கதிர்ச்சிதைவு
கதை
கதிர்ச்சிதைவு
அனோஜன் பாலகிருஷ்ணன்
ஓவியங்கள்: மு. குலசேகரன்
1
சரியாகப் போன டிசம்பர் மாதம் லோகாவின் கண்முன்னே ஜேம்ஸின் காலரைப் பிடித்து இழுத்து அவனது நீண்ட சதுர நெற்றியை பியர் போத்தலினால் தாக்கியிருந்தேன். கை வழுக்கியதால் சரியாக அவனை அடிக்க முடியவில்லை. போதை தெளிந்த பின்னர் அதற்காக மகிழ்ச்சியடைந்தாலும் சுயவெறுப்புக்கு ஆளானேன். லோகாவின் நீலக் கண்கள் அப்போது ஈரமாகிப் பின்னர் இருண்டதை இன்னும் துல்லியமாக நினைவுகூர முடிகிறது. சரியாக ஏழு மாதங்களும் இரண்டு நாட்களுமாக லோகாவும் நானும் சேர்ந்து வாழ்ந்தோம். இங்கிலாந்திலுள்ள கேம்ப