புத்தனின் உலகில் மொழிகளில்லை
கட்டுரை
புத்தனின் உலகில் மொழிகளில்லை
லேகா ராமசுப்ரமணியன்
கிம் கி டுக் (1961 - 2020)
ஓர் இயக்குநர் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திரைப்படம் நான் பார்வையாளனுக்கு முன்வைக்கும் கேள்வியின் வடிவம். என் கண்ணோட்டம் குறித்த அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அது குறித்து அவர்களோடு உரையாடவே விரும்புகிறேன்.
- கிம் கி டுக்
கொரிய இயக்குநர் கிம் கி டுக் சினிமாப் பின்புலம் இல்லாதவர்.பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிட்டு வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டவர். சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம