சமத்துவமற்ற கல்விக் கொள்கை
கட்டுரை
சமத்துவமற்ற கல்விக் கொள்கை
த. சுந்தரராஜ்
இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி இந்தியாவின் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் முனைப்பில் இருக்கிறது. கடந்த ஆட்சியின் இறுதியில், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இந்தியாவின் புதிய கல்விக்கொள்கையின் வரைவை மே 31இல் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இருபத்து மூன்று அத்தியாயங்களில் நான்கு பகுதிகளாக அமைந்துள்ள புதிய கல்விக்கொள்கை இதற்கு முன்பு வடிவமைக்கப்பட்ட இரு கல்விக்கொள்கையின் (1968,1986/92) சில அடிப்படைகளோடு பல புதிய கொள்கைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மூன்று வயதில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பு