செயலி யுகத்துக் காதல் கவிதைகள்
கட்டுரை
செயலி யுகத்துக் காதல் கவிதைகள்
பா. வெங்கடேசன்
தொழில்நுட்பம் ஒரே சமயத்தில் விஞ்ஞானத்தோடும் மதத்தோடும் உறவுகொள்கிறது; அறிவோடும் உணர்வோடும் உறவாடுகிறது. உழைக்கும் வர்க்கத்திற்கும் முதலீட்டியத்திற்கும் இணக்கமாயிருக்கிறது. கடந்த காலத்திடமும் எதிர்காலத்திடமும் ஒரேவிதமான வாக்குறுதிகளை அளிக்கிறது. ஒரு காலகட்டத்தின் சமூகத் தன்னிலையைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் உடலைத் தம் உரிமையென்று தைரியமாகச் சொல்வதைச் சாத்தியப்படுத்துகிறது; அதே சமயத்தில் முதலீட்டியம் அந்த உடல்களை இயக்குவதற்கும் வாய்ப்பளிக்கிறது. இது இந்த நூற்