8:46, Prologue, Interlude, Epilogue
கவிதை
சிவசங்கர் எஸ்.ஜே
ஓவியம்: மணிவண்ணன்
8:46
Prologue
உலகின் அதியுன்னத நாட்டில்
அதிசிறந்த வீட்டில் பிறந்தேன்
உலகிற்கே அதிபதி
உலகை வென்றவர்களில் ஒருவன்
அப்படித்தான் வளர்க்கப்பட்டேன்
நானொரு வெள்ளையன்
குறைபாடுடையவன்
எனக்கு நன்றாகவே தெரியும்
நிறமிக் குறைபாடு
களிம்புகளாலும் சூரியக் குளியல்களாலும்
ஒன்றும் செய்ய இயலவில்லை
என்னை உயர்வாய்ப் பார்க்கும் ஒவ்வொருவரும்
அவர்களையறியாமலே
என்னை அவமானப்படுத்தினார்கள்
எனக்கொரு அந்தரங்க இலட்சியமுண்டு