நிசப்த நடனம்
திரை
நிசப்த நடனம்
ரதன்
இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபத்தைந்து வருடங்களாகிவிட்டன. இன்னமும் நாசிகளின் நாச வேலைகளைப் பற்றிப் படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. யூதர்கள்மீதான கொடூர வன்முறைகள் தொடர்ச்சியாக திரைப்படங்களினூடாக நினைவுகூரப்படுகின்றன. அதேபோல் முள்ளிவாய்க்காலில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரைப் பற்றியும் பல குறும்படங்கள், திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.
A Gun and A Ring (Canada), போராளிக்கு இட்ட பெயர் (பிரான்ஸ்), இனி அவன் (இலங்கை), பிறகு (With you, Without You, இலங்கை), ஒற்றைப் பனைமரம் (இங்கிலாந்து), சினம் கொள் (கனடா), உரு (இலங்கை) போன்ற பல குறும்படங்களும் முழுநீளத் திரைப்படங்களு