தலையங்கம்

தலையங்கம் 43ஆவது சென்னைப் புத்தகக் காட்சி   தமிழ் மக்களிடையில் வாசிப்புப் பழக்கம் ஏற்படவும் நிலைபெறவும் தொடரவும் காரணமாக இருப்பவற்றுள் சென்னைப் புத்தகக் காட்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்குண்டு. அதைத் தொடர்ந்து நடத்தும் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (பபாசி)

கடிதங்கள்

கடிதங்கள் எம். கோபாலகிருஷ்ணனின் ‘சிவகாமி’ கதை மனத்தைக் கனக்கச் செய்துவிட்டது. சித்துராஜின் ‘பெருச்சாளிகள்’ புதிய வாசிப்பனுபவத்தை வழங்கிய கதை. சுகுமாரனின் கட்டுரையும் ஆற்றாமையும் ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலினை நினைவுபடுத்தியதுடன், தமிழ்ச் சூழலையும் எண்ணச் ச

கவிதைகள்
சேரன்

கவிதைகள் சேரன் முடியா முடிவு இன்று முழுவதும் அலையலையாக உங்கள் நினைவுதான் நேற்றைய பின்னிரவில் வழமையாக வரும் ஈழக்கனவுகளும் கொலையுதிர் காலமும் அஞரும் வரவில்லை.   மீண்டும் மீண்டும் ஒரே கனவே வருமென்றால் அதன் பொருள் என்ன எனக் கேட்டேன்   படுகொலைக்குத் தப்பி

கதை
யுவன் சந்திரசேகர்

ஒரு நாளும் இன்னொரு நாளும் ஓவியர்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி   மூன்றுவார விடுமுறையில் குடும்பத்தோடு வந்திருக்கிறான் மூத்தவன். மூன்று நொடிகள்போலப் பறக்கப்போகும் இருபத்தொரு நாட்கள். அப்புறம் அடுத்த முறை வருவதற்கு இரண்டு வருடமோ மூன்று வருடமோ. மிஞ்சிப்போனால், இன்னும் நாலைந்துமுறை அவன் வருவதற

கட்டுரை
சுனில் கிருஷ்ணன்

காந்தியும் ஆயுர்வேதமும் கட்டுரை சுனில் கிருஷ்ணன் ஓவியம்: ஜி. குப்புசாமி வானத்திற்குக் கீழே அனைத்தையும் பற்றி காந்தி சில கருத்துகளைக் கொண்டிருந்தார். எழுதி, நிறுவி, முன்னகர்ந்து என ஓயாமல் அலையடித்துக் கொண்டிருந்தது அவருடைய கருத்துலகம். இத்தனை பரந்து விரிந்த கருத்துலகம் என்பதாலேயே அவரை

விவாதம்
தி.ம. தனராஜ்

திருப்புதல்கள் - திருத்தங்கள் விவாதம் தி.ம. தனராஜ்   சச்சிதானந்தன் சுகிர்தராஜா எழுதிய ‘கிறிஸ்தவத் திருமறையும் வடசொல் கலப்பும்’ கட்டுரையை முன்வைத்து: இது கட்டுரைக்கான எதிர்வினையல்ல. அக்கட்டுரை தெரிந்துகொண்ட கருத்துக்கேற்ப பல கருத்துகளையும் தகவல்களையும் உள்ளடக்கியிருந்த

கட்டுரை
சுடர்விழி

கட்டுரை உ.வே.சா. - கிறித்தவக் கல்லூரித் தமிழாசிரியர் கடித உரையாடல் சுடர்விழி   பாண்டித்துரைத்தேவர் கடிதம் புறப்பொருள் வெண்பாமாலை பதிப்பைத் தொடங்கத் தூண்டுகோலாக உதவியது.’  ‘அதுவரையில் தாமோதரம்பிள்ளைக்கு நான் கடிதம் எழுதியதில்லை. என் கடிதத்தைக் கண்டவுடன் அவர் ம

கட்டுரை
பா. பிரபாகரன்

கட்டுரை பிளாக் நம்பர் 11 அதிகாரத்தின் கொலைக்களம் பா. பிரபாகரன் ஓர் ஆய்வுக்கட்டுரைக்காக Holocaust பற்றிய நூல்கள் சிலவற்றைப் படித்துக்கொண்டிருந்தபோது இப்படி இந்தியாவில் நடப்பது சாத்தியமா என்றே எண்ணத் தோன்றியது. நிச்சயமாகவில்லை. அஸ்ஸாமில் முதல் தடுப்பு முகாம் தொடங்கப்பட்டு விட்டது. பெங்

