திகிலுறச் செய்யும் இரட்டைத் தலைச் சர்ப்பம்
கதை
திகிலுறச் செய்யும் இரட்டைத் தலைச் சாப்பம்
எம்.எம். நௌஷாத்
நான் லார்வின் புரூ’ , ‘நான் கிரி மகானோ’ என்று இருவரும் தங்களுக்குள் அறிமுகம் செய்துகொண்டு கையைக் குலுக்கிக் கொண்டார்கள். ஹம்பிரே சிற்றுண்டியகத்தில் அவர்கள் அமர்ந்திருந்த ஏழாம் இலக்கச் சாப்பாட்டு மேசைக்கு இன்னுமொருவர் வர இருக்கிறார். இதோ வந்துகொண்டிருக்கும் அவர் திரு. கிளேன்ஸ் அல்பேர்ட். தனது மீசையைப் பலதடவை வருடிக்கொண்டு வரும்போதே அவரைக் கண்டுபிடித்துவிட முடியும். அவர் மூன்றாவது ஆசனத்தில் அமர்ந்தார்.
‘நான் அடிக்கடி மீசையை வருடுவது குறித்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் ஒரு காலத்தில் ரோலண்ட் பிங்கர்ஸின்1 தீவி