கர்ணனும் மண்டேலாவும் பொதுவுரிமையின் கலகக் குரல்கள்
[திரை]
கர்ணனும் மண்டேலாவும்
பொதுவுரிமையின் கலகக் குரல்கள்
கோ. ரகுபதி
சமீபத்தில் வெளியான கர்ணன், மண்டேலா திரைப்படங்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் எதிர்கொள்கின்றன. ‘கர்ணன்’ ஜாதிப்படம், வன்முறையைத் தூண்டுகிறது என எதிர்க்கப்படுகிறது; சமூக விடுதலையைப் பேசுவது என ஆதரிக்கப்படுகிறது. ஜாதிப் படம் என்ற குற்றச்சாட்டால் ‘மண்டேலா’வுக்குத் திரையரங்கு மறுக்கப்பட்டதால் இணையத்தில் வெளியிடப்பட்டதாம். தேவர், கவுண்டர்களைப் ‘போற்றி’ திரைப்படங்கள் வெளியானபோது கள்ளமவுனம் காத்த ‘ஜாதி’ப்புத்தி, சனநாயக நாட்டின் அரசிய