இந்தி: திணிப்பும் எதிர்ப்பும்
கட்டுரை
இந்தி: திணிப்பும் எதிர்ப்பும்
கண்ணன்
யுனெஸ்கோவும் பென் இன்டர்நேஷனல் அமைப்பும் இணைந்து சிறுபான்மை மொழிகள்பற்றி ஓர் ஆய்வை மேற்கொண்டன. (Culture’s oxygen: The PEN report) சிறுபான்மை மொழிகள் அழியும் அபாயத்தில் இருப்பவை. ஆனால் இவ்வறிக்கை சிறுபான்மை என்பதை மொழிகள் பேசுவோரின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் வரையறுக்கவில்லை. ஒரு மொழியைப் பொதுவிடத்தில் பேச அம்மொழியினர் கூச்சப்பட்டால் அது சிறுபான்மைமொழி என வரையறுத்தனர். ஒரு மொழியைப் பேசுபவர் குறைந்த எண்ணிக்கையில் இருந்தால