நாடக அரங்கப் போராளி
அஞ்சலி: இப்ராஹிம் அல்காஸி (1925 – 2020)
நாடக அரங்கப் போராளி
செ. ரவீந்திரன்
தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் 1971 அக்டோபரில் தில்லி சென்றவன் நான். 1972 வாக்கில் மண்டி ஹவுஸ் டீக்கடை அருகில் வைக்கப்பட்டிருந்த தேசிய நாடகப் பள்ளியின் ஸ்டுடியோ தியேட்டர் விளம்பரத்தைப் பார்த்தேன். ரவீந்திரபவனின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ளது ஸ்டுடியோ தியேட்டர். அந்த அரங்கில் தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநர் இப்ராஹிம் அல்காஸியின் (Ebrahim Alkazi) இயக்கத்தில் அயனஸ்கோவின் (Eugene Ionesco) ‘The Lesson’ நாடகம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கண்டேன். ஸ்டுடியோ அரங்கின் நுழைவாயிலில் மூன்று ரூபாய் டிக்கெட் வாங்கிக்கொண்டு முதல் வரிசையில் இடம் பிடித்தேன். இந்நாடகத்தில