கவனத்தைக் குழந்தைகள் இழப்பார்கள்; சமயச் சான்றோரின் பொதுவான பார்வையை விட்டுச் செ

சிறப்புக் கட்டுரை
 சச்சிதானந்தன் சுகிர்தராஜா

சிறப்புப் பகுதி ஆங்கில வளாகங்கள்: சில நடப்புகள் சச்சிதானந்தன் சுகிர்தராஜா   பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் பற்றிய இந்தக் கட்டுரையைப் புதிய ஏற்பாட்டு வசனத்துடன் தொடங்குகிறேன்: “காசுக்காரர்கள் தேவாலயத்தை ஆக்கிரமித்துவிட்டார்கள்.” இன்றைய பல்கலைக்கழகங்கள் மார்கிரேட் தாட

நேர்காணல்
பெருமாள்முருகன்

சிறப்புப் பகுதி பெரும்பான்மையே பாதுகாப்பு என்று கருதும் காலம் நேர்காணல்: அ. சங்கரசுப்பிரமணியன் சந்திப்பு: பெருமாள்முருகன்   பேராசிரியர் அ. சங்கரசுப்பிரமணியன் (1947) அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி 2005இல் ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக

சிறப்புக் கட்டுரை
இ. அண்ணாமலை

சிறப்புப் பகுதி சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழின் இருப்பு: பன்மொழி, பல்துறைத் தொடர்பு இ. அண்ணாமலை   சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி தொடங்கி 2017இல் ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் தமிழ் ஆய்வும் கற்பித்தலும் வளர்ந்தவிதம் பற்றிச் சுருக்கமாகவும்

சிறப்புக் கட்டுரை
ஆர். சிவகுமார்

சிறப்புப் பகுதி ஆசிரியப்பணி தந்த நிறைவும் குறைவும் ஆர். சிவகுமார்   1970களின் தொடக்கத்தில் பி.ஏ. படிப்புக்கு அரசு கல்லூரியில் ஆண்டுக் கல்விக் கட்டணம் எழுபத்தைந்து ரூபாய். இரண்டாமாண்டிலும் மூன்றாமாண்டிலும் தாமதத்துக்கான அபராதமும் சேர்த்தே செலுத்திப் படிக்க வேண்டிய குடும்பச் சூழலி

கவிதைகள்
ஜான் சுந்தர்

கவிதைகள் ஜான் சுந்தர் ஓவியம்: K.K. Hebbar   செஃபியா செத்த நொடியை சாகா நிலைக்கு மாற்றும் காலாதீதம் செஃபியா டோன் என்றான் புகைப்படக்காரன்   அலாதியாக அவன் துவங்க தேனீரும் அந்தியும் கூட உன்னித்திருந்தன   செம்பரிதிக் கூந்தல் புரள இழுத்

கதை
வண்ணநிலவன்

கதை ஒரு காதல் கதை வண்ணநிலவன் ஓவியம்: மணிவண்ணன்   சுத்தமல்லி பஸ் புறப்படுகிறவரை அவன் அவளுக்குப் பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தான். அது வழக்கம்தான். ஆனால் மாரிச் செல்விக்குத்தான் பஸ் புறப்படுகிறவரை திக்... திக்... என்றிருந்தது. அவனோடு அவளுக்குப் பழக்கம் ஏற்பட்டு நாலைந்து மாதத்திற்

கட்டுரை
கோ. ரகுபதி

கட்டுரை நவீன காலக் காதல் உரையாடல் கோ. ரகுபதி   “ஆறறிவுடைய மக்களாய்ப் பிறந்து அறிவையும் அழகையும் நற்குணங்களையும் கண்டு பாராட்டிக் காதலன்பு கொள்ளத்தக்க ஆண், பெண் மக்களா இடையே புகுந்த ஜாதி வேற்றுமை யென்னும் பாழான கொலைக் கருவியால் வெட்டியழிக்கப்படுவது?” – ஆ. சத்திய

கவிதை
பா. வெங்கடேசன்

கவிதை பா. வெங்கடேசன் ஓவியம்: K.K. Hebbar   இவ்விதமிருக்கும் காலம் இந்த மதியம் முப்பரிமாணம் கொண்டிருக்கிறது காலம் இவ்விதமிருப்பது விரும்பத்தக்கதல்ல ஒரு தேநீர்க் கடை நேற்றைக்கப்பாலிருந்து அடையாமல் வந்துகொண்டேயிருக்கிறது உரையாடல் வெய்யிலுக்குள் உள்வாங்குகிறது யார

கட்டுரை
எல். சிவகுமார்

கட்டுரை உ.வே.சா. முன்வைத்த இந்திய பௌத்தம் எல். சிவகுமார்   ஓலைச் சுவடியில் இருந்த பழந்தமிழ் இலக்கியங்களை அச்சுக்கு ஏற்றியவர்களுள் முதன்மையானவர் உ.வே. சாமிநாதையர். வைதீக சமய நூல்கள் அச்சுக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் அவர் அதற்கு எதிரான சைன (சமண) சமய சீவக சிந்தாமணியைப் பதிப்பித்

அஞ்சலி: ஸ்ரீபதி பத்மநாபா (1970 - 2019)
ஓவியர் ஜீவா

அஞ்சலி ஸ்ரீபதி பத்பநாபா (1970 - 2019) ஓவியர் ஜீவா   கனவுகளின் ஆரண்யம்   கோவை இலக்கிய வட்டம் எல்லா ஊர்களையும் போல சிறியதுதான். கூட்டங்களுக்கு வரும் எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும். ஸ்ரீபதியும், சுதேசமித்திரன் என்றழைக்கப்பட்ட ஷங்கரும் இப்படித்தான் எனக்கும் அறிமுகமானா

பதிவு
கிருஷ்ண பிரபு

பதிவு பூமணியை வாசித்தல் கிருஷ்ண பிரபு   முன்னோடி எழுத்தாளர்களைக் கொண்டாடும் விதமாக அவர்களது புனைவுகளைப் பருந்துப் பார்வையில் ஆய்வுக் கட்டுரைகளாகத் தீவிர வாசகர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கும் கருத்தரங்கக் கூட்டத்தைக் கவிஞர் பெருந்தேவி தனது நண்பர்களுடன் ஜூன் 7, 2014ஆம் ஆண்டு முன்ன

உள்ளடக்கம்