கோ.பெ. கோயில்பிள்ளை
கட்டுரை
கோ.பெ. கோயில்பிள்ளை
தலித் - கம்யூனிஸ்ட்டின் கட்டுமானங்கள்
கோ. ரகுபதி
சாதியப் படிநிலையடுக்கில் கீழ்நிலையில் இருத்தப்பட்டோர் கம்யூனிசச் சமூகத்தைக் கட்டமைக்கும் இலட்சியத்தில் செயல்படும்போது ‘தலித் தோழர்’ எனும் அடையாளம் ஒட்டப்படுகிறது. தலித் என்றால் அது அரசியல் கோட்பாடாகவும் சமூக வகைமையாகவும் உணர்வாகவும் இருக்கின்றது. இது குறித்த விவாதம் என்னவாக இருப்பினும், கம்யூனிச இலட்சியத்தில் தலித் விடுதலையைக் கற்பனைசெய்யும் அதே தருணம் நிகழ்காலத்தில் தலித்துகளின் தன்மான உயிர்வாழ்வுக்குப் போராடுவது தலித் கம்யூனிஸ்ட்களிடம் இயல்பாக ஏற்ப