அர்ப்பணிப்பால்தான் கலை வாழும்
அஞ்சலி: கிரீஷ் கார்னாட் (1938 - 2019)
அர்ப்பணிப்பால்தான் கலை வாழும்
பாவண்ணன்
10.06.2019 அன்று காலை எட்டரை மணியளவில் தேசிய அளவில் அனைத்து மொழி நாடக ஆர்வலர்களும் பார்வையாளர்களும் நெருக்கமாக அறிந்த கிரீஷ் கார்னாட் இயற்கையெய்தினார். ஏறத்தாழ மூன்று நான்கு ஆண்டுகளாக உயிர்க்காற்றை நிரப்பியிருக்கும் உருளையுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறுகுழாய் மூக்கோடு பொருந்தியிருக்கும் நிலையிலேயே அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்துவந்தார். அந்த நிலையில் அவரைப் பார்ப்பவர்கள் ஒருகணம் சற்றே பதற்றம்கொண்டு கலங்கிவிடுவார்கள். ஆனால் க