
நிழல் போர்
கட்டுரை
களந்தை பீர்முகம்மது
நிழல் போர்
க.நா. சுப்ரமணியம்
மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றை வாசித்தபின், ஒரு தமிழ் நாவலைச் சில நாட்கள் கழித்து வாசித்தேன். அடிப்படையில் இரு நாவல்களும் ஒத்திருந்ததைக் கவனிக்க முடிந்தது. ஆச்சரியம் என்னவென்றால் ஒன்றை இன்னொன்று உரசிப்பார்க்கிற மாதிரி அமைந்திருந்த விதம்தான்.
‘நான்’ இதுதான் நான் முதலில் வாசித்த நாவல்; மராத்தியில் அக்காலச் சீர்திருத்தவாதியான ஹரி நாராயண் ஆப்டே எழுதியிருந்தார்; மாலதி புணதாம் பேகர் தமிழ