கதை
ரேமண்ட் கார்வர்

கதை இறகுகள் ரேமண்ட் கார்வர் என்னோடு பணிபுரியும் இந்த நண்பன், பட், என்னையும் ஃபிரானையும் இரவு உணவுக்கு வரச்சொல்லி அழைத்தான். அவன் மனைவியை எனக்குத் தெரியாது, அவனுக்கு ஃபிரானைத் தெரியாது. அதற்கும் இதற்கும் சரியாகிவிட்டது. ஆனால் பட்டும் நானும் நண்பர்கள். பட்டின் வீட்டில் ஒரு சின்னக் குழந்தை

கட்டுரைகள்
மௌனி

மௌனி படைப்புகள் முழுத்தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் 2010இல் வெளியிட்டது. அதே நூல் காலவரிசைப்படி நிரல்படுத்தப்பட்டும் திருத்திச் செம்மைப்படுத்தப்பட்டும் 2011இல் வெளியானது. திருத்தப்பட்ட பதிப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கிக் கடிதம் எழுதிய மௌனியின் மகள் ஞானம் மகாலிங்கம் மௌனியின் இருபத்துநான்கு கதை

கவிதைகள்
பெரு. விஷ்ணுகுமார்

கவிதைகள் பெரு. விஷ்ணுகுமார் 1. பம்பரம் கொல்லனின் கட்டைவிரலில் சுழலும் தச்சனின் உடல்தான் எவ்வளவு சீக்கிரம் வயதாகி விழுகிறது மனைவியின் சடைநீளத்தை உடலெங்கும் சுற்றியபடிச் சேலையை லாவகமாய்ப் பின்னிழுக்க ஒன்றிலிருந்து வெளியேறுகிறது மற்றொன்று ஈயநிறச்சாயமிட்ட நாணத்தின் கட்ட

திரை
சிவராஜ் பாரதி

திரை கதாநாயக அரசியல் ‘தர்பார்’, ‘பட்டாஸ்’ படங்களை முன்வைத்து சிவராஜ் பாரதி   அண்மையில் வெளியான ‘தர்பார்’ திரைப்படமும் ‘பட்டாஸ்’ திரைப்படமும் தமிழ் சினிமா குறித்து மற்றொரு பார்வையை என்னுள் உருவாக்கின. இவ்விரண்டு திரைப்படங்களையும்

கதை
றஷ்மி

கதை வாவிக்கரை வீட்டில் வாழ்ந்தவர்கள் ஓவியங்கள்: றஷ்மி   ‘பே’ வாவி என்றும் இல்லாதவாறு சுபாவத்திற்கு மாறாக அன்று இரவு முழுக்கச் சத்தமிட்டுக்கொண்டிருந்தது. புறாக்களும் தாராயினங்களும் வாவியின் மேற்பரப்பில் கலவரத்தை உண்டுபண்ணியவாறு ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. முன் பனிக்கா

சிறப்புப் பகுதி: தமிழும் வடமொழியும்
ச. பால்ராஜ்

சிறப்புப் பகுதி: தமிழும் வடமொழியும் தமிழ், சமஸ்கிருத நிகண்டு உறவு ச. பால்ராஜ்   பொருள் விளங்கா அரிதான சொற்களுக்குப் பொருள் விளக்கம் கூறும் நூல் நிகண்டு. இதற்கும் நவீன அகராதிகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. அகராதிகள் அகரவரிசையில் ஒருசொல் பலபொருள் கூறுபவை; சொல்லுக்குச் சொல் பொருள் வழங்கும

சிறப்புப் பகுதி: தமிழும் வடமொழியும்
சிவானந்த ஷர்மா

சிறப்புப் பகுதி: தமிழும் வடமொழியும் ஈழத்து சம்ஸ்கிருத கல்வி கிரந்த லிபியின் முக்கியத்துவம்  சிவானந்த ஷர்மா   உலகின் மிகத் தொன்மையான இலக்கியங்களில் நன்றாகக் கருதப்படும் ‘ரிக்வேதம்’ சம்ஸ்கிருதத்தின் மூலபாஷையாகிய வேதபாஷையிலேயே அமைந்துள்ளது. ஆரம்பத்தில் பேச்சுமொழியாக

மதிப்புரை
மு. கிருஷ்ணமூர்த்தி

மதிப்புரை தீரா உரையாடல்  மு. கிருஷ்ணமூர்த்தி வசை மண் (கிளாசிக் நாவல்) மார்ட்டீன் ஓ’கைன் தமிழில்: ஆர். சிவக்குமார் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. ரோடு, நாகர்கோவில் & 1 பக். 360, ரூ. 390 இலக்கியத்தின் மையப்பொருளாகப் பல்வேறு மொழிகளில் இருந்து

உள்ளடக்கம்