
முரண்களை இயைத்தல்
அஞ்சலி வெ. ஜீவானந்தம் (1945-2021)
பெருமாள்முருகன்
முரண்களை இயைத்தல்
ஓவியம்: சுந்தரன்
வெ. ஜீவானந்தத்தை 1994இல் அவரது மருத்துவமனையில் சந்தித்தேன். அப்போது அவரைப் பற்றி எனக்குத் தெரியாது. என்னையும் அவருக்குத் தெரியாது. சென்னை டிடிகே மருத்துவமனையில் குடிநோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட என் அண்ணனுக்கு அவசரமாக மாத்திரை வேண்டும் என்றால் ஈரோட்டில் வாங்கிக் கொள்ளலாம் என்று ‘நலந்தா மருத்துவமனை’ முகவரியைக் கொடுத்திருந்தார்கள். அப்படி ஒருமுறை மாத்த