ஆகஸ்டில் சந்திப்போம்
கதை
ஆகஸ்டில் சந்திப்போம்
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
ஆகஸ்ட் 16, வெள்ளிக்கிழமை, இரண்டு மணி பயணியர் படகில் அவள் அந்தத் தீவுக்குத் திரும்ப வந்தாள். கோடுபோட்ட சட்டையும் ஜீன்ஸும் காலுறை இல்லாமல் தட்டையான சாதாரண ஷூக்களும் அணிந்திருந்தாள். சாட்டின் குடை வைத்திருந்தாள். ஒரு நீச்சல்பை மட்டுமே அவளுடைய பயணச்சுமையாக இருந்தது. படகுத்துறையில் வாடகைக் கார்கள் வரிசையாகக் காத்திருந்தன. ஆனால் அவள் உப்புக் காற்றில் அரித்துப்போன பழைய ரகக் காரை நோக்கிப் போனாள். பழைய நண்பரை வரவேற்பதுபோல காரோட்டி அவளுக்கு முகமன் கூறினார். களிமண் மூங்கில் குடிசைகளும் பனையோலைக் கூரைகளும் நிறைந்த ஆள்நடமாட்டமில்லாத கிராமத்தினூடே தகிக்கும் கடலை நோ