சுரா பக்கங்கள்
சுரா பக்கங்கள்
ஓவியம்: பி.ஆர். ராஜன்
10.11.01
அன்புள்ள ராஜு,
உங்கள் 03.11.01 கடிதம் கிடைத்தது. இப்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. பாதத்தையொட்டி ஒரு வலி. அதனால் காலை மாலை நடக்கப்போவது நின்றுவிட்டது. திருவனந்தபுரம் சென்று ஆர்தோவிடம் காட்டினேன். பெரிய அளவில் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார். நடக்கப்போக முடியாமல் இருப்பது சிறிது மனச்சோர்வைத் தருகிறது.
எங்கும் வெளியே செல்வதில்லை. உள்ளூர் கூட்டங்களுக்குக்கூட. இருந்தாலும் சில இடங்களுக்குப் போவதைத் தவிர்க்க முடிவதில்லை. டிசம்பர் 14இல் ‘WAVES’ என்ற என் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பின் வெளியீடு சென்னையில் நடைப