8 நிமிடங்கள், 46 வினாடிகள், 16 ஆற்றொணா அலறல்கள்
கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
8 நிமிடங்கள், 46 வினாடிகள், 16 ஆற்றொணா அலறல்கள்
மேலே படித்த தலைப்பு ஏதோ ஒரு கணக்காய்வாளரின் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டதல்ல. இந்த 8 நிமிடங்கள், 46 வினாடிகள் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தில் வெள்ளையினக் காவலர் தன் முழங்காலை வைத்து உயிர்போகும்வரை அழுத்திக்கொண்டிருந்த நேரம். இந்தப் பதினாறு ஆற்றொணா அலறல்கள் ‘‘என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்று அவர் மன்றாடிய இரங்கல் வார்த்தைகள். “எனக்கு ஒரு கனா உண்டு” என்ற மார்டீன் லூதர் கிங்கின் வசனங்களுடன் கறுப்பினத்தவர்களின் வரலாற்றில், ‘‘என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்ற வேதனையான இந்த மூன்று சொற்களும் இனி ஒலிக்கும்.
<img alt="" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c298821558a6/content_images/issue-247/3.jp